இசுட்ரோன்சியம் குளோரைடு

வேதிச் சேர்மம்

இசுட்ரோன்சியம் குளோரைடு (Strontium chloride) என்பது SrCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியம் நேர்மின் அயனியும் குளோரைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. நடுநிலையான நீரிய கரைசல்களை உருவாக்குவது இவ்வுப்பின் குறிப்பிடத்தக்க பண்பாகும். இசுட்ரோன்சியத்தின் அனைத்து சேர்மங்களைப் போலவே, இந்த உப்பும் சுடரில் ஒரு பிரகாசமான சிவப்பு நிறத்தை வெளியிடுகிறது. இந்த விளைவு பொதுவாக பட்டாசுத் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது. இசுட்ரோன்சியம் குளோரைடின் பண்புகள் அதிக நச்சுத்தன்மை கொண்ட பேரியம் குளோரைடுக்கும் குறைந்த நச்சுத்தன்மை கொண்ட கால்சியம் குளோரைடுக்கும் இடையே இடைநிலையாக உள்ளன.

இசுட்ரோன்சியம் குளோரைடு
இசுட்ரோன்சியம் குளோரைடு அறுநீரேற்று
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் குளோரைடு
வேறு பெயர்கள்
இசுட்ரோன்சியம்(II) குளோரைடு
இனங்காட்டிகள்
10476-85-4 Y
10025-70-4 (அறுநீரேற்று) Y
ChEBI CHEBI:36383 Y
ChEMBL ChEMBL2219640 N
ChemSpider 55440 Y
EC number 233-971-6
InChI
  • InChI=1S/2ClH.Sr/h2*1H;/q;;+2/p-2 Y
    Key: AHBGXTDRMVNFER-UHFFFAOYSA-L Y
  • InChI=1S/2ClH.Sr/h2*1H;/q;;+2/p-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61520
  • [Sr+2].[Cl-].[Cl-]
UNII EKE8PS9J6Z Y
O09USB7Z44 (hexahydrate) Y
பண்புகள்
SrCl2
வாய்ப்பாட்டு எடை 158.53 g/mol (anhydrous)
266.62 g/mol (அறுநீரேற்று)
தோற்றம் வெண்மையான படிகத் திடப்பொருள்
அடர்த்தி 3.052 g/cm3 (நீரிலி, ஒற்றைச் சரிவச்சு வடிவம்)
2.672 கி/செ.மீ3 (dihydrate)
1.930 கி/செ.மீ3 (அறுநீரேற்று)
உருகுநிலை 874 °C (1,605 °F; 1,147 K) (நீரிலி)
61 °செல்சியசு (அறுநீரேற்று)
கொதிநிலை 1,250 °C (2,280 °F; 1,520 K) (நீரிலி)
நீரிலி:
53.8 கி/100 மி.லிட்டர் (20 °செல்சியசு)
அறுநீரேற்று:
106 கி/100 மி.லி (0 °செல்சியசு)
206 கி/100 மில்லி (40 °செல்சியசு)
கரைதிறன் எத்தனால்: சிறிதளவு கரையும்
அசிட்டோன்: சிறிதளவு கரையும்
அமோனியா: கரையாது
−63.0·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.650 (நீரிலி)
1.594 (இருநீரேற்று)
1.536 (அறுநீரேற்று)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு உருக்குலைந்த உரூட்டைல் கடமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (ஆறு ஒருங்கிணைப்புகள்)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
தீப்பற்றும் வெப்பநிலை N/A
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இசுட்ரோன்சியம் புளோரைடு
இசுட்ரோன்சியம் புரோமைடு
இசுட்ரோன்சியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பெரிலியம் குளோரைடு
மக்னீசியம் குளோரைடு
கால்சியம் குளோரைடு
பேரியம் குளோரைடு
ரேடியம் குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
☒N verify (இது Y☒N ?)

தயாரிப்பு

தொகு

ஐதரோகுளோரிக் அமிலத்துடன் நீரிய இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு அல்லது இசுட்ரோன்சியம் கார்பனேட்டைச் சேர்த்து சூடுபடுத்தினால் இசுட்ரோன்சியம் குளோரைடைத் தயாரிக்கலாம்:

Sr(OH)2 + 2 HCl → SrCl2 + 2 H2O

குளிர்ந்த நீரிய கரைசலில் இருந்து படிகமாக்கல் அறுநீரேற்றை (SrCl2·6H2O கொடுக்கிறது. இந்த உப்பின் நீரிழப்பு படிப்படியாக ஏற்படுகிறது. 61 °செல்சியசு வெப்பநிலையில் (142 °பாரங்கீட்டு) நீரிழப்பு ஏற்படத் தொடங்குகிறது. 320 °செல்சியசு வெப்பநிலையில் (608 °பாரங்கீட்டு) முழு நீரிழப்பு ஏற்படுகிறது.[2]

