2022 இல் தமிழ்நாடு
2022 இல் தமிழ்நாடு, 2022 நாட்காட்டி ஆண்டில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஆகும்.
சனவரி 2022
தொகு- 4 சனவரி - 21 பொருட்கள் அடங்கிய சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு அரசு, நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குகிறது.[1] இந்த பொங்கல் பரிசு வழங்க 31 சன்வரி 2022 முடிய தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 7 சனவரி - கொரானா பெருந்தொற்று பரவலை தடுக்க இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில், தேவாலயம் மசூதிகளில் பொதுமக்கள் வழிப்பாட்டிற்கு அனுமதி இல்லை. மேலும் மருத்துவமனை, மருந்துக்கடை, செய்தித் தாட்கள், மின்சாரம், பால் விற்பனை, முன்களப் பணியாளர்கள் தவிர பிறர்க்கு ஞாயிற்று கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் திங்கள் கிழமை காலை 6 மணி வரை முழு அடைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பொது இடங்களில் கொண்டாடப்படும் அனைத்து வகையான பொங்கல் பண்டிகை விழாக்கள் ரத்து செய்யப்படுகிறது.[2]
பிப்ரவரி
தொகு- 19 பிப்ரவரி - தமிழ்நாட்டில் நகரபுற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றது.
மார்ச்
தொகுஏப்ரல்
தொகு27 ஏப்ரல் - அதிகாலை மூன்று மணி அளவில் தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது, தேரின் மீது உயர் அழுத்த மின்சார கம்பி பட்டு 12 பேர் உயரிழந்தனர்.[3][4]
மே
தொகு- 9 மே - ச. மாரீஸ்வரன் மற்றும் செ. கார்த்திக் ஆகியோர் தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.[5]
- 18 மே - இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி இந்திய உச்ச நீதிமன்றம், இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.[6][7]
சூலை
தொகு- சூலை 28 - சென்னையில் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.
அக்டோபர்
தொகு- அக்டோபர் 23 - கோயம்புத்தூர் நகரத்தின் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் எதிரில் காரில் இருந்த எரிவாயு உருளை வெடிகுண்டு வெடித்ததில், அதனை ஓட்டி வந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி இறந்தார்.[8]
இறப்புகள்
தொகு- சனவரி 11 - மதுரை மக்களவைத் தொகுதியின் முன்னாள நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஏ. ஜி. எஸ். இராம்பாபு கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தமது 60-வது அகவையில் மறைந்தார்.[9][10]
- சனவரி 23 - முதுபெரும் கல்வெட்டு & தொல்லியல் அறிஞர் இரா. நாகசாமி தமது 91-வது அகவையில் மறைந்தார்.[11]
- ஆகத்து 18 - நெல்லை கண்ணன் தமது 77வது அகவையில் உடல்நலக்குறைவால் காலமானர்.
- அக்டோபர் 10 - வில்லுப் பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் தமது 94வது அகவையில் சென்னையில் மறைந்தார்.
- நவம்பர் 20 - திரைப்பட கதை ஆசிரியர் ஆரூர்தாஸ் தமது 91வது அகவையில் சென்னையில் மறைந்தார்.
- நவம்பர் 21 - தமிழறிஞர் ஔவை நடராசன் தமது 87வது அகவையில் சென்னையில் மறைந்தார்.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு
- ↑ Tamil Nadu: Night curfew from Jan 6, complete shutdown on Sundays amid Covid surge
- ↑ தஞ்சை களிமேடு தேர் விபத்தில் 12 பேர் பலி
- ↑ 11 பேர் உயிரிழப்பு: தஞ்சை தேர் விபத்து
- ↑ இந்திய ஹாக்கி அணியில் தமிழ்நாடு வீரர்கள் இருவர் தேர்வு
- ↑ பேரறிவாளன்: எந்த அடிப்படையில் விடுதலை
- ↑ பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 8 முக்கிய அம்சங்கள்
- ↑ Coimbatore Car Cylinder Blast
- ↑ Former MP Ram Babu dies
- ↑ மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.எஸ் ராம்பாபு காலமானார்
- ↑ தொல்லியல் & கல்வெட்டியல் அறிஞர் இரா. நாகசாமி மறைந்தார்
- ↑ தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்