2023 ஜி20 புது தில்லி உச்சிமாநாடு
2023 ஜி20 புது தில்லி உச்சிமாநாடு (2023 G20 New Delhi summit), ஜி-20 நாடுகளின் உறுப்பினர்கள் அடங்கிய 18வது உச்சிமாநாடு இந்தியாவின் புது தில்லி நகரத்தில் உள்ள பாரத மண்டபத்தில் 9 மற்றும் 10 செப்டம்பர் 2023 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார். [1][7][8]இம்மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் 21வது உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அதன் பிரதிநிதியாக ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர் கலந்து கொண்டார்.
2023 ஜி20 புது தில்லி உச்சிமாநாடு | |
---|---|
பாரத் மண்டபம் (மாநாடு அமைவிடம்) | |
இடம்பெற்ற நாடு | இந்தியா |
தேதி | 9–10 செப்டம்பர் 2023 |
இடம் | பாரத் மண்டபம் பிரகதி மைதானம் |
நகரம் | புது தில்லி, இந்தியா (மாநாடு நடத்தும் நாடு) |
பங்குகொள்வோர் | ஜி-20 உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் |
முன்னையது | 2022 ஜி-20 பாலி உச்சிமாநாடு |
பின்னையது | 2024 ஜி-20 இரியோ டி செனீரோ உச்சிமாநாடு |
இணையதளம் | https://www.g20.org/en/g20-india-2023/new-delhi-summit/ |
பின்னணி
தொகு2022 ஜி-20 17வது உச்சிமாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்றது. இந்திய விடுதலை இயக்கத்தின் 75வது ஆண்டு விழா 2023ம் ஆண்டில் கொண்டாடப்படுவதால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜி-20 18வது உச்சிமாநாடு 2023ம் ஆண்டில் இந்தியாவின் புது தில்லி நகரத்தில் நடைபெற்றது.[9]
தலைமை
தொகு2023ம் ஆண்டிற்கான ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 1 டிசம்பர் 2022 முதல் 30 நவம்பர் 2023 முடிய தலைமை வகிப்பார்.[10]2024 ஜி-20 உச்சி மாநாட்டிற்கு அர்கெந்தீனா அதிபர் தலைமை வகிப்பார்.
நிகழ்ச்சி நிரல் முன்னுரிமைகள்
தொகுஜி-20 உச்சிமாநாட்டில் இந்தியா 6 அம்ச திட்டங்களை முன்வைத்துள்ளது:[11]
- பசுமை வளர்ச்சி, சூழல் நிதி மற்றும் LiFE
- துரிதப்படுத்தப்பட்ட, உள்ளடக்கிய & மீள்திறன் வளர்ச்சி
- நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல்
- தொழில்நுட்ப மாற்றம் & மின்னுவியல் பொது உள்கட்டமைப்பு
- 21ம் நூற்றாண்டிற்கான பலதரப்பு நிறுவனங்கள்
- பெண்கள் தலைமையிலான வளர்ச்சி
பங்கேற்ற நாடுகளின் அரசுத் தலைவர்கள்
தொகுஇந்த உச்சிமாநாட்டிற்கு ருசியாவின் அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீனா அதிபர் சீ சின்பிங் கலந்து கொள்ள்வில்லை.[12][13]இருப்பினும் உருசியாவின் வெளியுறவு அமைச்சரும், சீனப் பிரதமரும் கலந்து கொண்டனர்.[14][15]
அழைக்கப்பட்ட அரசு விருந்தினர்கள்
தொகுபங்கேற்ற பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள்
தொகு-
பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டமைப்பு [22]
மத்தியாஸ் கோர்மன், தலைமைச் செயலாளர் -
அந்தோனியோ குத்தேரசு, ஐ. நா பொதுச்செயலாளர்
உச்சிமாநாட்டின் முடிவுகள்
தொகு- ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி-20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது.[23]
- உலகளாவிய உயிரிஎரிபொருள் கூட்டமைப்பு எனும் புதிய அமைப்பு துவக்கப்பட்டது.[24]
- இந்தியா தலைமையில் இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் துவக்க திட்டமிட்டப்பட்டது.[25]
- இக்கூட்டத்தில் ஜி-20 பிரகடனத்தை ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[26][27]
இதனையும் காண்க
தொகு- ஜி-20
- ஜி-7
- ஜி4 நாடுகள்
- ஜி8
- ஜி8+5
- பிரிக்ஸ்
- பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த் நாடுகள்)
- நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (குவாட்)
- தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Livemint (2023-09-07). "G20 Summit 2023 Delhi LIVE update: PM Modi finalises agreements with Joe Biden". mint (in ஆங்கிலம்). Archived from the original on 8 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.
- ↑ "India to host G20 Summit in 2023, year after 2022 meeting in Indonesia: Grouping's declaration". Firstpost. 2020-11-23. Archived from the original on 23 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
- ↑ "India to host G20 Summit in 2023" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 22 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221222191127/https://www.thehindu.com/news/national/india-to-host-g20-summit-in-2023-groupings-declaration/article33156506.ece.
