ஆதவநாடு

கேரள சிற்றூர்

ஆதவநாடு (Athavanad) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புறம் மாவட்டத்தின், திரூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.[1] இந்த ஊர் தேசிய நெடுஞ்சாலை 17-இல், புத்தனத்தாணிக்கும் வளஞ்சேரிக்கும் இடையில் அமைந்துள்ளது. ஆதவநாடின் அருகில் உள்ள முதன்மை நகரமாக புத்தனத்தாணி அமைந்துள்ளது. அருகில் உள்ள பிற நகரங்களாக வாலாஞ்சேரி, தவனூர், திருநாவாய், குட்டிப்புரம், இரிம்பிளியம், எடையூர் ஆகியவை உள்ளன.

ஆதவநாடு
ஆழ்வாஞ்சேரி
சிற்றூர்
தாவத நாட்டின் புத்தனத்தாணி நகரம்
தாவத நாட்டின் புத்தனத்தாணி நகரம்
ஆதவநாடு is located in கேரளம்
ஆதவநாடு
ஆதவநாடு
இந்தியா, கேரளத்தில் அமைவிடம்
ஆதவநாடு is located in இந்தியா
ஆதவநாடு
ஆதவநாடு
ஆதவநாடு (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°53′47″N 76°01′57″E / 10.8962722°N 76.0325253°E / 10.8962722; 76.0325253
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்18,283
அஞ்சல் குறியீட்டு எண்
676552
வாகனப் பதிவுKL 55, KL 10

சொற்பிறப்பியல்

தொகு

மலையாளத்தில், "ஆதவநாடு" என்பது "ஆழ்வாஞ்சேரி தம்பிரகள் வாழுன்ன நாடு" என்பதன் சுருக்கமாகும். இப்பகுதி பழங்காலத்தில் ஆழ்வாஞ்சேரி தம்பிரான்ள் என்னும் சிற்றரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆழ்வாஞ்சேரி தம்பிரான்கள் வழக்கமாக கோழிக்கோடு புதிய சாமுத்திரி மன்னரின் அரியிட்டு வாழ்கையில் (முடிசூட்டு விழா) கலந்து கொளபவர்களாக இருந்தனர். பாலக்காடு மன்னரின் அசல் தலைமையகம் ஆதவநாட்டில் இருந்தது.

ஆதவநாட்டில் சில தொழில்கள் உள்ளன. [2] ஆதவநாடு ஜவுளித் துறையில் பல பொதுத் துறை நிறுவனங்களின் அமைவிடமாக உள்ளது. [2]

  • மல்கோடெக்ஸ் (மலபார் கூட்டுறவு துணிகள் லிமிடெட்) ஆதவநாட்டில் தலைமையகம் கொண்டுள்ளது. [3]
  • கே.இ.எல்.டி.இ.எஸ். (கேரள உயர்தொழில்நுட்ப துணிகள் கூட்டுறவு லிமிடெட்) இங்கு அமைந்துள்ளது. [4]

மக்கள்தொகையியல்

தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆதவநாட்டின் மக்கள் தொகை 18,283 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 8,612 (47%) என்றும், பெண்களின் எண்ணிக்கை 9671 (53%) என்றும் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு தோராயமாக 1,524 பேர் உள்ளனது. ஆதவநாட்டின் மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் 14% உள்ளனர்.

அதிகம் பேசப்படும் மொழியாக மலையாளம் உள்ளது.

பண்பாடு

தொகு

சமயம்

தொகு

ஆதவநாடு முக்கியமாக இந்து, முஸ்லீம் சமயத்தினர் வாழ்கின்றனர். இம்மக்களிடையே டஃப் முட்டு, கோல்கலி, அரவணமுத்து ஆகிய உள்ளூர் கலைகள் உள்ளன. [5]

நிகழ்வுகள்

தொகு

மரமடி (கேரள மாட்டுப் பந்தயம் அல்லது களப்பூட்டு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இங்கு ஆடப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டாகும். மிருகவதையைத் தடுக்கும் 1960 ஆம் ஆண்டு சட்டத்தை மீறுவதாக இந்த விளையாட்டு உள்ளதாக கருதப்பட்டதால், 2014 ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பால் தடை இது செய்யப்பட்டது. [6]

ஈர்ப்புகள்

தொகு
  • அய்யப்பனோவு அருவி ஆதவநாடு கட்டிலங்கடியில் அமைந்துள்ளது.
 
அய்யப்பனோவ் அருவி

கல்வி

தொகு

ஆதவநாடு ஒரு முக்கிய கல்வி மையமாகுமாக உள்ளது. இங்கு துவக்கக் கல்வி முதல் உயர் நிலைக் கல்வி வரையிலான பல கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இது பல நூலகங்களையும் கொண்டுள்ளது. மேலும் 90%க்கும் கூடுதலான கல்வியறிவு விகிதத்தையும் கொண்டுள்ளது. பெரும்பாலான புத்தகங்கள் மலையாளம், ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் எழுதப்பட்டவை. சில அரபி-மலையாளத்தில் எழுதப்பட்டவை, இது அரேபிய எழுத்துக்களில் எழுதப்பட்ட மலையாள மொழி நூல் பதிப்புகளாகும்.

கல்வி நிறுவனங்கள்

தொகு
  • ஆதவநாடு பரிதி உயர்நிலைப் பள்ளி
  • ஆதவநாடு மேட்டும்மாள் மேல்நிலைப் பள்ளி
  • மர்கசு தர்பியத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி
  • மர்கஸ் உண்டுறைப் பள்ளி
  • மர்கசு தர்பியத்துல் ஆசிரியர் பயிற்சி மையம்
  • மர்கசு தர்பியத்துல் இஸ்லாம்
  • மர்கசு தர்பியத்துல் இஸ்லாம் பி-இடி
  • பதரிய்யா அரபிக் கல்லூரி, பாலத்தானி
  • பிஎம்எஸ்ஏ அனாதை இல்ல மருத்துவமனை, ஆதவநாடு கட்டிலங்கடி
  • மர்கஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • கே.எம்.டி.டி. பலதொழில்நுட்பக் கல்லூரி
  • கேஎம்சிடி சட்டக் கல்லூரி
  • மஜ்மாவ் அனாதை இல்லம்
  • முகமது அலி ஷிஹாப் தங்கல் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • மஜ்மாவ் மேல்நிலைப் பள்ளி
  • மஜ்மாவு தாஸ்கியாத் இஸ்லாமியா

போக்குவரத்து

தொகு

சாலை

தொகு

வான்வழி

தொகு

தொடருந்து

தொகு

பேருந்து

தொகு

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India: Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. 2.0 2.1 "Brief Industrial Profile of Malappuram District 2017-18" (PDF).
  3. "MALCOTEX". Archived from the original on 2021-09-13. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  4. "KELTEX Athavanad". பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  5. "Malappuram News, Malappuram District Map, Malappuram Muslim, Malappuram Hospitals, Malappuram College, Malappuram Directory". Archived from the original on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-14.
  6. "Cattle Race Club Of India vs State Of Kerala on 5 September, 2014". பார்க்கப்பட்ட நாள் 2017-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதவநாடு&oldid=4108473" இலிருந்து மீள்விக்கப்பட்டது