அசோக்ராஜன்

அசோக்ராஜன் (Ashokrajan, 02 பிப்ரவரி 1955) இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். மனித மனங்களை கதைகளாக உருமாற்றி, மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், திரையில் காட்சிகளாக சித்தரிக்கும் திரைப்படங்களுக்கு, கேமிரா கண்களால் படம்பிடித்து காட்டும் சிறந்த ஒளிப்பதிவாளர். தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.[1]

ASHOKRAJAN
ஒளிப்பதிவாளர் அசோக்ராஜன்

ஒளிப்பதிவாளர் அசோக்ராஜன் சென்னையில் பிறந்தவர். 1981 இல் ஒளிப்பதிவாளர் பி. கண்ணனிடம் உதவியாளராக திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். இணை ஒளிப்பதிவாளராக 35 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

குடும்ப பின்னணி: தொகு

மறைந்த முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர்  திரு.கருணாநிதியின் கைவண்னத்தில் எழுதி, மறைந்த  நடிகர் செவாலியே டாக்டர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ”பராசக்தி” திரைப்படத்த்ன் பன்முக இயக்குனர் திரு.கிருஷ்ணன் பஞ்சுவின் குடும்பத்தில் இருந்து வந்தவர். திரு.கிருஷ்ணன் பஞ்சு அசோக் ராஜன் தாய்மாமன் ஆவார்.

மறைந்த  நடிகர் செவாலியே டாக்டர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பாசமலர் திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் திரு.பீம்சிங் அசோக் ராஜன் சித்தப்பா ஆவார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காயத்ரி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பட்டு என்கிற ஆர்.பட்டாபிராமன் அசோக் ராஜன் தாய்மாமன் ஆவார்.

பணியாற்றிய திரைப்படங்கள் தொகு

விருதுகள் தொகு

  • நட்புக்காக திரைப்படத்திற்கு பாரத் கல்சுரல் அகாடமி விருது[சான்று தேவை]
  • 2008ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிவசக்தி தொலைக்காட்சி தொடருக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் விருது[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. "Ashok Rajan". Binged (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்ராஜன்&oldid=3382808" இலிருந்து மீள்விக்கப்பட்டது