ஏர்ஏசியா

(ஏர்ஆசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏர் ஏசியா (ஆங்கிலம்: AirAsia; மலாய்: AirAsia; சீனம்: 亞洲航空) என்பது மலேசியாவைச் சேர்ந்த குறைந்த செலவு விமானச் சேவை நிறுவனமாகும். உள்ளூர், பன்னாட்டு விமானச் சேவை வழங்கும் இந்த நிறுவனம், ஆசியாவில் முன்னணி வகிக்கும் குறைந்த செலவு விமானச் சேவை நிறுவனமாக விளங்குகிறது.

ஏர் ஏசியா
AirAsia
IATA ICAO அழைப்புக் குறியீடு
AK AXM ASIAN EXPRESS
நிறுவல்1993
மையங்கள்கோலாலம்பூர்–சிப்பாங்
இரண்டாம் நிலை மையங்கள்1. கோத்தா கினபாலு
2. கூச்சிங்
3. ஜொகூர் பாரு
4. பினாங்கு
கிளை நிறுவனங்கள்
வானூர்தி எண்ணிக்கை255
சேரிடங்கள்165
தலைமையிடம்கோலாலம்பூர்
முக்கிய நபர்கள்டோனி பெர்னாண்டஸ் (தலைமை நிர்வாக அதிகாரி)
நிகர வருவாய்Increase RM 1.574 பில்லியன்/US$ 354 மில்லியன் (1~3Q2016)
(வருமானம்)
Increase ரிங்கிட் 5.01 பில்லியன்/US$ 1.12 பில்லியன்(1~3Q 2016)[1]
பணியாளர்கள்20,000 (2019)
வலைத்தளம்http://www.airasia.com

தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் விமான நுழைவுச் சீட்டுக்கள், இருக்கைப் பதிவுகள் இல்லாமல் சேவைகளை நடத்தத் தொடங்கிய முதல் நிறுவனம். இந்த நிறுவனம், 20 டிசம்பர் 1993-இல் தன் சேவையைத் தொடங்கியது.

1993-ஆம் ஆண்டில் இருந்து 1996-ஆம் ஆண்டு வரை இயங்கிய இந்த நிறுவனம், ஓர் அரச நிறுவனத்திற்குச் (DRB-HICOM) சொந்தமாக இருந்தது. தொடர்ச்சியாக நட்டம் அடைந்து கடன் சுமையில் இருந்த நிலையில் 2001-இல் டோனி பெர்னாண்டஸ் என்பவரால் ஒரு ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்டது. அப்போது அதற்கு 40 மில்லியன் ரிங்கிட் கடன் இருந்தது. பின்னர், திட்டமிட்டச் செயல்பாடுகள்; சரியான அணுகுமுறைகளினால் இப்பொழுது வேகமாக வளர்ச்சி அடைந்து வலுவான நிலையில் உள்ளது.

பொது

தொகு

மலேசியாவின் கோலாலம்பூர் மாநகரினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவை ஏர் ஏசியா (Tune Air Sdn Bhd) விமானச் சேவையாகும். ஏர் ஏசியா நிறுவனம் கால அட்டவணைப்படி செயல்படும் விமானச் சேவைகளை, உள்நாட்டு மற்றும் அனைத்துலக அளவில், 25 நாடுகளின் 165 இலக்குகளில் செயல்படுத்துகிறது.[2]

ஏர் ஏசியா மலேசியாவின், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (Kuala Lumpur International Airport - KLIA) மையமாகக் கொண்டு செயல்படுகிறது. தாய் ஏர் ஏசியா (Thai AirAsia), இந்தோனேசியா ஏர் ஏசியா (Indonesia AirAsia), பிலிப்பைன்ஸ் ஏர் ஏசியா (Philippines AirAsia), ஏர் ஏசியா ஜெஸ்ட் (AirAsia Zest) மற்றும் ஏர் ஏசியா இந்தியா (AirAsia India) போன்றவை ஏர் ஏசியா விமானச் சேவையின் சார்பில் செயல்படும் விமானச் சேவைகளாகும்.

