அமெரிக்க நாடுகள் அமைப்பு
அமெரிக்க நாடுகள் அமைப்பு (Organization of American States, எசுப்பானியம்: Organización de los Estados Americanos, போர்த்துக்கேய மொழி: Organização dos Estados Americanos, பிரெஞ்சு மொழி: Organisation des États américains), அல்லது ஆங்கில எழுத்துச் சுருக்கமாக ஓஏஎஸ் (இலத்தீன மொழிச் சுருக்கம்:: ஓஈஏ) ஏப்ரல் 30, 1948இல் வடக்கு மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளால் நிறுவப்பட்ட கண்டமிடை அமைப்பு ஆகும். இது உறுப்பு நாடுகளிடையே பிராந்திய கூட்டுறவையும் ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ளது.[1]அமெரிக்காக்களின் 35 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
அமெரிக்க நாடுகள் அமைப்பு | |
---|---|
குறிக்கோள்: "அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சிக்காக மக்களாட்சி" | |
தலைமையகம் | வாசிங்டன், டி. சி. |
ஆட்சி மொழிகள் | |
மக்கள் | அமெரிக்கர் |
உறுப்பு நாடுகள் | 35 நாடுகள்
|
தலைவர்கள் | |
• செயலாளர் நாயகம் | ஓசே மிகுவல் இன்சுல்சா |
• உதவி செயலாளர் நாயகம் | ஆல்பெர்ட் ஆர். ராம்தின் |
நிறுவுதல் | |
• பட்டயம் | 30 ஏப்ரல் 1948 |
பரப்பு | |
• மொத்தம் | 42,549,000 km2 (16,428,000 sq mi) |
மக்கள் தொகை | |
• 2008 மதிப்பிடு | 910,720,588 |
• அடர்த்தி | 21/km2 (54.4/sq mi) |
நேர வலயம் | ஒ.அ.நே-10 to +0 |
மே 26, 2005 முதல் இந்த அமைப்பின் செயலாளர் நாயகமாக ஓசே மிகுவல் இன்சுல்சா பணியாற்றுகிறார்.
உறுப்பு நாடுகளும் இணைப்புகளும்
தொகுஅமெரிக்காக்களில் உள்ள 35 சுயாட்சி நாடுகளும் ஓஏஎசில் அங்கத்தினர்கள் ஆவர். மே 5, 1948இல் இந்த அமைப்பு உருவானபோது 21 அங்கத்தினர்கள் இருந்தனர்:
கனடாவும் கரிபியன் நாடுகளும் அவை விடுதலை பெற்றவுடன் ஓஏஎசில் இணைந்தன. பின்னாளில் இணைந்த நாடுகளின் பட்டியல் அவர்கள் இணைந்த நாளையொட்டி வரிசைப் படுத்தப்பட்டுள்ளன:
- பார்படோசு (1967 முதல் உறுப்பினர்)
- டிரினிடாட் மற்றும் டொபாகோ (1967)
- ஜமேக்கா (1969)
- கிரெனடா (1975)
- சுரிநாம் (1977)
- டொமினிக்கா (1979)
- செயிண்ட். லூசியா (1979)
- அன்டிகுவா பர்புடா (1981)
- செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் (1981)
- பஹமாஸ் (1982)
- செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் (1984)
- கனடா (1990)
- பெலீசு (1991)
- கயானா (1991)
குறிப்புகள்
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ Coordinates of OAS headquarters: 38°53′34″N 77°02′25″W / 38.8929138°N 77.0403734°W
- ↑ "Member States". OAS. பார்க்கப்பட்ட நாள் 2012-11-01.
- ↑ "Cuba Will Not Return to the OAS". Havana Times. 2014-01-24.
- ↑ "OAS readmits Honduras to its ranks". CNN. 2011-06-01. http://www.cnn.com/2011/WORLD/americas/06/01/honduras.oas/. பார்த்த நாள்: 2012-11-01.
வெளி இணைப்புகள்
தொகு- OAS official site
- Door Opens to OAS for Cuba by Thelma Mejia, Havana Times, 4 சூன் 2009.
- OAS Special Rapporteur on Freedom of Expression
- OAS Executive Secretariat for Integral Development (SEDI)
- OAS Foreign Trade Information System – SICE
- Outdoor sculpture பரணிடப்பட்டது 2007-03-16 at the வந்தவழி இயந்திரம் at the OAS headquarters building.
- Educational Portal of the Americas
- OAS Lifts Ban On Cuba After 47 Years பரணிடப்பட்டது 2009-07-25 at the வந்தவழி இயந்திரம் by Portia Siegelbaum, CBS News, 3 சூன் 2009.
- Cuba's Fidel Castro Calls OAS a "U.S. Trojan Horse" by Xinhua, 4 சூன் 2009.
- The Organization of American States in Haiti: Election Monitoring or Political Intervention?, from the Center for Economic and Policy Research, அக்டோபர் 2011.