வியட்நாம் பொருளாதாரம்
வியட்நாமின் பொருளாதாரம் வளர்ந்து வரும் திட்டமிடப்பட்ட, சந்தைப் பொருளாதாரம் ஆகும். 1980களின் நடுவிலிருந்து டொய் மொய் (மறுமலர்ச்சி) புரட்சி காலத்தினூடாக பெரிதும் மையப்படுத்திய திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து சோசலிசம் சார்ந்த சந்தைப் பொருளாதாரத்திற்கு வியட்நாம் மாறியது. வழிகாட்டும் மற்றும் பரிந்துரைக்கும் ஐந்தாண்டுத் திட்டமிடலை வியட்நாம் கடைபிடிக்கின்றது. இந்தக் காலத்தில் பொருளாதாரம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டது. தற்காலத்தில் வியட்நாம் உலகளாவிய பொருளாதாரத்தில் இணையும் முயற்சியில் உள்ளது. வியட்நாமின் அனைத்துத் தொழிற்சாலைகளுமே சிறு அல்லது குறு நிறுவனங்களாகும். வியட்நாம் முதனிலை வேளாண்மை ஏற்றுமதியாளராகவும் தென்கிழக்காசியாவில் அயல்நாட்டு முதலீடு செய்வதற்கு ஈர்ப்புமிக்க இடமாகவும் உள்ளது. பனிப்போருக்குப் பின்னர் மற்ற பொதுவுடைமை நாடுகளைப் போலவே திட்டமிட்ட பொருளியல் ஆக்கத்திறன் வேகத்திலும் நீடிப்புதிற வளர்ச்சியிலும் தொய்வு கண்டது. அண்மைக் காலத்தில் வியட்நாமியப் பொருளியல், தன் இடையறாத தொடர்ந்த பொருளியல் வளர்ச்சிக்கு அயல்நாட்டு முதலீட்டையே சார்ந்துள்ளது.[7]
வியட்நாம் பொருளாதாரம் | |
---|---|
வியட்நாமின் நிதிய மையம் ஹோ சி மின் நகரம் | |
நாணயம் | வியட்நாமிய டொங் |
நிதி ஆண்டு | நாட்காட்டி ஆண்டு |
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | ஆசியான் கட்டற்ற வணிகப் பகுதி (AFTA), உலக வணிக அமைப்பு, ஏபெக், ஆசியான், எஃப்ஏஓ |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | $187.848 பில்லியன் (பெயரளவு, 2014 மதிப்.)[1] $509.466 பில்லியன் (கொ.ஆ.ச, 2014 மதிப்.)[1] |
மொ.உ.உ வளர்ச்சி | 5.98% (2014 மதிப்.)[2] 6.03% (Q1 2015 மதிப்.) |
நபர்வரி மொ.உ.உ | $2,073 (பெயரளவில், 2014 மதிப்.)[1] $5,621 (PPP, 2014 மதிப்.)[1] |
துறைவாரியாக மொ.உ.உ | வேளாண்மை: 19.3%, தொழில்: 38.5%, சேவைகள்: 42.2% (2013 மதிப்.) |
பணவீக்கம் (நு.வி.கு) | 1.86% (2014 மதிப்.) |
கினி குறியீடு | 38.2 (2014) |
தொழிலாளர் எண்ணிக்கை | 52.93 மில்லியன் (2013 மதிப்.) |
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | வேளாண்: 48%, தொழில்: 21%, சேவைகள்: 31% (2012 மதிப்.) |