ஏர்ஏசியா எக்ஸ்

தொகு

இதில் ஏர் ஏசியா இந்தியா விமானச் சேவையானது, டான் மூவாங்க் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Don Mueang International Airport); சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Jakarta–Soekarno-Hatta); நினோய் அகியூனோ பன்னாட்டு வானூர்தி நிலையம் (Ninoy Aquino International Airport) மற்றும் கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kempegowda International Airport) ஆகியவற்றினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.

இதன் கிளை விமானச் சேவையான ஏர்ஏசியா எக்ஸ் (AirAsia X)[3] நீண்ட தொலைவு பயணிக்கும் விமானச் சேவைகளைச் செயல்படுத்துகிறது. ஏர் ஏசியாவின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சிலாங்கூர் மாநிலத்தின் பெட்டாலிங் ஜெயா மாநகரில் உள்ளது. இதன் தலைமை அலுவலகம் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் உள்ளது.

இலக்குகள்

தொகு

ஏர் ஏசியா மட்டும் தினமும் 255 விமானங்களைச் செயல்படுத்துகிறது.[4] கிளைச் சேவைகளைச் சேர்க்காமல், ஏர் ஏசியா எக்ஸ் தினமும் 35 விமானங்களைச் செயல்படுத்துகிறது.

நகரம் நாடு பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்து அமைப்பு பன்னாட்டு பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு விமான நிலையம்
அபுதாபி யுனைடெட் அரபு எமிரேட்ஸ் AUH OMAA அபுதாபி பன்னாட்டு வானூர்தி நிலையம் [2]
அடிலைடு ஆஸ்திரேலியா ADL YPAD அடிலைடு விமான நிலையம் [3] [4]
அலோர் ஸ்டார் மலேசியா AOR WMKA சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையம்
பகோலோட் பிலிப்பைன்ஸ் BCD RPVB பகோலோட் - சிலய் சர்வதேச விமான நிலையம்
பாலிக்பாபான் இந்தோனேசியா BPN WALL சுல்தான் அலி முகம்மது சுலைமான் விமான நிலையம் [5]
பண்டார் ஆச்சே இந்தோனேசியா BTJ WITT சுல்தான் இஸ்கந்தர் மூடா பன்னாட்டு வானூர்தி நிலையம்
பந்தர் செரி பஹவன் ப்ருனை BWN WBSB புரூணை பன்னாட்டு வானூர்தி நிலையம்
பண்டுங் இந்தோனேசியா BDO WICC ஹுசெயின் சாஸ்ட்ராநேகரா சர்வதேச விமான நிலையம்
பெங்களூர் இந்தியா BLR VOBL கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் [6]
பேங்காக் தாய்லாந்து BKK VTBS சுவர்ணபூமி விமான நிலையம் [7]
பேங்காக் தாய்லாந்து DMK VTBD டான் மெயெங்க் சர்வதேச விமான நிலையம் [7]
பட்டம் இந்தோனேசியா BTH WIDD ஹாங்க் நதிம் விமான நிலையம் [8]
பெய்ஜிங்க் சீனா PEK ZBAA பெய்ஜிங்க் கேபிடல் சர்வதேச விமான நிலையம்
பின்டுலு மலேசியா BTU WBGB பின்டுலு விமான நிலையம்
