ஐசிசி ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்
ஐசிசி ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர் (ICC Test Player of the Year) என்பது 2004 ஆம் ஆண்டில் இருந்து அந்தந்த ஆண்டுகளில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும்.இதனை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை வழங்குகிறது. இந்த விருதானது ஆண்டுதோறும் வழங்கப்படும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் விருதுகளில் ஒன்றாகும்.[1]
ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான ஐசிசி விருது | |
---|---|
விளக்கம் | ஆண்டுதோறும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு வழங்கப்படுவது |
வழங்குபவர் | ஐசிசி |
முதலில் வழங்கப்பட்டது | ராகுல் திராவிட் (2004) |
கடைசியாக வழங்கப்பட்டது | ஸ்டீவ் சிமித் (2017) |
இணையதளம் | https://www.icc-cricket.com/awards |
தேர்வு
தொகுஇந்த விருதானது 56 நபர்கள் கொண்ட அவையின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டில் இதில் 50 நபர்கள் இருந்தனர். இந்த அவையில் தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடும் நாடுகளின் அணியின் தலைவர்கள் 10 பேர், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழுவில் உள்ள 18 பேர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் செய்தியாளர்கள் 28 பேர் உள்ளனர். இந்தக் குழுவின் முடிவில் சம நிலை ஏற்பட்டால் விருது பகிந்தளிக்கப்படும்.
விருது பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றியாளர் | பரிந்துரைக்கப்பட்ட ஏனையோர் |
---|---|---|
2004 | ராகுல் திராவிட் | |
2005 | ஜாக் கலிஸ் |
இன்சமாம் உல் ஹக் |
2006 | ரிக்கி பாண்டிங் | |
2007 | முகம்மது யூசுப் |
ரிக்கி பாண்டிங் |
2008 | டேல் ஸ்டெய்ன் | |
2009 | கவுதம் கம்பீர் | |
2010 | வீரேந்தர் சேவாக் | |
2011 | அலஸ்டைர் குக் | |
2012 | குமார் சங்கக்கார | |
2013 | மைக்கல் கிளார்க் | |
2014 | மிட்செல் ஜோன்சன் | |
2015 | ஸ்டீவ் சிமித் | |
2016 | ரவிச்சந்திரன் அசுவின் | |
2017 | ஸ்டீவ் சிமித் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Live Cricket Scores & News International Cricket Council", www.icc-cricket.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-02