கிரான்ட் பிளவர்
கிரான்ட் வில்லியம் பிளவர் (Grant Flower, பிறப்பு: திசம்பர் 20 1970 )[1], சிம்பாப்வே அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்களுள் தலைசிறந்தவராக அறியப்படுகிறார். இவர் 67 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , 219 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -2004 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1992 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான இவர் களத்தடுப்பட்டத்திலும் சிறந்து விளங்கினார். இவரின் சகோதரர் ஆண்டி பிளவரும் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்காக விளையாடியவர்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பட்டப்பெயர் | பிளவர் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, மார்ச்சு 14 2004 |
பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றிபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். இந்த அணிகு எதிராக சிறப்பான திறமையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இந்த அனிக்கு எதிரான இவரின் சராசரி 40 க்கும் அதிகமான ஓட்டங்களை வைத்துள்ளார். மூன்று முறை நூறுகளை இந்த அணிக்கு எதிராக எடுத்துள்ளார். அதில் 201 ஓட்டங்களும் அடங்கும். சூலை 2014 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவரை துடுப்பாட்ட தலைமைப் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகள் நியமித்தது.[2]
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள்
தொகுபன்னாட்டுத் துடுப்பாட்ட அவை சிம்பாப்வே அணிக்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு அங்கீகாரம் அளித்தது. அதன் பின் துவக்கப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினர். இவரின் துவக்கப் போட்டியில் முதல் இணைக்கு 100 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இவர் 82 ஓட்டங்கள் எடுத்தார்.[1] பின் இவர்களின் சொந்த மண்ணில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 96 ஓட்டங்கள் எடுத்தார்.
1995 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடினர். இதன் முதல் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 200 ஓட்டங்கள் எடுத்தார். 523 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகளில் இந்தச் சாதனையைப் புரிந்தார். அணியின் ஒட்டுமொத்தமாக 544 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்து டிக்ளேர் ஆனது. இந்தப் போட்டியில் இன்னிங்க்ஸ் மற்றும் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின் பாக்கித்தானில் உள்ள ஷேகிபுராவில் நடைபெற்ற போட்டியில் தனது இரண்டாவது நூறுகளை அடித்தார்.
1997 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முத்கல் பகுதியில் 104 ஓட்டங்கள் மற்றும் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 151 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் ஆட்டத்தின் இருபகுதிகளிலும் நூறு அடித்த முதல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வீரர் எனும் சாதனையைப் படைத்தார். 1998 ஆம் ஆண்டில் குயீன்ஸ் விளையாட்டுச் சங்க மைதானத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 156* ஓட்டங்கள் எடுத்தார். இது இவரின் ஐந்தாவது நூறாகும். அதன்பின்பு நிலையான ஆட்டத்தை வெளியிடத் தவறினார். அதன்பின் விளையாடிய 33 போட்டிகளில் 6 முறை ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார். நவம்பர் 25, 200 இல் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 106 ஓட்டங்கள் எடுத்தார்.
கிரான்ட் பிளவரின் தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
வ எ | ஓட்டங்கள் | போட்டிகள் | எதிரணி | விளையாடிய நாடு | இடம் | ஆண்டு | முடிவு |
[1] | 201* | 11 | பாக்கித்தான் | சிம்பாப்வே | ஹராரே துடுப்பாட்ட அரங்கம் | 1995 | வெற்றி |
[2] | 110 | 19 | பாக்கித்தான் | பாக்கித்தான் | ஷேகிபுரா துடுப்பட்ட மைதானம் | 1996 | சமன் |
[3] | 104 | 23 | நியூசிலாந்து | சிம்பாப்வே | ஹராரே துடுப்பாட்ட அரங்கம் | 1998 | சமன் |
[4] | 151 | 23 | நியூசிலாந்து | சிம்பாப்வே | ஹராரே துடுப்பாட்ட அரங்கம் | 1998 | சமன் |
[5] | 156 | 29 | பாக்கித்தான் | சிம்பாப்வே | குயீன்ஸ் மைதானம் | 1998 | சமன் |
[6] | 106* | 46 | இந்தியா | இந்தியா | விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் | 2001 | சமன் |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Grant Flower", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-12
- ↑ "Grant Flower starts Pakistan job". New Zimbabwe. 15 July 2014 இம் மூலத்தில் இருந்து 19 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819233954/http://www.newzimbabwe.com/sports-16773-Grant+Flower+starts+Pakistan+job/sports.aspx. பார்த்த நாள்: 19 August 2014.