விருப்பாச்சி (பாளையம்)

(விருப்பாட்சி (பாளையம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விருப்பாச்சி (Viruppachi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்(ஊர்). ஒட்டன்சத்திரம் வருவாய் வட்டத்தின் 17 வருவாய் (கிராம எண்:17)கிராமம் ஆகும். இங்கு தோட்டப் பயிர்களான முள்ளங்கி, பீட்ரூட்,பீன்ஸ்,மக்காசோளம் முட்டைக்கோஸ்,வெங்காயம், விளைகின்றன.[4]

விருப்பாச்சி
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

ஒட்டன்சத்திரத்திலிருந்து பழனி செல்லும் (எண்.209ல்) தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 9.5 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது.கடல் மட்டத்திலிருந்து 531 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 1.6 கி.மீ தூரத்தில் பரப்பலாறு அணை யிலிருந்து விழும் தலைக்குத்து அருவி அமைந்துள்ளது.

விருப்பாச்சி கோபால் நாயக்கர்

தொகு

ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்த விருப்பாச்சி கோபால் நாயக்கர் பிறந்த ஊர்.அவர் ஆட்சிசெய்த விருப்பாச்சி பாளையமே தற்போது விருப்பாட்சி என உள்ளது.விடுதலை வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கு மணி மண்டபத்தை தமிழக அரசு அமைத்து உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, விருப்பாட்சியில் 1579 குடியிருப்புகள் உள்ளது.இதில் 5897 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1039. எழுத்தறிவு பெற்றவர்கள் 3482 பேர். இதில் 2032 பேர் ஆண்கள்; 1450 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 65.96. ஆறு வயதுக்குட்பட்டோர் (618 பேர்)10.48 சதவீதம் ஆவர்.[5]

அடிக்குறிப்பு

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php பரணிடப்பட்டது 2012-08-21 at the வந்தவழி இயந்திரம்?
  5. "Rural - Dindigul District;oddanchtram Taluk;Viruppachi Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருப்பாச்சி_(பாளையம்)&oldid=3850789" இலிருந்து மீள்விக்கப்பட்டது