வேலையின்மை | 1.84 % (சூன் 2014) |
முக்கிய தொழில்துறை | நெல், காப்பி, இயற்கை மீள்மம், பருத்தி, தேநீர், மிளகு, சோயா அவரை, முந்திரி, கரும்பு, நிலக்கடலை, வாழைப்பழம், கால்நடை, மீன், கடல் உணவு |
வெளிக்கூறுகள் | |
ஏற்றுமதி | $128.9 பில்லியன் (2013 மதிப்.) |
ஏற்றுமதிப் பொருட்கள் | உடை, காலணி, பெருங்கடல் பொருட்கள், பாறை எண்ணெய், மின்னணுவியல், மரப் பொருட்கள், நெல், காப்பி, எந்திரத் தொகுதி |
முக்கிய ஏற்றுமதி உறவுகள் | ஐக்கிய அமெரிக்கா 17.8% சப்பான் 11.8% சீனா 11.2% தென் கொரியா 5% மலேசியா 4.1% (2012 மதிப்.)[3] |
இறக்குமதி | $121.4 பில்லியன் (2013 மதிப்.) |
இறக்குமதிப் பொருட்கள் | எந்திரத் தொகுதியும் கருவிகளும், பாறை எண்ணெய் பொருட்கள், எஃகு பொருட்கள், உடைக்கான மூலப் பொருட்கள், காலணி தொழிற்துறை, மின்னணுவியல், நெகிழி, தானுந்து |
முக்கிய இறக்குமதி உறவுகள் | சீனா 25.8% தென் கொரியா 13.9% சப்பான் 10.4% சிங்கப்பூர் 6% தாய்லாந்து 5.2% ஐக்கிய அமெரிக்கா 4.3% (2012 மதிப்.)[4] |
மொத்த வெளிக்கடன் | $68.38 பில்லியன் (திசம்பர் 2013 மதிப்.) |
பொது நிதிக்கூறுகள் | |
பொதுக் கடன் | மொ.உ.உற்பத்தியில் 65% (2014)[1] |
வருவாய் | $42.82 பில்லியன் (2013 மதிப்.) |
செலவினங்கள் | $50 பில்லியன் (2013 மதிப்.) |
பொருளாதார உதவி | $4.115 பில்லியன் உறுதி செய்யப்பட்டது (2012) |
கடன் மதிப்பீடு | இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு:[5] BB- (Domestic) BB- (Foreign) BB- (T&C Assessment) Outlook: Stable[6] Moody's:[6] B1 Outlook: Stable Fitch:[6] BB- Outlook: Stable |
Main data source: CIA World Fact Book ' |
வியட்நாமின் உள்நாட்டுப் பொருளாக்கம் (உற்பத்தி) 2013 இல் 170.565 பில்லியன் அமெரிக்க டாலராகும்;[1] தொகு உள்நாட்டுப் பொருளாக்கத் தனிநபர் வீதம் 1,902 அமெரிக்க டாலர் ஆகும்.
கோல்டுமேன் சாக்சின் 2005 முன்கணிப்பின்படி, வியட்நாமியப் பொருளாதாரம் 2020 இல் உலகின் 35 ஆம் தரவரிசையில் இருக்கும். அப்போது வியட்நாமின் தொகு உள்நாட்டுப் பொருளாக்கம் 436 பில்லியன் அமெரிக்க டாலராகும். தொகு உள்நாட்டுப் பொருளாக்கத் தனிநபர் வீதம் 4,357 அமெரிக்க டாலராக அமையும்.[8]
