இந்தூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

இந்தூர் மக்களவைத் தொகுதி (Indore Lok Sabha constituency) மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி இந்தூர் மாவட்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியது.

இந்தூர்
மக்களவைத் தொகுதி
Map
இந்தூந் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்தேபால்பூர்
இந்தூர்-1
இந்தூர்-2
இந்தூர்-3
இந்தூர்-4
இந்தூர்-5
ராவ்
சன்வேர்
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
சங்கர் லால்வாணி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

இந்தூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் லால்வானி ஆவார்.[1] 1989 முதல், இந்தத் தொகுதியினை பாஜக கைப்பற்றியுள்ளது. லால்வானிக்கு முன்பு, 1989 முதல் பாஜகவின் சுமித்ரா மகாஜன் தொடர்ச்சியாக 8 முறை இந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 2014 முதல் 2019 வரை மக்களவை சபாநாயகராகவும் இருந்தார்.

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, இந்தூர் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி
203 தேபால்பூர் இந்தூர் மனோஜ் படேல் பாஜக
204 இந்தூர்-1 கைலாஷ் விஜயவர்கியா பாஜக
205 இந்தூர்-2 ரமேஷ் மென்டோலா பாஜக
206 இந்தூர்-3 கோலு சுக்லா பாஜக
207 இந்தூர்-4 மாலினி கவுர் பாஜக
208 இந்தூர்-5 மகேந்திர ஹரதியா பாஜக
210 ராவ் மது வர்மா பாஜக
211 சன்வர் (SC) துளசிராம் சிலாவத் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 நந்தலால் ஜோசி இந்திய தேசிய காங்கிரசு
1957 கன்ஹையாலால் காதிவாலா
1962 கோமி எப். தாஜி சுயேச்சை
1967 பிரகாசு சந்திர சேத்தி இந்திய தேசிய காங்கிரசு
1971
1972^ இராம் சிங் பாய்
1977 கல்யாண் ஜெயின் ஜனதா கட்சி
1980 பிரகாசு சந்திர சேத்தி இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 சுமித்ரா மகஜன் பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999
2004
2009
2014
2019 சங்கர் லால்வானி
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: இந்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சங்கர் லால்வாணி 12,26,751 78.54  12.95
நோட்டா நோட்டா 2,18,674 14  13.69
பசக சஞ்சய் இலட்சுமணன் சோலங் 51,659 3.31  2.78
வாக்கு வித்தியாசம் 1008077 74.23  40.61
பதிவான வாக்குகள் 15,61,968
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Indore Election Results 2019 Live Updates: Shankar Lalvani of BJP wins". News18. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.