இந்திய பஞ்சாபின் பொருளாதாரம்

பதிந்தா மின்னாற்றல் நிலையம், பஞ்சாப், இந்தியா

இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபின் பொருளாதாரம் தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கான சின்னமாக உள்ளது; இந்தியா உணவுத்துறையில் தன்னிறைவு பெற வேளாண்மையில் பஞ்சாப் ஆற்றியுள்ள வியத்தகு முன்னேற்றம் உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டு உலகளாவிய பசித்தோர் குறியீட்டில் இந்தியாவில் மிகவும் குறைவான பசித்தோர் வாழும் மாநிலமாக பஞ்சாப் உள்ளது. ஐந்து அகவைக்கு குறைவான சிறுவர்களில் நான்கில் ஒரு பங்கினரே குறைந்த எடை உள்ளவராக உள்ளனர்.[1]

பஞ்சாபில் நல்லக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. சாலை, இரும்புவழிப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் ஆற்றுவழிப் போக்குவரத்து மாநிலத்தின் பல பகுதிகளையும் இணைக்கின்றன. இந்தியாவில் மிகக் குறைந்த வறியோர் வீதமாக 6.16% (1999-2000 மதிப்பீடு) உள்ளது. இதனால் 2012இல் இந்திய அரசின் புள்ளியியல் தரவுகளின் அடிப்படையில் சிறந்த மாநிலத்திற்கான விருதை வென்றுள்ளது.[2] அதே 2012இல் வெளிநாட்டுச் செலாவணி மிகக் கூடுதலாக வரப்பெற்ற மாநிலமாகவும் இருந்தது; கேரளா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசத்தை அடுத்து இதன் வரவு $66.13 பில்லியன் ஆக இருந்தது.[3]

பேரியப் பொருளியல் போக்குதொகு

இந்தியப் பஞ்சாபின் மொத்த உள்மாநில உற்பத்தியின் போக்கு சந்தை விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது; இது இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்டு மொத்த உள்மாநில உற்பத்தி
(இந்திய ரூபாய்கள் / பத்து மில்லியன் / கோடிகள்)
1980 50,250
1985 95,060
1990 188,830
1995 386,150
2000 660,100
2005 925,380 [4]
2011 2,213,320 [5]

மாநிலத்தின் கடன் 2005ஆம் ஆண்டில் மொத்த உள்மாநில உற்பத்தியில் 62 விழுக்காடாக இருந்தது.[6]

பெரிய நகரங்கள்தொகு

ஜலந்தர், அம்ரித்சர், லூதியானா, பட்டியாலா, பட்டிண்டா , பட்டாலா, கன்னா,பரித்கோட் , இராஜ்புரா, மொகாலி, மண்டி கோவிந்த்கர், ரோப்பார், ஃபிரோஸ்பூர், சங்குரூர், மலேர்கோட்லா, மோகா என்பன முதன்மை நிதிய, தொழில்மயமான நகரங்களாகும். மாநிலத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் இந்த நகரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

வேளாண்மைதொகு

புவியில் மிகுந்த மண்வளமிக்க பகுதிகளில் ஒன்றாக ஐந்து ஆறுகளின் மாநிலமான பஞ்சாப் விளங்குகின்றது. கோதுமை பயிரிட சிறப்பான மண்ணாக உள்ளது. அரிசி, கரும்பு, பழங்கள், காய்கறிகள் ஆகியனவும் இங்கு விளைவிக்கப்படுகின்றன.இந்தியப் பஞ்சாப் "இந்தியாவின் களஞ்சியம்" என்றும் "இந்தியாவின் ரொட்டிக் கூடை" என்றும் அழைக்கப்படுகின்றது.[7] இந்தியக் கோதுமை உற்பத்தியில் 17% உம் அரிசி உற்பத்தியில் 11%உம் இங்கு விளைகின்றன (2013 தரவு). இந்தியப் பரப்பில் பஞ்சாபின் பரப்பளவு 1.4% மட்டுமே; இருப்பினும் நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களில் ஏறத்தாழ 12% இங்கு உற்பத்தியாகின்றன.[8] The largest grown crop is கோதுமை மிக கூடுதலான அளவில் உற்பத்தியாகின்றது. மற்ற முக்கியமான பயிர்களாக நெல், பருத்தி, கரும்பு, கம்பு, மக்காச்சோளம், வாற்கோதுமை, பழங்கள் உள்ளன.

நீர்ப்பாசனத்திற்கான முதன்மை வளங்களாக கால்வாய்களும் குழாய்க் கிணறுகளும் உள்ளன. வேனிற்கால பயிர்களாக (ராபி பயிர்கள்) கோதுமை, கிராம், பார்லி, உருளைக் கிழங்குகள், குளிர்கால காய்கனிகள் உள்ளன. முன்பனிக்கால பயிர்களாக (காரிஃப்) நெல், மக்காச்சோளம், கரும்பு, பருத்தி, இருபுற வெடிக்கனிகள் உள்ளன.

உள்மாநில மொத்த உற்பத்தியில் வேளாண்மை மற்றும் தொடர்புடையத் தொழில்களின் பங்கு, 2013-14இல், 28.13% ஆக இருந்தது.

தொழிற் துறைதொகு

மாநிலத்தில் உள்ள தொழிலகங்களை மூன்று பகுப்புகளில் பிரிக்கலாம்:

மேற்சான்றுகள்தொகு