கூப்பரின் விலைநீர்மையக 2008 ஆம் ஆண்டின் முன்கணிப்பின்படி, 2020 இல் வியட்நாமியப் பொருளியல் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக அமையும். வாய்ப்புள்ள 10% ஆண்டு வளர்ச்சி வீதத்தின்படி, வியட்நாமின் பொருளாதார அளவு ஐக்கிய இராசியத்தின் பொருளாதாரத்தைப் போல 70% அளவுக்கு 2040 அளவில் வளரும்.[9]
வியட்நாம் பொருளியல் வளர்ச்சியில் தோய் மோய் சீர்திருத்தத்துக்குப் பிறகு, 11 ஆவது இடத்தைப் பிடித்தாலும், பல ஆய்வாளர்களைக் கவலை கொள்ளச் செய்யும் சிக்கல்கள் உள்ளமையை இந்நாட்டின் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளியல் வேகக் குறைவு சுட்டிக் காட்டுகிறது.[10][11]
வரலாறு
தொகுவியட்நாமின் நாகரிகம் வேளாண்மையால் உருவாகியதாகும். நிலவுடைமை அரசகுலங்கள் வேளாண்மையை முதன்மை வாய்ந்த பொருளாதார அடிப்படையாகக் கருதினர்; அவர்களது பொருளியல் சிந்தனை இயல்நெறியைச் சார்ந்ததாகும். நிலவுடைமைகள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டன. அணையொத்த பெரிய நீர்த்தேக்கங்கள் சிவப்பாற்றுக் கழிமுகப் படுகையில் நஞ்சை நெல்விளைச்சலுக்காக கட்டியமைக்கப்பட்டன. அமைதிக் காலங்களில் வீரர்கள் பண்ணைத்தொழில் மேற்கொள்ள அனுப்பப்பட்டனர். மேலும் அரசவை நீர் எருமைகளையும் கால்நடைகளையும் கொல்வதைத் தடுத்ததோடு, பல வேளாண்விழாக்களையும் கொண்டாடச் செய்தது. கைவினைத் தொழில்களுக்கும் கலைக்கும் உயர்மதிப்பினைத் தந்தது. ஆனால், வணிகம் அவ்வளவாகப் போற்றப்படவில்லை. வணிகர்கள் மிக இழிவாகக் கருதப்பட்டனர். தேசியப் பொருளாதாரம் தன்னிறைவோடு விளங்கியது.
நாணயம்
தொகுவியட்நாமிய தோங் வியட்நாம் நாட்டின் நாணயமாகும்.
செலாவணி வீதம்
தொகுஅமெரிக்க டாலருக்கும் வியட்நாமிய தோங்கிற்குமான செலாவணி வீதம் மிகவும் முதன்ம வாய்ந்த்தாகும். ஏனெனில், தோங்கை கட்டற்ர முறையில் மாற்ற முடியாதெனினும், தளர்வாக இது அமெரிக்க டாலருடன் "ஊரும் முளை" எனும் ஏற்பாட்டின்வழி கட்டிப் பிணைக்கப்பட்டுள்ளது . இது அமெரிக்க டாலர்-வியட்நாமிய தோங் செலாவணி வீதம் மாறும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப படிப்படியாகச் சரிகட்டிக் கொள்கிறது.[12] 2013 ஜூன் 28 இல், 1 அமெரிக்க டாலர் 21.36 வியட்நாமிய தோங்குகளுக்குச் சமமாகும்.
ஓரளவுக்குத் தங்கமே புறநிலை நாணயமாக இன்னமும் நிலவுகிறது; என்றாலும், அண்மைய ஆண்டுகளில் தங்கத்தின் பொருளியல் பாத்திரம் குறைந்து வருகிறது.[13]
வியட்நாமின் அண்மைய அயல்செலாவணி வீதங்களை இங்கு காணலாம்.
