இலங்கை அருவிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(இலங்கையின் அருவிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெரும்பாலான இலங்கையின் அருவிகள் அல்லது நீர்வீழ்ச்சிகள் மத்திய மலைநாட்டிலும் அதன் எல்லைகளிலும் காணப்படுகின்றன. இலங்கையின் மத்திய மலைநாட்டில் சுமார் 2000 மீட்டர் உயரத்தில் தோன்றும் முக்கிய ஆறுகள் கடல் நோக்கி பாயும் போது பல அருவிகளை உருவாக்குகின்றன. இலங்கையில் மொத்தம் 103 ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் பல முக்கிய அருவி கொண்டிருக்கின்றன. கூடுதலான அருவிகள் முக்கிய பெருந்தெருக்களில் இருந்து தொலைவில் காணப்படுகின்றன. பாதையோரம் காணப்படும் அருவிகள் முக்கிய உல்லாசப்பிரயாண மையங்களாக விளங்குகின்றன.

பம்பரக்கந்தை அருவி இலங்கையின் உயரமான அருவிகளில் ஒன்று.

அருவிகளின் பரம்பல்

தொகு

இலங்கை அருவி அவை (Lanka Council on Waterfalls) அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்போது இலங்கையில் 382 அருவிகளை பதிவு செய்திருக்கிறது.[1]

மாவட்டம் எண்ணிக்கை
இரத்தினபுரி மாவட்டம் 109
நுவரெலியா மாவட்டம் 75
கேகாலை மாவட்டம் 40
பதுளை மாவட்டம் 33
மாத்தளை மாவட்டம் 26
காலி மாவட்டம் 26
களுத்துறை மாவட்டம் 24
கண்டி மாவட்டம் 21
கொழும்பு மாவட்டம் 4
மொனராகலை மாவட்டம் 4
மாத்தறை மாவட்டம் 13
கம்பகா மாவட்டம் 2
அம்பாந்தோட்டை மாவட்டம் 2
குருநாகல் மாவட்டம் 1

மூலம்:[2]

முக்கிய அருவிகள்

தொகு
பெயர் உயரம் மாகாணம் மாவட்டம் குறிப்பு
பம்பரக்கந்தை அருவி 263 மீட்டர் (862 அடி) ஊவா மாகாணம் பதுளை இலங்கையின் உயரமான அருவி
தியலும அருவி 220 மீட்டர் (570 அடி) ஊவா மாகாணம் பதுளை
செயிண்ட் கிளையார் அருவி 109 மீட்டர் (265 அடி) மத்திய மாகாணம் நுவரெலியா மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இவ்வருவி வரண்டு போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.
இறம்பொடை அருவி 109 மீட்டர் (358 அடி) மத்திய மாகாணம் நுவரெலியா மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இவ்வருவி வரண்டு போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.
டெவோன் அருவி 97 மீட்டர் (318 அடி) மத்திய மாகாணம் நுவரெலியா மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இவ்வருவி வரண்டு போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.
போபத் அருவி 30 மீட்டர் (100 அடி) சபரகாமுவாகா மாகாணம் இரத்தினபுரி
இராவணன் அருவி 49 மீட்டர் (161 அடி) ஊவா மாகாணம் பதுளை
செயிண்ட். அன்ட்ரூவ் 3 மீட்டர் மத்திய மாகாணம் நுவரெலியா மேல் கொத்மலை நீர் மின் திட்டத்தால் இவ்வருவி
வரண்டு போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.
தன்சினன் 100 மீட்டர் மத்திய மாகாணம் நுவரெலியா மேல் கொத்மலை நீர் மின் திட்டம் காரணமாக இவ்வவருவி வரண்டு போகும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.
மாபலான அருவி 148 மீட்டர் சபரகாமுவாகா மாகாணம் இரத்தினபுரி
கடுகஸ் 6 மீட்டர் சபரகாமுவாகா மாகாணம் இரத்தினபுரி
கெட்டபுலா 8 மீட்டர் மத்திய மாகாணம் கண்டி
துன்கிந்தை 63 மீட்டர் ஊவா மாகாணம் பதுளை
இலக்சபான 129 மீட்டர் மத்திய மாகாணம் நுவரெலியா
அலுபொல அருவி 80 மீட்டர் சபரகாமுவாகா மாகாணம் இரத்தினபுரி
லவர்ஸ் லீப் 30 மீட்டர் மத்திய மாகாணம் நுவரெலியா
மானெல்ல 20 மீட்டர் சபரகாமுவாகா மாகாணம் கேகாலை
பேர்கர்ஸ் 22 மீட்டர் மத்திய மாகாணம் நுவரெலியா
குருந்து ஓயா அருவி 206 மீட்டர் மத்திய மாகாணம் நுவரெலியா
சேரல்ல 10 மீட்டர் மத்திய மாகாணம் மாத்தளை
நலகன 40 மீட்டர் சபரகாமுவாகா மாகாணம் கேகாலை
துமபரை 20 மீட்டர் மத்திய மாகாணம் மாத்தளை
கெரண்டிகினி 100 மீட்டர் சபரகாமுவாகா மாகாணம் இரத்தினபுரி