- ↑ "India's G-20 Summit Will Now Be in 2023, a Year Later Than Planned". thewire.in. Archived from the original on 23 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
- ↑ "Indonesia to Host G20 Summit in 2022". Sekretariat Kabinet Republik Indonesia. 2020-11-23. Archived from the original on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
- ↑ "Indonesia Leading 2022 G20 Summit". indonesiaexpat-id.cdn.ampproject.org. 24 November 2020. Archived from the original on 18 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
- ↑ [2][3][4][5][6]
- ↑ "As Delhi G20 Summit ends, PM Modi hands over group presidency to Brazil". The Indian Express (in ஆங்கிலம்). 2023-09-10. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
- ↑ Chaudhury, Dipanjan Roy (3 December 2018). "Warmth in ties prompts Italy to let India host G20 Summit in 2022". The Economic Times இம் மூலத்தில் இருந்து 25 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230825234845/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/warmth-in-ties-prompts-italy-to-let-india-host-g20-summit-in-2022/articleshow/66913607.cms?from=mdr.
- ↑ "India hands over G20 presidency to Brazil" (in en). Reuters. 2023-09-10. https://www.reuters.com/world/india-hands-over-g20-presidency-brazil-2023-09-10/.
- ↑ "Overview of G20". Ministry of Earth Sciences, India. Archived from the original on 16 June 2023. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
- ↑ "Biden Heads to G20 Summit; Putin, Xi Not Expected to Attend" (in en). VOA. 6 September 2023 இம் மூலத்தில் இருந்து 6 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230906180940/https://www.voanews.com/a/biden-heads-to-g20-summit-putin-xi-not-expected-to-attend-/7256229.html.
- ↑ "G20 summit: Who is coming to India, and who is not" (in en). France 24. 6 September 2023 இம் மூலத்தில் இருந்து 6 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230906182439/https://www.france24.com/en/live-news/20230906-g20-summit-who-is-coming-to-india-and-who-is-not.
- ↑ Goncharenko, Roman (September 8, 2023). "Putin's self-isolation: Lavrov attends the G20". DW. பார்க்கப்பட்ட நாள் September 11, 2023.
- ↑ "Chinese Premier Li G-20 Debut Eclipsed by Xi in State Media". Bloomberg News. September 10, 2023. பார்க்கப்பட்ட நாள் September 11, 2023.
- ↑ "President Xi not coming for G 20, Premier Li takes his place". Hindustan Times. 2023-09-01. Archived from the original on 2 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 September 2023.
- ↑ Redacción (2023-09-07). "Presencias y ausencias que habrá en la cumbre del G20". Máspormás (in மெக்ஸிகன் ஸ்பானிஷ்). Archived from the original on 8 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.
- ↑ 18.0 18.1 18.2 18.3 18.4 "India to invite Bangladesh as guest country during its G-20 presidency". newsonair.gov.in. Government of India (Prasar Bharati). 13 September 2022 இம் மூலத்தில் இருந்து 10 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221110221833/https://newsonair.gov.in/News?title=India-to-invite-Bangladesh-as-guest-country-during-its-G-20-presidency&id=447615.
- ↑ "Official List of Guests". Archived from the original on 31 January 2023. பார்க்கப்பட்ட நாள் 31 January 2023.
- ↑ "Nigeria's ruling party candidate Bola Tinubu wins disputed presidential election" இம் மூலத்தில் இருந்து 1 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230301133855/https://theprint.in/world/nigerias-ruling-party-candidate-bola-tinubu-wins-disputed-presidential-election/1408112/.
- ↑ "Photos: Tinubu, supporters celebrate Nigeria election win" இம் மூலத்தில் இருந்து 1 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230301133857/https://www.aljazeera.com/gallery/2023/3/1/photos-bola-tinubu-and-supporters-celebrate-election-win.
- ↑ 22.0 22.1 22.2 22.3 22.4 "India's G20 Presidency and the next phase of industrial growth" (in en). The Financial Express (India). 2 November 2022 இம் மூலத்தில் இருந்து 11 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221211184424/https://www.financialexpress.com/industry/indias-g20-presidency-and-the-next-phase-of-industrial-growth/2758777/.
- ↑ "African Union formally joins G20, PM Modi calls for 'trust and reliance'". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-09-09. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
- ↑ "Launch of the Global Biofuel Alliance (GBA)". www.g20.org. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
- ↑ "Biden, Modi and G20 allies unveil rail and shipping project linking India to Middle East and Europe". AP News. 9 September 2023.
- ↑ "New Delhi Declaration adopted at G20, huge win as India clinches consensus" (in en). 9 September 2023. https://www.indiatoday.in/india/story/new-delhi-declaration-adopted-at-g20-summit-pm-modi-thanks-all-for-cooperation-2433392-2023-09-09.
- ↑ "G20 New Delhi Leaders' Declaration". mea.gov.in (in english). பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
குறிப்புகள்
தொகு