பணவீக்கம்
தொகுஆண்டு | பணவீக்க வீதம் (%) |
---|---|
1980 | 25.2 |
1981 | 69.6 |
1982 | 95.4 |
1983 | 49.5 |
1984 | 64.9 |
1985 | 91.6 |
1986 | 453.5 |
1987 | 360.4 |
1988 | 374.4 |
1989 | 95.8 |
1990 | 36.0 |
1991 | 81.8 |
1992 | 37.7 |
1993 | 8.4 |
1994 | 9.5 |
1995 | 16.9 |
1996 | 5.6 |
1997 | 3.1 |
1998 | 8.1 |
1999 | 4.1 |
2000 | -1.8 |
2001 | -0.3 |
2002 | 4.1 |
2003 | 3.3 |
2004 | 7.9 |
2005 | 8.4 |
2006 | 7.5 |
2007 | 8.3 |
2008 | 23.1 |
2009 | 6.9 |
2010 | 11.8 |
(Source: IMF)
அயல்நாட்டு வணிகம்
தொகுதொழில்வணிகங்களும் தொழில்வணிக சமனிலையும்
தொகுஆண்டு | மொத்தத் தொழில்வணிகம் (பில்லியன் அமெரிக்க டாலரில்) | ஏற்றுமதி (பில்லியன் அமெரிக்க டாலரில்) | ஏற்றுமதி மாற்றம் (%) | இறக்குமதி (பில்லியன் அமெரிக்க டாலரில்) | இறக்குமதி மாற்றம் (%) | கணக்குச் சமனிலை (பில்லியன் அமெரிக்க டாலரில்) |
---|---|---|---|---|---|---|
2001 | 31.20 | 15.00 | 16.20 | -1.2 | ||
2002 | 36.40 | 16.70 | 11.3 | 19.70 | 21.6 | -3.0 |
2003 | 45.20 | 20.2 | 21.0 | 25.2 | 27.9 | -5.1 |
2004 | 58.50 | 26.5 | 31.2 | 32.0 | 27.0 | -5.4 |
2005 | 69.40 | 32.4 | 22.3 | 37.0 | 5.7 | -4.5 |
2006 | 84.70 | 39.8 | 22.8 | 44.9 | 21.4 | -5.1 |
2007 | 111.30 | 48.6 | 22.1 | 62.7 | 39.6 | -14.1 |
2008 | 143.40 | 62.7 | 29.0 | 80.7 | 28.7 | -18.0 |
2009 | 127.00 | 57.1 | -8.9 | 69.9 | -13.4 | -12.9 |
2010 | 157.00 | 72.2 | 26.4 | 84.8 | 21.3 | -12.6 |
2011 | 203.41 | 96.91 | 34.2 | 106.75 | 25.8 | -9.84[14] |
2012 | 228.57 | 114.57 | 18.2 | 113.79 | 6.6 | 0.780[15] |
2013 | 263.47 | 132.17 | 15.4 | 131.30 | 15.4 | 0.863 |
2014 | 298.23 | 150.19 | 13.7 | 148.04 | 12.1 | 2.14 |
2015 | 327.76 | 162.11 | 7.9 | 165.65 | 12 | -3,54[16] |
ஏற்றுமதிகள்
தொகுகட்டற்ற வணிக ஒப்பந்தங்கள்
தொகு- ஆசியன் கட்டற்ற வணிகப் பகுதி (AFTA)
- ஆசியன் – ஆத்திரேலியா–நியூசிலாந்து கட்டற்ற வணிகப் பகுதி (AANZFTA) என்பது ஆசியனுக்கும் ANZCERTAவுக்கும் இடையிலான கட்டற்ற வணிக ஒப்பந்தம் ஆகும். இது 27 பிப்ரவரி 2009 இல் கையெழுத்திடப்பட்டது[17] and coming into effect on 1 January 2010.[18] Details of the AANZFTA agreement are available online.[19]
- ஆசியன்–சீனா கட்டற்ற வணிகப் பகுதி (ACFTA), 1 ஜனவரி 2010 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.[20]
- ஆசியன்–இந்தியா கட்டற்ற வணிகப் பகுதி (AIFTA), 1 ஜனவரி 2010 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.[20]
- ஆசியன்–யப்பான் தொகு பொருளியல் பங்குதாரர் (AJCEP)
- ஆசியன்–கொரியா கட்டற்ற வணிகப் பகுதி (AKFTA), 1 ஜனவரி 2010 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.[20]
- கிழக்காசியத் தொகு பொருளியல் பங்குதாரர்
- வியட்நாம் பசிபிக் வட்டார பொருளியல் செயல்நெறித் திட்டப் பங்குதாரர் ஒப்பந்தத்தில் சேர்ந்து கையெழுத்திடப் பேரத்தில் உள்ளது.
