வணிக வானூர்திகளின் விபத்துக்களினதும் சம்பவங்களினதும் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
வணிக வானூர்திகளின் விபத்துக்களினதும் சம்பவங்களினதும் பட்டியல் (List of accidents and incidents involving commercial aircraft) எனப்படும் இந்த தொகுப்பு, வணிக வானூர்தியில் நடந்த விபத்துக்களும் சம்பவங்களும் பற்றிய ஒரு பட்டியலாக இருப்பதுடன், விபத்துக்களும் சம்பவங்களும் நிகழ்ந்த ஆண்டுகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Contents | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1919 | ||||||||||
1922 | 1923 | 1924 | 1926 | 1927 | 1928 | 1929 | ||||
1930 | 1931 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | ||
1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | |
1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | |
1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | |
1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | |
1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | |
1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | |
2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | |
2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | ||||
1910-கள் மற்றும் 1920-களில்
தொகு1919
தொகு- ஆகத்து 2-- 1919 வெரோனா காப்ரோனி கா.48 விபத்து (1919 Verona Caproni Ca.48 crash) 1919, ஆகத்து 2-இல், (காப்ரோனி கா.48 Caproni Ca.48) வகை வானூர்தி ஒன்று, இத்தாலியின் வெரோனா என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது, இவ்விபத்தில் அனைவரும் கொல்லப்பட்டனர். (பல்வேறு ஆதாரங்களின் படி 14, 15, அல்லது 17 பேர்கள்).[1]
1922
தொகு- ஏப்ரல் 7-- வானூர்திகளின் முதலாவது வான்வழிப் பயண நடுவிட மோதல் (1922 Picardie mid-air collision), 1922, ஏப்ரல் 7-இல், 'பார்மேன் எஃப்.60' (Farman F-60) வகை வானூர்தியும், 'டி ஹாவிலாண்ட் டிஎச்.18 ஏ' (de Havilland DH.18A) ரக வானூர்தியும் பிரான்சின் பிக்கார்டி என்ற இடத்தில், வான்வழிப் பயண நடுவிட மோதலில் ஏற்பட்ட, விபத்தில் அனைவரும் (7 பேர்கள்) கொல்லப்பட்டனர்.[2]
1923
தொகு- மே 14-- மே 1923 எயார் யூனியன் பார்மன் கோலியாத் மோதல் (May 1923 Air Union Farman Goliath crash), 1923 மே 14-இல், 'பார்மன் ஃஎப்60 கோலியாத்' (Farman F.60 Goliath) என்ற வகை வானூர்தி, பிரான்சின் மோன்சுறேஸ், சாம், பகுதியில் விபத்துக்குள்ளானதில், அனைவரும் (6 பேர்கள்) கொல்லப்பட்டனர்.[3]
- ஆகத்து 27-- ஆகத்து 1923 எயார் பார்மன் கோலியாத் மோதல் (August 1923 Air Union Farman Goliath crash) எனும் இவ்விபத்து, 1923 ஆகத்து 27-ல், ஐக்கிய இராச்சியத்தின் "கென்ட்" கிழக்கு மல்லிங் (East Malling, Kent) என்ற இடத்தில் 'பார்மன் எப் 60 கோலியாத்' (Farman F.60 Goliath) வகை வானூர்தி, கட்டுபாட்டையிழந்த விபத்தில், ஒருவர் கொல்லப்பட்டு, ஒன்பது பேர் காயமடைந்தனர்.[4]
1924
தொகு- திசம்பர் 24-- 1924 இம்ப்ரியல் எயார்வேஸ் டி கவிலாண்ட் டிஎச்.34 மோதல் (1924 Imperial Airways de Havilland DH.34 crash) எனும் இவ்விபத்து, 1923, திசம்பர் 24-ல், இலண்டனின் புர்லே (Purley) எனும் பகுதியில் 'டி ஆவிவிலாண்ட் டிஎச்.34 ' (de Havilland DH.34) வகை வானூர்தியின், காரணம் அறியாத விபத்தில், அனைவரும் (8-பேர்கள்) கொல்லப்பட்டனர்.[5]
1926
தொகு- ஆகத்து 18-- ஆகஸ்டு 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 மோதல் (August 1926 Air Union Blériot 155 crash) எனும் இவ்விபத்து, மோசமான வானிலையில் உடனடியாக தரையிறங்க முற்பட்டபோது இயந்திர கோளாறு காரணமாக 1926, ஆகத்து 18-ல், இங்கிலாந்தில் உள்ள 'அல்டிங்டன், கென்ட்' (Aldington, Kent) என்னுமிடத்தில் "ப்லேரியோத் 155" (Blériot 155) வகை வானூர்தி விபத்துக்குள்ளானதில் 3-பேர் உயிரிழந்து 12-பேர் காயங்களுடன் தப்பினார்கள்.[6]
