இ. வீ. வெ. சத்யநாராயணா

இந்திய திரைப்பட இயக்குநர்

இதரா வீர வெங்கட சத்தியநாராயணா (Eedara Veera Venkata Satyanarayana) (10 சூன் 1956 - 21 சனவரி 2011) இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளருமாவார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மொத்தம் 51 படங்களை இயக்கிய இவர் பல நடிகர்களை தெலுங்குத் திரையுகிற்கு அறிமுகப்படுத்தினார். நகைச்சுவைத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் இவர் நன்கு அறியப்பட்டவர். அவற்றில் பெரும்பாலானவை திரையங்கில் மிகவும் வெற்றிகரமாக இருந்தன. 2000ஆம் ஆண்டில், இவர் "இ. வீ. வி. சினிமா" என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். தொண்டை புற்றுநோய் காரணமாகவும், இருதயநோய் காரணமாகவும் 2011 ல் இவர் இறந்தார்.

இ. வீ. வெ. சத்யநாராயணா
பிறப்புஇதரா வீர வெங்கட சத்தியநாராயணா
(1956-06-10)10 சூன் 1956
கோருமமிடி, நிடதவோலு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு21 சனவரி 2011(2011-01-21) (அகவை 54) [1]
ஐதராபாத்து (இந்தியா)
பணி
  • இயக்குநர்
  • தயாரிப்பாளர்
  • திரைக்கதை எழுத்தாளர்
பிள்ளைகள்அல்லரி நரேசு
ஆர்யன் இராச்சேசு

சுயசரிதை

தொகு

இந்தியாவின் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம், தோமேரு கிராமத்தில் வெங்கட் ராவ் மற்றும் வெங்கட ரத்னம் ஆகியோருக்குப் பிறந்தார். பின்னர் தனது குடும்பத்துடன் நிடதவோலு அருகிலுள்ள கோருமமிடி கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். இவருக்கு, இ. வி. வி. கிரி , இ. வி. வி. சீனிவாசன் என்ற தம்பிகளும், கங்கா என்ற ஒரு சகோதரியும் இருந்தனர். இவரது இரு சகோதரர்களும் திரைத்துறையில் இன்னும் புகைப்படக் கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள். திரைப்படங்கள் மீதான இவரது ஆர்வம் வரை தனது படிப்பில் கவனம் செலுத்த விடவில்லை. தெலுங்குத் திரையுலகில் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க முடிவு செய்த இவர், இடைநிலைக்குப் பிறகு தனது படிப்பை நிறுத்திவிட்டு சென்னை சென்றார்.

திரைப்பட வாழ்க்கை

தொகு

இவர், தனது ஆரம்ப நாட்களில் சென்னையில் பல சிரமங்களை எதிர்கொண்டார். திரைப்படங்கள் மீதான இவரது ஆர்வம், இடைவிடாத அணுகுமுறை, விடாமுயற்சி மற்றும் தொழில்துறையில் அதை பெரியதாக மாற்றுவதற்கான உறுதியானது பிரபல தயாரிப்பாளர் நவதா கிருட்டிணம் இராசுவின் கவனத்தை ஈர்த்தது, அவருடைய உதவியுடன் தேவதாசு கனகலாவுடன் ஓ இன்டி பாகவதம் என்ற படத்தின் உதவி இயக்குநராக சேர்ந்தார். பின்னர், இயக்குனர் சந்தியாலாவின் கீழ் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றிய இவர், நாலுகு ஸ்தம்பலதா (1982), ரெண்டு ஜெல்லா சீதா (1983), நெலவங்கா (1983), ரெண்டு ரெல்லா ஆரு (1985), ஆஹா நா பெல்லாண்டா (1987) மற்றும் ஹை ஹை நாயக்கா (1989). இந்திரடு சந்திரடு போன்ற படத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றினார்.

ஒரு இயக்குனராக அறிமுகமான செவ்விலோ பூவு ஒரு பெரிய தோல்வியாக இருந்தது. இவர் மிகவும் மனச்சோர்வடைந்தார். இவர் திரைத்துறையை விட்டு வெளியேற நினைத்தார். ஆனால் அனைத்து மையங்களிலும் வெற்றிகரமாக திரையிடப்பட்ட பிரேம கைதி என்ற படத்தை இயக்க தயாரிப்பாளர் டி. ராமா நாயுடு இவருக்கு வாய்ப்பு அளித்தபோது இவரது விதி மாறியது. இவர் தனது குருவான சந்தியாலாவின் பாதையை பின்பற்றி வெற்றிகரமான நகைச்சுவை திரைப்படங்களை உருவாக்கினார். நகைச்சுவை வகையின் இவரது முதல் படம் அப்புலா அப்பாராவ், அதைத் தொடர்ந்து ஆ ஒக்கட்டி அதக்கு மற்றும் ஜம்பா லக்கிடி பம்பா . இவர் குடும்ப உணர்வு படங்களையும் இயக்கியுள்ளார், அவற்றில் மிக முக்கியமானது 1994 ஆம் ஆண்டில் பெரிய வெற்றிப் பெற்ற படமான ஆமே, சிறீகாந்த்தும், சிவரஞ்சனியும் நடித்திருந்தனர். ஹலோ பிரதர், அல்லுடா மஜாகா, இன்டிலோ இல்லாலு வன்டிண்ட்லோ பிரியுராலு, கோப்பிந்தி அல்லுடு, வராசுடு போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் அமிதாப் பச்சன், சௌந்தர்யா நடித்த "சூரியவம்சம்" என்ற இந்தி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.[2] இவர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தாலி, கன்யாதானம் , அம்மோ ! ஒகாடோ தாரீகு போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

தனது வாழ்க்கையின் கடைசி காலத்தில், தனது மகன்களுடன் முக்கிய திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது இளைய மகன் அல்லரி நரேஷ் தெலுங்குத் துறையுலகில் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை நாயகனாக இருக்கிறார். சாலா பாகுந்தி படத்துடன் 'ஈ.வி.வி சினிமா' என்ற பதாகையின் கீழ் வெற்றிகரமான தயாரிப்புக்கு திரும்பினார். இவர் தனது திரைப்படங்களுக்கு பெயரிடுவதில் சிறப்பு கவனம் செலுத்துவதாக அறியப்பட்டது.

இவரது மூத்த மகன் ஆரிய ராஜேஷ், ஹாய், சொந்தம், லீலா மஹால் சென்டர், அனுமனஸ்பாதம், எவடி கோலா வாடித்தி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவரது ஆமே படத்திற்காக 1994 ஆம் ஆண்டு நந்தி விருது வழங்கப்பட்டது.[3]

இறப்பு

தொகு

தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், 21 சனவரி 2011 அன்று இறந்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. EVV is no more!, Obituary at Telugu Cinema.com பரணிடப்பட்டது 24 சனவரி 2011 at the வந்தவழி இயந்திரம்
  2. "EVV Satyanarayana Movies". Bharat Movies. Archived from the original on 24 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "EVV's Award". Tollywood Times.com. Archived from the original on 28 August 2016. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
  4. "Popular Telugu film director E V V Satyanarayana passes away". NDTV Movies. Press Trust of India. 22 January 2011. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._வீ._வெ._சத்யநாராயணா&oldid=3927565" இலிருந்து மீள்விக்கப்பட்டது