காவல் நிலையம் (திரைப்படம்)
காவல் நிலையம் (Kaaval Nilayam) என்பது 1991 ஆண்டு வெளியான தமிழ் குற்றவியல் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் இயக்கிய இப்படத்தில் சரத்குமார், ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஃப். சி. விஜயகுமார் தயாரித்த இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்துளார். படமானது 11 மே 1991 இல் வெளியானது.[1][2]
காவல் நிலையம் | |
---|---|
இயக்கம் | செந்தில்நாதன் |
தயாரிப்பு | எப். சி. விஜய்குமார் |
கதை | செந்தில்நாதன் எஸ். கஜேந்திரகுமார் (உரையாடல்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எம். கேசவன் |
படத்தொகுப்பு | ஜே. இளங்கோ |
கலையகம் | விஜயலட்சுமி பிலிம்ஸ் |
விநியோகம் | விஜயலட்சுமி பிலிம்ஸ் |
வெளியீடு | மே 11, 1991 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுராஜா ( ஆனந்தராஜ் ), ஒரு ரவுடி, காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கிறான், அவன் ஒரு விலைமாதுவுடன் தங்குகிறான். நேர்மையான காவல் அதிகாரியான விஜய் ( சரத்குமார் ) புதிய பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். விஜய் தனது மனைவி ஆர்த்தி ( கௌதமி ) மற்றும் அவரது மகள் சௌமியாவுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். விரைவில், ராஜா விஜய்யின் பாதையில் குறுக்கிடுகிறான்.
கடந்த காலத்தில் ராஜாவும் விஜயும் நண்பர்களாக இருந்தவர்கள். ராஜா, விஜய், ஆர்த்தி ஆகியோர் காவல் அதிகாரிகளாக ஆவதற்கு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். ராஜா ஒரு அனாதை, விஜய் ஒரு காவல் துறை குடும்பத்தைச் சேர்ந்தவன். நேர்மையான காவல்துறை அதிகாரி ரவி ( ஜெய்சங்கர் ), விஜய்யின் அண்ணன். ஊழல் அரசியல்வாதி ஆண்டவருடன் ( எம். என். நம்பியார் ) மோதுகிறார். இதனால் அவர் ஆண்டவரால் கொல்லப்பட்டுகிறார். விஜயும், ராஜாவும் ஆண்டவருக்கு எதிராக போராட வெவ்வேறு வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர்.
நடிகர்கள்
தொகு- சரத்குமார் - காவல் ஆய்வாளர் விஜய்
- ஆனந்த் ராஜ் (நடிகர்) - இராஜா
- மா. நா. நம்பியார் - ஆண்டவர்
- கௌதமி - ஆர்த்தி
- ஜெய்சங்கர் - இரவி
- கே. ஆர். விஜயா - இரவியின் மனைவி
- சனகராஜ் - முரளி
- செந்தில் - அரிச்சந்திரன்
- செந்தில் நாதன்
- சாருஹாசன்
- வி. கோபாலகிருட்டிணன் - டி.ஜி.பி வி. கோபாலகிருட்டிணன்
- டெல்லி கணேஷ்
- சண்முகசுந்தரம் (நடிகர்) - கிருஷ்ணமூர்த்தி
- அஜய் ரத்னம் - ஆண்டவரின் மகன்
- ஜாக்கி
- இடிச்சப்புளி செல்வராசு - செல்வராஜ்
- எம்.எர்.ஏ தங்கராஜ் - பிச்சமுத்து
- கமலா காமேஷ் - முரளியின் தாய்
- பேபி சௌமியா - சௌமியா
- ஆண்டாள்
இசை
தொகுதிரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மேற்கொண்டார். 1991 இல் வெளியான இந்த படத்தின் இசைப்பதிவில், வாலி, முத்துலிங்கம், பிறைசூடன், சங்கர் கணேஷ் ஆகியோரால் எழுதப்பட்ட நான்கு பாடல்கள் உள்ளன.[3]
எண். | பாடல் | பாடகர்(கள்) | காலம் |
---|---|---|---|
1 | 'கன்யமா' | ஜனகராஜ் | 4:45 |
2 | 'மாமன் வேட்டி' | மனோ | 5:35 |
3 | 'ஒன்று இரண்டு மூன்று' | மனோ, சித்ரா | 5:29 |
4 | 'சிங்கக்குட்டி நீய்' | பி. சுசீலா, சுஜா ராதாகிருஷ்ணன் | 4:32 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Filmography of kaval nilayam". cinesouth.com. Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
- ↑ "Kaval Nilayam (1991) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
- ↑ "Download Kaaval Nilayam by Shankar Ganesh on Nokia Music". music.ovi.com. Archived from the original on 24 June 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.