- ஒக்டோபர் 2-- அக்டோபர் 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 தீவிபத்து (October 1926 Air Union Blériot 155 crash) எனும் இந்த வானூர்தி விபத்து, 1926, ஒக்டோபர் 2-ல், நடுவானில் தீப்பிடித்து, அவசரகால தரையிறக்க முயற்சியின்போது இங்கிலாந்து நாட்டின் லே, கென்ட் (Leigh, Kent) என்னுமிடத்தில் மோதியதால் நிகழ்ந்த விபத்தில் அனைவரும் (7-பேர்கள்) உயிரிழந்தனர். 2 விமானிகளும், 5 பயணிகளும் பலியான இவ்விபத்து, வானூர்தியின் முதல் தீவிபத்தாகும்.[7]
1927
தொகு- ஆகத்து 22-- 1927 கேஎல்எம் போக்கர் எப்.VIII விபத்து (1927 KLM Fokker F.VIII crash) எனப்படும் இந்த வானூர்தி விபத்து, 1927, ஆகத்து 22-ல், இங்கிலாந்தின் அண்டர் ரிவர் (Underriver) (தமிழ்: கீழாறு) என்னும் நாட்டுப்புற பகுதியில் விபத்துக்குள்ளான "கேஎல்எம் ஃபோக்கர் எப்.VIII" (KLM Fokker F.VIII) வானூர்தி, வால்ப் பகுதி பழுது அல்லது கட்டமைப்புத் தோல்வியின் காரணமாக நிகழ்ந்ததாகும்.[8]
1928
தொகு- சூலை 13-- 1928 இம்பீரியல் ஏர்வேஸ் விக்கேர்ஸ் வுல்கன் விபத்து (1928 Imperial Airways Vickers Vulcan crash) எனப்படும் இந்த வானூர்தி விபத்து, 1928, சூலை 13-ல், "விக்கேர்ஸ் வுல்கன்" (Vickers Vulcan) எனும் வானூர்தி மூலம் நடந்தது. இங்கிலாந்து லண்டன் 'புர்லே', 'சர்ரே' (Purley, Surrey) என்னும் பகுதி அருகே நிகழ்ந்த இவ்விபத்தில் 4-பேர் மாண்டு, 2 பேர் மீண்டனர்.[9]
1929
தொகு- சூன் 17-- 1929 இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 விபத்து (1929 Imperial Airways Handley Page W.10 crash) என அறியும் இவ்வானூர்தி விபத்து, 1929, சூன் 17-ல், "ஹான்ட்லி பக்கம் டபிள்யூ 10" (Handley Page W.10) எனும் வானூர்தி, ஆங்கிலக் கால்வாயின் நிலக்கூம்பு பகுதியில் இயந்திர செயலிழப்பு காரணமாக விபத்துக்குள்ளானதில், 6-பேர் தப்பி, 7-பேர் கொல்லப்பட்டனர்.[10]
- நவம்பர் 6-- 1929 லுஃப்தான்சா ஜங்கர்சு ஜி 24 விபத்து (1929 Luft Hansa Junkers G.24 Crash) எனும் இவ்வானூர்தி விபத்து, 1929, நவம்பர் 6-ம் நாள், இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியத்தில் 'ஜங்கர்சு ஜி 24' (Junkers G.24) எனும் வானூர்தியில் நிகழ்ந்த விபத்தில், 7-பேர்கள் கொல்லப்பட்டு ஒருவர் உயிர் தப்பினார்.[11]
1930-கள்
தொகு1930
தொகு- பிப்ரவரி 10-- 1930 எயார் யூனியன் பார்மேன் கோலியாத் விபத்து (1930 Air Union Farman Goliath crash) எனும் இவ்வானூர்தி விபத்து, 1930, பிப்ரவரி 10-ல், இங்கிலாந்தின் மார்டன் வானூர்தி தளத்தில் (Marden Airfield) நிகழ்ந்த இவ்விபத்தில், 2-பேர் பலியானார்கள், 4-பேர்கள் காயங்களுடன் உயிர்பிழைத்தனர்.[12]
1931
தொகு- மார்ச்சு 21-- 1931 அவ்ரோ பத்து தென் மேகத்தில் காணாமல் போன சம்பவம் (Southern Cloud) எனும் இந்த வானூர்தி விபத்து சம்பவம், 1931-ம் ஆண்டு, மார்ச்சு 21-ம் நாளன்று நடந்தேறியது. ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள பனி மலைகளின் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 6 பயணிகள், 2 ஊழியர்கள் உட்பட 8-பேர்கள் (அனைவரும்) பலியாயினர்.[13]
- மார்ச்சு 31-- டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599 (TWA Flight 599) எனும் இந்த வானூர்தி சம்பவம், 1931, மார்ச்சு 31, அன்று, ஃபோக்கர் எஃப்.10 (Fokker F.10) வகை வானூர்தி கட்டமைப்பு தோல்வியின் காரணமாக கேன்சஸ் புல்வெளிப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில். பிரபல அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர் கனுட் ரோக்கன் (Knute Rockne) என்பவரும், 7-பேர்களும் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[14]
