ஸ்டூடண்ட் நம்பர் 1

செல்வா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஸ்டூடண்ட் நம்பர் 1 என்பது 2003ஆம் ஆண்டய இந்திய தமிழ் அதிரடி திரைப்படமாகும். செல்வா இயக்கிய இப்படத்தில் அறிமுக நடிகர் சிபிராஜ், ஷெரின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மணிவண்ணன், யுகேந்திரன், நாசர் ஆகியோர் பிறபாத்திரங்களில் நடித்தனர்.[1]

ஸ்டூடண்ட் நம்பர் 1
இயக்கம்செல்வா
தயாரிப்புசரத்
கதைசெல்வா
(திரைக்கதை, உரையாடல்)
இசைமரகதமணி
நடிப்புசிபிராஜ்
செரின் ஷிருங்கார்
மணிவண்ணன்
யுகேந்திரன்
நாசர்
ஒளிப்பதிவுயு. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புரகு பாபு
கலையகம்சீனா பிலிம்ஸ்
வெளியீடு14 பெப்ரவரி 2003
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்த படம் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் காஜலா ஆகியோர் இதே பெயரில் நடித்த 2001ஆம் ஆண்டைய பிளாக்பஸ்டர் தெலுங்கு படத்தின் மறு ஆக்கம் ஆகும். ஸ்டூடண்ட் நம்பர் 1 விமர்சகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகி வணிக ரீதியாக ஆபிஸில் தோல்வியடைந்தது.[2]

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

சென்னையில் பதினைந்து நாட்கள் கால அட்டவணையில் முதலில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதன் பிறகு உருசியா சென்ற படப்பிடிப்புக் குழு இரண்டு பாடல்களைப் படமாக்கி வந்தது. மீதமுள்ள பாடல்கள் ஆந்திராவில் படமாக்கபட்டன. விசாகப்பட்டினம் கடற்கரையில் சுமார் இரண்டு லட்சம் செலவில் படப்பிடிப்புக்காக தற்காலிக கட்டமைப்பு உருவாக்கபட்டது. ஆறு நாட்கள் செலவழித்து ஒரு பாடல் படமாக்கபட்டது. நடன இயக்குனர் தருண்ராஜ் நடன அசைவுகளை செய்வித்தார். சிபிராஜிக்கு படமாக்கபட்ட முதல் காட்சி குறித்து குறிப்பிடுகையில் "நான் கல்லூரி நூலகத்திற்குள் நுழைவதாகவும், செரினும் அவரது நண்பர்களும் ஒலிப் பேழையில் பதிவு செய்யபட்ட இசைக்கு நடனமாடுவதைக் காண்டு அந்த இசைக் கருவியை நிறுத்தி அந்தப் பெண்களுக்கு அறிவுரை கூறுவதாக " காட்சி படமாக்கபட்டது என்று கூறினார்.[3]

இசை தொகு

மரகத மணி இசையமைத்த இந்த படத்தின் இசையை பிரமிட் மியூசிக் வெளியிட்டது. பாடல் வரிகள் நா. முத்துக்குமார், கபிலன் அண்ணாமலை ஆகியோரால் எழுதப்பட்டது.

பாடல்கள்
# பாடல்பாட்கர்(கள்) நீளம்
1. "விழாமலே இருக்கமுடியுமா"  எஸ். பி. பி. சரண், கே. எஸ். சித்ரா 4:38
2. "எங்கேயோ தோன்றி"  கார்த்திக் (பாடகர்), குழுவினர் 5:17
3. "காதல் நட்பாய் மாறுமா"  உன்னி கிருஷ்ணன், அணுராதா ஸ்ரீராம் 4:18
4. "காதல் தோழி"  திப்பு (பாடகர்), கல்பனா இராகவேந்தர் 5:05
5. "நா அழுக்கான அம்சா"  யுகேந்திரன் 0:54
6. "உன் குற்றமா என் குற்றமா"  யுகேந்திரன் 1:06
7. "எங்கே செல்லும்"  யுகேந்திரன் 1:32
8. "சல்யூட் போடு"  திப்பு குழுவினர் 4:11
9. "காலேஜ் கேண்டீன்"  யுகேந்திரன் 1:38
10. "கடலோர கவிதையே"  யுகேந்திரன், கல்பனா, குழுவினர் 5:09
மொத்த நீளம்:
33:48

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டூடண்ட்_நம்பர்_1&oldid=3661000" இலிருந்து மீள்விக்கப்பட்டது