- மே 29, 2015 இல் வியட்நாம், ஐரோப்பியப் பொருளியல் ஒன்றியத்துடன் கட்டற்ற வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.[21]
- 2015 திசம்பர் 2 இல் ஐரோப்பிய ஒன்றியமும் வியட்நாமும் ஐரோப்பிய ஒன்றிய-வியட்நாம் கட்டற்ற வணிக ஒப்பந்தம் (FTA) பற்றிய பேரம் முடிந்ததை அறிவித்தன.[22]
- வியட்நாம்-சிலி கட்டற்ற வணிக ஒப்பந்தம் (VCFTA) 1 ஜனவரி 2014 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.[23]
- வியட்நாம்-கொரியா கட்டற்ற வணிக ஒப்பந்தம் (VKFTA) 20 திசம்பர் 2015 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.[24]
- யப்பான்-வியட்நாம் பொருளியல் பங்குதாரர் ஒப்பந்தம் 1 அக்தோபர் 2009 இல் இருந்து நடைமுறைக்கு வந்தது.[25]
பேரியல் பொருளியற் பகுதிகள்
தொகுவியட்நாமின் பேரியல் பொருளியல் பகுதிகளாக ஓ சி மின் நகரமும் கனாய் நகரமும் அமைகின்றன.
பொருளியல் சுட்டிகளும் பன்னாட்டுத் தரவரிசைகளும்
தொகுநிறுவனம் | தலைப்பு | தரவரிசை |
---|---|---|
பொருளியல் அறிதிறன் அலகு | 2009 ஆம் ஆண்டுத் தகவல் தொழிநுட்பத் தொழிலக தர இலக்குச் சிக்கல் மீள்வு | 66 இல் 56 ஆம் இடம்[26] |
பன்னாட்டுப் பண நிதியம் | தொகு உள்நாட்டு விளைபொருள் (PPP) | 182 இல் 38 ஆம் இடம் |
உலகப் பொருளியல் பேரவை | 2012-2013 ஆம் ஆண்டின் உலகப் போட்டியிடும் திறம் | 148 இல் 70 ஆம் இடம்[27] |
உலக வங்கி | வணிக அலுவல் ஆள்திறம் | 188 இல் 99 ஆம் இடம் |
மரபு அறக்கட்டளை/The Wall Street Journal | பொருளியல் விடுதலைச் சுட்டி | 177 இல் 147 ஆம் இடம் – பெரும்பாலும் கட்டுற்றது (2013)[28] |
பன்னாட்டு ஒளிவுமறைவின்மை | ஊழல் புலப்பாட்டுச் சுட்டி | 117 இல் 116 ஆம் இடம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Report for Selected Countries and Subjects". World Economic Outlook Database. அனைத்துலக நாணய நிதியம். October 2014. பார்க்கப்பட்ட நாள் October 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "GDP Growth Rate of 2014". GSO.
- ↑ "Export Partners of Vietnam". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2012. Archived from the original on 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2013-07-23.
- ↑ "Import Partners of Vietnam". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2012. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2013-07-23.
- ↑ "Sovereigns rating list". Standard & Poor's. பார்க்கப்பட்ட நாள் 18 February 2013.
- ↑ 6.0 6.1 6.2 Rogers, Simon; Sedghi, Ami (15 April 2011). "How Fitch, Moody's and S&P rate each country's credit rating". Reuters இம் மூலத்தில் இருந்து 1 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130501172014/http://www.reuters.com/article/2012/09/28/markets-ratings-vietnamgovernmentbond-idUSWNA636420120928?feedType=RSS. பார்த்த நாள்: 28 September 2012.
- ↑ http://www.imf.org/external/pubs/ft/seminar/2002/fdi/eng/pdf/doanh.pdf
- ↑ "The Vietnamese Stock Market" (PDF). fwa.org. Archived from the original (PDF) on 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2010-05-07.