1933
தொகு- மார்ச்சு 31-- 1933 டிக்ஸ்முய்டி இம்பீரியல் ஏயர்வேசு விபத்து (1933 Imperial Airways Diksmuide crash) எனும் இந்த அபாயகரமான வானூர்தி விபத்து, 1933, மார்ச்சு 28-ல், மேற்கு ஐரோப்பாவின் பெல்ஜியம் நாட்டிலுள்ள "டிக்ஸ்முய்டி" (Diksmuide) என்னுமிடத்தில் நாசவேலைக் காரணமாக சந்தேகிக்கப்படும் இவ்விபத்தில், 15-பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[15]
- அக்டோபர் 10-- 1933 யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 நடுவானில் வெடிப்பு (1933 United Airlines Boeing 247 mid-air explosion) எனும் இந்த நடு வான் வானூர்தி விபத்து, 1933, அக்டோபர் 10-ல், ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா செஸ்டர்டன் (Chesterton, Indiana) பகுதியில் போயிங் 247 வானூர்தி விழுந்து நொறுங்கியது. இவ்விபத்தில் 7 பேர்கள் (அனைவரும்) பலியானார்கள்.[16]
- டிசம்பர் 30-- 1933 இம்பீரியல் ஏயர்வேசு ருய்ச்சேலேடே விபத்து (1933 Imperial Airways Ruysselede crash) எனும் இந்த வானூர்தி விபத்து, 1933, டிசம்பர் 30-ல், பெல்ஜியத்தின் ருய்ச்சேலேடே (Ruysselede) பகுதியில் "அவ்ரோ பத்து" வகை வானூர்தி, வானொலி கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[17]
1934
தொகு- மே 2-- ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து (Air France Wibault 282T crash) எனும் இந்த வானூர்தி விபத்து, 1934 மே 9-ல், இங்கிலாந்தின் 'கென்ட்' (Kent) ஆங்கில கால்வாய்க்குள் (English Channel) விழுந்து மூழ்கியது. இவ்வானூர்தி விபத்தில், பயணித்த 6 பேர்களும் பலியாகினர்.[18]
- சூலை 27-- 1934 சுவிஸ்ஏர் துட்லிகேன் விபத்து (1934 Swissair Tuttlingen accident) என அறியும் இவ்வானூர்தி விபத்து, 1934, சூலை 27-ல், இடியுடன் (Thunder) கூடிய மழை காரணமாக, ஜெர்மனியின் 'துட்லிகேன்' (Tuttlingen) பகுதியில் 3,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், வானூர்தியின் சேவைப் பணியாளர்கள் 3 பேரும், பயணிகள் 9 பேரும் (அனைவரும்) பலியாகினர்.[19]
- அக்டோபர் 2-- 1934 ஹில்மன்'ஸ் ஏர்வேஸ் டி ஹாவிலாண்ட் டிராகன் ரபிடே பொறிவு (1934 Hillman's Airways de Havilland Dragon Rapide crash) இது, 1934, அக்டோபர் 2-ல், மோசமான காலநிலை மற்றும் (விமானி பிழை(CFIT) காரணமாக, ஐக்கிய இராச்சிய ஆங்கிலக் கால்வாயிலிருந்து 4 மைல் தொலைவிலுள்ள 'ஃபோக்ஸ்டோன்' (Folkestone) பகுதியில் விபத்துக்குள்ளானது. இவ்வானூர்தி விபத்தில், மொத்தமாக 7 பேர்கள் (பயணித்த அனைவரும்) பலியானார்கள்.[20]
1935
தொகு- அக்டோபர் 7-- யுனைடெட் ஏர்லைன்சு 4 (United Airlines Flight 4) எனும் இது, 1935, அக்டோபர் 7-ல், போயிங் 247D வகை வானூர்தி ஐக்கிய அமெரிக்காவின் சால்ட் லேக் நகரம் என்னுமிடத்திலிருந்து, ஐக்கிய அமெரிக்காவின் மற்றொரு பகுதியான செயென் புறப்பட்டு இயங்கிக்கொண்டிருந்தது. அதிகாலை 02:17 மணியளவில் செயென் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டடு விமானியின் பிழைக் காரணமாக நடந்த விபத்தில், விமான குழுவில் மூவரும், பயணிகள் 9 பேர்களும் மொத்தமாக 12 பேர்களும் (பயணித்த அனைவரும்) பலியானார்கள்.[21]
- டிசம்பர் 10-- 1935 சபீனா சவோயா-மார்ச்செட்டி எஸ்.73 விபத்து (1935 SABENA Savoia-Marchetti S.73 crash) எனும் இவ்விபத்து, 1935, டிசம்பர் 10-ல், வானூர்தி ஒன்று, இங்கிலாந்தின் டட்ஸ்பீல்ட் (Tatsfield ) பிராந்தியத்தில், விமானிகளின் பிழையின் காரணமாக விழுந்தது நொறுங்கியதில், மொத்தமாக 11 பேர்கள் (பயணித்த அனைவரும்) பலியானார்கள்.[22]
