குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்
(குருவாயூர் கிருஷ்ணர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குருவாயூர் கோவில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். பக்தர்களால், இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் பூலோக வைகுண்டமாகவும் (புவியில் இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் தலம்) அறியப்படும் திருத்தலம்.[2]

குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் is located in கேரளம்
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் (கேரளா)
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் is located in இந்தியா
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் (இந்தியா)
அமைவிடம்
அமைவு:குருவாயூர், கேரளா
ஏற்றம்:22.64 m (74 அடி)
ஆள்கூறுகள்:10°35′40″N 76°02′22″E / 10.5945°N 76.0394°E / 10.5945; 76.0394[1]
கோயில் தகவல்கள்
மூலவர்:கிருஷ்ணன் (விஷ்ணுவின் ரூபத்தில்)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:மரபுவழிக் கேரளப் பாணி
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகப் பதிவுகள் காட்டுகின்றன. கோயிற் சிலை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகின்றது.[1]

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே தோற்றமளித்தார்; இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அறியப்படுகிறது. இங்கு குடிகொண்டிருக்கும் சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணனை, பக்தர்கள் அன்புடன் கண்ணன், உண்ணிக் கண்ணன், (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்று பல பெயர்களில் வணங்குவது வழக்கம.

108 திவ்ய தேசக் கோவில்களில் ஒன்றல்ல எனினும் வைணவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டு வரும் திருக்கோயில்.

திருத்தல மகத்துவம்

தொகு

பரம சிவன் (ருத்ரனாக) இங்கே கடுந்தவம் புரிந்து மற்றும் தற்பொழுது இங்கிருக்கும் கோவிலின் வடக்குப் புறமாக காணப்படும் புனிதமான குளத்தில் இருக்கும் தண்ணீரில் இருந்து கொண்டு, மஹா விஷ்ணுவை பல ஆண்டுகளுக்கு தியானம் செய்து வந்தார், அதன் பயனாக இந்த குளத்தில் காணப்படும் தீர்த்தமானது ருத்ர-தீர்த்தம் என போற்றப்படுகிறது. பழங்காலத்தில், இந்த ருத்ர-தீர்த்தக்குளம் மம்மியூர் மற்றும் தாமரையூர் (சுமார் 3 கிலோமீட்டர் தொலைவு) வரை விரிந்து பரந்து இருந்து வந்தது மேலும் அதில் மலரும் தாமரைப் பூக்களுக்காக பெயர் பெற்றதாக திகழ்ந்தது. பிரசேகதன்மார் (அரசர் ப்ரசீனபர்ஹி மற்றும் சுவர்ணாவின் பத்து பிள்ளைகள்) இங்கு பிரஜாபதித்வம் அடைவதற்காக (ராஜாவுக்கெல்லாம் ராஜாவாக இருப்பதற்கான) இறைவன் மகா விஷ்ணுவை துதித்து கடும் தவத்தை புரிந்தனர்.

பிரசேகதர்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட பரமசிவன், ருத்ர தீர்த்தத்தில் இருந்து வெளியே வந்தார் மேலும் அவர்களுக்கு ருத்ரகீதம் என்ற பாடலைப்பற்றிய விளக்கமளித்தார். அந்த மந்திரத்தை தூய மனதுடன் ஜபம் செய்து, விரும்பிய வரங்களை இறைவனிடம் இருந்து பெறலாம் என்று அறிவுரை கூறினார். இளவரசரர்களும் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு தண்ணீரின் அடியில் இருந்துகொண்டு ருத்திரகீத ஜபத்தை கடுமையாக அனுஷ்டித்து மகாவிஷ்ணுவிடம் இருந்து வரங்களைப் பெற்றனர்.[3]

குருவாயூர் கிருஷ்ணரின் திருவுருவம்

தொகு

குருவாயூர் கோவிலில் காணப்படும் இறைவனின் சிற்பம் தனிப்பட்டதாகும். மிகவும் புனிதமானது என கருதப்படும் பாதாளாஞ்சனா சிலையில் இருந்து இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் திவ்யமாக திகழும் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணனின் சிலை வடிவம் மனம் கவரும் பாணியில் நான்கு கைகளுடன் காணப்படுகின்றன மேலும் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஒரு கையிலும், சுதர்சன சக்கரம் என்ற சக்கரத்தை இன்னொரு கையிலும், மூன்றாவது கையில் கௌமோதகி என்றறியப்படும் கதையையும் மேலும் நான்காவது கரங்களில் தாமரை மலரையும் வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் காட்சி தருகிறார். கழுத்தில் புனிதமான துளசி மாலை அலங்கரிக்க, இந்த விக்கிரகம் மகா விஷ்ணுவின் கம்பீரமான அவதாரத்தை குறிப்பதாகும்.

மூல விக்கிரகம் வரலாறு

தொகு
  • மூல விக்கிரகம் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் படைத்தது. அந்த விக்கிரகத்தை அவர் சிவனிடமும் பிரம்மாவிடமும் அளித்தார் என்றும் ஐதீகங்களில் உள்ளன.
  • அரசரான சுதபர் அவர் மனைவியுடன் ஒரு குழந்தையை வேண்டி பிரம்மாவிடம் வழிபட்டு வந்தனர். அவர்களுடைய பக்தியை மெச்சி, பிரம்ம தேவர் அவர்களுக்கு இந்த விக்ரஹத்தை அளித்து அதை வழிபட சொன்னதாகவும் கூறப்படுவதுண்டு.

