கீயானு ரீவ்ஸ்

கீயானு சார்லஸ் ரீவஸ் (/kiˈɑːn/ kee-AH-noo) 1964 ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதி பிறந்த ஒரு கனடிய நடிகர் ஆவார். பில் அண்ட் டெட்ஸ் எக்ஸலன்ட் அட்வென்சர் என்னும் படத்தில் (இது ஒரு செம்மைக் கோட்பாடு என்பதாகவே ஆகியது) இவர் பொறுப்பற்ற, மெட்டல் ஹெட் (தீவிரமான மெட்டல் இசை ரசிகன்) கதாபாத்திரத்தை சித்தரித்த முறைக்காகவும் மற்றும் "ஸ்பீட்" என்னும் பரபரப்பான படம் மற்றும் அறிவியல் புனைகதை-அதிரடி முப்படமான தி மேட்ரிக்ஸ் ஆகிய வசூல் மற்றும் விமர்சனம் இரண்டிலுமே வெற்றியடைந்த இரண்டு அதிரடித் திரைப்படங்களிலும் தன் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக சித்தரித்தமைக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டு (குறிப்பிட்ட காலகட்ட நாடக பாணி "டேஞ்சரஸ் லையசன்ஸ்" என்னும் படத்திற்காக) ஸ்டீஃபன் ஃப்ரெராஸ், 1991 ஆம் ஆண்டு தனிப்படமான வீரம் செறிந்த மை ஓன் ப்ரைவேட் இடாஹோவுக்காக (இதை எழுதியவரும் வான் சண்ட்தான்) கஸ் வான் சண்ட் மற்றும் (1993 ஆம் ஆண்டுத் திரைப்படமான லிட்டில் புத்தா வுக்காக) பெர்னார்டோ பெர்டொலுச்சி ஆகிய பெரும் இயக்குநர்கள் அனைவருடனும் இவர் பணி புரிந்துள்ளார்: 1991 ஆம் ஆண்டு (பேட்ரிக் ஸ்வேஜுக்கு எதிராக) ஒரு அனுபவமற்ற எஃப்பிஐ ஏஜண்டாக அவர் நடித்த நாடகபாணியிலான பாயின்ட் பிரேக் காக நியூயார்க் டைம்ஸ் விமர்சகரான ஜேனட் மாஸ்லின் ஆல் பெரிதும் பாராட்டப்பட்டார். ரீவ்ஸ் "குறிப்பிடத்தக்க அளவில் ஒழுங்குமுறைமையையும் விஸ்தீரணத்தையும் வெளிக்காட்டுகிறார்" என்று அவர் கூறினார்.[1] இவர் பெரும்பாலும் உலகைக் காப்பாற்றும் வேடத்திலேயே தோன்றியிருக்கிறார்.

கீயானு ரீவ்ஸ்
Keanu Reeves
2015 இல் கீயானு ரீவ்ஸ்
பிறப்புகீயானு சார்லஸ் ரீவ்ஸ்
செப்டம்பர் 2, 1964 (1964-09-02) (அகவை 60)
பெய்ரூத், லெபனான்
இருப்பிடம்ஹாலிவுட் ஹில்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்கனடியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1984–தற்போது
துணைவர்Jennifer Syme (1998–2000)

ரீவ்ஸ் திரைப்படங்களில் நடிப்பதோடு நாடகங்களிலும் நடித்துள்ளார். மனிடோபா தியேட்டர் செண்டர் தயாரிப்பான ஹேம்லட் நாடகத்தில் அவர் நடித்த தலைப்புக் கதாபாத்திரத்தை சன்டே டைம்ஸ் ரோஜர் லூயிஸ் பாராட்டினார். அவர் ரீவ்ஸை இவ்வாறு பாராட்டினார்: "நான் பார்த்த முதன்மையான மூன்று ஹாம்லெட்டுகளில் அவர் ஒருவர். இதற்கு காரணம் மிகவும் எளிமையானது: அவர் *தான்* ஹாம்லெட்." ரீவஸ் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் நட்சத்திரம் ஒன்றை 2005, ஜனவரி 31 அன்று பெற்றார். 2006 ஆம் ஆண்டு ஈடி ஆன்லைன் நடத்திய ஒரு கருத்தாய்வில், "மிகவும் விரும்பப்படும் முதன்மையான 10 அமெரிக்க நட்சத்திரங்கள்" வரிசையில் அவரும் இடம் பெற்றார்.

