ஸ்ட்ரெலிட்சியா
ஸ்ட்ரெலிட்சியா (Strelitzia) என்பது தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட, பல்லாண்டுத் தாவரமாகும். இந்தப் பேரினத்தில் ஐந்து இனங்கள் உள்ளன. இது ஸ்ட்ரெலிட்சியாசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. [3] இந்தப் பேரினத்தின் பொதுவான பெயர் சொர்க்கப் பறவை பூ / தாவரம் என்பதாகும். ஏனெனில் இந்த தாவரத்தின் பூக்கள் சொர்க்கப் பறவையை ஒத்திருப்பதால் இப்பெயரைப் பெற்றது. தென்னாப்பிரிக்காவில், இது பொதுவாக கொக்கு மலர் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ட்ரெலிட்சியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Strelitzia |
மாதிரி இனம் | |
Strelitzia reginae | |
Species | |
இதில் எஸ். நிக்கோலாய் மற்றும் எஸ். ரெஜினே ஆகிய இரண்டு இனங்கள், தொடர்ச்சியாக வீட்டு தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன. [4] இது லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மலர் சின்னமாகும். மேலும் இது 50 சென்ட் நாணயத்தின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது.
வகைபிரித்தல்
தொகுஇந்தப் பேரினத்திற்கு மெக்லென்பர்க்-ஸ்ட்ரெலிட்ஸின் வீட்டில் இளவரசியாகப் பிறந்த மூன்றாம் ஜார்ஜ்ஜின் மனைவியான மனைவி ராணி சார்லோட்டின் நினைவாக, [5] [6] ஜோசப் பேங்க்ஸால் இந்த பெயரிடப்பட்டது.
விளக்கம்
தொகுஇந்தப் பேரினத்தில் எஸ். நிக்கோலாய் இனத்தாவரமே மிகப்பெரியது. அது 10 மீ (33 அடி) உயரம் வரை வளரும், கம்பீரமான வெள்ளை மற்றும் நீல பூக்கள் கொண்டது; [7] இதில் எஸ். கௌடாடா இனம் தவிர மற்ற இனங்கள் பொதுவாக 2.0 முதல் 3.5 மீ உயரம் வரை எட்டும், இவை பொதுவாக எஸ். நிக்கோல் இனத்தை விட சிறிய அளவிலான மரங்களாகும்.
இதன் இலைகள் பெரியவை, 30-200 செமீ நீளம் மற்றும் 10-80 செ.மீ அகலம் கொண்டவை. தோற்றத்தில் வாழை இலை போன்றது, ஆனால் நீளமான இலைக்காம்புடன், மாறாப் பசுமையானதக ஒரு விசிறி போன்று இருக்கும்.
இதன் மலர்கள் ஒரு திடமான தண்டில் வெளிவரும். இதன் பூந்துணர் கிடைமட்டமாக உருவாகும்.
உயிரியலும் பரவுதலும்
தொகுஇந்தப் பூக்கள் தேன்சிட்டுகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன. அவை பாளையில் அமர்ந்து மலரில் தேன் குடிக்கின்றன. பாளையின் மீது பறவை நிற்கும்போது அந்த எடையில், பறவையின் கால்களில் மகரந்தத்தை பரப்ப அதைத் திறக்கிறது. பறவையின் கால்களில் மகரந்தம் ஒட்டுகிறது. பறவை இன்னொரு பூவில் தேன் குடிக்கச் செல்லும்போது அங்கு இதன் காலில் ஒட்டியுள்ள மகரந்தம் புதிய பூவில் சேர்ந்து மகரந்த சேர்க்கை நிகழ்கிறது. ஸ்ட்ரெலிட்சியா இனங்களில் இயற்கையான பூச்சி மகரந்தச் சேர்க்கை நடப்பதில்லை. தேன் சிட்டுகள் இல்லாத பகுதிகளில், இந்த இனத்தின் தரமான விதைகளைப் பெற கைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யவேண்டி வரும். [8]
இனங்கள் மற்றும் கலப்பினங்கள்
தொகுஇதில் ஐந்து இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. [9]
படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | பூர்வீக பரவல் |
---|---|---|---|
ஸ்ட்ரெலிட்சியா ஆல்பா ( சின். எஸ். அகஸ்டா ) | சொர்க்கத்தின் வெள்ளைப் பறவை | தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு கேப்சின் தெற்கே கரையோரப் பகுதிகளில் கார்டன் ரூட்ஸ் பகுதி | |
ஸ்ட்ரெலிட்சியா கௌடாடா | மலை ஸ்ட்ரெலிட்சியா | சிம்பாப்வேயின் சிமானிமணி மலைகள் தெற்கே மொசாம்பிக், தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணங்கள் மற்றும் எசுவாத்தினி வரை. | |
ஸ்ட்ரெலிட்சியா நிகோலாய் | சொர்க்கத்தின் வெள்ளைப் பறவை அல்லது சொர்க்கத்தின் மாபெரும் பறவை; காட்டு வாழை; நீலம் மற்றும் வெள்ளை ஸ்ட்ரெலிட்சியா [7] | மொசாம்பிக், போட்சுவானா, சிம்பாப்வே, கிழக்கு தென்னாப்பிரிக்கா ஆகியவை பெரிய மீன் ஆற்றிலிருந்து வடக்கே ரிச்சர்ட்ஸ் விரிகுடா வரை | |
