இமயமலை குட்டியா

இமயமலை குட்டியா
மிசோரமில் (இந்தியா)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
குட்டியா
இனம்:
குட்டியா
இருசொற் பெயரீடு
கு. நிபாலென்சிசு
கோட்ஜ்சன், 1837
வேறு பெயர்கள்

குட்டியா நிபாலென்சிசு நிபாலென்சிசு கோட்ஜ்சன், 1837

இமயமலை குட்டியா (Himalayan cutia)(குட்டியா நிபாலென்சிசு) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இதன் விலங்கியல் பெயர் இறுதியில் "நேபாளத்திலிருந்து குத்யா " என்று பொருள்படும், ஏனெனில் இந்த பறவைகளுக்கான நேபாளி பெயரிலிருந்து குட்டியா பெறப்பட்டது, மேலும் நிபாலென்சிசு என்பது இலத்தீன் மொழியில் "நேபாளத்திலிருந்து" என்பதாகும்.[2]

பரவலும் வாழிடமும்

தொகு

இந்த சிற்றினம் இமயமலைப் பகுதியில், இந்தியாவிலிருந்து வடக்கு தாய்லாந்து வரை வாழ்கிறது. தீபகற்ப மலேசியாவிலும் ஒரு துணையினம் காணப்படுகிறது. முன்னர் குட்டியா பேரினமானது ஒற்றை வகை உயிர்லகினைக் கொண்ட பேரினமாக இருந்தது. ஆனால் வியட்நாம் குட்டியா, நீண்ட காலமாக இமயமலைப் பறவையின் ஒரு துணையினமாக இருந்தது. சமீபத்தில் கு. லெகாலெனி சிற்றின நிலைக்கு உயர்த்தப்பட்டது.[3] இதன் இயற்கையான வாழிடங்கள் வெப்பமண்டலத்திலிருந்து மிதவெப்பமண்டல ஈரப்பதமான மலைக்காடுகளாகும். இது உயரமான மலைகளின் வாழும் பறவையல்ல, இருப்பினும், அகன்ற இலைகள் கொண்ட காடுகளில் வாழ்கிறது. எ. கா. கருவாலி மரக் காடுகள் (குவெர்கசு) – அடிவாரத்தில் 1,500 மீ கடல் மட்டத்திற்கு மேல் அல்லது அதற்கு மேல். ஆனால் எப்போதாவது 2,500 மீ மேலேக் காணப்படும்.[4]

பாதுகாப்பு

தொகு

இமயமலை குட்டியா பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அச்சுறுத்தப்பட்டதாகக் கருதப்படவில்லை. இது தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகக் கருதப்படுகிறது. பூட்டானில், இது மிகவும் சாதாரணமாகக் காணப்படும் சிற்றினமாக உள்ளது.[5]

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Cutia nipalensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22735167A95104413. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22735167A95104413.en. https://www.iucnredlist.org/species/22735167/95104413. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Pittie (2004)
  3. BLI (2008a,b,c)
  4. Inskipp et al. (2000), Collar & Robson (2007)
  5. Inskipp et al. (2000), IUCN (2007), BLI (2008a,b,c)

பார்வை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_குட்டியா&oldid=3847711" இலிருந்து மீள்விக்கப்பட்டது