ஏர் இந்தியா எக்சுபிரசு பறப்பு 1344
ஏர் இந்தியா எக்சுபிரசு பறப்பு 1344 (Air India Express Flight 1344) 2020 ஆகத்து 7 ஆம் நாள் ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் இருந்து புறப்பட்டு இந்தியா, கேரளம், கோழிக்கோடு நோக்கிச் சென்ற வானூர்திப் பறப்பு கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் மோசமான காலநிலையினால் பல முறை தரையிறங்க முயன்று, இறுதியில் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளான இந்தியர்களை தாயகம் கொண்டு வரும் இந்திய அர்சின் "வந்தே பாரத் திட்டத்தின்" ஒரு பகுதியாக இந்தப் பறப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வானூர்தி 9–10.5 மீ (30–35 அடி) பள்ளத்தில் விழுந்ததில் 16 பயணிகளும், இரு ஓட்டுநர்களும் கொல்லப்பட்டனர். மீதமான நான்கு பணியாளர்களும், 168 பயணிகளும் உயிர் தப்பினர், இவர்களில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2006 இல் விபத்துக்குள்ளான VT-AXH வானூர்தி | |
விபத்தின் சுருக்கம் | |
---|---|
நாள் | 7 ஆகத்து 2020 |
சுருக்கம் | மோசமான காலநிலையில் ஓடுபாதை விபத்து |
இடம் | ஓடுபாதை 10, கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம், மலப்புறம் மாவட்டம், கேரளம், இந்தியா 11°07′59″N 75°58′13″E / 11.13306°N 75.97028°E |
பயணிகள் | 184 |
ஊழியர் | 6 |
காயமுற்றோர் | 100+[1] |
உயிரிழப்புகள் | 18[2] |
தப்பியவர்கள் | 172 |
வானூர்தி வகை | போயிங் 737-8HG(SFP) |
வானூர்தி பெயர் | இந்தியா கேட் |
இயக்கம் | ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் |
வானூர்தி பதிவு | VT-AXH |
பறப்பு புறப்பாடு | துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம், ஐக்கிய அரபு அமீரகம் |
சேருமிடம் | கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம், மலப்புறம் மாவட்டம், கேரளம், இந்தியா |
பின்னணி
தொகுவானூர்தி நிலையம்
தொகுகோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம், கோழிக்கோடு, காரிப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தின் படி, இவ்வானூர்தி நிலையம் இந்தியாவின் மிகவும் ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாகும்.[3] 2011 இல், இந்நிறுவனம் கோழிக்கோடு நிலையத்தை "பாதுகாப்பற்றதாக" அறிவித்திருந்தது. அத்துடன், மோசமான ஈரக் காலநிலையின் போது, இங்கு தரையிறங்குவது பாதுகாப்பானதல்ல எனவும் கூறியிருந்தது.[4] அதிகாரிகளின் எச்சரிக்கைகள் பல தடவைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை.[5][6][7][8][9]
விபத்து
தொகு1344 வானூர்தி நிலையத்தை சரியான நேரத்தில் அடைந்திருந்தது. ஓடுபாதை 28 இல் தரையிறங்குவதாக இருந்தது, ஆனால் பின்காற்றின் காரணமாக இரண்டு முயற்சிகளின் போது தரையிறங்குவது முடியாமல் போனது. வானூர்தி ஓடுபாதை 10 இல் இறங்குவதற்கு அனுமதி பெற வேண்டி வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. 19:37 இசீநே அளவில் ஓடுபாதை 10 இறங்குவதற்கு அனுமதி கிடைத்தது.[9] கேரளத்தில் அந்த நேரத்தில், பருவமழை, மற்றும் வெள்ளத்தினால், சீரற்ற வானிலையால் தரையிறங்கும் போது பார்வைத்திறன் 2,000 மீ (6,600 அடி) ஆகக் குறைந்திருந்தது. ஓடுபாதை 28 பயன்பாட்டில் இருந்தது, ஆனால், முதல் முறை தரையிறங்கும் முயற்சியில், வானோட்டிக்கு ஓடுபாதையைப் பார்க்க முடியவில்லை, இதனாலேயே அவர் ஓடுபாதை 10 ஐக் கோரினார். 2,860 மீ (9,380 அடி) உயரத்தில், ஓடுபாதை 10 இல் தரையிறங்கும் இரண்டாவது முயற்சியில்,[10][11] ஓடுபாதையின் முடிவிற்கு முன்னர் வானூர்தி நிறுத்தத் தவறியதில், அது 9-10.5 மீ (30-35 அடி) பள்ளத்தாக்கில் வீழ்ந்தது. இத்தாக்கத்தின் போது வானூர்தி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.[12] வானூர்தி நிலைய முனையத்திலிருந்து 3 கி.மீ (9,800 அடி) தொலைவில் இந்த விபத்து நடந்தது.[13] விபத்துக்குப் பிந்தைய தீ எதுவும் அறிவிக்கப்படவில்லை.[14]
பாதிக்கப்பட்டோர்
தொகுவானூர்தியில் மொத்தம் 184 பயணிகள்,[15] ஆறு பணியாளர்கள் இருந்தனர்.[16][17] Eighteen people died in the crash (16 passengers and both pilots) and more than 100 people were injured.[1][18][19]
வகை | மொத்தம் பயணித்தோர் | தப்பியோர் | இறப்புகள் |
---|---|---|---|
பயணிகள் | 184 | 168 | 16 |
வானோட்டிகள் | 2 | 0 | 2 |
பணியாளர்கள் | 4 | 4 | 0 |
மொத்தம் | 190 | 172 | 18 |