துவக்ககால வாழ்க்கை

தொகு

ரீவ்ஸ் பெய்ரூட், லெபனான் நகரில் பிறந்தார். இவர் உடை வடிவமைப்பாளர்/ செயல்திறனாளரான பேட்ரிஷியா பாண் (நீ டெய்லர்) மற்றும் நிலவமைப்பு ஆய்வாளர் சாமுவேல் நௌலின் ரீவஸ், ஜூனியர் ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.[2] ரீவ்ஸின் தாயார் ஆங்கிலேயர், அவரது தந்தை அமெரிக்க ஹவாயின, சீன, போர்ச்சுகீச மற்றும் ஆங்கிலேய மரபில் வந்தவர்.[3] ரீவ்ஸின் தந்தையை முதலில் சந்தித்த காலத்தில் ரீவ்ஸின் தாயார் பெய்ரூட்டில் பணி புரிந்து கொண்டிருந்தார். ரீவ்ஸின் தந்தை திறன் பெறாத ஒரு கூலியாளாக வேலை செய்தவர். ஹிலோ சர்வதேச விமான நிலையத்தில் ஹெராயின் விற்றதற்காக ஹவாய் சிறையில் இருக்கும்போது தனது அடிப்படைக் கல்வியைப் பெற்றார்.[4] ரீவ்ஸிற்கு மூன்று வயதாக இருக்கும்போது அவர் தனது மனைவியையும் குடும்பத்தையும் கைவிட்டுப் போய்விட்டார். அவருடன் ரீவ்ஸிற்கு தற்போது எந்தவித உறவும் கிடையாது.[4] தனது மாமா ஹென்ரி கேயானு ரீவ்ஸின் பெயரை ஒட்டி ரீவ்ஸ் பெயரிடப்பட்டார். கேயானுவின் பெயரை ஹவாய் மொழியில் கூறினால், மலை மீது வீசும் தென்றல் எனப் பொருள்படும். ரீவ்ஸ் முதன் முதலாக ஹாலிவுட் சென்றடைந்தபோது அவரது முகவர், அப்பெயர் வழக்கத்திற்கு மிகவும் மாறானதாக இருப்பதாக நினைத்தார். அதனால், அவரது திரைப்பட வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், அவர் சில சமயங்களில் கே.சி.ரீவ்ஸ் என்றே பெயரிடப்பட்டார். ரீவ்ஸிற்கு உடன்பிறந்த (1966 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த) இரத்த சகோதரி ஒருவர் உண்டு. இவர் 1990 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் ரத்த புற்று நோய் கொண்டிருப்பதாக நோயறியப்பட்டார். மேலும், அவருக்குத் தனது தாய் மூலமாக (டொரொண்டோவில் 1976 ஆம் ஆண்டு பிறந்த) கரினா மில்லர் என்னும் ஒன்றுவிட்ட சகோதரியும் தந்தையின் மூலமாக (1980 ஆம் ஆண்டில் ஹவாயில் பிறந்த) எம்மா ரோஸ் ரீவ்ஸ் என்னும் மற்றொரு ஒன்றுவிட்ட சகோதரியும் உண்டு.ʻ

குழந்தையாக இருக்கும்போதே ரீவ்ஸ் உலகெங்கும் சுற்றிப் பல வளர்ப்புத் தந்தைகளிடம் வளர்ந்தார். அவரது பெற்றோர் 1966 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்ட பிறகு, அவரது தாய் ஒரு உடை வடிவமைப்பாளரானார். தனது குடும்பத்தை ஆஸ்திரேலியாவிற்கும் பிறகு நியூயார்க் சிட்டிக்கும் கொண்டு சென்றார். அங்கு அவர் ப்ராட்வே மற்றும் ஹாலிவுட் இயக்குநரான பால் ஆரோனை சந்தித்து மணந்து கொண்டார். இந்தத் தம்பதிகள் டொரொன்டோவிற்குச் சென்றனர். ஆனால் 1971 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து விட்டனர். ராக் இசை ஊக்குவிப்பரான ராபர்ட் மில்லர் என்பவரை ரீவ்ஸின் தாய் 1976 ஆம் ஆண்டு திருமணம் புரிந்தார். ஆனால் இந்தத் தம்பதி 1980 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்துகொண்டனர். பிறகு அவர் நான்காவது கணவராக ஜேக் பாண்டை மணந்தார். இவர் ஒரு சிகையலங்கார நிபுணர். இந்தத் திருமணம் 1994 ஆம் ஆண்டு முறிந்தது. ரீவ்ஸையும் அவரது சகோதரிகளையும் தாத்தா பாட்டிகள்தான் கூட இருந்து வளர்த்தனர். ரீவ்ஸ் டொரான்டோவில் பெரும்பான்மையாக வளர்ந்தார். ஐந்து வருடங்களுக்குள்ளாகவே அவர் நாலு பள்ளிக்கூடங்களில் சேர்ந்துவிட்டார். பின்னாளில் அவர் விலக்கப்பட்ட எடோபிகோக் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் என்பதும் இதில் ஒன்றாகும். ரீவ்ஸ், தான் நீக்கப்பட்டதற்கான காரணத்தை இவ்வாறு கூறினார்: ".... ஏனென்றால், நான் அழுக்காக இருந்தேன், நிறைய ஓடிக் கொண்டிருந்தேன். அடக்க முடியாத அளவு சத்தம் போடுபவனாகவும் இருந்தேன். ஒரு முறை மிக அளவுக்கு அதிகமாக பேசி விட்டேன். பொதுவாகவே, பள்ளியில் சிறந்த நடத்தை கொண்ட மாணவர்களில் ஒருவனாக நான் இருக்கவில்லை. அவர்களுக்கு நான் இடையூறாகவே இருந்தேன் என்றுதான் நினைக்கிறேன்."

