தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு இல்லம், தயாரிப்பகம் அல்லது ஒரு தயாரிப்புக் குழு என்பது நிகழ்த்து கலை, புதிய ஊடக கலை, திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, வரைகதை, ஊடாடும் கலை, நிகழ்பட ஆட்டம், வலைத்தளம் மற்றும் நிகழ்படம் போன்ற துறைகளின் படைப்புகளுக்காக உடல் ரீதியாக மற்றும் தேவையான நிதியுதவி செய்யும் ஒரு வணிகமாகும். பொதுவாக இந்த சொல் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப அம்சங்களுக்கு பொறுப்பான அனைத்து நபர்களையும் குறிக்கிறது. உதாரணமாக ஒரு நாடகத் தொடரின் தயாரிப்பு குழுவில் இயங்கும் குழுவினர் மட்டுமல்லாமல் நாடக தயாரிப்பாளர், வடிவமைப்பாளர்கள் மற்றும் உணவு உபசரிப்பாளர் போன்ற பலர் அடங்கும்.

திரைப்படத்திற்குத் தேவைப்படும் விளம்பரம் முதல், ஆட்களை தேர்வு செய்வது வரை அனைத்து பணிகளும் இக்குழுமத்தினரால் செய்துமுடிக்கப்படும். தற்போது, பல முன்னணி தொழில்நுட்ப பெருநிறுவனங்களும், பிரமுகர்களும் திரைப்படத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் தொகு

நிறுவனத்தின் பெயர் தலைமையகம் குறிப்பிட்ட படங்கள் ஆரம்பித்த ஆண்டு
மாடர்ன் தியேட்டர்ஸ்[1] சேலம் உத்தம புத்திரன், மந்திரி குமாரி, சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், வல்லவனுக்கு வல்லவன் 1935 - 1982
ஜெமினி ஸ்டூடியோஸ் சென்னை மங்கம்மாள் சபதம், மிஸ் மாலினி, அவ்வையார், வஞ்சிக்கோட்டை வாலிபன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் 1940 - 1975
ஏவிஎம் சென்னை என் மனைவி, முந்தானை முடிச்சு, பேரழகன் 1945 -
கவிதாலயா[2][3] சென்னை நெற்றிக்கண், அண்ணாமலை, திருமலை 1981 -
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் சென்னை ராஜ பார்வை, குணா, தேவர் மகன், சதிலீலாவதி, விருமாண்டி, விசுவரூபம் 1981 -
மெட்ராஸ் டாக்கீஸ் சென்னை இருவர், நேருக்கு நேர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து 1995 -
எஸ் பிக்சர்ஸ் சென்னை முதல்வன்,[4] வெயில், ஈரம் 1999 -
சன் பிக்சர்ஸ் சென்னை அயன், எந்திரன், மங்காத்தா 2008 -
கிளவுட் நைன் மூவீஸ் சென்னை தமிழ்ப் படம், தூங்கா நகரம், மங்காத்தா, வட சென்னை 2008 -
திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் சென்னை அட்டகத்தி, பீட்சா, பீட்சா II: வில்லா, தெகிடி, சரபம் 2012 -

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாரிப்பு_நிறுவனம்&oldid=3093878" இருந்து மீள்விக்கப்பட்டது