விக்கிப்பீடியா பேச்சு:விக்கியன்பு

நுட்ப உதவி தொகு

கருவியாக விருப்பத்தேர்வுகளின்படி என்னால் விக்கியன்பை நிறுவ முடிந்தது. ஆனால், வரும் பதக்கப்பட்டியலில் புதிய பதக்கமொன்றை இணைக்க முடியவில்லை என்பதால் அதை சூரியாவின் பயனர்வெளியில் உள்ள நிரலில் இணைத்து என்னுடைய இடைமுகத்தில் நிறுவிப் பார்த்தேன். ஆனால், விக்கியன்புக் கருவி இடைமுகத்தில் வரவில்லை. இந்த சிக்கலைத் தீர்த்து உதவ வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:12, 23 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

இப்போது வருகிறது. ஒருவேளைத் தேக்கிகளில் பழைய வடிவம் தேங்கியிருந்திருக்கக் கூடும். -- சுந்தர் \பேச்சு 14:43, 23 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
  • கருவியாக விருப்பத்தேர்வுகளின்படி என்னால் விக்கியன்பை நிறுவ முடிந்தது. ஆனால், இதனை எவ்வாறு பயன்படுத்துவது? ஆங்கில விக்கிப்பீடியாவில் இக்கருவி எனக்கு சரியாக வேலை செய்கிறது (நகர்த்துதல் இணைப்பிற்கு அருகில் காட்டுகிறது). தமிழ் விக்கிப்பீடியாவில் பயனர். சூர்யப்பிரகாசுவின் பக்கத்தில் இருந்து நகலெடுத்து போட்டுள்ளேன், (import வேலை செய்யவில்லை என்று கருதி இதனை செய்தேன்) ஆனாலும், விக்கியன்பு கருவி வரவில்லை, உதவவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:08, 30 மே 2012 (UTC)Reply[பதில் அளி]
கருவியை தேர்வு செய்த பிறகு பதக்கம் வழங்க வேண்டிய பயனரின் பேச்சுப் பக்கத்திற்கு சென்று பாருங்கள், நகர்த்தலுக்கு பக்கத்தில் பதக்கம் என்றொரு தேர்வு வருகிறது.--சண்முகம் (பேச்சு) 10:13, 30 மே 2012 (UTC)Reply[பதில் அளி]
பயனரின் பேச்சு பக்கத்தில்
 
இரண்டு முறை பதக்கப் பெட்டி
இரண்டு முறை பதக்கப் பெட்டி வருகிறது. பதக்கத்தினை தேர்வு செய்யும் பெட்டி வேலை செய்யவில்லை.
 
வேலை செய்யாத பதக்கப் பெட்டி
. எப்படி சரி செய்வது ? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:05, 30 மே 2012 (UTC)Reply[பதில் அளி]
நீங்கள் பயனர்:Dineshkumar Ponnusamy/vector.js இங்கேயும் குறியீட்டை உருவாக்கியுள்ளீர்கள், special:preferences இங்கேயும் விக்கியன்பை தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.. ஒன்றை நீக்கவும்--சண்முகம் (பேச்சு) 11:09, 30 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

பயனர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் பட்டியல் தொகு

பயனர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் பட்டியல் அல்லது ஒரு பயனர் தான் பயனர்களுக்கு வழங்கிய பதக்கங்கள் பட்டியல் காண இயலுமா?--ஸ்ரீதர் (பேச்சு) 03:27, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

தற்போது அதற்கு வழியேதுமில்லை என்று கருதுகிறேன். இந்த நிரல்வடிவத்தையும் நாம் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். பிற விக்கிகள் நீட்சி வடிவத்திற்கு மாறிவிட்டனர். எனவே, நிரலில் மாற்றமேற்படுத்தினால் மட்டுமே முடியும். முயல்கிறோம். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 04:53, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

மரியாதை மிக்கவர் பதக்கம் என்பதனை பட்டியலிலிருந்து நீக்குதல் குறித்து... தொகு

மரியாதை மிக்கவர் பதக்கம் எனும் பதக்கத்தினை பயனர் ஒருவருக்கு நான் வழங்கியபோது, அவரின் கருத்து பின்வருமாறு:

விக்கிப்பயனர்கள் அனைவருமே மிகவும் மரியாதை மிக்கவர்கள் தான் !! எனவே இத்தகைய பதக்கங்கள் வேண்டாமே !

