வெ. இரகுநாத ராவ்

திவான் பகதூர் ராய் இரகுநாத ராவ் (Rai Raghunatha Rao) (1831 பிப்ரவரி 7 - 1912 மே 3 ) இவர் ஓர் இந்திய அரசு ஊழியரும், நிர்வாகியும், அரசியல்வாதியும் மற்றும் இந்திய சுதந்திர ஆர்வலரும் ஆவார். இவர் இந்தோரின் திவானாக 1875 முதல் 1880 வரை மற்றும் 1886 முதல் 1888 வரை பணியாற்றினார். இவர் இந்திய அரசியல்வாதியான சர் த. மாதவ ராவுடன் தொடர்புடையவர் .

திவான் பகதூர்
ராய் இரகுநாத ராவ்
ராய் இரகுநாத ராவின் உருவப்படம்
இந்தோரின் திவான்
பதவியில்
1875–1881
அரசர் இரண்டாம் துகோஜிராவ் ஓல்கர்
முன்னவர் த. மாதவ ராவ்
பின்வந்தவர் சலாமத் அலி
பதவியில்
1886–1888
அரசர் சிவாஜிராவ் ஓல்கர்
முன்னவர் நானா மோரோஜி திரிலோக்கர்
பின்வந்தவர் பாலகிருட்டிண ஆத்மராம் குப்தா
தனிநபர் தகவல்
பிறப்பு 1831 பிப்ரவரி 7
கும்பகோணம்,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு 1912 மே 3 (வயது 81)
சென்னை,
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு (நிறுவனர்)
படித்த கல்வி நிறுவனங்கள் மாநிலக் கல்லூரி, சென்னை
பணி அரசு ஊழியர், நிர்வாகி
சமயம் இந்து

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

இரகுநாத ராவ் 1831 பிப்ரவரியில் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் ஒரு முக்கிய மராத்தி தேசஸ்த் பிராமண குடும்பத்தில் பிறந்தார். [1] திருவிதாங்கூரின் முன்னாள் திவானான ஆர்.வெங்கட ராவின் மகனும், சர் த. மாதவ ராவின் உறவினருமான இவர் பின்னர் திருவிதாங்கூர், இந்தோர் மற்றும் பரோடாவின் திவானாக பணியாற்றினார். இரகுநாத ராவ் பெங்களூரு கோட்டையில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பைப் பெற்றார். மேலும், சென்னையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் (இப்போது மாநிலக் கல்லூரி) தனது படிப்பை முடித்தார்.

ராவ் தனியாக சட்டம் பயின்றார் .1856 இல் ஒரு வழக்கறிஞராக சான்றிதழ் பட்டம் பெற்றார். ஆனால் பயிற்சி செய்யவில்லை. மாறாக, சென்னை மாகாண அரசுச் சேவையில் நுழைந்தார்.

சென்னை அரசுச் சேவை தொகு

இரகுநாத ராவ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தலைமை கணக்காளாராகவும், இறுதியில் சென்னை மாவட்டத் துணை ஆட்சியராகவும் உயர்ந்தார். இவர் துங்கபத்ரா திட்டத்தில் சில காலம் சிறப்பு அலுவலராக இருந்தார். ஆனால் பின்னர் திருச்சிராப்பள்ளிக்கும் பின்னர் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கும் மாற்றப்பட்டார்.

1873 ஆம் ஆண்டில், இந்தோரின் மகாராஜா இரண்டாம் துகோஜிராவ் ஓல்கரைச் சந்தித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஓல்கர், இவரிடம் சிறப்பு தீர்வு அதிகாரியாக மாநிலத்திற்கு சேவை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதே ஆண்டின் பிற்பகுதியில், ராவ் தனது உறவினர் சர் த. மாதவ ராவிற்கு பதிலாக இந்தோரின் திவானாக நியமிக்கப்பட்டார்.

இந்தோரின் திவான் தொகு

1875 ஆம் ஆண்டில், இரகுநாத ராவ் இந்தோரின் திவானாக நியமிக்கப்பட்டார். இவர் தனது உறவினர் மாதவ ராவிற்குப் பிறகு பொறுப்பேற்றார். ரகுநாத ராவின் நிர்வாகத்தில் மாநிலத்தில் நீதித்துறை பதவிகளுக்கு மிகவும் தகுதியான ஆண்களைத் தேர்ந்தெடுப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இரகுநாத ராவ் 1880 இல் சென்னைக்குத் திரும்பினார். பின்னர், 1886 இல் இந்தோருக்கு மீண்டும் சென்று இரண்டு வருடங்கள் பணியாற்றினார்.

சமூக வாழ்க்கை தொகு

சென்னை மகாஜன சபை மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் நிறுவனர்களில் இரகுநாத ராவும் ஒருவராக இருந்தார். இந்திய தேசிய சமூக மாநாடு, முதன்முதலில் சென்னையில் உள்ள இரகுநாத ராவின் வீட்டில் 1887 திசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. மாநாட்டிற்கு சர் த. மாதவ ராவ் தலைமை தாங்கினார்.

கிருட்டிணரின் சிலை ஒன்று 1913 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் நிறுவப்பட்டு இரகுநாத ராவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

குறிப்புகள் தொகு

  • S. R. Mehrotra (1995). A History of the Indian National Congress: 1885–1918. Vikas Pub. House. ISBN 0706980719, ISBN 978-0-7069-8071-4. 
  • P. K. Sethi, S. K. Bhatt, R. Holkar (1976). A study of Holkar state coinage. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._இரகுநாத_ராவ்&oldid=2999612" இருந்து மீள்விக்கப்பட்டது