படிப்பைவிட ஹாக்கி விளையாட்டில் ரீவ்ஸ் மிகுந்த திறமை காட்டினார். காரணம், கற்கும் ஆற்றலைப் பாதிக்கும் டிஸ்லெக்சியா என்னும் நோயால் அவரது கல்வித் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் படித்த பள்ளிக்கூடங்களில் ஒன்றான டெ லா சால் காலேஜ் "ஓக்லேண்ட்ஸ்" பள்ளியில் அவர் ஒரு வெற்றிகரமான பந்துத் தடுப்பாளராக இருந்தார். அவரது குழு அவருக்கு "சுவர்" என்று பெயரிட்டு 'மிகவும் மதிப்பிற்குரிய தொழில்முறையாளர்' என்று வாக்களித்தது. ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் கனடா நாட்டு ஹாக்கி வீரராக வேண்டும் என்று ரீவ்ஸ் கனவு கண்டார். ஹாக்கியைத் தொழிலாகக் கொள்ள வேண்டும் என்ற அவரது நம்பிக்கைக்கு ஒரு காயம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. டெ லா சால் காலேஜை விட்டுச் சென்றதும், அவர் ஒரு இலவசப் பள்ளியில் சேர்ந்தார். இங்கு அவர் ஒரு நடிகராகத் தொழில் செய்து கொண்டே கல்வி பெற முடிந்தது. இருப்பினும், தனது உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழை பெறாமலேயே, பிறகு அவர் இதிலிருந்து விலகிவிட்டார்.

தொழில்

தொகு

1980 ஆம் ஆண்டுகள்

தொகு

தனது ஒன்பதாவது வயதில் டேம் யாங்கீஸ் என்பதன் நாடகமாக்கத்தில் நடிக்கத் துவங்கியதிலிருந்து ரீவ்ஸ் தனது நடிப்புத் தொழிலைத் துவங்கினார். தமது 15வது வயதில் ரோமியோ அண்ட் ஜூலியட்டின் ஒரு மேடைத் தயாரிப்பில் மெர்குஷியோ வேடத்தில் லி போஸ்லுன்ஸ் தியேட்டரில் நடித்தார். ஹேங்கிங்க் இன் என்னும் சிபிசி தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடரின் மூலம் தனது திரை நடிப்பை ரீவ்ஸ் துவக்கினார். 1980ஆம் ஆண்டுகளின் ஆரம்ப வருடங்கள் முழுவதிலும் அவர் (கோகோ-கோலாவுக்கான ஒன்று உட்பட விளம்பரங்களிலும், என்எஃப்பி நாடகமான ஒன் ஸ்டெப் அவே [5] உள்ளிட்ட குறும்படங்களிலும், டொரோண்டோவின் ப்ராட் ஃப்ரேசர் அளித்த, பிரபல வெற்றியடைந்த வுல்ஃப் பாய் ஆகிய மேடை நிகழ்ச்சிகளிலும் தோன்றி வந்தார். 1984 ஆம் ஆண்டு கனடியன் ப்ராட்காஸ்டிங் கார்பொரேஷன் நிறுவனத்தில் கோயிங் கிரேட் என்னும் இளைஞர்களுக்கான தொலைக்காட்சி நிரலில் செய்தியாளராக இருந்தார்.[6]