அவர்களுடைய பக்தியை மெச்சி, மகா விஷ்ணு அவர்கள் முன் தோன்றி அந்த விக்ரஹத்துடன் அவரே அவர்களுடைய மகனாக மீண்டும் மூன்று தனிப்பட்ட நிகழ்வுகளின் மூலம் வெவ்வேறு உருவங்களில் அவர்களுடைய மூன்று மறுபிறப்புகளில் அவர்களுக்கு பிறப்பார் என்று அவர்களுக்கு வரம் அளித்தார்.இப்படியாக அவர்களுக்கு மூன்று மறுபிறப்புகளில் அதே விக்ரஹத்தை வழிபடும் ஓர் நல்ல வாய்ப்பும் கிடைத்தது.

    • சத்திய யுகத்தில், பிரஜாபதி சுதபர் மற்றும் அவருடைய மனைவி ப்ர்ச்ணியின் மகன் ப்ர்ச்னிகர்பராக மஹா விஷ்ணு பிறந்தார். மேலும் அவர் உலகத்திற்கு பிரம்மச்சர்ய விரதத்தைக் கடைப்பிடிக்கும் முறைகளை கற்றுத் தந்தார். (திருமணம் புரியாமல் கடும் தவம் மேற்கொள்வது).
    • த்ரேதா யுகத்தில் அவர்களுடைய அடுத்த பிறவியில் சுதபரும் அவருடைய மனைவியும், காஷ்யபர் மற்றும் அதிதியாகப் பிறந்தார்கள்.காஷ்யபர், அதிதி தம்பதியினருக்குக் குழந்தையாக வாமனர் அவதரித்தார்.
    • த்வாபர யுகத்தில் மூன்றாவது பிறப்பில் அவர்கள் வசுதேவர் மற்றும் தேவகியாகப் பிறந்தார்கள்.அவர்களுடைய எட்டாவது மகனாக இறைவன் கிருஷ்ணராக அவதரித்தார்.இறைவனான கிருஷ்ணரே இந்த விக்ரஹத்தை துவாரகையில் பிரதிஷ்டை செய்து, அதை வழிபடத் தொடங்கினார்.[4]

உத்தவரிடம் மூல விக்கிரகம் வந்தது

தொகு

இறைவன் கிருஷ்ணரின் சுவர்க்க ஆரோஹணத்திற்கான நேரம் நெருங்க நெருங்க (வைகுண்டத்திற்கு செல்வது), அவரது முதன்மை பக்தரும் சித்தப்பா மகனும் முதன்மை அமைச்சருமான உத்தவர் ,அவரை மனதில் நினைத்து உருகி மிகவும் வருத்தம் அடைந்தார். அப்பொழுது இறைவனும் அவரைப்பார்த்து இரங்கி உத்தவரிடம் இந்த விக்ரஹத்தை அளித்ததோடு மட்டும் அல்லாமல், தேவர்களின் குருவாகத் திகழ்ந்த பிரஹச்பதியிடம் இந்த விக்ரஹத்தை ஒரு நல்ல இடத்தில் பிரதிஷ்டை செய்யும் படி உத்தரவிட்டார். உத்தவர் அவருடைய மறைவிற்குப்பிறகு கலி யுகத்தில் உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு ஏற்படப்போகும் கஷ்ட நஷ்டங்களை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அதற்கு இறைவன் அவரே இந்த விகரஹத்தில் உறையப்போவதாகவும், மேலும் அவரிடம் தஞ்சம் புகும் பக்தர்களுக்கு அவர் ஆசிகள் வழங்கி அனுக்கிரஹிக்கப் போவதாகவும் சொல்லி உத்தவரை சமாதானப்படுத்தினார்.

துவாரகையைத் தாக்கிய ஒரு பெரிய பிரளயத்தில் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த விக்ரஹத்தை குரு அவருடைய முதன்மை சிஷ்யனான வாயுவின் உதவியுடன் மீட்டெடுத்தார். குரு மற்றும் வாயு ஒரு நல்ல இடத்தை தேடி உலகெங்கும் சுற்றி அலைந்தார்கள். இறுதியில் அவர்கள் பாலக்காட் சந்து வழியாக பாலக்காடை அடைந்தார்கள் மேலும் அங்கே அவர்கள் பரசுராமரை சந்தித்தார்கள், பரசுராமர் அவர்கள் கொண்டுவந்த விக்ரஹத்தை தேடிக்கொண்டு த்வாரகாவிற்கு செல்வதாக இருந்தார். பரசுராமர் குரு மற்றும் வாயு தேவர்களை மிகவும் அழகான பச்சைப்பசேல் என்று விளங்கும் இடத்திற்கு அழைத்து சென்றார், அங்கே காணப்பட்ட அழகான தாமரை தடாகத்தில் இறைவன் பரமசிவர் வசிப்பது போன்ற உள்ளுணர்வை அவர்கள் அடைந்தார்கள். அங்கே இறைவனான பரமசிவன் தனது மனைவி பார்வதியுடன் அவர்களுக்கு காட்சி அளித்தார் மேலும் அவர்களை வரவேற்று அந்த விக்ரஹத்தை ஸ்தாபனம் செய்வதற்கு அதுவே உகந்த இடமாகும் என்பதையும் தெரிவித்தார். பரமசிவர் குரு மற்றும் வாயு தேவர்களை அந்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்கான சடங்குகளை தொடங்கி நடத்த அனுமதி வழங்கினார் மேலும் அவர்கள் இருவரும் இணைந்து விக்ரஹத்தை நிறுவியதால் (அதாவது குருவும் வாயுவும் இணைந்து செயல் புரிந்ததால்) அன்றிலிருந்து அவ்விடம் குருவாயூர் என்ற வழங்கப்படும் என்று ஆசீர்வதித்தார். அதற்குப்பிறகு பரமசிவர் மற்றும் பார்வதி இருவரும் எதிர்க்கரையில் இருந்த மம்மியூருக்கு திரும்பி சென்று விட்டனர்.

