அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அத்வைத வேதாந்த ஆசிரியர்கள் அல்லது அத்வைத சித்தாந்திகள் (List of teachers of Advaita Vedanta) எனப்படுவோர் இறைவனும், சீவனும் ”இரண்டற்றது” அத்வைதம் எனும் கொள்கை உடையவர்கள் ஆவர். மேலும் இறைவன் சத்-சித்-ஆனந்தமயமானவர் என்றும், இறைவன் (பிரம்மம்) பெயர், உருவம், குணங்கள் அற்றவராக இருப்பவர், பிரம்மமே பிரபஞ்சமாகவும், சீவராசிகளுமாக உள்ளது என்ற கொள்கை உடையவர்கள்.

” ஈஸ்வரன் ஜெகத்காரணம் ”, பார்க்கப்படும் இந்த ” ஜெகத் மித்யா ” (நிலையற்றது), ஜெகத்தை படைத்த ”பிரம்மம் சத்யம்” என்பது இவர்களின் சித்தாந்தம். இவர்களுடைய சித்தாந்தங்கள், உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம் போன்ற வேதாந்த சாத்திரங்களில் அதிகமாக காணப்படுகிறது. அத்வைத சித்தாந்தங்கள், வேத காலத்திலிருந்து தற்காலம் வரை குருகுலத்தில், குரு - சீடர் பரம்பரையில் அத்வைத வேதாந்த சாத்திரங்கள் உபதேசிக்கப்பட்டு வருகிறது.

வேதகால அத்வைத வேதாந்த ஆசிரியர்கள் தொகு

  • யாக்ஞவல்கியர், இவர் தன் மனைவி மைத்ரேயிக்கு ’பிரம்மவித்தை’யை போதித்தார்
  • உத்தாலக ஆருணி, இவர் ’ஸத்’வித்தையை சுவேதகேதுவிற்கு உபதேசித்தார்.

பாதராயணருக்கு முந்தைய அத்வைத வேதாந்த ஆசிரியர்கள் தொகு

  • பதரி - [பிரகதாரண்யகம் 1.2.30]
  • ஒளடுலோமி - [பிரகதாரண்யகம் 1.3.21]
  • கசகிருஷ்ணர் - [பிரகதாரண்யகம் 1.4.22]
  • அஸ்மாத்தியர் - [பிரகதாரண்யகம் 1.2.29,1.4..20]
  • ஐதரேயர் - [பிரகதாரண்யகம் 111.4.4]
  • தர்சஜினி - [பிரகதாரண்யகம் 111.1.9]
  • பாதராயணர் - பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியர்

பாதராயணாருக்கு பிந்திய அத்வைத வேதாந்த ஆசிரியர்கள் தொகு

சங்கரருக்கு பிந்திய அத்வைத வேதாந்த ஆசிரியர்கள் தொகு

  • சுரேஷ்வரர் - (8ஆம் நூற்றாண்டு) - சங்கரரின் சீடர், விருத்திகாரர் [சங்கர பாஷ்யத்திற்கு விளக்காசிரியர்].
  • பத்மபாதர் - (8ம் நூற்றாண்டு) - சங்கரரின் சீடர், தைத்திரீய உபநிடதம் & பிரகதாரண்யக பாஷ்யத்திற்கு விளக்க ஆசிரியர் [விருத்திகாரர்]
  • அஸ்தாமலகர் - (8ம் நூற்றாண்டு) - சங்கரரின் சீடர்
  • தோடகர் - (8ம் நூற்றாண்டு) - சங்கரரின் சீடர்
  • சர்வாக்ஞாத்ம முனி (850 - 950)
  • வாசஸ்பதி மிஸ்ரர் - 9ம் நூற்றாண்டு, பல அத்வைத வேதாந்த நூல்களுக்கு விளக்கம் எழுதியவர் (விருத்திகாரர்)
  • ஸ்ரீஹர்ஷர் (1169 - 1225) ”காந்தன-காந்த-காத்யம்” எனும் நூலை எழுதியவர்.
  • பிரகாசாத்மா யதி (1200)
  • ஆனந்தகிரி - டீக்காகாரர், சங்கரரின் அனைத்து பாஷ்யத்திற்கும் விளக்க உரை வழங்கியுள்ளார்.
  • விமுக்தாத்மர் (1200)
  • சித்சுகர் - கி. பி., 1220களில் வாழ்ந்த அத்வைத கொள்கைவாதி. பட்டறிவு சார்ந்த உள்ளமையியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) பற்றிய எதிர்மறையான வாதத்தை வைத்து புகழ் பெற்றவர்.
  • அமலானந்தர் (1247)
  • வித்யாரண்யர் (1350 - 1386) - நூலாசிரியர், பஞ்சதசீ மற்றும் ’திருக்-திருஷ்ய விவேகம்’ , மற்றும் சிருங்கேரி மடாதிபதியாக இருந்தவர்.
  • மாதவர் (14ம் நூற்றாண்டு), நூலாசிரியர், ’சர்வ தர்சன சங்கிரஹ’
  • சதானந்த யோகேந்திரர் (15ம் நூற்றாண்டு) - நூலாசிரியர், ’வேதாந்த சாரம்
  • தர்மராஜ அத்வேந்திரர் (1550-1650)
  • மதுசூதன சரஸ்வதி (1565-1650) - நூலசிரியர், ’அத்வைத சித்தி’
  • அப்பைய தீட்சிதர் (1603-) - நூலாசிரியர் ’பரிமளா’ மற்றும் ‘சித்தார்த்த-லேசா-சங்கிரகம்’
  • இலக்குமி தாரா கவி - நூலாசிரியர், ’அத்வைத மகரந்தம்’
  • சதானந்த யதி - கி.பி. 18வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். ’அத்வைத பிரம்ம-சித்தி’ எனும் நூலை எழுதியவர்.

19ம் நூற்றாண்டு முதல் அத்வைத வேதாந்த ஆசிரியர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு