ஆரளம்

கேரளாவிலுள்ள ஒரு கிராமம்

ஆரளம் (Aralam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சியாகும். [1]

ஆரளம்
கிராமம்
ஆரளம் பண்ணைப் பள்ளி
ஆரளம் பண்ணைப் பள்ளி
ஆரளம் is located in கேரளம்
ஆரளம்
ஆரளம்
கேரளாவில் ஆரளத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°59′57″N 75°45′50″E / 11.999220°N 75.764010°E / 11.999220; 75.764010
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர்
அரசு
 • வகைஇந்தியாவின் ஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்ஆரளம் கிரம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்112.45 km2 (43.42 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்29,328
 • அடர்த்தி260/km2 (680/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.என்
வாகனப் பதிவுகேஎல்-78

மக்கள்தொகை

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆரளம் 29,328 மக்களைக் கொண்டுள்ளது. இதில் 14,438 ஆண்களும் 14,890 பெண்களும் உள்ளனர். ஆரளம் கிராமம் 112.45 பரப்பளவில் பரவியுள்ளது. இதில் 6,904 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆரளத்தின் பாலின விகிதம் மாநில சராசரியான 1,084 ஐ விட 1,031 குறைவாக இருந்தது. 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 3,180 (10.8%) ஆகும். இதில் 1,617 ஆண்களும் 1,563 பெண்களும் இருக்கின்றனர். ஆரளம் மாநில சராசரியான 94% ஐ விட 89.9% குறைந்த கல்வியறிவு பெற்றுள்ளது. ஆண்களின் கல்வியறிவு 92.7% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 87.3% ஆகவும் உள்ளது.

பொருளாதாரம்

தொகு

ஆரளம் ஊராட்சி முக்கியமாக விவசாயத்தை நம்பி உள்ளது. இங்கு தென்னை, முந்திரி, மிளகு, இரப்பர் மற்றும் பாக்கு ஆகியவை முக்கியமாக பயிரிடப்படுகின்றன. 2018 கேரள வெள்ளத்தின் போது கண்ணூர் மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆரளமும் ஒன்று. தென்னை, முந்திரி, மிளகு போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்பட்ட 20 எக்டேர் நிலச்சரிவு மற்றும் சூறாவளியாலும், 5 எக்டேர் கனமழையாலும் அடித்துச் செல்லப்பட்டு இங்கு வசிக்கும் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 22% நடு மலைப்பகுதிகளின் (101 மீ) பக்க சரிவிலும், 7% நடுநிலங்களின் ஆற்றங்கரையிலும் (61 மீ) இருந்தன.

சுற்றுலா

தொகு

ஆரளம் அடர்ந்த மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் இருப்பதால் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஆரளம் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

போக்குவரத்து

தொகு

கண்ணூர் நகரம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மங்களூர் மற்றும் மும்பையை வடக்குப் பக்கமாகவும், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் தெற்குப் பக்கமாகவும் அணுகலாம். இரிட்டியின் கிழக்கே உள்ள சாலை மைசூர் மற்றும் பெங்களூருடன் இணைக்கிறது. தலச்சேரி தொடர் வண்டி நிலையம் அருகில் உள்ளது. இது கோழிக்கோடு, கண்ணூர் தொடருந்து நிலையம் மங்களூர் ஆகியவற்றை இணைக்கிறது. கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரளம்&oldid=3818017" இலிருந்து மீள்விக்கப்பட்டது