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Thiruvananthapuram, P. S. Gopikrishnan Unnithan (7 August 2020). "Kerala: Air India flight with 190 onboard skids off runway in Kozhikode, both pilots among 16 dead". The India Today. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
- ↑ 2.0 2.1 "Accident Bulletin". www.airindia.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Air India Calicut Airport Crash: Kozhikode airport was marked 'risky' by government in 2011". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "Air India Express crash: This safety instrument could have prevented Kozhikode tragedy". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2020-08-10.
- ↑ Ayyappan, V. (8 Aug 2020). "Plane crash in Kerala: Runway 10 of Kozhikode airport unsafe, expert warned 9 years ago | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Civil aviation expert's 2011 warning about 'unsafe' KIA runway fell on DGCA's deaf ears". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-08-08. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "'Kozhikode plane crash not an accident but murder': Air safety expert Capt Mohan Ranganathan". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-08-08. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "As Kerala plane crash theories rise, pilots' body makes an appeal, govt presents defence". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-08-08. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ 9.0 9.1 "India's Aviation Regulator Points to Pilot Error in Air India Express Crash". Insurance Journal (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-09. பார்க்கப்பட்ட நாள் 2020-08-10.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ VOCL - CALICUT / DOMESTIC (PDF). Airport Authority of India. 25 May 2017. p. 21. Archived from the original (PDF) on 14 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகஸ்ட் 2020.
{{cite book}}
:|work=
ignored (help); Check date values in:|access-date=
and|archivedate=
(help)CS1 maint: date and year (link) - ↑ Lucia, Binding (8 August 2020). "Kerala plane crash: At least 14 dead and several injured as aircraft 'splits in two' at airport". Sky News. பார்க்கப்பட்ட நாள் 8 August 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Plane did not slide, took off cliff, collapsed: CISF officer who saw last minutes of Air India Express flight". The Indian Express (in ஆங்கிலம்). 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.
- ↑ "Kozhikode plane crash: 16 dead, several injured as Air India Express flight IX-1344 bringing Indians home breaks into two while landing – India News , Firstpost". Firstpost. 7 August 2020. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
- ↑ "കരിപ്പൂരിൽ അപകടത്തിൽപ്പെട്ട വിമാനത്തിലെ യാത്രക്കാരുടെ ലിസ്റ്റ്" (in ml). MediaOne News. https://www.mediaonetv.in/kerala/2020/08/07/full-list-of-passengers.
- ↑ "IX 1344 crashes. Many feared dead" (in en-IN). theindependent.in. 7 August 2020. https://theindependent.in/ix-1344-skids-off-runway-falls-off-and-splits-many-feared-dead/.
- ↑ "Air India jet breaks in two on Kerala runway" (in en-GB). BBC News. 7 August 2020. https://www.bbc.com/news/world-asia-india-53699857.
- ↑ John, Tara; Sud, Vedika; Pokharel, Sugam; Gupta, Swati. "Air India plane crashes in Kerala after skidding off the runway". CNN. https://www.cnn.com/2020/08/07/asia/plane-crash-calicut-india-intl/index.html.
- ↑ Dutta Roy, Divyanshu (8 August 2020). "18 Dead Including Both Pilots After Plane Breaks In Two In Kerala". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 8 August 2020.
- ↑ "IX 1344 incident at Kozhikode – UPDATES – EXPRESSIONS" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.