இலக்குக் கவனிப்பாளர்

(இழப்புக் காப்பாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலக்குக் கவனிப்பாளர் (wicket keeper) என்பவர் துடுப்பாட்டத்தில் மட்டையாடுபவருக்கு அருகில் உள்ள இலக்குக்குப் பின்னால் நின்றுகொண்டு களத்தடுப்பு செய்யும் துடுப்பாட்ட வீரர் ஆவார். களத்தடுப்பு அணியில் இவருக்கு மட்டுமே கையுறைகள் அணியவும் கால்களின் வெளியே தடுப்பு மட்டை அணியவும் அனுமதிக்கப்படும்.[1]

பந்து வீச்சினை எதிர்கொள்ளுமாறு அமர்ந்துள்ள ஓர் இலக்குக் கவனிப்பாளர்.

இது ஒரு சிறப்பான களத்தடுப்புப் பணியாகும். சில நேரங்களில் இவர் பந்து வீசும்போது மற்றொரு ஆட்டக்காரர் இவரது இடத்தில் தற்காலிகமாக களத்தடுப்பு செய்வார். இவரது செயலாக்கம் துடுப்பாட்ட விதிகளின் 40வது சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.[1].

நோக்கங்கள்

தொகு

மட்டையாளரைக் கடந்து செல்லும் பந்துகளைத் தடுத்து நிறுத்துவதே கவனிப்பாளரின் முக்கிய செயல்பாடு ஆகும். ஆனால் அவர் மட்டையாளரை பல்வேறு வழிகளில் வீழ்த்தவும் முயற்சிக்க முடியும்:

  • கவனிப்பாளரால் நிகழ்த்தப்படும் மிகவும் பொதுவான ஆட்டமிழப்பு, மட்டையாளரின் மட்டை விளிம்பில் பட்டு வரும் ஒரு பந்தைப் பிடிப்பதாகும். இது விளிம்பில் படுதல் (Edged) என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் அதிக உயரத்தில் எழும்பிய பந்தைப் பிடிக்கவும் கவனிப்பாளர் உதவுகிறார். மற்ற களத்தடுப்பு வீரர்களை விட இலக்குக் கவனிப்பாளரால் அதிக பிடிகள் எடுக்கப்படுகின்றன.
  • ஒருவேளை வீச்சுக்குப் பிறகு மட்டையாளர் தனது எல்லைக்கோட்டைத் தாண்டி இருக்கும் நிலையில் வீசப்பட்ட பந்து கவனிப்பாளரிடம் சென்றால், அவர் அந்த பந்தால் இலக்கைத் தாக்கி அதன் மேலிருக்கும் இணைப்பான்களை விழச்செய்து அந்த மட்டையாளரை வீழ்த்தலாம். இது இலக்கு வீழ்த்தல் எனப்படுகிறது.
  • களத்தில் அடிக்கப்பட்ட பந்தை ஒரு களத்தடுப்பு வீரர் பிடித்து இலக்கின் அருகில் நிற்கும் கவனிப்பாளரிடம் விரைவாக வீசினால் அவர் அதைப் பிடித்து மட்டையாளரை ஓட்ட வீழ்த்தல் செய்ய முயற்சிப்பார்.

முன்னணி பன்னாட்டுத் துடுப்பாட்ட இலக்குக் கவனிப்பாளர்கள்

தொகு
  • தடித்த எழுத்துக்கள் தற்போது விளையாடும் வீரரைக் குறிக்கிறது
  • போட்டிகள் என்பது வீரர் பங்கேற்ற அனைத்து போட்டிகளையும் உள்ளடக்கியது ஆகும்.
  • சில வீரர்கள் களத்தடுப்பு வீரராக விளையாடிய போட்டிகளில் எடுத்த பிடிகளும் மொத்த வீழ்த்தல்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தேர்வு

தொகு

தேர்வுப் போட்டிகளில் வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி 10 இலக்குக் கவனிப்பாளர்கள் விவரம் பின்வருமாறு.[2]

வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி தேர்வு இலக்குக் கவனிப்பாளர்கள்
தரம் பெயர் நாடு போ. பிடி. இவீ மொவீ
1 மார்க் பவுச்சர்   தென்னாப்பிரிக்கா 147 532 23 555
2 ஆடம் கில்கிறிஸ்ட்   ஆத்திரேலியா 96 379 37 416
3 இயான் என்லி   ஆத்திரேலியா 119 366 29 395
4 ரோட் மார்ஷ்   ஆத்திரேலியா 96 343 12 355
5 மகேந்திரசிங் தோனி   இந்தியா 90 256 38 294
6 பிராட் ஹாடின்   ஆத்திரேலியா 66 262 8 270
ஜெஃப் டுஜன்   மேற்கிந்தியத் தீவுகள் 81 265 5 270
8 அலன் நொட்   இங்கிலாந்து 95 250 19 269
9 மாட் பிரியர்   இங்கிலாந்து 79 243 13 256
10 அலெக் ஸ்டுவார்ட்   இங்கிலாந்து 133 227 14 241
13 ஆகத்து 2018 நிலவரப்படி

ஒநாப

தொகு

ஒநாப போட்டிகளில் வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி 10 இலக்குக் கவனிப்பாளர்கள் விவரம் பின்வருமாறு .[3]

வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி ஒநாப இலக்குக் கவனிப்பாளர்கள்
தரம் பெயர் நாடு போ. பிடி. இவீ மொவீ
1 குமார் சங்கக்கார   இலங்கை 404 383 99 482
2 ஆடம் கில்கிறிஸ்ட்   ஆத்திரேலியா 287 417 55 472
3 மகேந்திரசிங் தோனி   இந்தியா 341 321 123 444
4 மார்க் பவுச்சர்   தென்னாப்பிரிக்கா 295 402 22 424
5 மொயீன் கான்   பாக்கித்தான் 219 214 73 287
6 பிரண்டன் மெக்கல்லம்   நியூசிலாந்து 260 227 15 242
7 இயன் ஹென்லி   ஆத்திரேலியா 168 194 39 233
8 ரஷீத் லதிஃப்   பாக்கித்தான் 166 182 38 220
9 முஷ்பிகுர் ரகீம்   வங்காளதேசம் 205 169 42 211
10 ருமேஸ் களுவித்தாரன   இலங்கை 189 131 75 206
23 செப்டம்பர் 2019 நிலவரப்படி

இ20ப போட்டிகளில் வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி இலக்குக் கவனிப்பாளர்கள் பின்வருமாறு.[4]

வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி இ20ப இலக்குக் கவனிப்பாளர்கள்
தரம் பெயர் நாடு போ. பிடி. இவீ மொவீ
1 மகேந்திரசிங் தோனி   இந்தியா 98 57 34 91
2 காம்ரான் அக்மல்   பாக்கித்தான் 58 28 32 60
3 தினேசு ராம்தின்   மேற்கிந்தியத் தீவுகள் 68 38 20 58
4 முஷ்பிகுர் ரகீம்   வங்காளதேசம் 81 30 28 58
5 முகம்மது சாஹ்ஷாட்   ஆப்கானித்தான் 65 26 28 54
6 குவின்டன் டி கொக்   தென்னாப்பிரிக்கா 38 36 10 46
7 குமார் சங்கக்கார   இலங்கை 56 25 20 45
8 சப்ராஸ் அகமது   பாக்கித்தான் 55 34 10 44
9 பிரண்டன் மெக்கல்லம்   நியூசிலாந்து 71 24 8 32
10 லூக் ரோஞ்சி   நியூசிலாந்து 33 24 6 30
23 செப்டம்பர் 2019 நிலவரப்படி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குக்_கவனிப்பாளர்&oldid=3234676" இலிருந்து மீள்விக்கப்பட்டது