கட்டமைப்பு

தொகு

திட நிலையில், இசுட்ரோன்சியம் குளோரைடு புளோரைட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[3][4][5] வாயு நிலையில் SrCl2 மூலக்கூறு நேரியல் அல்லாத Cl-Sr-Cl தோராயமாக 130° பிணைப்புக் கோணத்தில் உள்ளது. [6] இணைதிறன் கூடு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கைக்கு இதி விதிவிலக்காகும். இக்கோட்பாடு நேரியல் கட்டமைப்பைக் கணிக்கிறது. இணைதிறன் கூட்டுக்கு கீழே உள்ள கூட்டில் உள்ள டி ஆர்பிட்டால்களின் பங்களிப்புகள் பொறுப்பு என்று முன்மொழிவதற்கு தொடக்கத்திலிருந்தே கணக்கீடுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.[7] மற்றொரு முன்மொழிவு என்னவென்றால், இசுட்ரோன்சியம் அணுவின் எலக்ட்ரான் மையத்தின் முனைப்பு Sr-Cl பிணைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் மைய எலக்ட்ரான் அடர்த்தியின் சிதைவை ஏற்படுத்துகிறது என்பதாகும்.[8]

பயன்கள்

தொகு

மஞ்சள் நிற இசுட்ரோன்சியம் குரோமேட்டு, இசுட்ரோன்சியம் கார்பனேட்டு மற்றும் இசுட்ரோன்சியம் சல்பேட்டு போன்ற இசுட்ரோன்சியத்தின் மற்ற சேர்மங்கள் தயாரிப்பதற்கு இசுட்ரோன்சியம் குளோரைடு ஒரு முன்னோடிச் சேர்மமாகும். இசுட்ரோன்சியம் குளோரைடின் நீரிய கரைசல்களை விரும்பும் அயனியின் சோடியம் உப்புடன் வெளிப்படுத்துவது பெரும்பாலும் திடமான வீழ்படிவு உருவாவதற்கு வழிவகுக்கிறது.:[9][2]

SrCl2 + Na2CrO4 → SrCrO4 + 2 NaCl
SrCl2 + Na2CO3 → SrCO3 + 2 NaCl
SrCl2 + Na2SO4 → SrSO4 + 2 NaCl

இசுட்ரோன்சியம் குளோரைடு பெரும்பாலும் பட்டாசுத் தொழிலில் சிவப்பு நிறமூட்டும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு நிறமளிக்கும் பெரும்பாலான மற்ற சேர்மங்களை விட தீப்பிழம்புகளுக்கு மிகவும் தீவிரமான சிவப்பு நிறத்தை இச்சேர்மம் அளிக்கிறது. கண்ணாடித் தயாரிப்பிலும் உலோகவியலிலும் சிறிய அளவில் இசுட்ரோன்சியம் குளோரைடு பயன்படுத்தப்படுகிறது. எலும்புப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்பான இசுட்ரோன்சியம்-89, பொதுவாக இசுட்ரோன்சியம் குளோரைடு வடிவில் நிர்வகிக்கப்படுகிறது. கடல் நீர் மீன்வளத்திற்கு சிறிய அளவு இசுட்ரோன்சியம் குளோரைடு தேவைப்படுகிறது. சில மிதவைவாழிகள் வளர்ச்சியின் போது உட்கொள்ளப்படுகிறது.

பல் பராமரிப்பு

தொகு

ஈறு மந்தநிலையால் வெளிப்படும் நரம்பு நுனிகளைக் கொண்ட தந்தினியில் உள்ள நுண்ணிய குழாய்களின் மீது ஒரு தடையை உருவாக்குவதன் மூலம் பல் உணர்திறனைக் குறைப்பதில் இசுட்ரோன்சியம் குளோரைடு பயனுள்ளதாக இருக்கும். அமெரிக்காவில் எலிக்கோல் மற்றும் சென்சோடைன் என அறியப்படும், இத்தகைய தயாரிப்புகள் இசுட்ரோன்சியம் குளோரைடு பற்பசைகள் என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலானவர்கள் இப்போது சால்ட்பீட்டர் (KNO3) எனப்படும் உப்பை பயன்படுத்துகின்றனர். இது ஒரு தடையாக இல்லாமல் வலி நிவாரணியாக செயல்படுகிறது.

உயிரியல் ஆராய்ச்சி

தொகு

இசுட்ரோன்சியம் குளோரைடு வெளிப்பாடு முட்டைவளர் உயிரணுக்களின் தன் கருவுறுதல் செயல்பாட்டைத் தூண்டுகிறது. வளர்ச்சி உயிரியல் ஆராய்ச்சியில் இத்தூண்டல் பயன்படுத்தப்படுகிறது.