ராப் லோவேயின் ஐஸ் ஹாக்கி திரைப்படமான யங் ப்ளட் என்னும் திரைப்படம்தான் ரீவ்ஸ் முதன் முதலாக நடித்த படத்தளத் திரைப்படமாகும். இதில் அவர் க்யூபெகோயிஸ் என்னும் பந்துத் தடுப்பாளராக நடித்தார். இந்தப் படம் வெளியான சிறிது காலத்தில் ரீவ்ஸ் தனது 1969 ஆம் ஆண்டு வோல்வோ காரில் லாஸ் ஏஞ்சல்சிற்குச் சென்றார். அவரது மாற்றாந்தந்தையான பால் ஆரோன் ஒரு நாடக மேடை மற்றும் தொலைக் காட்சி இயக்குநர். அவர், ரீவ்ஸ் லாஸ் ஏன்சல்ஸ் வந்து சேருவதற்கு முன்பாகவே அவருக்கு மேலாளராகவும் முகவருமாகவும் இருக்கும்படி எர்வின் ஸ்டாஃப் என்பவரைச் சம்மதிக்க வைத்து விட்டார். ஸ்டாஃப், ரீவ்ஸின் மேலாளராக இருந்து வருவதுடன் அவரது பல திரைப்படங்களுக்கு இணைத் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சில சில்லறை வேடங்களுக்குப் பிறகு, 1986 ஆம் ஆண்டு ஒரு நாடக பாணித் திரைப்படமான ரிவர்ஸ் எட்ஜ் என்னும் படத்தில் ரீவ்ஸ் பெரிய வேடம் ஒன்றைப் பெற்றார். ஒரு மரணம் எவ்வாறு பதின்வயதினர்களின் குழு ஒன்றில் தாக்கம் உண்டாக்குகிறது என்பதை இது விவரித்தது. இந்தப் படம் அடைந்த விமர்சன ரீதியான வெற்றியைத் தொடர்ந்து அவர் 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியை பதின்வயதுப் பார்வையாளரை இலக்காகக் கொண்ட பல படங்களில் தோன்றுவதில் கழித்தார். இதில் பர்மெனன்ட் ரெகார்ட், 1989 ஆம் ஆண்டு எதிர்பாராத வெற்றியடைந்த நகைச்சுவைத் திரைப்படமான [[பில் அண்ட் டெட்ஸ் எக்ஸலன்ட் அட்வென்ச்சர்|பில் அண்ட் டெட்ஸ் எக்ஸலன்ட் அட்வென்ச்சர்]], மற்றும் அதன் 1991ஆம் வருட இணையான பில் அண்ட் டெட்ஸ் போகஸ் ஜர்னி ஆகியவையும் அடங்கும். இவற்றினால், ரீவ்ஸ் பொறுப்பற்ற ஒரு பதின் வயதுக் கதாபாத்திரத்திற்குள் அடைபட்டார். பத்திரிகைகளில் அவர் சித்தரிக்கப்பட்ட விதமும், 1990 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவரது நடிப்புக்கான பதிலிறுப்பும் இன்னமும் அவரது முட்டாளான டெட் கதாபாத்திரத்தின் சித்தரிப்பையே குறிப்பிடுவதாக உள்ளன.

1990ஆம் ஆண்டுகள்

தொகு

1990ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் தனது பதின்வயது திரைப்படக் காலகட்டத்திலிருந்து ரீவ்ஸ் விடுபடத்துவங்கினார். அவருக்கு எம்டிவியின் "மிகவும் விரும்பத்தக்க ஆடவர்" விருதை 1992வது வருடம் பெற்றுத் தந்த பாயின்ட் பிரேக் போன்ற மிகப்பெரும் பட்ஜட்டில் உருவாக்கப்பட்ட அதிரடி திரைப்படங்களில் அவர் நடிக்கத் துவங்கினார். 1991வது வருடம் அவர் மிக நல்ல வரவேற்பைப் பெற்ற மை ஓன் ப்ரைவேட் இடாஹோ மற்றும் தனது நெருங்கிய நண்பரான, மறைந்த உடன் நடித்த ரிவர் ஃபோனிக்ஸ்[சான்று தேவை]போன்ற குறைந்த அளவு தயாரிப்புச் செலவு கொண்ட தனிப்படங்களிலும் அவர் ஈடுபட்டார். 1994வது வருடம், ஸ்பீட் என்ற அதிரடி திரைப்படத்தில் நடித்ததன் விளைவாக, ரீவ்ஸின் நடிப்புத் தொழில் ஒரு புதிய உச்சத்தை அடைந்தது. அந்தப் படத்தில் அவருக்கு வேடமளித்தது சர்ச்சைக்குள்ளானது. காரணம், பாயிண்ட் பிரேக் படத்தைத் தவிர அவர் நகைச்சுவை மற்றும் இன்ட்டி இசை நாடக பாணிப் படங்களில் நடிப்பவராகவே பெருமளவில் அறியப்பட்டிருந்தார். தனிக் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் அவர் நடித்ததே இல்லை. மிகுந்த பொருட்செலவில் தயாராகி, வேனிற்காலத்தில் வெளியான இந்த அதிரடித் திரைப்படத்தின் இயக்குநர் முன்னர் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறிய ஜேன் டி போண்ட் ஆவார். இப்படத்தின் எதிர்பாராத சர்வதேச அளவிலான வெற்றி ரீவ்ஸ் மற்றும் அவருடன் இணைந்து நடித்த சான்ட்ரா புல்லக் ஆகிய இருவரையும் முதல் வரிசை நட்சத்திரங்களாக்கியது.