1936
தொகு- சனவரி 14-- அமெரிக்கன் எயர்லைன்ஸ் வானூர்தி 1 (1936) (American Airlines Flight 1 (1936) இது ஒரு வானூர்தி விபத்தின் சம்பவமாகும். அமெரிக்காவின் லிட்டில் ராக் மாநகரத்திற்கு அருகே சதுப்பு நிலத்தில் 1936, சனவரி 14-ல் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மூன்று சேவைப் பணியாளர்கள் உட்பட 17 பேர்கள் (பயணித்த அனைவரும்) கொல்லப்பட்டனர்.[23]
- ஏப்ரல் 7-- டி டபிள்யூ ஏ வானூர்தி 1 (Transcontinental and Western Airways Flight 1 (TWA 1)) என்றறிந்த இது, ஒரு வானூர்தி விபத்தின் நிகழ்வு. இது, 1936, ஏப்ரல்-7-ல், சுமார் காலை 10:20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 12 பேர்கள் கொல்லப்பட்டனர்.[24]
- சூன் 16-- வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து (Havørn Accident) (நோர்வே மொழி:Havørn-ulykken) இது, 1936, சூன் 16-ல், "ஜங்கர்ஸ் ஜு 52" வானூர்தி, ஒரு மூடுபனி மலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த வானூர்தி விபத்தில், சேவைப் பணியாளர்கள் நால்வரும், பயணிகள் மூவரும், மொத்தமாக 7 பேர்கள் (பயணித்த அனைவரும்) பலியாயினர்.[25]
- ஆகத்து 5-- சிகாகோ மற்றும் தென்னக வானூர்தி 4 (Chicago and Southern Flight 4) 1936, ஆகத்து 5-இல், "லாக்கீட் மாடல் 10 எலெக்ட்ரா" வகை வானூர்தி ஒன்று, ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி ஆற்றின் அருகே விழுந்து நொறுங்கிய வானூர்தி விபத்தில், 8 பேர்கள் (பயணித்த அனைவரும்) பலியாயினர்.[26]
- டிசம்பர் 9-- 1936 கேஎல்எம் கிராய்டன் விபத்து (1936 KLM Croydon accident) எனும் இது, 1936, டிசம்பர் 9-இல், கேஎல்எம் வானூர்தி நிறுவனத்தின் "டக்ளஸ் டிசி 2-115ஈ" (Douglas DC-2-115E) வகை "லிஜ்ச்ட்டர்" (Lijster (Turdidae) எனும் வானூர்தி விபத்தில், பணியாளர்கள் மூவரும், பயணிகள் 12 பேர்களும் கொல்லப்பட்டு, இருவர்கள் காயங்களுடன் உயிர்தப்பினார்கள்.[27]
- டிசம்பர் 27-- யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணம் 34 (United Airlines Trip 34) எனும் இது, 1936, டிசம்பர் 27-இல், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்த "போயிங் 247டி" (Boeing 247D) வகை வானூர்தி, லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் விபத்துக்குள்ளானதில், 12 பேர்கள் (பயணித்த அனைவரும்) கொல்லப்பட்டனர்.[28]
1937
தொகு- சனவரி 12-- மேற்கத்திய எயார் எக்சுபிரசு வானூர்தி 7 (Western Air Express Flight 7) இது, 1937, சனவரி 12-இல் நிகழ்ந்த இவ்விபத்தில், வானூர்தி சேவைப் பணியாளர் ஒருவரும், பயணிகளில் நால்வரும் மாண்டுபோக, குழுவில் இருவரும், பயணிகள் 6 பேரும் காயங்களுடன் மீண்டனர். மேலும், இந்நிகழ்வில் சர்வதேசப் புகழ்பெற்ற "மார்ட்டின் அண்டு ஓசா ஜான்சன்" என்பவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.[29]
- பிப்ரவரி 19-- 1937 ஆத்திரேலிய ஏர்லைன்சு சடின்சன் விபத்து (1937 Airlines of Australia Stinson crash) இது, 1937, பிப்ரவரி 19-இல், ஆத்திரேலிய ஏர்லைன்சுக்கு சொந்தமான "ஸ்டின்சன் மாடல் ஏ" (Stinson Model A) வகையைச் சார்ந்த, வானூர்தி விபத்தில், 2 விமானிகளும், 3 பயணிகளும் கொல்லப்பட்டனர்.[30]
- மே 6-- இன்டன்பர்க் பேரிடர் (Hindenburg disaster) எனும் இது, 1937, மே 6 இல் நடந்த ஒரு வான்கப்பல் விபத்தாகும். அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்திலுள்ள மான்செசுடர்நகரியம் பகுதியில் நடந்த இவ்விபத்தில், 13 பயணிகளும், 22 பயணச் சேவைப் பணியாளர்களும், மற்றும் தரையில் ஒரு சேவைப் பணியாளரும் மொத்தம் 36 பேர்கள் கொல்லப்பட்டு, எஞ்சிய 62 பேர்கள் காயங்களோடு உயிர்தப்பினார்கள்.[31]
