கிட்டாம்பாளையம்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கிட்டாம்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

கிட்டாம்பாளையம்
கிட்டாம்பாளையம் is located in தமிழ் நாடு
கிட்டாம்பாளையம்
கிட்டாம்பாளையம்
ஆள்கூறுகள்: 11°15′48″N 76°55′20″E / 11.2634°N 76.9221°E / 11.2634; 76.9221
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
364.45 m (1,195.70 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,362
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641104
புறநகர்ப் பகுதிகள்காரமடை, மேட்டுப்பாளையம்
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிசூலூர்

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 364.45 மீ. உயரத்தில், (11°15′48″N 76°55′20″E / 11.2634°N 76.9221°E / 11.2634; 76.9221) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கிட்டாம்பாளையம் அமையப் பெற்றுள்ளது.

 
 
கிட்டாம்பாளையம்
கிட்டாம்பாளையம் (தமிழ் நாடு)

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், கிட்டாம்பாளையம் பகுதியின் மொத்த மக்கள்தொகை 4,362 பேர் ஆகும். இதில் 2,175 பேர் ஆண்கள் மற்றும் 2,187 பேர் பெண்கள் ஆவர்.[2]

தொழிற்பேட்டை

தொகு

கிட்டாம்பாளையம் ஊரில் சுமார் 316.04 ஏக்கர் பரப்பளவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் கூட்டுறவு தொழிற்பேட்டை ஒன்று அமைய இருக்கிறது. இதன் மூலம் சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று அறியப்படுகிறது.[3]

சிறப்பு

தொகு

கிட்டாம்பாளையம் ஊரில் வசிக்கும் மக்கள் சுமார் இருபது ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகையின் போதும் பட்டாசு வெடிப்பதில்லை. இதற்குக் காரணம் இங்கு வந்து தங்கும் பறவைகள்; முக்கியமாக வௌவால்கள் தான். இரவில் இங்கிருந்து பறந்து செல்லும் கணக்கற்ற வௌவால்கள், மறுநாள் பகல் நேரத்தில் இங்குள்ள மரங்களைத் தேடி வந்து இங்கு தங்குகின்றன. இவைகள் உண்ணும் பழங்களின் எச்சங்களால், மறுபடியும் இங்கு பழத்தாவரங்கள் முளைத்து, மரங்களாகின்றன. இவ்வாறு விவசாயத்திற்கு நண்பர்களாக விளங்கும் அப்பறவைகள் இங்கிருந்து நிரந்தரமாக செல்லாமல் இருக்க, பட்டாசுகளை எப்போதும் வெடிப்பதில்லை என்று கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக முடிவெடுத்து அதை செயல்படுத்தி வருகின்றனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. [1]
  2. "Kittampalayam Village Population - Sulur - Coimbatore, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 22 October 2024.
  3. "கிட்டாம்பாளையம் தொழிற்பேட்டை... கோவையில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு வேலை!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2024-10-22.
  4. E. T. V. Bharat (2023-11-10). "தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கோவை கிட்டாம்பாளையம் மக்கள்.. பறவைகளுக்காக பாசமுடன் எடுத்த முடிவை விளக்கும் சிறப்புத் தொகுப்பு!". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2024-10-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டாம்பாளையம்&oldid=4124675" இலிருந்து மீள்விக்கப்பட்டது