365 காதல் கடிதங்கள்

2010 திரைப்படம்

365 காதல் கடிதங்கள் (365 Kadhal Kadithangal) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். என். பாண்டியன் இயக்கிய இப்படத்தில் யுவ கார்த்திக், அஜய், கார்த்திகா அடைகலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கருணாஸ், ராதாரவி, தேவன், சிங்கமுத்து, பாவா லட்சுமணன், முத்துக்காளை, சம்பத் ராம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சாலை மைத்ரி தயாரித்த இப்படத்தின் பாடல்களுக்கு, பவுல் ஜே. இசை அமைத்தார். படம் 17 செப்டம்பர் 2010 அன்று வெளியானது.[1]

365 காதல் கடிதங்கள்
இயக்கம்என். பாண்டியன்
தயாரிப்புசாலை மைத்ரி
கதைஎன். பாண்டியன்
இசைபவுல் ஜே. (பாடல்கள்)
ஜெய்கி (பின்னணி இசை)
நடிப்பு
  • யுவா கார்த்திக்
  • அஜய்
  • கார்த்திக் அடைக்கலம்
ஒளிப்பதிவுசாலை சகாதேவன்
படத்தொகுப்புவி. ஏ. சண்முகம்
கலையகம்விஷன் 21 கிரியேட்டிவ் டீம் ஒர்க்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 17, 2010 (2010-09-17)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • யுவ கார்த்திக் திநகர் சுப்புவாக
  • அஜய் வளர்ந்த சுப்புவாக
  • கார்த்திகா அடைக்கலம் ஜாஸ்மினாக
  • கருணாஸ் முருகனாக
  • ராதாரவி இராசு தேவராக
  • தேவன் வில்லியம்ஸ்
  • சிங்கமுத்து மர அறுப்பு ஆலை உரிமையாளராக
  • பாவா லட்சுமணன் தலைமைக் காவலராக
  • முத்துக்காளை மெண்டலாக
  • சம்பத் ராம் சுருளியாக
  • தேவேந்திரன் ஊமையாக
  • பாய்ஸ் ராஜன் மருத்துவராக
  • வி. எம். சுப்புராஜ்
  • விஜய் கணேஷ்
  • ரெஜி
  • உசா எலிசபெத் எலிசபெத்தாக
  • மிண்ணல் தீபா கோமதியாக

தயாரிப்பு

தொகு

பிரியம் (1996) திரைப்படத்தை இயக்கிய என். பாண்டியன் விஷன் 21 கிரியேட்டிவ் டீம் ஒர்க்ஸ் என்ற பதாகையின் கீழ் 365 கதல் கடிதங்கள் படத்தின் வழியாக மீண்டும் இயக்கு வந்தார். இயக்குநர் கூறுகையில், "இது ஒரு பெணுக்கும், பையனுக்கும் இடையேயான இதயத்தைத் தொடும் காதல் கதையாக இருக்கும். இது அவர்களின் பள்ளி நாட்களிலிருந்து தற்போதைய வயது வரை நீண்டுள்ளது. பள்ளி நாட்கள் பின் நோக்கிய காட்சியில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் இளைஞன் அவளை தன் காதலிக்கு அவளை பிரிந்திருக்கும்போது ஒவ்வொரு நாளும் (365 நாட்கள்) காதல் கடிதங்களை எழுதி தனது காதலை எவ்வாறு புதுப்பிக்கிறான் " என்பதாக உள்ளது. முக்கிய வேடத்திற்கு இரண்டு வெவ்வேறு நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர், அஜய் இளைஞனின் பாத்திரத்தை ஏற்றார். அறிமுக நடிகர் யுவ கார்த்திக் இளம் பள்ளி மாணவர் பாத்திரத்தை ஏற்று நடித்தார். கார்த்திகா அடைக்கலம் இரு காலக்கட்ட வேடங்களிலும் நடித்துள்ளார். காதல் கதைக்கு வண்ணமயமான பின்னணியை அளிக்கும் வகையில் இந்த படம் கொடைக்கானல் பின்னணியில் உருவாக்கபட்டது, ஆனால் படத்தின் முக்கிய பகுதிகள் உதகை , கோத்தகிரியில் படமாக்கப்பட்டன.[2][3][4][5][6]

இப்படத்திற்கான இசையை திரைப்பட இசையமைப்பாளர் பால் ஜே. அமைத்தார். இதன் இசைப்பதிவில் 6 பாடல்கள் உள்ளன. படத்தின் இசையானது 2009 திசம்பர் 13 அன்று டி. ராஜேந்தரால் வெளியிட அதை சிலம்பரசன் பெற்றார்.[7][8][9]

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் யுரேகா

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சைக்கிள் தேவதை"  வீரமணி 4:17
2. "ஆளப்பர"  எம். கே. பாலாஜி, வீரமணி, ஜோதிசா 4:12
3. "காதல் குருவி"  வீரமணி, மிருனாளிணி, சுனந்தித்தா நாயர் 3:28
4. "லாவண்டர் பெண்ணே"  எம். கே. பாலாஜி, வினிதா சிவகுமார் 4:08
5. "முதல் மழை"  பத்மலதா, வீரமணி 4:50
6. "காதல் கருவி"  வீரமணி 3:04
மொத்த நீளம்:
23:59

குறிப்புகள்

தொகு
  1. "Friday Fury - September 17". சிஃபி. 18 September 2010. Archived from the original on 8 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  2. "365 Kadhal Kadithangal For You". beta.top10cinema.com. 19 December 2009. Archived from the original on 8 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  3. "365 Kadhal Kadithangal". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 17 December 2009. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  4. "365 Kadhal Kadidhangal!". indiaglitz.com. 15 December 2009. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  5. "A love letter each day!". behindwoods.com. 15 December 2009. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  6. "Karthiga in 365 Kadhal Kadinthangal". ayngaran.com. 22 December 2009. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  7. "365 Kadhal Kadithangal (Original Motion Picture Soundtrack)". music.apple.com. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  8. "365 Kaadhal Kadithangal Songs". jiosaavn.com. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  9. "365 kadhal Kadinthangal audio launch". ayngaran.com. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=365_காதல்_கடிதங்கள்&oldid=4161877" இலிருந்து மீள்விக்கப்பட்டது