இரத்தினபுரி மாவட்டம்

தொகு
இல. மாவட்டத் தரம் பெயர் உயரம்
மீட்டர் அடி
1 1 மாபான 141 463
2 2 கிரிந்தி 116 381
3 3 ஊரண்வெட்டுன 108 354
4 4 தெமழி 105 344
5 5 கரண்டிகினி 100 328
6 5 கல்தொலை 100 328
7 6 புலுன் 86 282
8 7 மாலா 75 246
9 8 தெகேனை 74 243
10 9 மாதாங்கிரி 68 223
11 10 சுரத்தலி 60 197
12 11 சிலு 60 197
13 11 தியவினி 60 197
14 11 அலுபொல 60 197
15 14 அரம்பே 54 177
16 15 டூடன் 53 174
17 16 கொக்சின் 50 164
18 16 பேருவத்தை 50 164
19 18 வவுல்பனை 45 148
20 18 திவிஓயா 45 148
21 18 சுதுவெளிகொத்தை 45 148
22 18 பிஸ்சா 45 148
23 18 பாபொல் 45 148
24 18 பண்டொய்யா 45 148
25 18 ஜோடு 45 148
26 18 பல்லங்கொடை றன்முது 45 148
27 26 வட்டவளை 40 131
28 26 கல்தொட்டை டூவில் 40 131
29 26 இலும்பேகந்தை 40 131
30 29 களுவலை 38 125
31 30 பல்லா மல 32 105
32 31 வளவை கங்கை 30 98
33 31 உடகமை டூவில் 30 98
34 31 மெனிக் கங்கை துங்கிந்தை 30 98
35 31 லெனியன் கெலின 30 98
36 31 குடா 30 98
37 31 கண்டு 30 98
38 31 கனபடு 30 98
39 31 தொடம் கலன 30 98
40 31 போபத் 30 98
41 40 மத்துவன் வெவ டூவில் 25 82
42 40 லீனியந்தொலை 25 82
43 42 பண்டிகேவத்தை 24 79
44 43 அந்தபான் 23 75
45 44 சிபிரிமலை 22 72
46 45 உனாஓயா 20 66
47 45 கொலும்பனை 20 66
48 45 தியன் 20 66
49 45 தெல்வலை 20 66
50 49 மெத்தே கந்த்தை 18 59
51 49 மதுவன்வலை 18 59
52 49 கிரி 18 59
53 49 கரளு 18 59
54 53 வேடன் 17 56
55 54 வேவல் 15 49
56 54 மாசிம்புலை 15 49
57 54 கிரிந்த 15 49
58 54 கடுகித்துள் 15 49
59 54 கெரண்டி ரிக்கிலி 15 49
60 54 அந்த 15 49
61 60 வெல்வத்தை 12 39
62 60 ராஜன 12 39
63 60 நயாதொலை 12 39
64 60 நாபத் 12 39
65 60 எட்டிகம 12 39
66 60 கோனான் 12 39
67 60 அங்குருவல்லை 12 39
68 60 அம்பன்கங்கை 12 39
69 68 அத்பிலி 11 36
70 69 வுலன்கலை 10 33
71 69 உடகந்தை 10 33
72 69 முன்ன்கலை 10 33
73 69 மினி 10 33
74 69 கொனாவெட்டி 10 33
75 69 பம்பரபொட்டுவ 10 33
76 75 மல்புதுன 9 30
77 75 அலுபொத்த 9 30
78 77 உமகே 8 26
79 77 பிட்டகலை டூவில் 8 26
80 77 மரக்கல 8 26
81 77 அல்மாயி 8 26
82 77 கலமுனை 8 26
83 77 டைகலை 8 26
84 77 டூவில் 8 26
85 84 நிவுன் 7 23
86 84 உனுகடு 7 23
87 84 அல்தொலை 7 23
88 84 அல் 7 23
89 84 சித்திரமாலா 7 23
90 84 பத்துளு 7 23
91 90 கடுகஸ் 6 20
92 90 கல்பொத்தாவை 6 20
93 90 எல்லேபலை 6 20
94 90 பிரம்ப்டன் 6 20
95 94 மாதொலை 5 16
96 94 கலகமை 5 16
97 94 எதாவெட்டுனு 5 16
98 94 தும்பஸ் 5 16
99 94 பீகீரீ 5 16
100 99 நாகா 4 13
101 99 மினிரன் 4 13
102 99 பெயார் லோவ்ன் 4 13
103 99 அலேவலை 4 13
104 103 யக்தின்னாவை 3 10
105 103 பட்டிகலை 3 10
106 103 பத்தா 3 10
107 103 தியகலை 3 10
108 103 புலுதொட்டை 3 10
109 103 பிசோ தொல 3 10

ஆதாரங்கள்

தொகு
  1. "Plus".
  2. Weerasooriya, Nishan. "Waterfalls, Sri Lanka".

வெளியிணைப்புகள்

தொகு