- நவம்பர் 16-- சபேனா ஜங்கர்சு யூ 52 விபத்து இது, 1937, நவம்பர் 16 இல் பெல்ஜியம், ஆஸ்டெண்ட் நகரத்தின் அருகே நடந்த வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், 7 பயணிகளும், 4 பயணச் சேவைப் பணியாளர்களும், மொத்தம் 11 பேர்கள் (அனைவரும்) கொலையுண்டனர்.[32]
1938
தொகு- சனவரி 10-- வடமேற்கு ஏர்லைன்சு வானூர்தி 2 (Northwest Airlines Flight 2), 1938, சனவரி 10 இல் அமெரிக்காவின், கல்லடின் கவுண்டி, மொன்டானா பகுதியில் நடந்த வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், 8 பயணிகளும், 2 பயணச் சேவைப் பணியாளர்களும், மொத்தம் 10 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[33]
- சனவரி 11-- சமோவன் கிளிப்பர் (Samoan Clipper), 1938, சனவரி 11 இல் அமெரிக்க சமோவா, தலைநகர் பாகோ பாகோ பகுதியில் நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், பயணிகள் அல்லாத 7 பயணச் சேவைப் பணியாளர்களும், (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[34]
- மார்ச்சு 1-- 1938 யோசெமிட்டி டி.டிபிள்யூ.ஏ பொறிவு (1938 Yosemite TWA crash), 1938, மார்ச்சு 1 இல் வெவோனா, கலிபோர்னியா, மாடெரா "யோசெமிட்டி தேசிய பூங்கா" அருகே நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், 6 பயணிகள், மற்றும் 3 பணியாளர்களும், (அனைவரும்) பலியாகினர்.[35]
- சூலை 28-- ஹவாய் கிளிப்பர் (Hawaii Clipper), 1938, சூலை 28 இல், மேற்கத்திய அமைதிப் பெருங்கடலில், காணாமற்போன வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், 6 பயணிகள், மற்றும் 9 சேவைப் பணியாளர்களும், (அனைவரும்) பலியாகினர்.[36]
- அக்டோபர் 25-- ஆத்திரேலியத் தேசிய ஏயர்வேசின் டக்ளஸ் டிசி 2 விபத்து அல்லது 1938 கயீமா பொறிவு (1938 Kyeema crash), 1938, அக்டோபர் 25 இல், ஆத்திரேலியாவின், விக்டோரியாவிலுள்ள "தண்டேனாங் மலைப்பகுதியில் நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், 14 பயணிகள், மற்றும் 4 சேவைப் பணியாளர்களும், (அனைவரும்) கொல்லப்பட்டனர்[37]
- நவம்பர் 4-- 1938 யேர்சி வானூர்தி நிலையப் பேரழிவு (1938 Jersey Airport disaster), 1938, நவம்பர் 4 அன்று, காலை 10:50 க்கு, யேர்சியின், யேர்சி வானூர்தி தளத்தின் அருகில் நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், 12 பயணிகள், மற்றும் 1 பயணச் சேவைப் பணியாளர்களும், மற்றும் தரையில் ஒருவருமாக மொத்தம் 14 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்[38]
1939
தொகு- சனவரி 13-- வடமேற்கு ஏயர்லைன்சு வானூர்தி 1 (Northwest Airlines Flight 1), 1939, சனவரி 13 இல் "மொன்டானா, கசுடர் கவுன்டி" (Custer County, Montana), மைல்சு மாநகர வானூர்தி தளத்தின் அருகில் நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், 2 பயணிகள், மற்றும் 2 பணியாளர்களும், மொத்தம் 4 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்[39]
- சனவரி 21-- 1939 இம்பீரியல் ஏயர்வேசு மிதவை வானூர்தி நீரில் இறக்கம் (1939 Imperial Airways flying boat ditching), 1939, சனவரி 21 இல் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் மூழ்கி நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். 8 பயணிகள், மற்றும் 5 பணியாளர்களுடன் நடந்த இவ்விபத்தில், 2 பயணிகள், மற்றும் 1 பணியாளரென, 3 பேர்கள் கொல்லப்பட்டு எஞ்சிய 10 பேர்கள் காயங்களோடு உயிர்தப்பினர்.[40]
- ஆகத்து 13-- 1939 பான் அமெரிக்கன் சிக்கோர்க்சுகி எஸ்-43 பொறிவு (1939 Pan Am Sikorsky S-43 crash), 1939, ஆகத்து 13 இல், பிரேசிலின், இரியோ டி செனீரோவிலுள்ள "குவனபாரா குடா" பகுதியில் நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். 12 பயணிகள், மற்றும் 4 பணியாளர்களுடன் நடந்த இவ்விபத்தில், 10 பயணிகள், மற்றும் 4 (அனைத்து பணியாளரும்) பணியாளரென, 14 பேர்கள் கொல்லப்பட்டு எஞ்சிய 2 பயணிகள் மட்டும் உயிர்தப்பினர்.[41]
