கதிரி வெங்கட ரெட்டி
கதிரி வெங்கட ரெட்டி (Kadiri Venkata Reddy) கே. வி. ரெட்டி எனவும் அழைக்கப்படும் (ஜூலை 1, 1912 – 15 செப்டம்பர் 1972) இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றினார். தென்னிந்தியத் திரைப்படத் துறையில் செல்வாக்கு மிக்க இயக்குனராகக் கருதப்படுகிறார்.[1][2][3] இவர் 14 முழு நீளத் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2] மேலும் மூன்று தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் வென்றார்.[4]
க. வெ. ரெட்டி | |
---|---|
பிறப்பு | கதிரி வெங்கட ரெட்டி 1 ஜூலை 1912 தாடிபத்திரி, அனந்தபூர் மாவட்டம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 16 செப்டம்பர் 1972 சென்னை, இந்தியா | (அகவை 60)
பணி | இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1940–1970 |
வாழ்க்கைத் துணை | சேசம்மா (திருமணம் 1932) |
பணிகள்
தொகுஇவரது படஙகளில் மாயாபஜார் (1957), ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் (1962), ஸ்ரீ கிருஷ்ண சத்யா (1972) போன்ற புராணத் திரைப்படங்கள் அடங்கும். மேலும், குணசுந்தரி கதா (1949), பாதாள பைரவி (1951), ஜகதேக வீருணி கதா (1961) போன்ற கற்பனைத் திரைப்படங்களும், பக்த போதனா (1942), யோகி வேமனா (1947), மற்றும் பெத்த மனுசுலு (1954), தொங்க ராமுடு (1955), பெல்லினாட்டி பிராமணலு[a] (1959) போன்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களும் அடங்கும்.[5][6]
இவரது பாதாள பைரவி 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே தென்னிந்திய திரைப்படம் ஆகும். தொங்க ராமுடு இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் பாடத்திட்டத்தில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளது.[7] மாயாபஜார் தெலுங்குத் திரைப்பட வரலாற்றின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[8][9][10] ஏப்ரல் 2013 இல் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில், சிஎன்என்-ஐபிஎன் செய்தி நிறுவனம் "எல்லா காலத்திலும் 100 சிறந்த இந்திய திரைப்படங்கள்" என்ற தனது பட்டியலில் பாதாள பைரவி மற்றும் மாயாபஜாரை சேர்த்தது.[11] பட்டியலில் உள்ள திரைப்படங்கள் இடம்பெற வேண்டிய படங்களுக்கான இணைய வாக்கெடுப்பில், மாயாபஜார் "எல்லா காலத்திலும் சிறந்த இந்திய திரைப்படம்" எனப் பொதுமக்களால் வாக்களிக்கப்பட்டது.[12]
விருதுகள்
தொகு- தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - பெத்த மனுசுலு (1955)[13]
- தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - பெல்லினாட்டி பிராமணலு (1958)[14]
- கன்னடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - சத்ய ஹரிச்சந்திரா (1966)
- பிலிம்பேர் சிறந்த இயக்குநர் விருது (தெலுங்கு) - ஸ்ரீ கிருஷ்ண சத்யா (1972)
பிரபலமான கலாச்சாரத்தில்
தொகுநடிகையர் திலகம் (2018) மற்றும் என்டிஆர்: கதாநாயகுடு (2019) ஆகிய படங்களில் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடியால் கே. வி. ரெட்டி சித்தரிக்கப்பட்டுள்ளார்.
குறிப்புகள்
தொகு- ↑ இப்படம் தமிழில் ஒரே நேரத்தில் வாழ்க்கை ஒப்பந்தம் என்ற பெயரில் சற்று வித்தியாசமான நடிகர்களுடன் தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியானது
மேற்கோள்கள்
தொகு- ↑ Nagabhiru, Subbarao (2022-07-01). "KV Reddy: తెలుగు సినిమా ఠీవి.. కేవీ రెడ్డి!" (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2022-09-29.
- ↑ 2.0 2.1 "కేవీ రెడ్డి నేటి దర్శకులందరికీ స్ఫూర్తిదాయకం" (in தெலுங்கு). 2022-07-01. பார்க்கப்பட்ட நாள் 2022-09-29.
- ↑ Kumar, Hemanth (2017-04-27). "SS Rajamouli on Baahubali 2: The Conclusion, being an atheist and his love for cinema" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.
- ↑ "Nostalgia - Pathala Bhairavi". பார்க்கப்பட்ட நாள் 2012-08-27.
- ↑ Encyclopedia of Indian Cinema. 2014-07-10.
- ↑ "Star Profiles : Colossal Visionary of films - K V Reddy". 30 June 2012. Archived from the original on 2013-01-20. பார்க்கப்பட்ட நாள் 2022-10-04.
- ↑ (2012-08-13). "Donga Ramudu was included in FTII". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2013-05-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Narasimham, M. L. (19 January 2007). "Reliving the reel and the real". பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.
- ↑ Bhattacharjee, Sumit (20 February 2010). "Colouring the colourful". பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.
- ↑ "How the Telugu classic, Mayabazar, set a trend" (in en-IN). 18 November 2021. https://www.thehindu.com/entertainment/movies/how-the-telugu-classic-mayabazar-set-a-trend/article37559807.ece.
- ↑ "100 Years of Indian Cinema: The 100 greatest Indian films of all time". 7 April 2013. Archived from the original on 12 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "'Mayabazar' is India's greatest film ever: IBNLive poll". 12 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
- ↑ "2nd National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 23 August 2011.
- ↑ "6th National Film Awards". International Film Festival of India. Archived from the original on 20 October 2012. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011.
உசாத்துணை
தொகு- Pulagam Chinnarayana (2019), Mayabazar Madhura Smruthulu, Chennai: Vijaya Publications
- D. V. Narasaraju (2004), Tera Venuka Kathalu, Hyderabad: Creative Links, பார்க்கப்பட்ட நாள் 30 September 2022
- U. Vinayaka Rao (2012), Telugu Cine Rangam - Pouranika Chitralu, Hyderabad: Telugu Academy, பார்க்கப்பட்ட நாள் 6 October 2022