ஒராங் லாவுட் மக்கள்

தென்கிழக்கு ஆசிய இனக்குழு

லாவுட் மக்கள் அல்லது ஒராங் லாவுட் மக்கள் (ஆங்கிலம்: Orang Laut People; اورڠ لاءوت; மலாய்: Orang Laut) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும். தீபகற்ப மலேசியாவின் 18 மலேசியப் பழங்குடியினர் குழுக்களில் ஒரு பிரிவினர் ஆகும்.[1]

ஒராங் லாவுட் மக்கள்
Orang Laut People
Orang Laut
اورڠ لا
وت
சிங்கப்பூர் ஒராங் லாவுட் குடும்பம் (2011)
மொத்த மக்கள்தொகை
420,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மலாய் தீபகற்பம்:
 மலேசியா
இரியாவு தீவுகள்:
 இந்தோனேசியா
 சிங்கப்பூர்
மொழி(கள்)
லொஞ்சோங் மொழி
ஒராங் செலாத்தார் மொழி
மலாய் மொழி (மலேசிய மொழி, இந்தோனேசிய மொழி)
சமயங்கள்
ஆன்மவாதம், நாட்டுப்புற மதம், இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஒராங் கோலா மக்கள், ஒராங் செலாத்தார் மக்கள், பஜாவு மக்கள், மோக்கேன் மக்கள், ஊராக் லாவோய் மக்கள், மலாய் மக்கள்

இவர்கள் சிங்கப்பூர், தீபகற்ப மலேசியா, இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகளைச் (Riau Archipelago) சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் ஆவார்கள்.

21-ஆம் நூற்றாண்டில் ஒராங் லாவுட் பழங்குடியினரின் மக்கள் தொகை 420,000 பேர் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

சொற்பிறப்பியல்

தொகு

ஓராங் லாவுட் என்பது மலாய் மொழிச் சொற்கள் ஆகும். 'கடல் மக்கள்' என்று பொருள்படும். ஒராங் லாவுட் மக்கள் பெரும்பாலும் கடலில், மிதவைப் படகுகளில் வாழ்கிறார்கள்; மற்றும் படகுகளிலேயே பயணம் செய்கிறார்கள்.[2]

இவர்கள் மீன்பிடித்தல் மற்றும் கடல் பொருட்களைச் சேகரித்தல் போன்றவற்றின் வ்ழி தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.[3] இவர்களுக்கான மற்றொரு பெயர் ஒராங் செலாட் (Straits People).

பொது

தொகு

இரியாவு தீவுக்கூட்டம், புலாவ் தூஜோ தீவுகள், பத்தாம் தீவுக்கூட்டம், கிழக்கு சுமத்திராவின் கடற்கரைகள் மற்றும் கடல் தீவுகள், தெற்கு மலாய் தீபகற்பம், சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள தீவுகள் மற்றும் முகத்துவாரங்களில் ஒராங் லாவுட் பழங்குடியினர் வாழ்கின்றனர்.

வரலாறு

தொகு

வரலாற்று அடிப்படையில், ஸ்ரீ விஜய பேரரசு, மலாக்கா சுல்தானகம், ஜொகூர் சுல்தானகம் ஆகிய அரசுகளில் ஒராங் லாவுட் மக்கள் மிக முக்கியமான பங்குகளை வகித்துள்ளனர்.

அந்த அரசுகளின் அருகில் இருந்த கடல் பகுதிகளில் காவல் பணி புரிந்து கடற்கொள்ளையர்களை விரட்டி அடித்தனர். வணிகர்களை அந்த அரசுகளின் துறைமுகங்களுக்கு வழி காட்டினர்; மற்றும் அந்தப் பகுதிகளின் துறைமுக ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொண்டனர்.[4]

ஒராங் லாவுட் மக்களின் உதவிகளுக்காக, அந்த அரசுகளின் ஆட்சியாளர்கள் ஒராங் லாவுட் தலைவர்களுக்கு மதிப்புமிக்க பட்டங்களையும் பரிசுகளையும் வழங்கினார்கள்.[3] ஓராங் லாவுட் பற்றி 14-ஆம் நூற்றாண்டின் சீனப் பயணி வாங் தயுவான் (Wang Dayuan) பல விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர் துமாசிக்கில் (Temasek) வசிப்பவர்களைப் பற்றி அவரின் தாயோயி சில்யூ (Daoyi Zhilüe) எனும் நூலில் விவரித்துள்ளார்.[5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-386-1550-1.
  2. Adriaan J. Barnouw (February 1946). "Cross Currents of Culture in Indonesia". The Far Eastern Quarterly (The Far Eastern Quarterly, Vol. 5, No. 2) 5 (2): 143–151. doi:10.2307/2049739. 
  3. 3.0 3.1 Barbara Watson Andaya. Report of Three Residents of Jambi about the Threat of Johorese War Vessels in the Batang Hari River, 11 September 1714. Jakarta : Arsip Nasional Republik Indonesia. 2013 https://sejarah-nusantara.anri.go.id/media/dasadefined/HartaKarunArticles/HK010/Doc_10_Eng.pdf
  4. Mary Somers Heidhues. Southeast Asia: A Concise History. London: Hudson and Thames, 2000. Page 27
  5. Paul Wheatley (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. pp. 82–83. இணையக் கணினி நூலக மைய எண் 504030596.

சான்று நூல்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒராங்_லாவுட்_மக்கள்&oldid=4092774" இலிருந்து மீள்விக்கப்பட்டது