இரச்சின் இரவீந்திரா

இரச்சின் இரவீந்திரா (Rachin Ravindra, பிறப்பு: 18 நவம்பர் 1999) நியூசிலாந்து பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்.[1] இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்காக 2021 செப்டம்பரில் முதன்முதலாக பன்னாட்டுப் போட்டியில் விளையாடத் தொடங்கினார்.

இரச்சின் இரவீந்திரா
Rachin Ravindra
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு18 நவம்பர் 1999 (1999-11-18) (அகவை 25)
வெலிங்டன், நியூசிலாந்து, நியூசிலாந்து
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைமெதுவான இடது-கை வழமைச் சுழல்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 282)25 நவம்பர் 2021 எ. இந்தியா
கடைசித் தேர்வு1 சனவரி 2022 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 209)25 மார்ச் 2023 எ. இலங்கை
கடைசி ஒநாப28 அக்டோபர் 2023 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்8
இ20ப அறிமுகம் (தொப்பி 90)1 செப்டம்பர் 2021 எ. வங்காளதேசம்
கடைசி இ20ப5 செப்டம்பர் 2023 எ. இங்கிலாந்து
இ20ப சட்டை எண்8
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018/19–இன்றுவெலிங்டன் அணி
2022தர்காம் கவுண்டி அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா.ப இ20ப மு.த
ஆட்டங்கள் 3 18 18 46
ஓட்டங்கள் 73 595 145 2,753
மட்டையாட்ட சராசரி 14.60 45.76 13.18 38.77
100கள்/50கள் 0/0 2/3 0/0 6/12
அதியுயர் ஓட்டம் 18* 123* 26 217
வீசிய பந்துகள் 366 561 222 4,717
வீழ்த்தல்கள் 3 14 11 54
பந்துவீச்சு சராசரி 62.66 40.41 22.45 50.96
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/56 4/60 3/22 6/89
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 3/– 7/– 25/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 28 அக்டோபர் 2023

தொடக்க வாழ்க்கை

தொகு

ரவீந்திரா நியூசிலாந்து, வெலிங்டனில் 1999 நவம்பர் 18 இல் இந்தியப் பெற்றோருக்குப் பிறந்தார். தந்தை ரவி கிருட்டிணமூர்த்தி பெங்களூரில் உள்ளூர் அணியில் துடுப்பாட்டம் விளையாடியவர். 1997 இல் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்.[2][3] இரவீந்திராவின் முதல் பெயர் இராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர் இருரினதும் முதல் பெயர்களில் இருந்து கலந்து உருவான பெயர் ஆகும்.[3][4]

துடுப்பாட்டத் துறை

தொகு

இரச்சின் இரவீந்திரா நியூசிலாந்தின் 19-வயதிற்குட்பட்டோருக்கான 2016, 2018 உலகக்கோப்பை அணியில் விளையாடினார்.[5][6] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரம் எனப் பெயரிட்டது.[7] 2018 இல், வெலிங்டன் துடுப்பாட்ட அணியில் 2018-19 காலத்தில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]

2021 ஏப்ரலில், இரவீந்திரா நியூசிலாந்தின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட சேர்க்கப்பட்டார்.[9] அதன் பின்னர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதிப் போட்டியில் விளையாடினார்.[10] 2021 ஆகத்தில், பன்னாட்டு இருபது20 அணியில் வங்காளதேசத்திற்கெதிரான போட்டிகளிலும்,[11] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியில் பாக்கித்தானுக்கு எதிரான போட்டிகளிலும் விளையாடினார்.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. "20 cricketers for the 2020s". The Cricketer Monthly. பார்க்கப்பட்ட நாள் 6 July 2020.
  2. "Meticulous Rachin building on father's cricket genes". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.
  3. 3.0 3.1 Vivan, Sridhar (9 October 2023). "Batsman with taste" (in en). Bangalore Mirror. https://bangaloremirror.indiatimes.com/bangalore/others/batsman-with-taste/articleshow/104266462.cms. 
  4. "Rachin Ravindra: Debutant Kiwi all-rounder who is named after Rahul Dravid and Sachin Tendulkar" (in en). The Indian Express. 25 November 2021. https://indianexpress.com/article/sports/cricket/rachin-ravindra-debutant-kiwi-all-rounder-who-is-named-after-rahul-dravid-and-sachin-tendulkar-7640326/. 
  5. "NZ appoint Finnie as captain for Under-19 World Cup". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 December 2015.
  6. "New Zealand name squad for ICC Under19 Cricket World Cup 2018". New Zealand Cricket. Archived from the original on 8 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "U19CWC Report Card: New Zealand". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24 October 2018.
  8. "Central Districts drop Jesse Ryder from contracts list". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
  9. "Uncapped Rachin Ravindra and Jacob Duffy included in New Zealand Test squad for England tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 April 2021.
  10. "Black Caps summon Rachin Ravindra, Jacob Duffy to test squad for England tour". Stuff. 7 April 2021. பார்க்கப்பட்ட நாள் 8 April 2021.
  11. "T20 World Cup squad revealed: McConchie and Sears called up for Bangladesh/Pakistan". New Zealand Cricket. Archived from the original on 10 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 9 August 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Black Caps announce Twenty20 World Cup squad, two debutants for leadup tours with stars absent". Stuff. 9 August 2021. பார்க்கப்பட்ட நாள் 9 August 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரச்சின்_இரவீந்திரா&oldid=4109064" இலிருந்து மீள்விக்கப்பட்டது