1940-கள்
தொகு1940
தொகு- சூன் 14-- கலேவா (வானூர்தி) (Kaleva (airplane);[42]
- ஆகத்து 31-- லோவேதட்ஸ்வில்லே விமான விபத்து (Lovettsville air disaster);[43]
- நவம்பர் 8-- 1940 துட்ச்சே லுப்தான்சா யூ 90 விபத்து (1940 Deutsche Lufthansa Ju 90 crash);[44]
1941
தொகு- பிப்ரவரி 26-- கிழக்கத்திய எயர்லைன்சு விமானம் 21 (Eastern Air Lines Flight 21), அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திலுள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தரையிறங்கியபோது நிகழ்ந்த "டக்ளஸ் டி சி - 3" என்ற வானூர்தி விபத்தில், சேவைப்பணியாளர்கள் உட்பட 16 பேர்களில் 8 பேர் கொல்லப்பட்டனர்.[45]
- அக்டோபர் 30-- அமெரிக்கன் எயர்லைன்சு விமானம் 1 (American Airlines Flight 1), "டக்ளஸ் டி சி - 3" எனும் வானுர்தி, கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள லாரன்ஸ் நிலையம் என்னுமிடத்தில் தரையிறக்க நிலப்பரப்பை தேடியபோது விமானம் விசையிழந்து விபத்துக்குள்ளானதில், சேவைப்பணியாளர்கள் உட்பட 20 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[46]
- அக்டோபர் 30-- வடமேற்கு எயர்லைன்சு விமானம் 5 (Northwest Airlines Flight 5); "டக்ளஸ் டி சி - 3" எனும் வானுர்தி, அமெரிக்காவின் மூர்ஹெட், மின்னசோட்டா என்னுமிடத்தில் விபத்துக்குள்ளானதில், பயணித்த (பயணிகள் 12, பணியாளர்கள் 3) 15 பேர்களில் ஒரு விமானி தவிர்த்து 14 பேர்கள் கொல்லப்பட்டனர்.[47]
1942
தொகு- சனவரி 16-- டி டபிள்யூ ஏ விமானம் 3 (TWA Flight 3); "டக்ளஸ் டி சி - 3" எனும் வானுர்தி, அமெரிக்காவின் தென்மேற்கிலுள்ள, லாஸ் வேகஸ் மாநிலத்தின், நெவாடாவின் தென்மேற்கில் 30 மைல் (48 கிமீ) தொலைவில் உள்ள பொடோசி மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதில், சேவைப்பணியாளர்கள் 3 பேர்கள் உட்பட 22 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[48]
- சனவரி 30-- குவாண்டாசு சோர்ட் எம்பயர் ஜி-ஏ இ யூ எச் சுட்டு வீழ்வு (Qantas Short Empire G-AEUH is shot down); ஏழு ஜப்பானிய போராளிகள் கிழக்குத் திமோரிலிருந்து சுட்டு வீழ்த்திய இந்த விபத்தில் 18 இல் 13 பேர்கள் கொல்லப்பட்டனர்.[49]
- மார்ச்சு 3-- கே என் ஐ எல் எம் டக்ளஸ் டி சி - 3 பி கே - ஏ எப் வி (KNILM Douglas DC-3 PK-AFV); மேற்கு ஆஸ்திரேலியா, புரூமி என்ற நகரிலிருந்து வடக்கில் 50 கிமீ (80 கி.மீ) தொலைவில் மூன்று யப்பானிய போராளிகள் சுட்டு வீழ்த்திய இந்த விமான விபத்தில், விமான குழுவினர் உள்ளிட்ட 12 பேரில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.[50]
- அக்டோபர் 23 அமெரிக்கன் எயர்லைன்சு விமானம் 28 (American Airlines Flight 28); "டக்ளஸ் டி சி - 3" எனும் வானுர்தி, அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பாம் ஸ்பிரிங்ஸ் (Palm Springs) பகுதியருகே தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானதில், சேவைப்பணியாளர்கள் உட்பட 12 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[51]
1943
தொகு- சனவரி 21-- பான் ஆம் விமானம் 1104 (Pan Am Flight 1104); மார்ட்டின் எம் - 130 (புனைபெயர்: பிலிப்பைன் கிளிப்பர்) எனும் ஒரு வானுர்தி, அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பூன்வில் ( Boonville), என்ற இடத்தில் ஒரு மலையில் மோதி விபத்துக்குள்ளானதில், சேவைப்பணியாளர்கள் உட்பட 19 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[52]
