2023 இந்தியச் சட்டமன்றத் தேர்தல்கள்
2023 இந்தியப் பொதுத்தேர்தல்கள் (2023 elections in India), இந்தியாவின் 9 மாநில சட்டமன்றங்களுக்கு, 2023ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. [1].
மாநில சட்டமன்றத் தேர்தல்கள்
தொகு2023ல் ஒன்பது மாநில சட்டப் பேரரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலச் சட்டமன்றங்களின் பதவிக்காலம் முறையே மார்ச் 12, மார்ச் 15 & மார்ச் 22 தேதிகளில் முடிவடைகிறது. திரிபுரா மாநிலத்தில் 16 பிப்ரவரி 2023 அன்றும், நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் 27 பிப்ரவரி 2023 அன்றும் தேர்தல்கள் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் அன்று வெளியிடப்படுகிறது.[2][3]கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை அன்று நடத்தப்படுகிறது. நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்காணா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெறுகிறது.
- 2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்
- 2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தல்
- 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்
- 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்
- 2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்
- 2023 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்
- 2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்
- 2023 சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்
- 2023 மிசோரம் சட்டமன்றத் தேர்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Terms of the Houses - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
- ↑ {https://www.dinamalar.com/news_detail.asp?id=3220619 திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிப்பு: மார்ச் 2ல் ஓட்டு எண்ணிக்கை]
- ↑ Assembly election 2023 dates Live Updates: Tripura to vote on February 16; Nagaland, Meghalaya to vote on February 27
வெளி இணைப்புகள்
தொகு- Election Commission of India (official website)