விளையாட்டு விடுதி
விளையாட்டு விடுதி என்பது தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் ஒரு விடுதியாகும். இதில் விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்குக் கல்வி சூழலுக்குப் பங்கமின்றி, விளையாட்டுப் பயிற்சி, ஊட்ட உணவு, உபகரணங்கள் என அனைத்து வசதிகளுடன் அனைத்தும் அரசு செலவில் நடத்தப்படும் விடுதியாகும். இந்த வசதிகள் அனைத்தையும் விளையாட்டு விடுதியில் தங்கியபடி அருகிலுள்ள பள்ளியில் சேர்ந்து பயின்றவாறு பெறலாம். தமிழகத்தில் 28 விளையாட்டு விடுதிகள், 2 சிறப்பு விளையாட்டு விடுதிகள், 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் உள்ளன.
வரலாறு
தொகுதுவக்கத்தில் அந்தந்தப் பகுதியில் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகளில் ஒரு சிலவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்டத் தலைநகர்களில் இந்த விளையாட்டு விடுதிகள் தொடங்கப்பட்டன. பின்வந்த ஆண்டுகளில் இவை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில், பள்ளி மாணவ, மாணவியருக்கு எனத் தனித்தனி விளையாட்டு விடுதிகள் உண்டு. மாணவிகளுக்கான விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சை, அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை ஒய். எம். சி. ஏ. பள்ளி, நெய்வேலி என். எல். சி. பள்ளி, சென்னை புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் செல்வம் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறன.[1]
பயிற்சிகள்
தொகுஇங்கு பயிற்சிகளானது காலை, மாலை ஓய்வு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் பள்ளிப் படிப்புக்கு இடையூறு இன்றி வழங்கப்படுகின்றன. மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் அதற்கெனச் சிறப்பு பயிற்சிகள், போக்குவரத்து, உணவு மற்றும் வழிகாட்டுதல்களையும் செலவின்றி அளிக்கப்படுகின்றன. இங்கு தினந்தோறும் 2.30 மணி நேரம் துறை சார்ந்த விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.[2]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கைப்பந்து தகுதி தேர்வு போட்டி". செய்தி. விடுதலை. பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ எஸ்.எஸ்.லெனின் (18 ஏப்ரல் 2017). "பட்டை தீட்டும் விளையாட்டு விடுதிகள்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)