புரிராம் தாய்லாந்து BFV VTUO புரிராம் விமான நிலையம்
புசன் கொரியா PUS RKPK கிம்ஹே சர்வதேச விமான நிலையம்
ககயன் டி ஓரோ பிலிப்பைன்ஸ் CGY RP02 லகுயின்டிங்கன் சர்வதேச விமான நிலையம்
செபு பிலிப்பைன்ஸ் CEB RPVM மாக்டன்-செபு சர்வதேச விமான நிலையம்
சண்டிகார்ஹ் இந்தியா IXC VICG சண்டிகர் விமான நிலையம்
சங்க்ஷா சீனா CSX ZGHA சங்க்ஷா ஹுவாங்கௌ சர்வதேச விமான நிலையம்
செங்க்டு சீனா CTU ZUUU செங்க்டு ஷுவாங்க்லி சர்வதேச விமான நிலையம்
சென்னை இந்தியா MAA VOMM சென்னை சர்வதேச விமான நிலையம்
சியாங்க் மை தாய்லாந்து CNX VTCC சியாங்க் மை சர்வதேச விமான நிலையம்
சியாங்க் ராய் தாய்லாந்து CEI VTCT மே ஃபாஹ் லுவங்க் சர்வதேச விமான நிலையம்
சாங்குவிங்க் சீனா CKG ZUCK சாங்க்கிங்க் ஜியாங்க்பெய் சர்வதேச விமான நிலையம்
கிறிஸ்ட்சர்ச் நியூசிலாந்து CHC NZCH கிறிஸ்ட்சர்ச் சர்வதேச விமான நிலையம்
க்ளார்க் பிலிப்பைன்ஸ் CRK RPLC க்ளார்க் சர்வதேச விமான நிலையம்
கொழும்பு இலங்கை CMB VCBI பண்டாரநாய்க் சர்வதேச விமான நிலையம்
டா நாங்க் வியட்நாம் DAD VVDN டா நாங்க் சர்வதேச விமான நிலையம்
டார்வின் ஆஸ்திரேலியா DRW YPDN டார்வின் சர்வதேச விமான நிலையம்
டவௌ பிலிப்பைன்ஸ் DVO RPMD ஃப்ரான்சிஸ்கோ பாங்கோய் சர்வதேச விமான நிலையம்
டெல்லி இந்தியா DEL VIDP இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
டென்பசார் இந்தோனேசியா DPS WADD ந்குராஹ் ராய் சர்வதேச விமான நிலையம்
டாக்கா பங்களாதேஷ் DAC VGHS ஷாஹ்ஜலால் சர்வதேச விமான நிலையம்
ஃபுகௌகா ஜப்பான் FUK RJFF ஃபுகௌகா விமான நிலையம்
கோவா இந்தியா GOI VOGO கோவா சர்வதேச விமான நிலையம்
கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியா OOL YBCG கோல்ட் கோஸ்ட் விமான நிலையம்
குவஹாத்தி இந்தியா GAU VEGT லோக்ப்ரியா கோபிநாத் போர்ட்ரோலோய் சர்வதேச விமான நிலையம்
குவாங்க்ஸௌ சீனா CAN ZGGG குவாங்க்ஸௌ பையுன் சர்வதேச விமான நிலையம்
குயிலின் சீனா KWL ZGKL குயிலின் லியாங்க்ஜியாங்க் சர்வதேச விமான நிலையம்
ஹைகௌ சீனா HAK ZJHK ஹைகௌ மெய்லன் சர்வதேச விமான நிலையம்
ஹாங்க்ஸௌ சீனா HGH ZSHC ஹாங்க்ஸௌ க்ஸியோஷான் சர்வதேச விமான நிலையம்
ஹனோய் வியட்நாம் HAN VVNB நோய் பாய் சர்வதேச விமான நிலையம்
ஹாட் யை தாய்லாந்து HDY VTSS ஹாட் யை சர்வதேச விமான நிலையம்
ஹோ சி மின்ஹ் சிட்டி வியட்நாம் SGN VVTS டான் சன் நாட் சர்வதேச விமான நிலையம்
ஹாங்க் காங்க் ஹாங்காங்க் HKG VHHH ஹாங்காங்க் சர்வதேச விமான நிலையம்
ஹைதராபாத் இந்தியா HYD VOHS ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்
லோயிலோ பிலிப்பைன்ஸ் ILO RPVI லோயிலோ சர்வதேச விமான நிலையம்