- ↑ "China to overtake US by 2025, but Vietnam may be fastest growing of emerging economies". PricewaterhouseCoopers. 2008-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-05-07.
- ↑ http://www.unescap.org/sites/default/files/AWP%20No.%20102.pdf
- ↑ http://siteresources.worldbank.org/INTVIETNAM/Resources/VDR.pdf
- ↑ "About this Collection | Country Studies | Digital Collections | Library of Congress". Library of Congress, Washington, D.C. 20540 USA. பார்க்கப்பட்ட நாள் 2022-11-20.
- ↑ Vuong Quan Hoang (2003). "Essays on Vietnam's Financial Reforms: Foreign Exchange Statistics and Evidence of Long-Run Equilibrium". Economic Studies Review 43 (6–8). doi:10.2139/ssrn.445080.
- ↑ "TÌNH HÌNH XUẤT KHẨU, NHẬP KHẨU HÀNG HÓA CỦA VIỆT NAM THÁNG 12 VÀ 12 THÁNG NĂM 2011 - TinHoatDong : Hải Quan Việt Nam". Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); horizontal tab character in|title=
at position 84 (help) - ↑ http://vneconomy.vn/20130117054115934P0C9920/chot-con-so-xuat-sieu-780-trieu-usd-nam-2012.htm பரணிடப்பட்டது 2013-02-22 at the வந்தவழி இயந்திரம் author=vneconomy |year=2013
- ↑ "Tình hình xuất khẩu, nhập khẩu hàng hóa của Việt Nam tháng 12 và năm 2015 - ThongKeHaiQuan : Hải Quan Việt Nam". Archived from the original on 10 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); horizontal tab character in|title=
at position 75 (help) - ↑ atinder. "Welcome To The World Of Smokeless Cigarettes!". Archived from the original on 27 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
- ↑ "ASEAN, Australia and New Zealand Leaders' Statement: Entry into Force of the Agreement Establishing the ASEAN-Australia-New Zealand Free Trade Area 25 October 2009, Cha am Hua Hin, Thailand" (PDF). Archived from the original (PDF) on 29 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "ASEAN - Australia - New Zealand Free Trade Agreement (AANZFTA) - ASEAN - Australia - New Zealand Free Trade Agreement". Archived from the original on 16 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
- ↑ 20.0 20.1 20.2 Pushpanathan, Sundram (22 December 2009). "ASEAN Charter: One year and going strong". The Jakarta Post. http://www.thejakartapost.com/news/2009/12/22/asean-charter-one-year-and-going-strong.html. பார்த்த நாள்: 1 January 2010.
- ↑ http://www.loc.gov/law/foreign-news/article/vietnam-new-trade-agreement-with-eurasia-economic-union/
- ↑ "Vietnam". பார்க்கப்பட்ட நாள் 19 December 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-13. பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-20. பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-13. பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.
- ↑ Resilience amid turmoil Bechmarking IT industry competitiveness 2009 BAS.org பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "The Global Competitiveness Report 2012 - 2013". Africa Competitiveness 2013. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
- ↑ "Country Rankings". பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
வெளி இணைப்புகள்
தொகு- Vietnam economy பரணிடப்பட்டது 2012-08-23 at the வந்தவழி இயந்திரம்
- National Securities Center பரணிடப்பட்டது 2008-12-18 at the வந்தவழி இயந்திரம்
- Securities
- FPTS.com.vn பரணிடப்பட்டது 2012-02-03 at the வந்தவழி இயந்திரம், live price of stock
- World Bank Trade Summary Statistics Vietnam 2012
- Vietnam : “Doi moi” and the World Crisis பரணிடப்பட்டது 2021-01-24 at the வந்தவழி இயந்திரம் (article)
- Mergers and Acquisitions in Vietnam's Emerging Market Economy: 1990-2009
- Tariffs applied by Vietnam as provided by ITC's Market Access Map[தொடர்பிழந்த இணைப்பு], an online database of customs tariffs and market requirements.