- சூன் 1-- பி ஓ ஏ சி விமானம் 777 (BOAC Flight 777); என்பது பிஸ்கே விரிகுடா பகுதியில் லூப்டுவாபே வான்படை போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு விபத்துக்குள்ளானதில், சேவைப்பணியாளர்கள் நான்கு பேர்கள் உட்பட 17 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[53]
- சூலை 28-- அமெரிக்கன் எயர்லைன்சு விமானம் 63 (தலைமை ஒகியோ) (American Airlines Flight 63 (Flagship Ohio); "டக்ளஸ் டி சி - 3" எனும் வானுர்தி, அமெரிக்காவின், கென்டக்கி மாநிலத்திலுள்ள "டிராம்மல்" அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், சேவைப்பணியாளர்கள் உட்பட 22 இல், 20 பேர்கள் கொல்லப்பட்டனர்.[54]
- அக்டோபர் 15-- அமெரிக்கன் எயர்லைன்சு விமானம் 63 (தலைமை மிசெளரி) (American Airlines Flight 63 Flagship Missouri); "டி சி - 3" எனும் வானுர்தி, அமெரிக்காவின், டென்னிசி மாநிலத்திலுள்ள சென்டர்வில் (Centerville) எனும் நகரத்தினருகே விபத்துக்குள்ளானதில், 3 சேவைப்பணியாளர்கள் உட்பட 11 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[55]
1944
தொகு- பிப்ரவரி 10-- அமெரிக்கன் எயர்லைன்சு விமானம் 2 (American Airlines Flight 2); டக்ளஸ் டி சி - 3 எனும் வானுர்தி, அமெரிக்காவின், ஆர்கன்சா, மற்றும் டென்னிசி மாநிலங்களின் இடையில் ஓடும் மிசிசிப்பி ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், 3 சேவைப்பணியாளர்கள் உட்பட 24 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[56]
- சூன் 20-- டீ டபிள்யூ ஏ விமானம் 277 (TWA Flight 277); "டக்ளஸ் டி சி - 54 ஸ்கைமாஸ்டர் (Douglas C-54 Skymaster)" எனும் வானுர்தி, கடுமையான வானிலை காரணமாக அமெரிக்காவின், மேய்ன் மாநிலத்திலுள்ள "போர்ட் மவுண்டன்" (Fort Mountain) எனும் கோட்டை மலையில் மோதி விபத்துக்குள்ளானதில், 1 சேவைப்பணியாளர் உட்பட 8 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[57]
சான்றாதாரங்கள்
தொகு- ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "ASN Wikibase Occurrence # 26557". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "ASN Wikibase Occurrence # 34302". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Goliath (F-AECB) crash, East Malling, August 1923". sussexhistoryforum.co.uk (ஆங்கிலம்). May 16, 2012, 17:04:50 PM. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "ASN Wikibase Occurrence # 18700". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
- ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
- ↑ "Aviation History 1926". www.flightglobal.com (ஆங்கிலம்). 2010. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
- ↑ "22 augustus 1927". www.aviacrash.nl (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
- ↑ "ASN Wikibase Occurrence # 25278". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "ASN Wikibase Occurrence # 27581". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
- ↑ "TWA Flight 599". www.findagrave.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
- ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-04.
- ↑ "OCTOBER 10, 1933 (TUESDAY)". www.worldlibrary.org (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ASN Wikibase Occurrence # 27000". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.
- ↑ "ASN Wikibase Occurrence # 34163". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-19.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-23.
- ↑ "ASN Wikibase Occurrence # 18727". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-25.
