ஒராங் கோலா மக்கள்

மலேசியப் பழங்குடியினர்

கோலா மக்கள் அல்லது ஒராங் கோலா மக்கள் (ஆங்கிலம்: Orang Kuala People அல்லது Duano' People; மலாய்: Orang Kuala அல்லது Desin Dolak) என்பவர்கள் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும். அத்துடன் தீபகற்ப மலேசியாவின் 18 மலேசியப் பழங்குடியினர் குழுக்களில் ஒரு பிரிவினர் ஆகும்.[5]

ஒராங் கோலா மக்கள்
Orang Kuala People / Duano' People
Orang Kuala / Desin Dolak
Desin Duano' / Desin Dolak
ஒராங் கோலா மக்கள்; கிள்ளான்; சிலாங்கூர் (1906)
மொத்த மக்கள்தொகை
19,000 (2006)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மலாக்கா நீரிணை:
 இந்தோனேசியா17,500[2]
          ஜம்பி331[3]
          ரியாவு?
          இரியாவு தீவுகள்?
 மலேசியா (ஜொகூர்)3,761 (2010)[4]
மொழி(கள்)
துவானோ மொழி, இந்தோனேசிய மொழி, மலாய் மொழி
சமயங்கள்
இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஒராங் லாவுட் மக்கள், ஒராங் செலாத்தார் மக்கள், மோக்கேன் மக்கள், ஊராக் லாவோய் மக்கள், மலாய் மக்கள்

இவர்கள் ஒராங் அஸ்லியின் 3 முக்கிய குழுக்களில் ஒன்றான புரோட்டோ மலாய் (Proto-Malay) எனும் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தப் பழங்குடியினரின் வாழுமிடம் காரணமாக இவர்கள் ஒராங் கோலா என்று அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஆறுகளின் முகத்துவாரங்கள்; மற்றும் கடற்கரைகளில் வாழ்ந்ததால் இவர்களுக்கு அந்தப் பெயர் கிடைக்கப் பெற்றது.[6]

இருப்பினும், கோலா மக்கள் தங்களைத் 'தெசின் துவானோ' (Desin Duano) என்று அழைத்துக் கொள்கிறார்கள். கோலா மக்களின் முகபாவங்களும், நடத்தைகளும்; அண்டை நாடுகளில் பல தலைமுறைகளாக வாழும் மலாய்க்காரர்களைப் போலவே இருக்கின்றன.[7]

பொது

தொகு

ஒராங் கோலா மக்கள்தொகையை மதிப்பிடுவது சற்றுக் கடினம் என அறியப்படுகிறது. நன்கு வளர்ச்சி பெற்ற பகுதிகளில் வாழ்ந்தாலும், வெளியாட்களுடன் எளிதில் தொடர்பு கொண்டாலும், ஒராங் கோலா மக்கள் வெளி உலகிற்கு அதிகமாகத் தெரியவில்லை. அவர்களின் குடியிருப்புகள் மலாக்கா நீரிணையின் கரையோரங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன; தனிப்பட்ட குடியிருப்புகளில் உள்ளூர் குழுக்களாய்ப் பிரிந்து இருக்கின்றன.[8][3]

2000-ஆம் ஆண்டில், ஒராங் கோலா இனக்குழு சுமார் 2,000 மக்களைக் கொண்டிருந்தது. இந்த இனத்தவர் துவானோ எனப்படும் பகுதி-மலாய் மொழியைப் பேசுகிறார்கள். அந்த மொழியும் தற்போது அழியும் நிலையில் உள்ளது.[9]

வரலாறு

தொகு

ஒராங் கோலா மக்கள் இந்தோனேசியாவின் சுமத்திராவில் உள்ள இரியாவு மாநிலத்தில் உள்ள பெங்காலிஸ் தீவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. ஒரு காலத்தில், அவர்கள் நீண்ட படகுகளில்; கடல், தீவுகள், கடற்கரைகள் மற்றும் ஆற்றுப் படுகைகளின் மேற்பரப்பில் நாடோடிகளாக வாழ்ந்த ஒராங் லாவுட் மக்களில் ஒரு பகுதியாக இருந்தனர்.