இந்த நிகழ்ச்சியை நினைவு கூறுவதற்காகவே, குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருகாமையில் உள்ள மம்மியூர் சிவரையும் ஆராதித்தால் மட்டுமே அவர்களுடைய புனித யாத்திரையின் முழுவதுமான புண்ணிய பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். தேவர்களின் வரம் மற்றும் ஆசிகள் பெற்ற விஸ்வகர்மா என போற்றப்படும் கட்டிடக்கலை வினைஞர் இந்த கோவிலை கட்டியவராவார். அவர் இந்த கோவிலை கட்டிய விதம் என்ன என்றால், விஷு அன்று, (அதாவது இளவேனிற் சமஇரவு நாள் அன்று, அந்நாளின் முதல் சூரிய கிரணங்கள் நேராக இறைவனின் பாதங்களை அடையும் விதத்தில் அமைக்கப்பெற்று இருந்தது. இந்த விக்ரஹம் கும்ப மாதத்தில் (பெப்ரவரி - மார்ச்) நிறுவப்பட்டது மேலும் இந்த சடங்குகள் சார்ந்த நிகழ்ச்சிகள் பூசம் நட்சத்திரம் கொண்ட நாளில் துவங்கியது மற்றும் அனுசம் நட்சத்திர தினத்தில் முடிவடைந்தது.

குருவாயூர் மகாத்மியம்

தொகு

ஸ்ரீ நாரத புராணத்தில்

தொகு

ஸ்ரீ நாரத புராணம் ஜனமேஜய என்ற பெயர் கொண்ட மற்றும் தொழு நோயால் பீடிக்கப்பட்ட நோயாளி ஒருவன் எப்படி குருவாயூரப்பன் பாதங்களில் சரண் அடைந்ததால் நோய் நீங்கி குணமடைந்தான் என்பதை சித்தரிக்கும் ஒரு அம்சம் கொண்டதாகும். பாண்டவர்களான ஐவரும் ஆட்சிப்பொறுப்பை தமது பேரனான பரிக்ஷித்திடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுடைய கடைசி காலத்தை கானகங்களில் கழிக்க முடிவுசெய்கின்றனர். பரிக்ஷித் ஒரு முனிவர் அளித்த சாபத்தால் இறந்தார், அவர் தக்ஷகன் என்ற பெயர்பெற்ற, நாகங்களுக்கெல்லாம் அரசராக திகழ்ந்தவர், பரீக்ஷித்தை தீண்டும் பொழுது இறப்பார் என்று சபித்து விட்டார். பரிக்ஷித் இறந்த பிறகு அவரது மகனான ஜனமேஜயன் அரசரானார். ஜனமேஜயன் தக்ஷகன் உட்பட அனைத்து சர்ப்பங்களும் இறந்து போவதற்காக ஒரு யாகத்தை (வேள்வி) மேற்கொண்டார், ஏன் என்றால் அவர் தான் தனது தந்தையின் இறப்பிற்கு காரணமாணவராக இருந்ததேயாகும். நூற்றுக்கணக்கான பாம்புகள் மற்றும் சர்ப்பங்கள் அந்த அக்னி குண்டத்தில் விழுந்து மாண்டன, ஆனால் அந்த யாகத்தை ஆஸ்திகன் என்ற பிராம்மணன் நிறுத்தினான், அதுவும் தக்ஷகன் இறப்பதற்கு முன்னால்.[5]