அவரின் கருத்து சரியானது என்று எனக்கும் தோன்றியதால், அப்பதக்கத்தினை திரும்பப் பெற்றுக் கொண்டேன். இந்தப் பதக்கத்தினை விக்கியன்பு பட்டியலிலிருந்து நீக்கிவிடலாமா? என்பது குறித்து, கருத்துகள் தேவை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:42, 5 பெப்ரவரி 2015 (UTC)Reply[பதில் அளி]

  விருப்பம் , கருத்துக்களை ஆதரிக்கிறேன்........... நீக்குவதற்கு ஆதரவு. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:22, 5 பெப்ரவரி 2015 (UTC)Reply[பதில் அளி]
ஆங்கில விக்கிப்பீடியாவில் Civility Barnstar என்று ஒன்று இருக்கிறது. அதனை மரியாதை மிக்கவர் என்று மொழிபெயர்த்திருக்கக்கூடும். பண்பாளர் பதக்கம் என்று சொன்னால் பொருந்தலாம். எல்லாரும் தான் பண்பானவங்க என்று யாராவது சொன்னால் என்ன செய்யலாம்? :)--இரவி (பேச்சு) 15:14, 5 பெப்ரவரி 2015 (UTC)Reply[பதில் அளி]
இரவி அவர்களே இங்கு பண்பாளர் என்பதன் பொருளை பொதுவாக நோக்காமல், பயனர் பிற விக்கிப்பீடியர்களுடன் உரையாடலில் ஈடுபடும்போது பண்பாக உரையாடல் என்பது போன்ற அளவுகோல்களைக் கருத்திற்கொண்டு இப்பதக்கத்தை அளிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் உங்களைப் போல கண்ணியமாக உரையாடி முடிவெடுக்கும் பயனர்களுக்கு இப்பதக்கத்தை அளிக்கலாம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:13, 6 பெப்ரவரி 2015 (UTC)Reply[பதில் அளி]

2021 உலகலாவிய விக்கியன்பு தொகு

இதுவரை தமிழ் விக்கியன்பு இந்த நிரலால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது (global wikilove அல்ல). அண்மையில் நிகழ்ந்த உலகலாவிய மாற்றத்தல் தற்போது இது செயல்படவில்லை. சரி செய்ய @Shrikarsan: மற்றும் நானும் முயன்றோம் ஆனால் அதை மீட்டமைக்க முடியவில்லை. அதற்கு மாற்றாக உலகலாவிய விக்கியன்பு நீட்சியை நிறுவலுக்குக் கோரினேன். ஏற்கனவே நாம் பயன்படுத்தியதால் சமூக வாக்கெடுப்பு நடத்தவில்லை, நேரடியாக மீடியாவிக்கி நிரலில் மாற்றம் செய்து தற்போது புதிய உலகலாவிய விக்கியன்பு செயல்படத் தொடங்கியுள்ளது. பொதுவான எல்லா விருதுகளும் உள்ளன அதில் தமிழுக்கான தனிப்பயனாக்கம் செய்ய வேண்டும். நமக்கு எது புதிதாகத் தேவை எது பயன்படாதென்று குறித்துக் கொண்டு இங்கே மாற்ற வேண்டும். கவனிக்க:@TNSE Mahalingam VNR மற்றும் Sridhar G: -நீச்சல்காரன் (பேச்சு) 09:36, 14 மே 2021 (UTC)Reply[பதில் அளி]

நன்றி ஸ்ரீ (✉) 14:30, 21 மே 2021 (UTC)Reply[பதில் அளி]
நன்றி --TNSE Mahalingam VNR (பேச்சு) 08:58, 4 ஆகத்து 2021 (UTC)Reply[பதில் அளி]
Return to the project page "விக்கியன்பு".