இருப்பினும், தற்போது அவர்கள் தீபகற்ப மலேசியாவின் நிலப்பரப்பில் வாழ்கின்றனர் மற்றும் அவர்கள் சொந்தமாகக் கிராமப் பகுதிகளையும் கொண்டுள்ளனர். ஒராங் கோலா மக்கள், ஒராங் லாவுட் மக்களின் ஒரு பகுதியாக இருந்தாலும், தற்போது மலேசிய அரசாங்கம் அவர்களை ஒராங் அஸ்லி பழங்குடியின மக்களின் ஒரு பகுதியாக வகைப்படுத்தியுள்ளது.

குடியிருப்புகள்

தொகு

தீபகற்ப மலேசியாவில், ஒராங் கோலா மக்களின் குடியேற்றப் பகுதி ஜொகூர் மாநிலத்தில் பத்து பகாட் மாவட்டத்தின் கோலா ரெங்கிட் (Kuala Rengit), கோலா செங்காராங் (Kuala Senggarang) மற்றும் தஞ்சோங் செஜெந்திங் (Tanjung Segenting) கிராமப்பகுதிகள்; மற்றும் பொந்தியான் மாவட்டத்தில் கோலா பெனுட் (Kuala Benut), கோலா சுங்கை பொந்தியான் (Kuala Sungai Pontian) மற்றும் குக்குப் (Kukup) கிராமப்பகுதிகளில் அமைந்துள்ளன.

ஒராங் கோலா மக்களின் வாழ்வாதார பொருளாதார நடவடிக்கைகளில் முக்கியமானது மீன்பிடித்தல் ஆகும். இருப்பினும், அவர்களில் சிலர் வணிகம், விவசாயம் மற்றும் பிற தொழில் துறைகளில் வெற்றி பெற்றவர்களாகவும் உள்ளனர்.[10][11]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Duano". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 2015-01-08.
  2. "Duano in Indonesia". Joshua Project. பார்க்கப்பட்ட நாள் 2015-01-08.
  3. 3.0 3.1 Bangun Santoso (25 May 2016). "Tradisi Unik Suku Duano di Tepi Sungai Jambi". Liputan 6. பார்க்கப்பட்ட நாள் 2018-03-24.
  4. Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
  5. Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-386-1550-1.
  6. Dr David Edward Sopher (1965). The Sea Nomads: A Study of the Maritime Boat People of Southeast Asia. National Museum Singapore.{{cite book}}: CS1 maint: numeric names: authors list (link)
  7. Christopher Moseley (2008). Encyclopedia of the World's Endangered Languages. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-1357-9640-2.
  8. Christian Pelras (1972). "Notes sur quelques populations aquatiques de l 'Archipel nusantarien". Archipel (Archipel, Volume 3) 3: 133–168. doi:10.3406/arch.1972.992. http://www.persee.fr/doc/arch_0044-8613_1972_num_3_1_992. பார்த்த நாள்: 2015-01-08. 
  9. "Malay". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 2017-10-10.
  10. Mustaffa Omar & Nor Hafizah Mohd Fizer (2015). "Kelestarian Hidup Ekonomi Komuniti Orang Kanaq Dan Orang Kuala, Johor: Suatu Penelitian Dari Aspek Penguasaan Ke Atas Modal Kewangan". Universiti Kebangsaan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2017-10-18.
  11. Diandara Oryza (2018). Duano's Local Wisdom in Preserving Marine Ecosystem at Jambi Coastal Area. p. 4. 

சான்று நூல்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒராங்_கோலா_மக்கள்&oldid=4091427" இலிருந்து மீள்விக்கப்பட்டது