எடையூர் (கேரளம்)

கேரளத்தில் உள்ள ஊராட்சி

எடையூர் (Edayoor) என்பது இந்தியாவின், கேரளத்தின், மாலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

எடையூர்
சிற்றூர்
எடையூர் is located in கேரளம்
எடையூர்
எடையூர்
இந்தியாவில், கேரளத்தில் அமைவிடம்
எடையூர் is located in இந்தியா
எடையூர்
எடையூர்
எடையூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°54′0″N 76°6′0″E / 10.90000°N 76.10000°E / 10.90000; 76.10000
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்30,462
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்676552
வாகனப் பதிவுKL-55, KL-10

நிலவியல் தொகு

எடையூர் இந்திய மாநிலமான கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள குட்டிப்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இது வட கேரளப் பிராந்தியத்தைச் சேர்ந்தது. இந்த ஊர் மாவட்டத் தலைமையகமான மலப்புறத்திலிருந்து 17 கிமீ தெற்கே அமைந்துள்ளது.

இதன் அருகில் உள்ள ஊர்களாக இரிம்பிளாயம் (8 கிமீ), மூர்க்கநாடு (8 கிமீ), ஆதவநாடு (8 கிமீ), மரக்கரை (9 கிமீ), புழக்கத்திரி (11 கிமீ) ஆகியவை உள்ளன. எடையூரின் வடக்கே மங்கடா ஊராட்சி ஒன்றியமும், கிழக்கே பட்டாம்பி ஊராட்சி ஒன்றியமும், வடக்கே வெங்கரா ஊராட்சி ஒன்றியமும், தெற்கே திரிதாலா ஊராட்சி ஒன்றியமும் சூழ்ந்துள்ளன.

இதன் அருகில் உள்ள நகரங்களாக மலப்புறம், பெரிந்தல்மண்ணை, திரூர், பொன்னானி ஆகியவை உள்ளன.

மக்கள்தொகையியல் தொகு

2001 இந்திய மக்கள் தொலை கணக்கெடுப்பின் படி, எடையூரின் மக்கள் தொகை 30,462 ஆகும். இதில் ஆண்கள் 14,702 பேரும், பெண்கள் 15,760 பேரும் உள்ளனர்.[1]

போக்குவரத்து தொகு

எடையூர் கிராமம் குட்டிப்புரம் நகரம் வழியாக பிற பகுதிகளுடன் இணைக்கபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 எடப்பல் வழியாக செல்கிறது. இச்சாலை வடக்கு பகுதியில் கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதியில் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் குட்டிப்புரத்தில் உள்ளது.

குறிப்பிடத்தக்கவர்கள் தொகு

  • அகமது குட்டி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர் மற்றும் பைசல் குட்டியின் தந்தை, புகழ்பெற்ற சட்டப் பேராசிரியர், வழக்கறிஞர், கட்டுரையாளர், பேச்சாளர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடையூர்_(கேரளம்)&oldid=3880250" இலிருந்து மீள்விக்கப்பட்டது