ஸ்ட்ரெலிட்சியா ரெஜினே (சின். எஸ். பார்விஃபோலியா ) | ஸ்ட்ரெலிட்சியா, சொர்க்கத்தின் பறவை அல்லது கொக்கு லில்லி | தென்னாப்பிரிக்கா ( கேப் மாகாணங்கள் மற்றும் குவாசுலு-நதால் ) | |
ஸ்ட்ரெலிட்சியா ஜுன்சியா (கெர் காவ்ல். ) | ஆப்பிரிக்க பாலைவன வாழை [10] | தென்னாப்பிரிக்கா உய்டென்ஹேஜ், பாடென்சி மற்றும் போர்ட் எலிசபெத்த்தின் வடக்கே அருகில் உள்ளது |
- ஸ்ட்ரெலிட்சியா × கெவென்சிஸ் ( எஸ். ரெஜினே மற்றும் எஸ். அகஸ்டா இடையே கலப்பினம் )
ஒவ்வாமை
தொகுஸ்ட்ரெலிட்சியா பேரினத்தைச் சேர்ந்த தாவரங்கள் காற்றில் மகரந்தத்தை பரப்புவதில்லை. மேலும் ஒபிஏஎல்எஸ் ஒவ்வாமை அளவுகோலில் ஒன்றைக் கொண்டிருக்கின்றன. அதாவது இவற்றினால் ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படுத்தும் ஆபத்து மிகக் குறைவு. [8]
குறியீட்டு முறைமை
தொகுஸ்ட்ரெலிட்சியா மலர் மொழியில் வெற்றி, விடுதலை, அழியாமை, விசுவாசம், அன்பு, சிந்தனை, நம்பிக்கை உள்ளிட்ட பல பொருள்களைக் கொண்டுள்ளன. இது ஒன்பதாவது திருமண ஆண்டு விழாவின் சின்னமாகவும் உள்ளது [11]
பற்றுறுதி - ஸ்ட்ரெலிட்சியா காதலனுக்கான பற்றுறுதியைக் குறிக்கிறது. மக்கள் தங்கள் ஒன்பதாம் ஆண்டு திருமண நாளன்று தங்கள் இணையருக்கு ஸ்ட்ரெலிட்சியா பூவை வழங்குகின்றனர். [12]
வெற்றி - ஸ்ட்ரெலிட்சியா என்பது வாழ்க்கையில் வெற்றியின் சின்னமாக உள்ளது. கல்லூரியில் பட்டம் பெறுவது போன்ற வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போது இந்த மலர் வழங்கப்படுகிறது [13]
இதழ்
தொகுஸ்ட்ரெலிட்சியா என்ற பெயரில் பிரிட்டோரியாவை தளமாகக் கொண்ட தேசிய தாவரவியல் கல்வி நிறுவனத்தின் தாவரவியல் இதழ் வெளியாகிறது. [14]
குறிப்புகள்
தொகு- ↑ "Strelitzia Banks". Plants of the World Online. The Trustees of the Royal Botanic Gardens, Kew. n.d. பார்க்கப்பட்ட நாள் July 15, 2022.
- ↑ "Strelitzia Banks". Catalogue of Life. Species 2000. n.d. பார்க்கப்பட்ட நாள் July 15, 2022.
- ↑ "Tropical Flower Guide". Archived from the original on 14 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 November 2012.
- ↑ "Our House Plants - Bird of Paradise". பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
- ↑ "Strelitzia reginae Banks". Plants of the World Online (in ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 27 May 2021.
- ↑ "Strelitzia reginae". pza.sanbi.org. August 2011. பார்க்கப்பட்ட நாள் 27 May 2021.
- ↑ 7.0 7.1 Eliovson, Sima (1981). Shrubs, trees, and climbers. Macmillan South Africa. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86954-011-4. பார்க்கப்பட்ட நாள் 12 September 2009.
- ↑ 8.0 8.1 Ogren, Thomas (2015). The Allergy-Fighting Garden. Berkeley, CA: Ten Speed Press. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60774-491-7.
- ↑ Cron, Glynis V.; Pirone, Cary; Bartlett, Madelaine; Kress, W. John; Specht, Chelsea (2012). "Phylogenetic Relationships and Evolution in the Strelitziaceae (Zingiberales)". Systematic Botany 37 (3): 606–619. doi:10.1600/036364412X648562.
- ↑ Strelitzia juncae பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம், Royal Botanic Gardens, Kew
- ↑ "Strelitzia". The Joy of Plants (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ "Bird of Paradise Meaning and Symbolism". FTD.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-08-18. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ "Bird of Paradise Flower – Meaning, Symbolism and Colors" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ "Strelitzia". Strelitzia. (in English). 1994. பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Strelitzia தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.