கஜா புயல்
கஜா புயல் (Severe cyclonic storm GAJA) என்பது வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர்.[1] இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.
Severe cyclonic storm (இ.வா.து. அளவு) | |
---|---|
Category 1 (சபிர்-சிம்ப்சன் அளவு) | |
கஜா புயல் நவம்பர் 15 அன்று தென்னிந்தியாவை நெருங்குகிறது | |
தொடக்கம் | நவம்பர் 10, 2018 |
மறைவு | நவம்பர் 21, 2018 |
(Remnant low after நவம்பர் 20) | |
உயர் காற்று | 3-நிமிட நீடிப்பு: 110 கிமீ/ம (70 mph) 1-நிமிட நீடிப்பு: 140 கிமீ/ம (85 mph) |
தாழ் அமுக்கம் | 992 hPa (பார்); 29.29 inHg |
இறப்புகள் | 63 (மொத்தம்)[1] |
சேதம் | $775 மில்லியன் (2018 US$) |
பாதிப்புப் பகுதிகள் | தெற்கு வியட்நாம், மலாய் தீபகற்பம், அந்தமான் தீவுகள், இலங்கை, தென்னிந்தியா (தமிழ்நாடு, புதுச்சேரி) |
2018 வடகிழக்குப் பருவமழைக் காலம்-இன் ஒரு பகுதி |
இலங்கையால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த கஜா என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.[2]
புயல் உருவானதற்கு முந்தைய நிலை
தொகுவங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது.[3][4]
கரையைக் கடப்பதற்கு முந்தைய நிலைகள்
தொகுதேதி | புயலின் தன்மை | புயல் நிலைகொண்டிருந்த பகுதி | கரையைக் கடக்குமென கணிக்கப்பட்ட தேதி / நேரம் | கடக்குமென கணிக்கப்பட்ட கரைப்பகுதி | குறிப்புகள் | மேற்கோள்கள் |
---|---|---|---|---|---|---|
11 நவம்பர் 2018 | காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது | சென்னையிலிருந்து 930 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 980 கி.மீ. தொலைவு (கிழக்கு - தென்கிழக்குத் திசையில்) | நவம்பர் 15 அன்று முற்பகல் | ஸ்ரீஹரிக்கோட்டா - கடலூர் இடையேயான பகுதி | பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை, [5]பகல் 12.15 மணிக்கு சென்னை வானிலை நடுவ இயக்குனரின் பத்திரிகையாளர் சந்திப்பு[6] | |
12 நவம்பர் 2018 | அடுத்த 24 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் | சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 820 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) | நவம்பர் 15 அன்று முற்பகல் | சென்னை - நாகப்பட்டினம் இடையேயான பகுதி என்பதாக காலை அறிவிக்கப்பட்டது. கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என நாளின் பிற்பகுதியில் வெளியான அறிக்கை தெரிவித்தது. |
பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[7], மறுநாள் வெளியான பத்திரிகைச் செய்தி[2] | |
13 நவம்பர் 2018 | அடுத்த 24 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் | சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 830 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) | நவம்பர் 15 அன்று பிற்பகல் | கடலூர் - பாம்பன் இடையேயான பகுதி | கடந்த 24 மணி நேரத்தில் anticlockwise looping track ஏற்பட்டது | பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[8] |
14 நவம்பர் 2018 | அடுத்த 12 மணி நேர கால கட்டத்தில் கடும் புயலாக மாறும் | சென்னையிலிருந்து 520 கி.மீ. தொலைவு (கிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 620 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) | நவம்பர் 15 அன்று மாலை | கடலூர் - பாம்பன் இடையேயான பகுதி | பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[9], பத்திரிகைச் செய்தி [10] | |
15 நவம்பர் 2018 | காலை 8.30 மணியளவில் கடும் புயலாக மாறியது | சென்னையிலிருந்து 320 கி.மீ. தொலைவு (கிழக்கு-தென்கிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 300 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) | நவம்பர் 15 அன்று இரவு | கடலூர் - பாம்பன் இடையேயான பகுதியில் நாகப்பட்டினத்தை ஒட்டி | தமிழ்நாடு, பாண்டிச்சேரி கடற்கரைப் பகுதிகளுக்கு Red Message அளவிலான புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது | பகல் 12.40 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை[11] |
புயல் கரையைக் கடந்த விதம்
தொகுதேதி, நேரம் | புயலின் செயல்பாடு |
---|---|
15 நவம்பர், நள்ளிரவு 12 மணியளவில் | கடும் புயலாக தமிழ்நாட்டுக் கடற்கரையை வேதாரண்யம் பகுதியில் கடக்க ஆரம்பித்தது.[12] |
16 நவம்பர், 00.30 மணி முதல் 02.30 வரையிலான நேர அளவில் | புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது.[13] இந்தக் கண் பகுதியின் அளவுகள்: நீளம் = 20 கி. மீ, அகலம் = 26 கி. மீ [14] |
16 நவம்பர், காலை 07.00 மணிக்கு | புயல் முழுமையாக கரையைக் கடந்தது.[14] |
கரையைக் கடந்துகொண்டிருந்தபோது பதிவான அதிகபட்ச காற்றின் வேகம்:
- அதிராமப்பட்டினம் - 115 கி.மீ / மணி
- நாகப்பட்டினம் - 110 கி.மீ / மணி
- காரைக்கால் - 97 கி.மீ / மணி
கரையைக் கடந்ததற்குப் பிறகான நிலைகள்
தொகுதேதி, நேரம் | புயலின் செயல்பாடு |
---|---|
16 நவம்பர், காலை 09.00 மணிக்கு | கடும் புயல் எனும் நிலையிலிருந்து புயலாக வலுவிழந்தது.[14] |
16 நவம்பர், காலை 11.30 மணிக்கு | கரையைக் கடந்த பிறகு மேற்கு திசையில் புயலாக நகர்ந்து, பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.[13] |
16 நவம்பர், மாலை 03.00 மணிக்கு | காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தைத் தாண்டி கேரள மாநில எல்லைக்குள் சென்றது.[14] |
கேரளத்தைத் தாண்டி அரபிக் கடலுக்குள் நுழைந்த பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. மீண்டும் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.
புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்
தொகுமனித உயிரிழப்புகள்
தொகு63 பேர் உயிரிழந்தனர்.[1]
மாவட்டம் | உயிரிழந்தோர் |
---|---|
திருவாரூர் | 12 (5 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள்) |
தஞ்சாவூர் | 11 |
புதுக்கோட்டை | 9 |
நாகப்பட்டினம் | 9 |
திருச்சி | |
திண்டுக்கல் | 2[15] |
சிவகங்கை | 2[15] |
விலங்குகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
தொகு- 732 கால்நடைகள் இறந்தன.[16]
இயற்கை வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
தொகுபுயல் வீசிய மாவட்டங்களில் மொத்தமாக 1,70,474 மரங்கள் வீழ்ந்தன.[16]
மாவட்டம் | பாதிப்புகள் |
---|---|
தஞ்சாவூர் | |
திருவாரூர் | |
புதுக்கோட்டை | |
திருச்சி | |
நாகப்பட்டினம் |
மக்களின் உடைமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
தொகு- 88,000 ஹெக்டார் பரப்பளவில் நெற் பயிர்கள், வாழை, தென்னை மரங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன.[16]
- 56,942 குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. 30,404 குடிசை வீடுகள் பகுதியாக சேதமடைந்தன. 30,322 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன.[16]
கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
தொகு- மொத்தமாக 1,13,533 மின் கம்பங்கள் சேதமடைந்தன. 1,082 மின் வினியோக மின்மாற்றிகள் சேதமடைந்தன.[17]
மாவட்டம் | பாதிப்புகள் |
---|---|
தஞ்சாவூர் | 5,000 மின் கம்பங்கள் சேதமடைந்தன.[18] |
திருவாரூர் | 3,000 மின் கம்பங்கள் சேதமடைந்தன.[18] |
புதுக்கோட்டை | 9,000 மின் கம்பங்கள் சேதமடைந்தன.[18] |
திருச்சி | |
நாகப்பட்டினம் | 4,000 மின் கம்பங்கள் சேதமடைந்தன.[18] |
நிவாரணப் பணிகள்
தொகு- 2,49,083 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.[16]
- மின் வாரியத் தொழிலாளர்கள் 24,941 பேர் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.[17]
- 372 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. 1,014 நகரும் மருத்துவ முகாம்கள் செயல்பட்டன. இந்த முகாம்கள் மூலமாக 84,436 பேர் மருத்துவ உதவி பெற்றனர்.[16]
- தமிழக அரசு அறிவித்த 'முதலமைச்சர் நிவாரண நிதி'க்கு 25 நவம்பர் வரை 13.33 கோடி உரூபாய்கள் சேர்ந்திருந்தது.[19]
- கஜா புயல் இடைக்கால நிவாரணமாக, மத்திய அரசு இரண்டு கட்டமாக மொத்தம் 1,319 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.[20]
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தொகு- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 81,000 பேர் 471 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.[12]
- புயல் வீசிய மாவட்டங்களில் மின்சார வினியோகமும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.[12]
- திருச்சிக்கு வரவேண்டிய வானூர்திகள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய வானூர்திகள் இரத்து செய்யப்பட்டன, அல்லது கால தாமதமாக புறப்பட்டன. தொடர்வண்டிகள் இரத்து செய்யப்பட்டன அல்லது ஒரு குறிப்பிட்ட தடத்தில் இயக்கப்படவில்லை.[21]
- புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த 16 நவம்பர் அன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருங்காற்றும், கனமழையும் ஏற்பட்டன. இதன் காரணமாக அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகை, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.[22]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Gaja toll rises to 45; CM to chair meeting today". தி இந்து (ஆங்கிலம்). 19 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/national/tamil-nadu/gaja-toll-rises-to-45-cm-to-chair-meeting-today/article25533296.ece. பார்த்த நாள்: 19 நவம்பர் 2018.
