ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை

ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை (East Coast of the United States), அட்லாண்டிக் கடற்கரை, அட்லாண்டிக் கடலோரப் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது, இது கிழக்கு அமெரிக்கா அட்லாண்டிகப் பெருங்கடலைச் சந்திக்கும் கடற்கரையை உள்ளடக்கிய பகுதியாகும். 1776இல் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய பதின்மூன்று குடியேற்றங்கள் இந்த கடற்கரையில் அமைந்திருந்தன. மேலும் இது ஐக்கிய அமெரிக்காவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை
கடற்கரை
Map of all states on East Coast
ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை. அட்லாண்டிக் பெருங்கடலின் கரையோரமாக அமைந்த அமெரிக்க மாநிலங்கள் அடர்நீலத்தில் காட்டப்பட்டுள்ளன. கடற்கரையை எல்லையாகக் கொள்ளாத பிற கிழக்குக் கடற்கரை மாநிலங்கள் வெளிர்நீலத்தில் உள்ளன.
நாடு ஐக்கிய அமெரிக்கா
முக்கிய நகரங்கள்போர்ட்லேண்டு
பாஸ்டன்
பிராவிடென்ஸ்
ஹார்ட்பர்ட்
நியூயார்க்கு நகரம்
நுவார்க்
பிலடெல்பியா
பால்ட்டிமோர்
வாசிங்டன், டி. சி.
ரிச்மண்டு
வெர்ஜீனீயா கடற்கரை
ராலீ
சார்லட்
சார்லெசுட்டன், தென் கரோலினா
அட்லான்டா
Jacksonville
ஒர்லாண்டோ
டாம்ப்பா
மயாமி
மிகப்பெரிய நகரம்நியூயார்க்கு நகரம்
மிகப்பெரிய பெருநகரப் பகுதிநியூயார்க் பெருநகரப் பகுதி
மக்கள்தொகை (2017 estimate)
 • மொத்தம்118,042,627[1]
நேர வலயம்Eastern (ஒசநே−05:00)
 • கோடை (பசேநே)EDT (ஒசநே−04:00)

இப்பகுதி பொதுவாக அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லையில் உள்ள அமெரிக்க மாநிலங்களை உள்ளடக்கியதாகக் கொள்ளப்படுகிறது. கனெடிகட், டெலவெயர், புளோரிடா, ஜோர்ஜியா, மேய்ன், மேரிலாந்து, மாசச்சூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூயார்க், வட கரோலினா, றோட் தீவு, தென் கரோலினா, வர்ஜீனியா ஆகிய மாநிலங்கள், அத்துடன் கூட்டாட்சித் தலைநகரமான வாஷிங்டன், டி. சி., மற்றும் கடற்கரை அல்லாத மாநிலங்களான பென்சில்வேனியா, வெர்மான்ட் , மேற்கு வர்ஜீனியா ஆகியவற்றை உள்ளாடக்கியுள்ளது.[2]

இடப்பெயர்ச்சி மற்றும் கலவை தொகு

அமேரிக்காவின் கிழக்குக் கடற்கரையை அட்லாண்டிக் கடற்கரை என்றும் அழைப்பர். அட்லாண்டிக் கடற்கரை, அட்லாண்டிக் சமுத்திரத்தில் இருப்பதால் காரணப் பெயரக உள்ளது.[3]

அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய கடற்கரையைக் கொண்ட 14 மாநிலங்கள் (வடக்கிலிருந்து தெற்கு வரைஃ மைனே, நியூ ஹாம்ப்ஷயர், மாசசூசெட்ஸ், ரோட் தீவு, கனெக்டிகட், நியூயார்க், நியூ ஜெர்சி, டெலாவேர், மேரிலாந்து, வர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா. பென்சில்வேனியா மற்றும் வாஷிங்டன், டி. சி. முறையே டெலாவேர் நதி மற்றும் போடோமாக் ஆற்றின் எல்லையாக உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "East Coast States 2020". Archived from the original on April 12, 2020. பார்க்கப்பட்ட நாள் April 12, 2020.
  2. East Coast Region Energy Sector Risk Profile (PDF), US Department of Energy Office of Electricity Delivery & Energy Reliability, பார்க்கப்பட்ட நாள் 2023-06-07
  3. "Seaboard". Collins Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.