இபோஹ் மலேசியா IPH WMKI சுல்தான் அஸ்லான் ஷாஹ் விமான நிலையம்
ஜெய்ப்பூர் இந்தியா JAI VIJP ஜெய்ப்பூர் விமான நிலையம்
ஜகர்தா இந்தோனேசியா CGK WIII சியோகமோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம்
ஜெட்டாஹ் சவுதி அரேபியா JED OEJN கிங்க் அப்துல்லாஸிஸ் சர்வதேச விமான நிலையம்
ஜோஹர் பஹ்ரு மலேசியா JHB WMKJ செனை சர்வதேச விமான நிலையம்
கலிபோ பிலிப்பைன்ஸ் KLO RPVK கலிபோ சர்வதேச விமான நிலையம்
காத்மண்டு நேபாளம் KTM VNKT திரிபுவன் சர்வதேச விமான நிலையம்
கோன் கயேன் தாய்லாந்து KKC VTUK கோன் கயேன் விமான நிலையம்
கொச்சின் இந்தியா COK VOCI கொச்சின் சர்வதேச விமான நிலையம்
கொல்கத்தா இந்தியா CCU VECC நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம்
கோட்டா பாரு மலேசியா KBR WMKC சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையம்
கோட்டா கினபலு மலேசியா BKI WBKK கோட்டா கினபாலு சர்வதேச விமான நிலையம்
க்ராபி தாய்லாந்து KBV VTSG க்ராபி விமான நிலையம்
கோலாலம்பூர் மலேசியா KUL WMKK கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம்
குவாலா டெரெங்கானு மலேசியா TGG WMKN சுல்தான் மஹ்மட் விமான நிலையம்
குவான்டன் மலேசியா KUA WMKD சுல்தான் ஹஜி அஹமது ஷாஹ் விமான நிலையம்
குச்சிங்க் மலேசியா KCH WBGG குச்சிங்க் சர்வதேச விமான நிலையம்
குன்மிங்க் சீனா KMG ZPPP குன்மிங்க் சாங்க்ஷுய் சர்வதேச விமான நிலையம்
லுபுவான் மலேசியா LBU WBKL லுபௌன் விமான நிலையம்
லங்காவி மலேசியா LGK WMKL லாங்கவி சர்வதேச விமான நிலையம்
லோயி தாய்லாந்து LOE VTUL லோயி விமான நிலையம்
லோம்போக் இந்தோனேசியா LOP WADL லோம்போக் சர்வதேச விமான நிலையம்
லண்டன் யுனைடெட் கிங்க்டம் STN EGSS லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம்
லண்டன் யுனைடெட் கிங்க்டம் LGW EGKK லண்டன் காட்விக் விமான நிலையம்
மகௌ மகௌ MFM VMMC மகௌ சர்வதேச விமான நிலையம்
மகச்சர் இந்தோனேசியா UPG WAAA சுல்தான் ஹசனுதின் சர்வதேச விமான நிலையம்
மேல் மாலத்தீவுகள் MLE VRMM இப்ராஹிம் நசிர் சர்வதேச விமான நிலையம்
மனடோ இந்தோனேசியா MDC WAMM சேம் ரடுலங்கி சர்வதேச விமான நிலையம்
மன்டேலேய் மியான்மர் MDL VYMD மன்டேலேய் சர்வதேச விமான நிலையம்
மனிலா பிலிப்பைன்ஸ் MNL RPLL நினய் அக்யினோ சர்வதேச விமான நிலையம்
மேடான் இந்தோனேசியா MES WIMM போலோனியா சர்வதேச விமான நிலையம்
மேடான் இந்தோனேசியா KNO WIMM குவாலா நமௌ சர்வதேச விமான நிலையம்
மெல்போர்ன் ஆஸ்திரேலியா MEL YMML மெல்போர்ன் விமான நிலையம்
மிரி மலேசியா MYY WBGR மிரி சர்வதேச விமான நிலையம்