- ↑ 2.0 2.1 "Cyclone Gaja may skip Chennai, set to strike further south". தி இந்து (ஆங்கிலம்). 13 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true. பார்த்த நாள்: 13 நவம்பர் 2018.
- ↑ "PRESS RELEASE, Dated: 10-11-2018". India Meteorological Department. 10 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181110_pr_354. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018.
- ↑ "தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை". தி இந்து (தமிழ்). 11 நவம்பர் 2018. https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018.
- ↑ "PRESS RELEASE, Dated: 11-11-2018". India Meteorological Department. 11 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181111_pr_355. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018.
- ↑ "யானை பலம் கொண்ட கஜா புயல்! மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை". புதிய தலைமுறை தொலைக்காட்சி, யூ டியூப்பில். 11 நவம்பர் 2018. https://www.youtube.com/watch?v=_Xb--8lPpVE. பார்த்த நாள்: 11 நவம்பர் 2018.
- ↑ "PRESS RELEASE, Dated: 12-11-2018". India Meteorological Department. 12 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181112_pr_356. பார்த்த நாள்: 12 நவம்பர் 2018.
- ↑ "PRESS RELEASE, Dated: 13-11-2018". India Meteorological Department. 13 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181113_pr_357. பார்த்த நாள்: 13 நவம்பர் 2018.
- ↑ "PRESS RELEASE, Dated: 14-11-2018". India Meteorological Department. 14 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181114_pr_358. பார்த்த நாள்: 14 நவம்பர் 2018.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=2145486
- ↑ "PRESS RELEASE, Dated: 15-11-2018". India Meteorological Department. 15 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181115_pr_359. பார்த்த நாள்: 15 நவம்பர் 2018.
- ↑ 12.0 12.1 12.2 "Gaja wreaks havoc in T.N.". தி இந்து (ஆங்கிலம்). 17 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/national/tamil-nadu/gaja-wreaks-havoc-in-tn/article25521755.ece?homepage=true. பார்த்த நாள்: 17 நவம்பர் 2018.
- ↑ 13.0 13.1 "PRESS RELEASE, Dated: 16-11-2018". 16 நவம்பர் 2018. http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181116_pr_361. பார்த்த நாள்: 16 நவம்பர் 2018.
- ↑ 14.0 14.1 14.2 14.3 "கஜா வந்து சென்ற கதை - முப்பரிமாணத் தொகுப்பு". புதிய தலைமுறை தொலைக்காட்சி, யூ டியூப்பில். 16 நவம்பர் 2018. https://www.youtube.com/watch?v=a-9HkRcxI20. பார்த்த நாள்: 17 நவம்பர் 2018.
- ↑ 15.0 15.1 "Four killed in southern districts". தி இந்து (ஆங்கிலம்). 17 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/national/tamil-nadu/four-killed-in-southern-districts/article25521900.ece. பார்த்த நாள்: 17 நவம்பர் 2018.
- ↑ 16.0 16.1 16.2 16.3 16.4 16.5 "Tentative report on damage sent to Centre: CM". தி இந்து (ஆங்கிலம்). 19 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tentative-report-on-damage-sent-to-centre-cm/article25533489.ece. பார்த்த நாள்: 19 நவம்பர் 2018.
- ↑ 17.0 17.1 "Rs. 15 lakh to Tangedco workers’ kin". தி இந்து (ஆங்கிலம்). 25 நவம்பர் 2018. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rs-15-lakh-to-tangedco-workers-kin/article25589577.ece. பார்த்த நாள்: 25 நவம்பர் 2018.
- ↑ 18.0 18.1 18.2 18.3 "Over 21,000 electric poles damaged". தி இந்து (ஆங்கிலம்). 17 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/national/tamil-nadu/over-21000-electric-poles-damaged/article25521882.ece. பார்த்த நாள்: 17 நவம்பர் 2018.
- ↑ "CM relief fund gets ₹13.33 crore in six days". தி இந்து (ஆங்கிலம்). 25 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/national/tamil-nadu/cm-relief-fund-gets-1333-crore-in-six-days/article25588778.ece. பார்த்த நாள்: 25 நவம்பர் 2018.
- ↑ "மகிழ்ச்சி: தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.1,146 கோடி ஒதுக்கீடு". தினமலர். http://www.dinamalar.com/news_detail.asp?id=2181167. பார்த்த நாள்: 1 January 2019.
- ↑ "Flight, train schedules go awry in storm’s wake". தி இந்து (ஆங்கிலம்). 17 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/national/tamil-nadu/flight-train-schedules-go-awry-in-storms-wake/article25521881.ece. பார்த்த நாள்: 17 நவம்பர் 2018.
- ↑ "Schools, colleges stay shut; examinations postponed". தி இந்து (ஆங்கிலம்). 17 நவம்பர் 2018. https://www.thehindu.com/news/national/tamil-nadu/schools-colleges-stay-shut-examinations-postponed/article25521831.ece. பார்த்த நாள்: 17 நவம்பர் 2018.