ஸ்பீட் படத்திற்குப் பிறகு ரீவ்ஸ் தனது நடிப்புத் தொழிலில் தேர்ந்தெடுத்தவை பன்முகம் கொண்டவையாக அமைந்தன; பல வெற்றிகளை அடைந்த போதிலும், ரீவ்ஸ் தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களையும், பரிசோதனைத் திரைப்படங்களையும் தொடர்ந்து ஒப்புக் கொள்ளலானார். எ வாக் இன் தி க்ளவுட்ஸ் என்ற படத்தில் காதல் நாயகனாக அவர் வெற்றி ஈட்டினார். அவர் Speed 2: Cruise Control ல் பங்கேற்க மறுத்து, 1995வது வருடம் வின்னிபெக் மனிடோபாவில் மனிடோபா தியேட்டர் செண்டர் தயாரிப்பான ஹாம்லெட் டில் தலைப்புக் கதாபாத்திரம் ஏற்கத் தெரிவு செய்ததன் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டார்.[7] ஷேக்ஸ்பியர் வடித்த மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்றைச் சித்தரித்த விதத்திற்காக வியப்பூட்டும் வண்ணம் மிக நல்ல விமர்சனங்களை ரீவ்ஸ் பெற்றார். சன்டே டைம்ஸ் பத்திரிகையின் விமர்சகரான ரோஜர் லூயிஸ் எழுதினார்: "டென்மார்க் இளவரசனை உருவாக்கிய அந்த அப்பாவித்தனம்,அபாரமான கோபம், அந்தத் தாவல், ஓட்டம் போன்றவற்றின் மிருகத்தனமான நளினம்... உணர்ச்சி பொங்கும் வன்முறை ஆகியவற்றிற்கு அவர் மிக அற்புதமாக வடிவம் அளித்தார். "நான் பார்த்த முதன்மையான மூன்று ஹாம்லெட்டுகளில் அவர் ஒருவர். இதற்கு காரணம் மிகவும் எளிமையானது: அவர் *தான்* ஹாம்லெட்."[மேற்கோள் தேவை]

 
2008வது வருடம் மெக்சிகோவில் தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில் படத்தின் விளம்பர முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கும் ரீவ்ஸ்.

இருப்பினும் எ வாக் இன் தி க்ளவுட்ஸ் படத்திற்குப் பிறகு ரீவ்ஸ் தேர்ந்தெடுத்தவை விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகிய இரு தரப்பினரிடமும் எடுபடாமல் போனது. ஜானி மெனெமொனிக் போன்ற பெரும் தயாரிப்புச் செலவை உள்ளடக்கிய அறிவியல் புனைகதைப் படங்களும், செயின் ரியாக்ஷன் போன்ற அதிரடி-கிளர்ச்சியூட்டும் படங்களை விமர்சகர்கள் ஒதுக்கித் தள்ளினர். வசூலிலும் அவை தோல்வியடைந்தன. ஃபீலிங் மின்னெஸோடா போன்ற இண்டியிசைத் திரைப்படங்களும் விமர்சன ரீதியில் தோல்வியடைந்தன. அல் பசினோ மற்றும் சார்லைஜ் தெரோன் ஆகியோருடன் தி டெவில்'ஸ் அட்வோகேட் என்னும் திகில்/நாடக திரைப்படத்தில் நடித்ததும் ரீவ்ஸ் கீழ் நிலையில் இருந்த தனது தொழிலில் மெள்ள முன்னேறத் துவங்கினார். அல் பசினோவை நடிக்க வைப்பதற்காக,தி டெவில்'ஸ் அட்வோகேட் திரைப்படத்திற்கான தனது சம்பளத்தை பிற்பாடு பெறுவதாக ஒரு ஏற்பாட்டை ரீவ்ஸ் செய்து கொண்டார். இதைப் போலவே, குறைந்த அளவு வெற்றியே அடைந்த தி ரீப்ளேஸ்மெண்ட்ஸ் திரைப்படத்திலும், ஜினி ஹாக்மேன் நடிப்பதை உறுதி செய்வதற்காக இவ்வாறு செய்தார். பல விமர்சகர்கள் அவரது மட்டமான நடிப்பு, மற்றபடி அனுபவித்துப் பார்க்கக் கூடிய ஒரு திரைப்படத்தின் கவன ஈர்ப்பை விலக்கி விட்டதாக கூறினாலும், தி டெவில்'ஸ் அட்வோகேட் வசூலில் வெற்றிக் கொடி கட்டிச் சிறந்து, நல்ல விமர்சனங்களையும் பெற்று ரீவ்ஸ் தமது தொழிலில் வளர்ச்சி அடைந்து விட்டதை நிரூபித்தது.[மேற்கோள் தேவை] 1999வது வருடம் அறிவியல் புனைகதை-அதிரடி வெற்றிப்படமான தி மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் ரீவ்ஸ் ஒரு நட்சத்திர பாகம் கொண்டிருந்தார். இது வசூலில் மிகப் பெரும் வெற்றி அடைந்து நேர்மறையான விமர்சனங்களையும் ஈர்த்தது.