அம்மோனியா சேமிப்பு

தொகு

ஒரு வணிக நிறுவனம், முக்கியமாக டீசல் வாகனங்களில் NOx உமிழ்வைக் குறைப்பதற்காக குறைந்த அழுத்தத்தில் அம்மோனியாவைச் சேமிப்பதற்கான வழிமுறையாக அத்தமீன் எனப்படும் இசுட்ரோன்சியம் குளோரைடு அடிப்படையிலான செயற்கையான திடப்பொருளைப் பயன்படுத்துகிறது. காப்புரிமை பெற்ற இப்பொருள் வேறு சில உப்புகளிலிருந்தும் தயாரிக்கப்படலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் பெருமளவு உற்பத்திக்காக இசுட்ரோன்சியம் குளோரைடைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.[10] முன்னதாக நிறுவனத்தின் ஆராய்ச்சி, ஐதரம்மீன் மற்றும் ஐதரசன் டேப்ளட்டு என்ற வர்த்தக முத்திரையின் கீழ் செயற்கை அம்மோனியா எரிபொருளைச் சேமிப்பதற்கான ஒரு வழிமுறையாக சேமிக்கப்பட்ட அம்மோனியாவைப் பயன்படுத்துவதாகக் கருதியது. இருப்பினும், இந்த வழிமுறை வணிகமயமாக்கப்படவில்லை.[11] இந்நிறுவனத்தின் செயல்முறைகள் மற்றும் பொருட்கள் காப்புரிமை பெற்றவை. இவர்களின் ஆரம்பகால சோதனைகளில் மெக்னீசியம் குளோரைடு பயன்படுத்தப்பட்டது. கட்டுரையிலும் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மண் பாதுகாப்பு

தொகு

மண் பரிசோதனையில் சிட்ரிக் அமிலத்துடன் இசுட்ரோன்சியம் குளோரைடு தாவர ஊட்டச்சத்துக்களின் உலகளாவிய பிரித்தெடுக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  2. 2.0 2.1 MacMillan, J. Paul; Park, Jai Won; Gerstenberg, Rolf; Wagner, Heinz; Köhler, Karl; Wallbrecht, Peter (2000). "Strontium and Strontium Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a25_321. ISBN 3527306730.
  3. West, Anthony R. (8 January 2014). Solid state chemistry and its applications (Second edition, student ed.). Chichester, West Sussex, UK. ISBN 978-1-118-67625-7. கணினி நூலகம் 854761803.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  4. Persson, Kristin (2020), Materials Data on SrCl2 by Materials Project (in ஆங்கிலம்), Materials Project, LBNL Materials Project; Lawrence Berkeley National Laboratory (LBNL), Berkeley, CA (United States), doi:10.17188/1199327, retrieved 2020-10-10
  5. Mark, H.; Tolksdorf, S. (1925). "Ueber das Beugungsvermoegen der Atome fuer Roentgenstrahlen". www.crystallography.net (in ஆங்கிலம்). Retrieved 2020-10-10.
  6. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.
  7. Ab initio model potential study of the equilibrium geometry of alkaline earth dihalides: MX2 (M=Mg, Ca Sr, Ba; X=F, Cl, Br, I) Seijo L., Barandiarán Z J. Chem. Phys. 94, 3762 (1991) எஆசு:10.1063/1.459748
  8. "Ion model and equilibrium configuration of the gaseous alkaline-earth dihalides" Guido M. and Gigli G. J. Chem. Phys. 65, 1397 (1976); எஆசு:10.1063/1.433247
  9. Aydoğan, Salih; Erdemoğlu, Murat; Aras, Ali; Uçar, Gökhan; Özkan, Alper (2006). "Dissolution kinetics of celestite (SrSO4) in HCl solution with BaCl2". Hydrometallurgy 84 (3–4): 239–246. doi:10.1016/j.hydromet.2006.06.001. Bibcode: 2006HydMe..84..239A. 
  10. "AdAmmine™". Amminex A/S. Archived from the original on 2013-08-01. Retrieved 2013-06-12.
  11. Tue Johannesen. "'Solidified' ammonia as an energy storage material for fuel cell applications". {{{booktitle}}}, Amminex. Via NH3 Fuel Association website.
  12. Simard, R. R. (1 March 1991). "Strontium Chloride-Citric Acid Extraction Evaluated as a Soil-Testing Procedure for Phosphorus". Soil Science Society of America Journal 55 (2): 414. doi:10.2136/sssaj1991.03615995005500020021x. Bibcode: 1991SSASJ..55..414S.