அந்தகன்

2024இல் வெளியான தமிழ்த் திரைப்படம்

அந்தகன் (Andhagan) என்பது தியாகராஜன் இயக்கத்தில் ஸ்டார் மூவிஸ் தயாரித்த 2024இல் தமிழ் மொழியில் வெளியான அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்து, கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் மனோபாலா ஆகியோருடன் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது 2018 ஆம் ஆண்டு இந்தி மொழியில் வெளியான அந்தாதூன் என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும். பார்வையற்ற இசைக் கலைஞரை கதை பின்தொடர்கிறது. அவனே அறியாமல் ஒரு கொலையில் சிக்கிக் கொள்கிறான்.

அந்தகன்
பட வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்தியாகராஜன்
தயாரிப்புசாந்தி தியாகராஜன்
பிரீதி தியாகராஜன்
திரைக்கதைதியாகராஜன்
பட்டுக்கோட்டை பிரபாகர் (dialogue)
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்பு
ஒளிப்பதிவுரவி யாதவ்
படத்தொகுப்புசதீஷ் சூர்யா
கலையகம்ஸ்டார் மூவிஸ்
விநியோகம்எஸ். தாணு
வெளியீடுஆகத்து 9, 2024 (2024-08-09)
நாடு இந்தியா
மொழிதமிழ்

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட தயாரிப்பு தாமதங்களைத் தொடர்ந்து அந்தகன் 9 ஆகஸ்ட் 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் பொதுவாக நேர்மறையான விமர்சனங்களையும் பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்றது, சிலர் இது பிரசாந்தின் நீண்ட கால தாமதமான மறுபிரவேசம் என்று கூறினர்.

கதைச் சுருக்கம்

தொகு

புதுச்சேரியை சேர்ந்த கிருஷ்ணா ( பிரசாந்த் ) ஒரு வளர்ந்து வரும் பியானோ கலைஞர் ஆவார். அவர் தனது பியானோ திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு பரிசோதனையாக தான் பார்வையற்றவராக இருப்பதாக நடிக்கிறார். இவரது திறமையைக் கண்ட கார்த்திக் தனது மனைவி சிமிக்கு ( சிம்ரன் ) கிருஷ்ணாவை அறிமுகப்படுத்த தனது வீட்டிற்கு அழைக்கிறார்.

கார்த்திக்கின் வீட்டுக்கு வந்த கிருஷ்ணா கார்த்திக்கின் கொலையை பார்க்க நேரிடுகிறது. சிமியின் காதலனான மனோகர் ( சமுத்திரக்கனி ) குளியலறையில் ஒளிந்து கொண்டிருப்பதையும் கிருஷ்ணா காண்கிறார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சனை ஏற்படுகிறது.

நடிகர்கள்

தொகு

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். குக்கூ (2014) படத்தில் இவரது இசையால் ஈர்க்கப்பட்ட பின்னர் தியாகராஜன் இவரை இப்படத்திற்கு இசையமைப்பாளராகத் தேர்ந்தெடுத்தார். படத்தின் பாடல் உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் வாங்கியது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Subramanian, Abhinav (9 August 2024). "Andhagan Movie Review : A time capsule of cinematic clichés". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 9 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240809105558/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/andhagan/movie-review/112401900.cms. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "SYNOPSIS | ANDHAGAN THE PIANIST". staarmovies.com. Archived from the original on 23 July 2024. பார்க்கப்பட்ட நாள் 24 July 2024.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Cast". staarmovies.com. Archived from the original on 25 July 2024. பார்க்கப்பட்ட நாள் 24 July 2024.
  4. "Andhagan all set for release in August". News Today. 25 July 2024. Archived from the original on 28 July 2024. பார்க்கப்பட்ட நாள் 10 August 2024.
  5. "பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' படத்தின் புதிய அப்டேட்!" [A new update on the Prashanth starrer Andhagan!]. Webdunia (in Tamil). 18 February 2022. Archived from the original on 19 February 2022. பார்க்கப்பட்ட நாள் 19 February 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தகன்&oldid=4118774" இலிருந்து மீள்விக்கப்பட்டது