மும்பை இந்தியா BOM VABB சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்
முகாஹ் மலேசியா MKM WBGK முகாஹ் விமான நிலையம்
நகோயா ஜப்பான் NGO RJGG சுபு சென்டையர் சர்வதேச விமான நிலையம்
நகோன் பனோம் தாய்லாந்து KOP VTUW நகோன் பனோம் விமான நிலையம்
நகோன் சி தம்மரட் தாய்லாந்து NST VTSF நகோன் சி தம்மரட் விமான நிலையம்
நான் தாய்லாந்து NNT VTCN நான் விமான நிலையம்
நன்னிங்க் சீனா NNG ZGNN நன்னிங்க் வுக்ஸு சர்வதேச விமான நிலையம்
நாரதிவாட் தாய்லாந்து NAW VTSC நாரதிவாட் விமான நிலையம்
நாய்ப்யிடாவ் மியான்மர் NYT VYNT நாய்ப்யிடாவ் விமான நிலையம்
ஒகினாவா ஜப்பான் OKA ROAH நாஹா விமான நிலையம்
ஓசாகா ஜப்பான் KIX RJBB கன்சாய் சர்வதேச விமான நிலையம்
படாங்க் இந்தோனேசியா PDG WIPT மினாங்கபௌ சர்வதேச விமான நிலையம்
பெலேம்பாங்க் இந்தோனேசியா PLM WIPP சுல்தான் மஹமட் படருதின் II விமான நிலையம்
பாரிஸ் ப்ரான்ஸ் ORY LFPO பாரிஸ்-ஓர்லே விமான நிலையம்
பெகன்பாரு இந்தோனேசியா PKU WIBB சுல்தான் சியாரிஃப் காசிம் II சர்வதேச விமான நிலையம்
பெனாங்க் மலேசியா PEN WMKP பெனாங்க் சர்வதேச விமான நிலையம்
பெர்த் ஆஸ்திரேலியா PER YPPH பெர்த் விமான நிலையம்
ப்னோம் பென்ஹ் கம்போடியா PNH VDPP ப்னோம் பென்ஹ் சர்வதேச விமான நிலையம்
புகெட் தாய்லாந்து HKT VTSP புகெட் சர்வதேச விமான நிலையம்
போன்டியானக் இந்தோனேசியா PNK WIOO சுபாடியோ விமான நிலையம்
புயெர்டோ பிரின்செஸா பிலிப்பைன்ஸ் PPS RPVP புயெர்டோ பிரின்செஸா சர்வதேச விமான நிலையம்
புனே இந்தியா PNQ VAPO புனே விமான நிலையம்
ரனோங்க் தாய்லாந்து UNN VTSR ரனோங்க் விமான நிலையம்
ரோய் எட் தாய்லாந்து ROI VTUV ரோய் எட் விமான நிலையம்
சண்டகான் மலேசியா SDK WBKS சண்டகான் விமான நிலையம்
சப்போரோ ஜப்பான் CTS RJCC நியூ சிட்டோஸ் விமான நிலையம்
செமராங்க் இந்தோனேசியா SRG WARS ஆஸ்மட் யானி சர்வதேச விமான நிலையம்
சியோல் கொரியா ICN RKSI இஞ்செயன் சர்வதேச விமான நிலையம்
ஷாங்காய் சீனா PVG ZSPD ஷாங்காய் புடோங்க் சர்வதேச விமான நிலையம்
ஷென்ஸென் சீனா SZX ZGSZ ஷென்ஸென் பௌவுன் சர்வதேச விமான நிலையம்
சிபு மலேசியா SBW WBGS சிபு விமான நிலையம்
சியெம் ரீப் கம்போடியா REP VDSR சியெம் ரீப் சர்வதேச விமான நிலையம்
சிங்கப்பூர் சிங்கப்பூர் SIN WSSS சிங்கப்பூர் சங்கி விமான நிலையம்
சோலோ இந்தோனேசியா SOC WARQ அடிசுமர்மோ சர்வதேச விமான நிலையம்
சுபாங்க் மலேசியா SZB WMSA சுல்தான் அப்துல் அஸிஸ் ஷாஹ் விமான நிலையம்
சுரபயா இந்தோனேசியா SUB WARR ஜூவான்டா சர்வதேச விமான நிலையம்