இப்படி ஜனமேஜயன் பல கோடி பாம்புகளின் இறப்பிற்கு காரணமானவன் ஆனதால், அவனுக்கு தொழு நோய் ஏற்பட்டது. அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார். ஒரு நாள் ஆத்த்ரேய முனிவர் (அத்திரி முனிவரின் மகன்) ஜனமேஜயனுக்கு முன்னால் வந்து அவரை குருவாயூர் கோவிலில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனிடம் தஞ்சம் அடையும்படி கேட்டுக்கொண்டார். ஆத்த்ரேய முனிவர் அவரிடம் கூறியது குருவாயூரில் உள்ள கோவிலில் பள்ளி கொண்டிருப்பவர் கருணைக்கடலான சாட்சாத் ஸ்ரீ ஹரியே ஆவார் மேலும் மேலும் நல்லவருக்கு நல்லவர் ஆன விஷ்ணு அவரிடம் தஞ்சம் அடையும் அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதித்து காப்பாற்றி வருவதாகவும் புகழ்ந்துரைத்தார். உடனே அவர் அந்த ஊருக்கு விரைந்து சென்றார் மேலும் குருவாயூரில் உள்ள கண்ணனை பத்து மாதங்களுக்கு துதித்து வழிபடலானார். பத்து மாதங்களுக்குப்பிறகு, அவர் நல்ல உடல் நலத்துடன் தமது நாட்டுக்கு திரும்பி வந்தார் மற்றும் அங்கு தமது ஜோதிடரை தவறாக கணித்ததற்காக கண்டித்தார். ஜோதிடரும் அவரது இடது காலில் பாம்பு கடித்த அடையாளத்தை காணலாம் என்று பதில் உரைத்தார். அவர் சாவிலிருந்து தப்பியதற்கான மூலகாரணம் அவர் அந்த நேரத்தில் ஒரு கோவிலில் இருந்ததனாலும், மேலும் அதே நேரத்தில் அங்கே அனந்தன் (பாம்புகளின் சக்ரவர்த்தி) இருந்ததாலும், மேலும் அனந்தர் குருவாயூர் கோவில் இறைவனான மகாவிஷ்ணுவின் சகோதரர் ஆவர் என்றும் கூறினார், மேலும் அந்த நேரத்தில் அவர் கோவிலில் வழிபட்டதால் சாவில் இருந்து அவர் தப்பினார் என்றும் தெரியவந்தது.[9].

இதை செவியுற்ற மகா ராஜா, குருவாயூரில் ஒரு முழுமையான கோவிலை கட்ட முன்வந்தார்.

பரம்பரைக் கதைகள்

தொகு

கேரள நாடு பெருமாள் என்ற வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் வந்த பொழுது, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் நிலைமை மேலும் மோசமடைந்தது மற்றும் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது. பெருமாள் வம்சத்தவர் மிக்கவாறும் சைவர்கள் ஆவார் மேலும் அதனால் அவர்கள் வைஷ்ணர்களின் கோவில்களில் அத்தனை அக்கறை காட்டவில்லை. அவர்களுடைய காலத்தில் மம்மியூரில் இருந்த சிவன் கோவிலுக்கு அவர்கள் ஆதரவு அளித்தார்கள் மேலும் அப்படி ராஜ பரம்பரையினர் மரபு மாறி செயல் புரிந்ததால், மக்களும் அவ்வழியையே பின்பற்றி, சிவரை ஆராதித்து சிவன் கோவிலுக்கு செல்லத்தொடங்கினார்கள். இப்படியாக குருவாயூர் கோவில் மிகவும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்பட்டது மேலும் கோவிலில் ஒரு விளக்கைக்கூட எரிய வைக்க முடியாத நிலைமை ஆட்கொண்டது. இப்படி இருக்கையில் ஒரு நாள், ஒரு பெரியவர் மம்மியூர் கோவிலுக்கு சென்று உணவும் இரவில் தங்க இடமும் அளிக்கும் படி கேட்டுக்கொண்டார். அந்நேரம் கோவில் நல்ல நிலைமையில் இருந்தாலும், அந்த கோவிலை பராமரித்தவர்கள் ஒன்றுமே இல்லாதது போல பாவனை செய்தார்கள் மேலும் கோபத்துடன் அவரை அருகாமையில் உள்ள குருவாயூர் கோவிலில் சென்று வசதிகளை பெற்றுக்கொள்ளும் படி இகழ்ந்து அவரை அங்கு அனுப்பினார்கள், அந்தக்கோவிலின் அப்போதைய நிலைமையை நன்றாக உணர்ந்துகொண்டே அவர்கள் அப்படி செய்தார்கள். அந்தப் பெரியவர் குருவாயூர் கோவிலின் வாயிலுக்கு வந்த உடன், ஒரு பிராம்மண சிறுவன் அவரை உடனுக்குடன் ஆதரித்து வரவேற்றான் மேலும் நன்றாகவே உணவு படைத்து அவருடைய விருப்பங்களை நிறைவேற்றினார். அந்தப்பெரியவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இவ்வாறு ஆசீர்வதித்தார். "நான் இங்கு மம்மியூர் கோவிலில் இருந்து வந்தேன், ஏன் என்றால் அங்கே அவர்கள் ஒன்றுமே இல்லை என்று சொன்னதனால்" என்று அவர் கூறினார்."மேலும் அவர்கள் இங்கே எல்லாமே நிறைய கிடைக்கும் என்றும் சொன்னார்கள். சரி, இன்று முதல் அது இங்கே அப்படியே ஆகக் கடவது!" என்றுரைத்தார். மேலும் அந்த நாள் முதல், மம்மியூர் சிவர் கோவிலின் நிலைமை குறைய தொடங்கியது, மேலும் குருவாயூர் விஷ்ணு கோவிலின் புகழ் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து பரவத்தொடங்கியது.