2000 ஆம் ஆண்டுகள்

தொகு

மேட்ரிக்ஸ் படத்தின் முதற்பாகம் மற்றும் அதன் தொடர் தயாரிப்புகளுக்கு இடையில், தி கிஃப்ட் என்னும் படத்தில் தவறான போக்கு கொண்ட ஒரு கணவன் வேடத்தை சித்தரித்த விதத்திற்காக ரீவ்ஸ் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். தி கிஃப்ட் படம் தவிர, தி வாச்சர் , ஸ்வீட் நவம்பர் மற்றும் தி ரீப்ளேஸ்மெண்ட்ஸ் போன்று ரீவ்ஸ் தோன்றிய பல படங்களும் எதிர்மறையான விமர்சனங்களையும், திருப்தியில்லாத வசூலையுமே பெற்றன. இருப்பினும், இரண்டு மேட்ரிக்ஸ் தொடர் தயாரிப்புக்கள்,தி மேட்ரிக்ஸ் ரிலோடட் மற்றும் தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ் , சம்திங் காட் டு கிவ் மற்றும் 2005வது வருடத்திய திகில்-அதிரடித் திரைப்படமான கான்ஸ்டண்டைன் ஆகியவை மிகப் பெரும் வெற்றிப் படங்களாக நிரூபணமாயின. இவை, மீண்டும் ஒளி வெள்ளத்திற்கு ரீவ்ஸை இட்டு வந்தன. ஃபிலிப் கே டிக் எழுதிய டிஸ்டோபியன் அறிவியல் புனைகதை நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட 2006வது வருடத்து எ ஸ்கானர் டார்க்லி என்ற படத்தில் அவர் தோன்றியது ஆதரவான விமர்சனங்களை கொணர்ந்தது. சான்ட்ரா புல்லக்குடன் அவர் காதல் பயணம் செய்த தி லேக் ஹௌஸ் வசூல் விஷயத்தில் முடங்கி விட்டது.[சான்று தேவை]

2008வது வருடத்தில் ரீவ்ஸ் இரண்டு திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்தார்: ஸ்ட்ரீட் கிங்ஸ் மற்றும் தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில். ரீவ்ஸ் ராபின் ரைட் பென், ஜுலியானா மூர், வினொனா ரைடர், மரியா பெல்லோ, மோனிகா பெல்லுச்சி, ஜோ கஜான், ரையான் மெக்டொனால்ட், பிளேக் லைவ்லி, ராபின் வைஜெர்ட் ஆகியோருடன் இணைந்து நடித்து 2009ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் வெளியான தி ப்ரைவேட் லைஃப் ஆஃப் பிப்பா லீ பெர்லினாலெயில் வெளியானது. 2009ஆம் ஆண்டு ஜனவரி, கௌபாய் பெபாப் [8][9] என்னும் அசைவூட்டத் தொடரின் நேரடி-அதிரடி திரைப்பட ஆக்கத்தில் ரீவ்ஸ் நடிப்பார் என்று செய்தி வெளியானது. இது 2011ஆம் வருடம் வெளியாக உள்ளது. தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் இதர திரைப்படங்களில் 47 ரோனின் என்ற சாமுராய் திரைப்படம், ரீவ்ஸ் கதை எழுதி ஸ்டீவன் நைட் திரைக்கதையில் செஃப் மற்றும் ஜோன் ஸ்பைஹட்ஸ் எழுதி ரீவ்ஸ் தயாரித்து நடிக்கும் விண்வெளி நாடகமான பாசஞ்சர்ஸ் ஆகியவை அடங்கும்.[10]

சொந்த வாழ்க்கையும் இதர ஆர்வங்களும்

தொகு
 
ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் ரீவ்ஸின் நட்சத்திரம்

தான் ஒரு நட்சத்திரமாக உயர்ந்த பிறகும் முதல் பத்தாண்டுகளுக்கு ரீவ்ஸ் வாடகை வீடுகளிலும் விடுதிகளிலும் வசிப்பதையே விரும்பி வந்தார். ஷடௌ மார்மோண்ட்டில் அவர் நீண்ட காலம் வசித்து வந்தார். 2003ஆம் வருடவாக்கில், லாஸ் ஏன்சல்சில் ஹாலிவுட் ஹில்ஸ் என்னும் பகுதியில் தனது முதல் சொந்த வீட்டை வாங்கினார். நியூயார்க் சிட்டியில் செனட்ரல் பார் வெஸ்ட்டிலும் அவர் ஒரு வீடு வைத்திருக்கிறார். லெபனானில் பிறந்திருந்தாலும், ரீவ்ஸ் ஒரு லெபனான் குடி மகன் அல்ல. அவர் குடியுரிமைகள்: யூ.எஸ் (தனது தந்தை வழியாக)[11] மற்றும் கனடியன் (இயல்புரிமை வழியாக) ஆங்கிலேயப் பிறப்பு கொண்ட ஒருவர் தனது தாயாக இருப்பதனால், 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி துவங்கி அவர் பிரித்தானிய குடியுரிமைக்கும் உரியவரானார். ரீவ்ஸ் ஒரு கனடியராக வளர்ந்தார் மற்றும் அவ்வாறே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். அவர் திருமணம் புரிந்து கொண்டதே இல்லை. 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரீவ்ஸின் தோழி ஜென்னிஃபெர் சைம் உயிரற்ற பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அதற்கு ஏவா ஆர்ச்சர் சைம்-ரீவ்ஸ் என்று பெயரிட்டார். 2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சைம் கார் விபத்து ஒன்றில் இறந்தார்.[12] லாஸ் ஏன்சல்ஸ் கலிஃபோர்னியாவில் உள்ள வெஸ்ட்வுட் கிராம நினைவுப் பூங்கா கல்லறையில் அவர் அவர்களுடைய மகளுக்கு அருகே புதைக்கப்பட்டார். 2008வது வருடம் அலிசன் சில்வா என்னும் பப்பராசோ (தன்னிச்சையான பத்திரிகையாளர்) லாஸ் ஏஞ்சல்சில் மருத்துவ மனையில் உள்ள தமது உறவினர் ஒருவரைப் பார்த்து விட்டுத் திரும்புகையில், ரீவ்ஸ் தனது போர்ஷ் வண்டியால் தம் மீது மோதி காயப்படுத்தியதாக லாஸ் ஏன்சல்ஸ் மேல் நீதி மன்ற த்தில் $711,974[13] கேட்டு வழக்குத் தொடுத்தார். ஆனால், அந்த வழக்கு தோல்வியுற்றது.[14][15] அந்தப் பப்பரசோவின் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு ஒன்றரை வருடங்கள் எடுத்துக் கொண்டது. 12 ஜூரிகளில் அனைவரும் அந்த வழக்கை ஒரு மணி நேரத்திற்கு சற்றே அதிகமான கால அவகாசத்தில் தள்ளுபடி செய்து விட்டனர்.[16] ரீவ்ஸுக்கு இசையிலும் ஆர்வங்கள் உண்டு: அவர் க்ரஞ்ச் பேண்ட் டாக்ஸ்டார் குழுவில் 1990ஆம் ஆண்டுகளில் பேஸ் கிதார் வாசித்திருக்கிறார்; மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பெக்கி பேண்ட் குழுவினருடன் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