சுரத் தனி தாய்லாந்து URT VTSB சுரத் தனி விமான நிலையம்
சிட்னி ஆஸ்திரேலியா SYD YSSY சிட்னி விமான நிலையம்
டக்லோபன் பிலிப்பைன்ஸ் TAC RPVA டேனியல் செட். ரோமுவல்டெஸ் விமான நிலையம்
டக்பிலரன் பிலிப்பைன்ஸ் TAG RPVT டேக்பிலரன் விமான நிலையம்
தாய்பெய் தாய்வான் TPE RCTP தாய்பெய் தௌயுவன் சர்வதேச விமான நிலையம்
டவௌ மலேசியா TWU WBKW தவௌ விமான நிலையம்
டெஹ்ரான் ஈரான் IKA OIIE டெஹ்ரான் இமாம் கோமெயினி சர்வதேச விமான நிலையம்
திருவனந்தபுரம் இந்தியா TRV VOTV Trivandrum சர்வதேச விமான நிலையம்
டியாஞ்சின் சீனா TSN ZBTJ டியஞ்சின் பின்ஹை சர்வதேச விமான நிலையம்
திருச்சிராப்பள்ளி இந்தியா TRZ VOTR திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்
டோக்கியோ ஜப்பான் HND RJTT ஹனேடா விமான நிலையம்
டோக்கியோ ஜப்பான் NRT RJAA நனிடா சர்வதேச விமான நிலையம்
ட்ராங்க் தாய்லாந்து TST VTST ட்ராங்க் விமான நிலையம்
உபோன் ராட்தனி தாய்லாந்து UBP VTUU உபோன் ராட்தனி விமான நிலையம்
உடோன் தனி தாய்லாந்து UTH VTUD உடோன் தனி விமான நிலையம்
வியெட்டினி லௌஸ் VTE VLVT வாட்டேய் சர்வதேச விமான நிலையம்
விசாகப்பட்டினம் இந்தியா VTZ VOVZ விசாகப்பட்டினம் விமான நிலையம்
க்ஸியாமென் சீனா XMN ZSAM க்ஸியாமென் கைகி சர்வதேச விமான நிலையம்
உஹான் சீனா WUH ZHHH உஹான் டியன்ஹி சர்வதேச விமான நிலையம்
கியான் சீனா XIY ZLXY க்ஸியான் க்ஸியாங்காங்க் சர்வதேச விமான நிலையம்
யங்கூன் மியான்மர் RGN VYYY யங்கூன் சர்வதேச விமான நிலையம்
யோக்யகர்தா இந்தோனேசியா JOG WARJ அடிசுஸிப்டோ சர்வதேச விமான நிலையம்

இதனையும் காண்க

தொகு

உயர்தர வழித்தடங்கள்

தொகு

ஏர் ஏசியா கோலாலம்பூர் – சிங்கப்பூர், சிங்கப்பூர் – கோலாலம்பூர், கோலாலம்பூர் – கோடா கின்பாலு, கோலாலம்பூர் – பெனங்க் ஆகிய வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 73, 73, 70 மற்றும் 63 விமானங்களைச் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானங்களை சிங்கப்பூர் – குச்சிங்க் மற்றும் மேல் – கோலாலம்பூர் வழித்தடங்களைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "AirAsia Q4 revenue up 47%". India Infoline.
  2. "Air Asia Flight Services". cleartrip.com. Archived from the original on 2013-12-26. பார்க்கப்பட்ட நாள் 2015-11-16.
  3. "AirAsia X boosts flights to Australia". smh.com.au. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  4. "Flight schedule". airasia.com. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்ஏசியா&oldid=3627207" இலிருந்து மீள்விக்கப்பட்டது