ஏ. பி. டி. வில்லியர்ஸ்

ஏபிரகாம் பென்சமின் - டி - வில்லியர்ஸ் (Abraham Benjamin de Villiers, பிறப்பு: பெப்ரவரி 17 1984), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர் மற்றும் மட்டையாளர் ஆவார். இவர் டைடன்ஸ் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளார்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1][2] இவர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ஓட்டங்கள் அடித்த தென்னாப்பிரிக்கா வீரர் எனும் சாதனையையும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ஓட்டங்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஏ. பி. டி. வில்லியர்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஏபிரகாம் பென்சமின் - டி - வில்லியர்ஸ்
பட்டப்பெயர்ஏ பி, எபாஸ்
உயரம்1.78 m (5 அடி 10 அங்)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குதுடுப்பாட்டம், குச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 296)திசம்பர் 17 2004 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுசனவரி 22 2016 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 78)பிப்ரவரி 2 2005 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபமார்ச் 20 2016 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்17
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 114 228 141 263
ஓட்டங்கள் 8765 9,577 10,689 11,123
மட்டையாட்ட சராசரி 50.66 53.53 49.71 49.20
100கள்/50கள் 22/46 25/53 25/60 29/63
அதியுயர் ஓட்டம் 278* 176 278* 176
வீசிய பந்துகள் 204 192 234 192
வீழ்த்தல்கள் 2 7 2 7
பந்துவீச்சு சராசரி 52.00 28.85 69.00 28.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/49 2/15 2/49 2/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
222/5 176/5 275/6 203/5
மூலம்: Cricinfo, மார்ச் 20 2018

இவர் மட்டையாளராகவும், குச்சக் காப்பாளராகவும் துவக்கத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். பின் இவர் முதன்மையான மட்டையாளராகவே அறியப்படுகிறார். மத்திய வரிசையில் இறங்கும் இவர் பல திசைகளிலும் அடித்து விளையாடும் வல்லமை படைத்தவர். நவீன காலத் துடுப்பாட்டப் போட்டிகளில் புதுமையான மட்டையாளர் என அறியப்படுகிறார். மேலும் குச்சக் காப்பாளர் மற்றும் அருகில் இருக்கும் களத் தடுப்பாளர்களிடத்திலும் இவர் அடிக்கும் சில வித்தியாசமான முறைகளால் இவர் மிஸ்டர் 360 எனும் புனைபெயரால் அழைக்கப்படுகிறார். 2004 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகம் ஆனார். 2005 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகம் ஆனார். 2006 ஆம் ஆண்டில் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இவர் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டின் கணக்கின்படி தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 8000 ஒட்டங்கள் எடுத்துள்ளார். அவரின் துடுப்பாட்ட சராசரி இரு வடிவங்களிலும் 50 ற்கும் அதிகமாக உள்ளது.

தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் இவர் தலைவராக இருந்துள்ளார். ஆனால் இவருக்கு ஏற்பட்ட காயத்தினால் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தலைவர் பொறுப்பிலிருந்து இவர் விலகினார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் தலைவராக நீடித்து வருகிறார். பின் 2017 ஐசிசி வாகையாளர் கோப்பை மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடர் ஆகியவற்றின் தோல்விகளால் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி தலைமைப் பொறுப்பிலிருந்தும் விலகினார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஏபிரகாம் பென்சமின் - டி - வில்லியர்ஸ் பெப்ரவரி 17 1984 இல் தென்னாப்பிரிக்காவில் உள்ள பெலா பெலாவில் பிறந்தார்.[4] இவர் பிரெடொரியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இதே பள்ளியில் தான் தற்போது தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் பிரான்சுவா டு பிளெசீ படித்தார். இவர்கள் இருவரும் பள்ளித் தோழர்கள் ஆவர். இவரின் விடுமுறை நாட்களில் தனது பிறந்த ஊருக்குச் செல்வார். இவரின் தந்தை மருத்துவர் ஆவார். இவரின் தந்தை இளம்வயதில் ரக்பி கால்பந்து விளையாட்டில் விளையாடினார். எனவே தனது மகனையும் விளையாட்டில் ஈடுபடச் செய்தார். இவரின் ஆரம்பகாலங்களில் துடுப்பாட்டம் விளையாடினார். செப்டம்பர், 2016 இல் இவரின் சுயசரிதை வெளியானது. துடுப்பாட்டத்தினைத் தவிர்த்து குழிப்பந்தாட்டம், ரக்பி கால்பந்து, டென்னிசு ஆகிய விளையாட்டுக்களை தனது இளம்வயதில் விளையாடினார்.[5] சில சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.[6]

ஏ பி டி வில்லியர்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் வெற்றிகரமான மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இந்தத் தொடரின் நான்காவது பருவத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இவரை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலம் எடுத்தது. அதற்கு முந்தைய பருவத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இவர் விளையாடினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார்.இவரின் தீவிர ரசிகர் பலவேசம் ஆவார்.

சான்றுகள்

தொகு
  1. https://www.thenational.ae/sport/ab-de-villiers-deserves-to-be-regarded-as-an-all-time-cricket-great-1.114647
  2. https://www.sportskeeda.com/cricket/ab-de-villiers-best-batsman-cricket-history
  3. "De Villiers steps down as ODI captain, available for Tests". Cricinfo.
  4. Miller, Andrew (16 December 2004). "Great, green and greased lightning". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 June 2016.
  5. Miller, Andrew (12 January 2005). "The bigger the pressure, the more I relax". பார்க்கப்பட்ட நாள் 8 June 2016.
  6. "AB de Villiers Biography". 7infi.com.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பி._டி._வில்லியர்ஸ்&oldid=3684607" இலிருந்து மீள்விக்கப்பட்டது