வரலாறு

தொகு
 
கோயிலின் முதன்மை வாயில்

பாரம்பரிய கதைகளின் படி, இக்கோவிலில் வணங்கப்படும் விக்கிரகமானது, 5000 வருடங்களுக்கும் மேல் பழமையானதாகும்.[6] ஆனால் இதனை நம்பவைக்கும் படியான வரலாற்று சுவடுகள் இல்லை. 14 ஆம் நூற்றாண்டில், 'கோகசந்தேசம் ' என்ற தமிழ் வரலாற்று படைப்பில், குருவாயூர் என்ற இடத்தைப்பற்றி ஒரு குறிப்புக் காணப்படுகிறது. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் (நாராயணீயம் என்ற மகா காவியம் படைத்த பிறகான ஐம்பது வருடங்களுக்குப்பிறகு) குருவாயூரைப் பற்றிய நிறைய குறிப்பீடுகளை காணலாம். பழம் பெரும் திராவிட மொழியில், குருவை என்பது கடலைக் குறிப்பதாகும், மேலும் கடற்கரைக்கு அருகாமையில் இருந்ததால் குருவாயூர் என வழங்கப்பெற்றிருக்கலாம்.கோவிலைப் பற்றிய மிகவும் முந்தைய குறிப்புகள் 17 ஆம் நூற்றாண்டையே சார்ந்தவையாகும்.

கேரளாவில் அமைந்திருக்கும் அனைத்து விஷ்ணுவின் கோவில்களைப் பற்றிய பாடல்களை ஆழ்வார்கள் பாடிய பாடல்களில் காணலாம், ஆனால் அவர்கள் வாழ்ந்து வந்த காலம் குறிப்பாக தெரியவில்லை. அவர்கள் இயற்றிய பணிகளில் குருவாயூர் பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை. மேலும் இதே போல 12 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கப்பெற்ற தாமிரத்தால் ஆன தட்டுகள் மற்றும் கற்களில் பதிக்கப்பட்ட சொற்களில் கேரளத்தில் காணப்படும் முதன்மையான விஷ்ணுவின் கோவில்கள் பற்றிய குறிப்பீடுகளில் குருவாயூர் பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை.[12]

போர்

தொகு

மாமாங்கம் என்பது பாரதப்புழை ஆற்றின் கரையில் குடிகொண்டுள்ள திருநாவாய் என்ற இடத்தில் கொண்டாடப்படும் ஒரு மிகவும் பெயர் பெற்ற உற்சவமாகும். சாமூத்திரி வம்சத்தவருக்கும் திருநாவாயின் வள்ளுவநாட்டு இராஜாவுக்கும் இடையே நடந்த போர் ஒரு வகையில் குருவாயூர் கோவிலுக்கு புகழை தேடித்தந்தது. இந்தப்போர் நீண்டுகொண்டே போனதால், நதியின் அக்கரையில் இருந்த மக்கள் குருவாயூர் கோவிலுக்கு செல்வதையே விரும்பினர். சாமூத்திரி தலைவனும் ஒரு பக்தனாக மாற, அவரை சார்ந்த மக்கள் யாவரும் அவரைத்தொடர்ந்து இக்கோவிலை வழிபடத் துவங்கினர். இன்று நாம் காணும் இந்த கோவிலின் மத்திய ஆலயம், பொ.ஊ. 1638 ஆம் ஆண்டில் மறுநிர்மாணம் செய்யப்பட்டதாகும். அதற்குப்பிறகு, நலன் விரும்பும் மற்றும் தீயன விரும்பும் ஆவிகளை சாந்தப்படுத்துவதற்காக விஸ்வபலி என்ற வேள்வியும் நடத்தப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள், கேரளாவில் மிகவும் புகழ் பெற்ற புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மையமாக குருவாயூர் திகழ்ந்தது.[7]

டச்சு நாட்டவர்கள் கொள்ளை

தொகு

பொ.ஊ. 1716 ஆண்டில், டச்சு நாட்டவர்கள் குருவயூரை தாக்கினார்கள். அவர்கள் கோவிலை கொள்ளை அடித்தார்கள், தங்கம் மற்றும் கொடிக்கம்பத்தை சூறை ஆடினார்கள், மேலும் மேற்கு கோபுரத்திற்கு தீ வைத்தார்கள். 1747 ஆண்டில் அது மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. 1755 ஆண்டில் டட்ச் நாட்டவர் மற்றும் சமோரின் இனத்தவர்களுக்கிடையே நடந்த போரில், திரிக்குணாவாய் கோவில் அழிக்கப்பட்டது மேலும் அங்கிருந்த பிராம்மணர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பிறகு சமோரின் இனத்தவர் குருவாயூர் மற்றும் திருக்குணவாய் கோவில்கள் இரண்டையும் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர் மேலும் அக்கோவில்களின் மேல்கொய்மாவாக திகழ்ந்தனர் (தனியுரிமை கொண்ட காவலர்).

