கல்கத்தா புத்தக கண்காட்சி

வார்ப்புரு:Infobox convention

கல்கத்தா சர்வதேச புத்தகக் கண்காட்சி, ஆண்டு தோறும் கல்கத்தாவில் நடைபெறுகின்றது. இந்த கண்காட்சியில், விக்கிப்பீடியா நிறுவனம் பங்கேற்று, அதன் வங்காள மொழி பதிப்பை மேம்படுத்துமாறு தன்னார்வலர்களை கேட்டுக் கொண்டது.[1]

பங்கேற்போர்

தொகு

இந்த கண்காட்சிகளில் பங்கேற்போர் பெரும்பாலும், ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் வெளியான புத்தகங்களை காட்சிக்கு வைப்பர். ஐரோப்பிய பதிப்பகங்களான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், இசுபிரிங்கர் பதிப்பகம் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

தி ஸ்டேட்ஸ்மேன், தி டெலிகிராஃப் உள்ளிட்ட ஊடகங்களும் பங்கேற்றன.

கருப்பொருள்

தொகு

1991 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாட்டுக்கும், மாநிலத்துக்கும் முன்னுரிமை அளித்து அது கண்காட்சியின் கருப்பொருளாக அறிவிக்கப்படும். அந்த நாட்டை, மாநிலத்தை சேர்ந்த பிரபல நபர் விருந்தினராக பங்கேற்பார்.

ஆண்டு கருப்பொருள்
1991 அசாம்
1992 திரிபுரா
1993 ஒடிசா
1994 சிம்பாப்வே
1995 மேற்கு வங்காளம்
1996 பீகார்
1997 பிரான்சு
1998 பெரிய பிரித்தானியா
1999 வங்காளதேசம்
2000 பிரேசில்
2001 இந்தியா
2002 நெதர்லாந்து
2003 கியூபா
2004 சிலி
2005 பிரான்சு
2006 எசுப்பானியா
2007 ஆத்திரேலியா
2008 அமெரிக்க ஐக்கிய நாடு (**நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது.)
2009 இசுக்கொட்லாந்து
2010 மெக்சிக்கோ
2011 அமெரிக்க ஐக்கிய நாடு
2012 இத்தாலி
2013 வங்காளதேசம்
2014 பெரு
2015 பெரிய பிரித்தானியா

நிகழ்ச்சிகள்

தொகு
  • இலக்கியவாதிகளின் கருத்தரங்குகள்
  • புத்தக வெளியீடுகள்
  • பள்ளிச் சிறார்களுக்கான கட்டுரை போட்டி, வினாவிடை போட்டி
  • சிறப்பு விருந்தினரின் உரை
  • புத்தக விற்பனை

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Wikipedia debut at Kolkata Book Fair". The Hindu. 2013-12-25. பார்க்கப்பட்ட நாள் 2014-04-03.

இணைப்புகள்

தொகு