திரைப்பட விவரங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
1985 லெட்டிங் கோ ஸ்டிரியோ டீன்#1
ஒன் ஸ்டெப் அவே ரோன் பெட்ரி
1986 யங் ப்ளட் ஹீவர்
ஃப்ளையிங் டாமி வெர்னிக்
யங் எகெயின் மைக் ரிலே, வயது 17
அண்டர் தி இன்ஃப்ளுவன்ஸ்

எட்டி டால்போட்
ஆக்ட் ஆஃப் வெஞ்ஜன்ஸ்

பட்டி மார்டின்
ரிவர்'ஸ் எட்ஜ் மாட்
ப்ரதர்ஹூட் ஆஃப் ஜஸ்டிஸ்

டெரெக்
பேபீஸ் இன் டாய்லேண்ட் ஜேக்
1988 பர்மனென்ட் ரெகார்ட் க்ரிஸ் டவுன்சென்ட்
தி ப்ரின்ஸ் ஆஃப் பென்சில்வானியா ரூபர்ட் மார்ஷெட்டா
தி நைட் பிஃபோர் வின்ஸ்டன் கோனெலி
டேஞ்சரஸ் லையசன்ஸ் லா ஷெவாலியர் ராஃபேல் டான்செனி
1989 பில் அண்ட் டெட்'ஸ் எக்ஸலன்ட் அட்வென்சர் டெட் "தியோடர்" லோகன்
பேரன்ட்ஹூட் டாட் ஹிக்கின்ஸ்
1990 ஐ லவ் யூ டு டெத் மார்லோன் ஜேம்ஸ்
ட்யூன் இன் டுமாரோ மார்டின் லோடர்
1991 பாயின்ட் பிரேக் எஃப்பிஐ விசேஷ அதிகாரி ஜான் 'ஜானி' உடா
பில் அண்ட் டெட்'ஸ் போகஸ் ஜர்னி டெட் "தியோடர்" லோகன்/ஈவில் டெட்
மை ஓன் ப்ரைவேட் இடாஹோ ஸ்காட் ஃபேவர்
ப்ராவிடன்ஸ் எரிக்
1992 ப்ராம் ஸ்டோக்கர்'ஸ் டிராகுலா ஜோனாதன் ஹார்க்கர்
1993 மச் அடூ அபௌட் நத்திங் டான் ஜான்
லிட்டில் புத்தா ப்ரின்ஸ் சித்தார்த்தா/லார்ட் புத்தா
பொயடிக் ஜஸ்டிஸ் ஹோம்லெஸ் மேன்

(அன் கிரெடிடட்)

ஃப்ரீக்ட் ஓர்டிஜ் தி டாக் பாய்

(அன் கிரடிடெட்)