- ↑ "System Timetable" (PDF). timetable.continental.com (ஆங்கிலம்) - July 21, 2012. Archived from the original (PDF) on 2016-12-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-28.
- ↑ "Airline/Operator "Sa - Si"". www.planecrashinfo.com (ஆங்கிலம்) - Richard Kebabjian. பார்க்கப்பட்ட நாள் 2016-08-29.
- ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-30.
- ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-30.
- ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-01.
- ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com - Richard Kebabjian. பார்க்கப்பட்ட நாள் 2016-09-07.
- ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com - Richard Kebabjian. பார்க்கப்பட்ட நாள் 2016-09-08.
- ↑ "The Info List - United Airlines Trip 34". www.theinfolist.com. (c) 2014 -2015. பார்க்கப்பட்ட நாள் 2016-09-08.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "12 January 1937". www.thisdayinaviation.com - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-10.
- ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-12.
- ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-15.
- ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-19.
- ↑ "Accident description". aviation-safety.net - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
- ↑ "Accident description". aviation-safety.net - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
- ↑ "Accident description". aviation-safety.net - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
- ↑ "The Hawaii Clipper Disappearance". www.historicmysteries.com - 2009-2016. Archived from the original on 2016-09-23. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
- ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-25.
- ↑ "Accident description". aviation-safety.net - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
- ↑ "Accident description". aviation-safety.net - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
- ↑ "Accident description". aviation-safety.net - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
- ↑ "Accident description". aviation-safety.net - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
- ↑ "Kaleva (Airplane)". pages.rediff.com - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-28.
- ↑ "Accident description". aviation-safety.net - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-28.
- ↑ [aviation-safety.net/database/record.php?id=19401108-0 "Accident description"]. aviation-safety.net - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-28.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "Accident description". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-21.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-22.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-24.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-26.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-03.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-05.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-09.
- ↑ "Accident description - database". aviation-safety.net - 1996-2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-09.