1911 (திரைப்படம்)
1911 | |
---|---|
இத்திரைப்படத்தின் சுவரொட்டி ஆகும். | |
இயக்கம் | ஜாக்கி சான் ஜாங் லீ |
தயாரிப்பு | வாங் செபின் வாங் டின்யுன் பீ ஷுலின். |
கதை | வாங் ஜிங்டோங் சென் பாவ்குவாங் |
இசை | டிங் வேய் |
நடிப்பு | ஜாக்கிசான் வின்ஸ்டன் சாவோ லீ பீங்பிங் |
ஒளிப்பதிவு | ஜாங் லீ ஹுவாங் வேய் |
படத்தொகுப்பு | யாங் ஹாங்க்யு |
கலையகம் | ஜெசிஇ (JCE) திரைப்படம் குழுமம்.
குவக்சியா திரைப்பட விநியோகம் |
விநியோகம் | ஊடக ஆசியா விநியோகம் (ஹாங்காங்) (ஹாங்காங்) குவக்சியா திரைப்பட விநியோகம் கிழக்குத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விநியோகம் (சீனா) |
வெளியீடு | செப்டம்பர் 23, 2011(சீனா[1]) 29 செப்டம்பர் 2011 (ஹாங்காங்[2]) |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | சீனா ஹாங்காங் |
மொழி | மாண்டரின் ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | 250 கோடி[3] |
முன்னுரை
தொகு1911 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சீன மொழித் திரைப்படமாகும். இப்படமானது சீனாவில் நடந்த மன்னராட்சிக்கு எதிரான சுதந்திர சீனப் புரட்சியைக் குறித்த சம்பவங்களை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட வரலாற்றுத் திரைப்படமாகும்.[4] இப்படத்தை ஜாக்கி சான் மற்றும் ஜாங் லீ இயக்கத்தில் உருவான இத் திரைப்படத்தில் சாக்கி சான் மற்றும் அவரது மகன் ஜாய்சி சான் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் சாக்கிசானின் 100 வதுத் திரைப்படம் ஆகும்.
கதைத்திட்டம்
தொகுஇத்திரைப்படத்தின் கதை சீனாவில் 1644 ஆம் ஆண்டு முதல் 1912 ஆம் ஆண்டு வரை சீனாவில் மன்னராட்சிக்கு எதிராக நாடைபெற்ற சுதந்திரச் சீனப் புரட்சிப் போராட்டங்களை குறித்த முக்கிய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இப்புரட்சிப்படைத் தளபதி ஹுவாங் சிங் (ஜாக்கி சான்) என்பவர் புரட்சிப் படையைத் தலைமையேற்று வழி நடத்துகிறார். இப் புரட்சிப் படையின் தலைவர் சுன் இ சியன் (வின்ஸ்டன் சாவோ) சீனப் புரட்சிக்காக வெளிநாட்டில் இருந்துக் கொண்டு பணம் திரட்டி புரட்சிப் படைகளுக்கு உதவியும் ஊக்கமும் கொடுக்கின்றார். மேலும் சீனப் புரட்சியை ஒடுக்கும் முயற்சியாக சீனவின் ராணி இங்கிலாந்திடம் பணம் கடனாகக் கேட்கிறார். மேலும், அதர்க்கு இங்கிலாந்து சீனாவின் தொடருந்துவை (Rail Way) குத்தகைக்கு தர வேண்டும் என்கின்ற சில நிபந்தனைகளுடன் கடன் கொடுக்க சம்மதிக்கிறது. அதன் பின்னர் சுன் இ சியன் தன் நாட்டு தொடருந்து மற்றும் புரட்சிப் படைக்காகவும் இங்கிலாந்து சென்று சீன ராணிக்கு பணம் தரக்கூடது எனவும், தன் புரட்சிப் படையின் போர் நன்மைகளைப் பற்றியும் இங்கிலாந்திடம் எடுத்துக் கூறுகிறார். அதன் பின்னர் இங்கிலாந்து சீன ராணிக்கு கடன் கொடுக்க மறுத்து விடுகிறது. மேலும் சீனப்புரட்சி சிப்பாய் கலகமாக வெடிக்கிறது. புரட்சிப் படை சீன நாட்டின் பாதிப் பகுதியை கைப்பற்றுகிறது, அதன் பின் வெளிநாட்டில் இருந்து சு இசியன் சீனாவிற்கு வருகிறார். பின்னர் பிற மாநிலங்களின் தலைமை பிரதிநிதியுடன் கூடிப் பேசி தற்காலிக முதல் குடியரசுத் தலைவராக சுன் இசியை நியேமிக்கப் படுகிறார். மேலும் போர் வலுவடைந்து மொத்தச் சீனாவையும் புரட்சிப்படை கைப்பற்றுகிறது, அதன் பிறகு சுதந்திரமான தேர்தல் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சுன் இசியன் அவர்கள் பதவி விலகுகிறார். அதன் பின் மக்களால் மார்ச் 10, 1912 ஆம் ஆண்டு யுவான் ஷிக்காய் (சன் சுன்) என்பவர் பெய்ஜிங்கின் புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
வெளியீடு
தொகு1911 இத் திரைப்படத்தை செப்டம்பர் 23, 2011 அன்று சீனாவிலும்,[1] மற்றும் செப்டம்பர் 29, 2011 அன்று ஹாங்காங்கிலும் வெளியிடப்பட்டது.[2] மேலும் அக்டோபர் 7, 2011 அன்று அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் திரையரங்குகள் முழுவதிலும் இதன் அசல் பதிப்பு வெளியானது. மேலும் இப்படத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நவம்பர் 18, 2011 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வெளிவந்தது.[5]
ஆதாரம்
தொகு- ↑ 1.0 1.1 "'China 1911' gets ready for debut". Archived from the original on 2012-03-02. பார்க்கப்பட்ட நாள் 2013-01-23.
- ↑ 2.0 2.1 "辛亥革命 1911".
- ↑ "18ம் தேதி தமிழகத்தில் ஜாக்கிசானின் 100வது படம் '1911' வெளியீடு". tamil filmbeat. நவம்பர் 16, 2011. பார்க்கப்பட்ட நாள் சனவரி 23, 2013.
- ↑ Smith, Ian Hayden (2012). International Film Guide 2012. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1908215017. பார்க்கப்பட்ட நாள் 6 May 2012.
- ↑ "Jackie Chan 100th film 1911 is all set to release". News World. நவம்பர் 8, 2011. பார்க்கப்பட்ட நாள் சனவரி 26, 2013.