ஹைதர் அலி ஆட்சிக்காலத்தில்

தொகு
 
கொடிக்கம்பம் 1952 ஆம் ஆண்டில் தங்கத்தால் போர்த்தப்பட்டது. கோயிலின் கொடியையும் இப்படத்தில் காணலாம்

பொ.ஊ. 1766 ஆண்டில், மைசூரை சார்ந்த ஹைதர் அலி கோழிக்கோடு (காலிகட்) மற்றும் பிறகு குருவாயூரை கைப்பற்றினார். கோவிலை விடுவிக்க அவர் 10,000 பானம்ஸ் (ஒரு வகையான காசு பணம்) அபராதமாக கேட்டார். இந்த அபராதத்தொகை கட்டப்பட்டது, ஆனால் அப்பொழுது நிலவிய நம்பிக்கை இல்லாத சூழ்நிலை காரணமாக, கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்தது மேலும் கோவிலுக்கு வழங்கப்பட்ட அரிசியும் நிறுத்தப்பட்டது, மேலும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய நிலுவைகளையும் கட்டவில்லை. மலபார் கவர்னராக செயல்புரிந்த ஸ்ரீ நிவாச ராவ் விடுத்த வேண்டுகோளின் படி, ஹைதர் அலி இக்கோவிலை தேவனுக்கு கருணை காட்டியதாகக் கூறி (இலவசப்பரிசு) கோவிலை விடுவித்தார் மேலும் அப்படியாக அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டது. மீண்டும் 1789 ஆண்டில் திப்பு சுல்தான் சமோரின் நாட்டின் மேல் படையெடுத்தான். அழிவிலிருந்து காப்பாற்ற, இந்த விக்ரஹம் பூமியின் அடியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது, மேலும் கோவிலின் உற்சவர் விக்ரஹம் மல்லிச்சேரி நம்பூதிரி மற்றும் கக்காத் ஒத்திகன் ஆகியோர்களால் அம்பலப்புழை என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. திப்பு சுல்தான் சிறிய கோவில்களை யாவும் அழித்தான் மேலும் பெரிய கோவிலுக்கும் தீ வைத்தான், ஆனால் சரியான வேளையில் மழை பொழிந்ததால், கோவில் காப்பாற்றப்பட்டது. திப்பு சுல்தான் 1792 ஆம் ஆண்டில் நடந்த ஆங்கிலேயர்கள் மற்றும் சமொரினுக்கு எதிரான போரில் தோல்வி அடைந்தான் மேலும் செப்டம்பர் 17, 1792 அன்று உற்சவ மூர்த்தி திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால் நித்ய பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் பாதை ஏற்பட்டது.

உள்ளநாடு பணிக்கர்மார்கள்

தொகு

அதனால் உள்ளநாடு பணிக்கர்மார்கள் கோவிலை காப்பாற்றி மேலும் 75 வருடங்களுக்கு கோவிலை பாதுகாத்து வந்தார்கள் (1825 முதல் 1900 வரை). செம்பகேசரி நம்பூதிரி மற்றும் தேஷவர்மன் நம்பூதிரி போலவே, பணிக்கர்மார்களும் தமது அனைத்து உடமைகளையும், சொத்து மற்றும் சேவைகள் புரிவது, அனைத்தையும் கோவிலுக்கே அற்பணித்தார்கள். அப்படியாக அவர்களுடைய உதவியுடன் நித்ய பூஜைகள் மற்றும் வருடாந்தர (ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் நிகழ்ச்சிகள்) உற்சவங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.1859 முதல் 1892 வரை, சிற்றம்பலம், விளக்குமடம், கூத்தம்பலம் மற்றும் சாஸ்தா ஆலயம் போன்றவை புதுப்பிக்கப்பட்டு அதன் கூரைகளை செம்பு தகடுகளால் மாற்றியமைக்கப்பெற்றன. 1900 ஆம் ஆண்டில், ஸ்ரீ கொந்தி மேனன், ஒரு அதிகாரி, கோவிலில் சடங்குகள் மற்றும் வணங்குவதற்கான நியம நிஷ்டைகளை ஏற்பாடு செய்து, அதை நன்கு பாலிக்கவும் மற்றும் கோவிலின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கைகளை எடுத்தார். அவர் கோவிலுக்கான பெரிய மணியை கட்ட ஏற்பாடுகள் செய்தார் மேலும் பதயபுர (கூலக் களஞ்சியம்)என அறியப்படும் சேமிப்பு கிடங்கை புதுப்பித்தார். 1928 ஆம் ஆண்டில், குருவாயூர் கோவிலின் நிருவாகம் மீண்டும் சமோரின் குடும்பத்தினரிடம் மாற்றப்பட்டது.

குருவாயூர் சத்தியாகிரகம்

தொகு

1931-32 ஆண்டுகளில், மறைந்த கேளப்பன் ("கேரளாவின் காந்தி" என அறியப்பட்டவர்) குருவாயூர் சத்தியாகிரஹம் என்ற போராட்டத்திற்கு தலைமை வகித்து, தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு கோவிலில் நுழைவதற்கு அனுமதி கிடைக்க போராடினார். தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களுக்கு திய்யரம்பலம் என்ற இடம் வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது, மேலும் அவ்விடம் கோவிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் கொண்டதாகும். அவர் கிழக்கு கோபுரத்திற்கு முன்னால் சாகும் வரை பட்டினிப் போராட்டம் மேற்கொள்ள துணிந்தார். மகாத்மா காந்தி நல்கிய அறிவுரையை ஏற்று அவர் போராட்டத்தில் இருந்து விலகினார். அதனால் உடனுக்குடன் எந்த பயனும் கிடைக்கவில்லை என்றாலும், பையப்பைய தலித் மக்களுக்கு கேரளாவில் குடிகொண்டுள்ள பல தரப்பட்ட கோவில்களில் நுழைந்துவழிபடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.1947 ஆம் ஆண்டில், குருவாயூர் கோவில் அனைத்து இந்து மதத்தினருக்கும் சேவை செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டது. பின்னர், நமஸ்கார சத்தியம் (விருந்து), பிராம்மணருக்கு மட்டும் வழங்கப்பட்டது, நிறுத்தி வைக்கப்பட்டது மேலும் ஜாதி பேதமில்லாமல் அனைவரும் பங்குபெறும் நிலைமை உருவாக்கப்பட்டது.