ஈவன் கௌ கேர்ல்ஸ் கெட் தி ப்ளூஸ் ஜூலியன் கிஷ்
1994 ஸ்பீட் ஆஃபீசர் ஜேக் ட்ராவன்
1995 ஜானி மெனெமோனிக் ஜானி
எ வாக் இன் தி க்ளவுட்ஸ் சார்ஜண்ட் பால் சுட்டான்
1996 செயின் ரியாக்ஷன் எட்டி கசவிலிக்
ஃபீலிங் மின்னோஸோடா ஜாக்ஸ் க்ளேட்டன்
1997 தி லாஸ்ட் டைம் ஐ கமிடட் சூயிசைட் ஹேரி
தி டெவில்'ஸ் அட்வோகேட் கெவின் லொமேக்ஸ்
1999 தி மேட்ரிக்ஸ் தாமஸ் ஆன்டர்சன் (நியோ)
மீ அண்ட் வில் அவராகவே
2000 தி ரீப்பிளேஸ்மண்ட்ஸ் ஷான் ஃபால்கோ
தி வாச்சர் டேவிட் ஆலன் க்ரிஃபின்
தி கிஃப்ட் டோன்னி பார்க்ஸ்டேல்
2001 ஸ்வீட் நவம்பர் நெல்சன் மோஸ்
ஹார்ட்பால் கோனோர் ஓ' நெயில்
2003 தி மேட்ரிக்ஸ் ரீலோடட் தாமஸ் ஆண்டர்ஸன்/ நியோ
தி அனிமேட்ரிக்ஸ் தாமஸ் ஆண்டர்ஸன்/ நியோ
தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ் தாமஸ் ஆண்டர்ஸன்/ நியோ
சம்திங்க்'ஸ் காட் டு கிவ் டாக்டர் ஜூலியன் மெர்சர்
2005 கான்ஸ்டண்டைன் ஜான் கான்ஸ்டண்டைன்
தம்ப் சக்கர் பெர்ரி லைமேன்
எல்லி பார்க்கர் அவராகவே
2006 தி லேக் ஹௌஸ் அலெக்ஸ் வைலர்
எ ஸ்கேனர் டார்க்லி பாப் ஆர்க்டார்
2008 ஸ்ட்ரீட் கிங்ஸ் துப்பறிவாளர் டாம் லட்லோ
தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில் குளாடௌ
2009 தி ப்ரைவேட் லைவ்ஸ் ஆஃப் பிப்பா லீ க்ரிஸ் நாடௌ
2010 பாசஞ்ஜர்ஸ் ஜிம் ப்ரெஸ்டன்
கார்டகெனா அறியாத கதாபாத்திரம்
2011 ஜெகில் டாக்டர் ஜெகில்
கௌபாய் பெபாப் [[ஸ்பைக் ஸ்பீகெல்/0]|ஸ்பைக் ஸ்பீகெல்/0}[8][9]]]
2013 47 ரோனின்
2013 john wick -

குறிப்புகள்

தொகு
  1. Maslin, Janet (July 12, 1991). "Surf's Up For F.B.I. In Bigelow's Point Break". த நியூயார்க் டைம்ஸ். http://movies.nytimes.com/movie/review?_r=2&res=9D0CE3D9143EF931A25754C0A967958260&partner=Rotten%20Tomatoes. பார்த்த நாள்: 2009-04-24. 
  2. "Keanu Reeves Biography (1964-)". Film Reference. பார்க்கப்பட்ட நாள் May 10, 2008.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-04-21. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  4. 4.0 4.1 Ryan, Tim (April 22, 2001). "Memories of Keanu". Honolulu Star-Bulletin இம் மூலத்தில் இருந்து மே 24, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080524042304/http://starbulletin.com/2001/04/22/features/story1.html. பார்த்த நாள்: May 10, 2008. 
  5. "One Step Away". NFB. பார்க்கப்பட்ட நாள் May 10, 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. யூட்யூப் சிறு ஒளிக்காட்சி சிபிசி ரெட்ரோபைட்ஸ்: கேயானு ரீவ்ஸ்.
  7. வார்ப்புரு:Cite url=http://www.mtc.mb.ca/news.aspx?id=1356
  8. 8.0 8.1 Kit, Borys (January 16, 2009). "Reeves Leads Cast of Futuristic Bebop". Reuters UK.
  9. 9.0 9.1 Siegel, Tatiana (January 15, 2009). "Keanu Reeves set for 'Bebop'". Variety. பார்க்கப்பட்ட நாள் May 31, 2009.
  10. Sciretta, Peter (December 9, 2007). "The Hottest Unproduced Screenplays of 2007". Slashfilm. Archived from the original on ஜனவரி 18, 2010. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 29, 2010. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-20. பார்க்கப்பட்ட நாள் 2010-01-29.
  12. "Marilyn Manson Accused Of Contributing To Friend's Death". VH1. Archived from the original on நவம்பர் 17, 2007. பார்க்கப்பட்ட நாள் May 10, 2008.
  13. Lang, Derrik J (November 3, 2008). "Keanu Reeves Wins Court Case, Photographer Gets Nothing". The Huffington Post.
  14. "Keanu courts humor against paparazzo". New York Daily News. October 29, 2008. Archived from the original on 2010-01-06. பார்க்கப்பட்ட நாள் 2010-01-29.
  15. "Paparazzo says Reeves hit him with car". USA Today. November 5, 2007.
  16. Ryan, Harriet (November 4, 2008). "Keanu Reeves cleared in paparazzo lawsuit". Los Angeles Times.

மேலும் படிக்க

தொகு

புற இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கீயானு_ரீவ்ஸ்&oldid=4166891" இலிருந்து மீள்விக்கப்பட்டது