1970 ஆண்டு தீ விபத்து

தொகு
 
தீ விபத்துக்குப் பின்னர் விளக்குமடம் மீளக் கட்டப்பட்டது

நவம்பர் 29 , 1970, ஏகாதசி விளக்கேற்றம் அன்று இரவு கோவில் வளாகம் ஒரு பெரிய தீ விபத்துக்குள்ளாகியது. முதலில் மேற்கு சிற்றம்பலத்தில் (சுற்றிவரும் கோவில் பாதை) துவங்கி அனைத்து இடங்களிலும் பரவி ஐந்து மணிநேரத்திற்கும் மேல் எரிந்தது. அந்நாளில் விளக்கேற்றம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது மேலும் விளக்கு மடத்தில் இருந்த அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டன. இறைவனின் யானைகளுடன் கூடிய (சீவேலி) பிரதிக்ஷிண ஊர்வலத்திற்குப் பிறகு, சடங்குகள் முடிவு பெற்று கோவிலின் கதவுகள் தாளிடப்பட்டன. விடியற்காலை 1.00 மணியளவில், மேற்கு சுற்றம்பலத்தின் அருகாமையில் இருந்த யாரோ ஒருவர் கோவிலுக்குள்ளே தீ எரிவதை காண நேர்ந்தது.

தீயணைப்பு முயற்சி

தொகு

அனைத்து தரப்பினரையும் கொண்ட மக்கள், ஜாதி மத வயது வேறுபாடுகளை பார்க்காமல் ஒன்றாக இணைந்து கோவிலை தீயில் இருந்து காப்பாற்ற மணல் மற்றும் தண்ணீருடன் பாடுபட்டனர். மேலும் நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர்.முன்யோசனை கொண்ட யாரோ ஒருவர் மின் விளக்குகளை அணைத்து மின் விபத்தால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்த்தார். பிறகு, தீ அணைக்கும் படையினர் பொன்னானி, திருச்சூர், மற்றும் பாக்ட் நிறுவனத்தில் இருந்து வந்து மேற்குப்புற விளக்குமடத்தில் துடங்கிய தீயை அணைக்க முற்பட்டனர். விடியற்காலை 5.30 மணிகளுக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.கட்டுக்கடங்காத தீ விபத்தை பார்த்து, நிருவாகத்தினர் விலை பிடித்த பண்டங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தினர். கணபதி சிலை, சாஸ்தாவின் சிலை, இறைவன் குருவாயுரப்பனின் மூல விக்ரஹம் போன்றவை கூத்தம்பலத்திற்கும் பிறகு மேலும் பாதுகாப்பான இடத்திற்கும், இறுதியில் தந்திரியின் வீட்டிற்கும் எடுத்துச்செல்லப்பட்டது. இந்த தீயானது சுற்றம்பலம், மேற்கு பாகத்தில் இருந்த விளக்குமாடத்தின் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பாகங்களை முழுமையாக ஆட்கொண்டு அழித்தது. [8]

பாதிக்கப்படாத பகுதிகள்

தொகு

சுற்றம்பலம் 3 கஜ தூரத்தில் இருந்தாலும், ஆனால் இந்த வலிமையான தீ அருகாமையில் ஸ்ரீ கோவிலில் இருந்த உலர்ந்த மலர் மாலைகளை, பற்றிக்கொண்டு எரியவைக்கவில்லை. ஸ்ரீகோவில் (கர்ப்பகிருகம்), விக்கிரகம்(மூல விக்கிரகம்), சிறிய கோவில்களான கணபதி, அய்யப்ப, பகவதி விக்கிரகங்கள் மற்றும் கொடிக்கம்பம் போன்றவை சேதமடையவில்லை.

புதுப்பித்தல்

தொகு

கோவிலை புதிப்பிப்பதற்கான பணிகளை நிறைவேற்ற இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஒரு குழுவின் தலைவராக கேரள அரசின் தேவச்வத்தின் மந்திரி நியமிக்கப்பட்டார் மேலும், ஒரு தொழில் நுட்ப குழு புனர் நிர்மாணத்திற்கான ஆலோசனைகள் வழங்க அமைக்கப்பட்டது. அந்தக்குழுவில் பெயர்பெற்ற பொறியாளர்கள், ஜோசியர்கள் மற்றும் கோவில் தந்திரி உறுப்பினர்களாக இருந்தார்கள்.இந்த புனர் நிறமான பணிகளுக்கு காஞ்சி மடத்தின் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அடிக்கல் நாட்டினார். இந்தப் பெரிய தீ விபத்திற்குப்பிறகு, இந்தக் கோவில் மீண்டும் இறைவனின் புகழைப்பாடும் வகையில் புதுப்பிக்கப்பட்டது. கோவிலின் விளக்குமடம், முதல் முறையாக, விஷு உற்சவ நாளான,14 ஏப்ரல், 1973 அன்று, மீண்டும் ஏற்றப்பட்டது.

பூஜா முறைகள்

தொகு

ஒவ்வொரு நாளன்றும் ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் வரையறுக்கப்பட்ட பூசை முறைகளை மற்றும் தாந்தரிக வடிவில் சென்னாஸ் நாராயணன் நம்பூதிரி (பிறப்பு 1427) அவர்களால் எழுதி குறிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியும் இந்த கோவிலில் இறை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குருவாயூர் கோவிலில் பரம்பரை பரம்பரையாக சென்னாஸ் நம்பூதிரிமார்களே கோவிலின் தாந்திரிகர்களாக செயல்புரிந்து வருகின்றனர்.[2] ஒவ்வொரு நாளும் கோவில் / பூசை விதிமுறைகள் மிகவும் கண்டிப்புடனும், விட்டுக் கொடுக்காமலும் நிறைவேற்றப்படுகின்றன. இதை கவனித்துக் கொள்வதற்காகவே இக்கோவிலின் தந்திரி எந்நேரமும் கோவிலிலேயே காணப்படுவார். கோவிலின் மேல்சாந்தியானவர் (முதன்மை பூசாரி) விடியற்காலை 2:30 மணிக்கே ஸ்ரீ கோவிலில் (கர்ப்பக்கிருகத்தில்) நுழைந்து விடுவார். உச்சி பூஜை முடியும் 12:30 மணி வரை தண்ணீர் கூட அருந்தமாட்டார்.[9] வேதகாலத்து பாரம்பரியங்களை இன்றும் தொடர்ந்து கச்சிதமாகவும் நேர்மையாகவும் பேணப்பட்டு வருவதே இந்தக் கோவிலின் மிகவும் சிறந்த அம்சமாகும்.

பக்தர்களுக்கும் அர்ச்சகர்களுக்குமான விதிமுறைகள்

தொகு

ஆடைக் கட்டுப்பாடு

தொகு

ஆண் மக்கள் தமது இடையை சுற்றி முண்டோ வேட்டியோ அணிந்து கொள்ள வேண்டும். மேலும் மார்பிற்கு மேல், எந்த விதமான மேல் சட்டையையும் அணியக்கூடாது. ஆனால் மார்பகத்தை ஒரு சிறிய துண்டு அல்லது வேட்டியால் மறைப்பதை நிருவாகம் தடை செய்யாது.

பெண்களும் சிறுமிகளும் கால்சட்டைகள் போன்ற உடைகளை அணியக்கூடாது. பெண்கள் சேலை அணியலாம். சிறுமிகள் நீண்ட பாவாடையையும் இரவிக்கைகளையும் அணியலாம். தற்பொழுது பெண்களுளுக்கு கெடுபிடிகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டு சல்வார் கமீஸ், சூரிதார் போன்ற உடைகளை அணிவதற்கு நிருவாகம் அனுமதி வழங்கியுள்ளது. [10] இருந்தாலும் ஆழமான மத நம்பிக்கை கொண்ட பெண்டிர் இன்றும் சேலையோ, பாரம்பரிய கேரள நாட்டு உடைகளையோ அணிவதையே விரும்புகின்றனர். வடக்கு இந்தியர்களைப் போல் அல்லாமல், தமிழகத்திலும் கேரளத்திலும் மற்ற இதர தென் இந்திய மாநிலங்களிலும் ஹிந்து மதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் தலையில் துணியை கொண்டு மறைக்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பதில்லை.

காலணிகள்

தொகு

இந்தியாவில் இதர கோவில்களில் உள்ளதைப் போல, கோவிலுக்குள் காலணிகளை அணிவது கண்டிப்புடன் தடை செய்யப்பட்டுள்ளது.

மேல் சாந்தி (தலைமை அர்ச்சகர்) விரத வாழ்வு

தொகு

மற்ற இந்துக் கோயில்களைப் போலன்றி, மூலவர் கிருஷ்ண விக்கிரகத்தைத் தொட்டு பூஜை செய்யும் தலைமை அர்ச்சகர் (மேல் சாந்தி) இல்லற வாழ்க்கையை விட்டு, கோயில் உள்ளேயே வாழ வேண்டும். வீட்டுக்கு சென்று வருதல் கூடாது. இம்முறைக்கு துணைபுரிவதற்காக மேல் சாந்தி ஆறு மாதத்திற்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றார். ஒருவரே தொடர்ச்சியாக மேல் சாந்தியாக இருக்க நிருவாகம் அனுமதிப்பதில்லை.

இருப்பிடமும் போக்குவரத்தும்

தொகு

பேருந்து

தொகு

பல தரப்பட்ட தனியார் பேருந்து நிறுவனங்களும் அரசும் குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக கணக்கற்ற பேருந்துகளை இயக்குகின்றன. கோயிலுக்கு அருகிலேயே குருவாயூர் பேருந்து நிலையம் உள்ளது.

தொடருந்து

தொகு

குருவாயூரப்பன் கோவில் திருச்சூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சூர் இரயில் நிலையம் அனைத்து விரைவு இரயில் இணைப்புகளுடன் கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. குருவாயூர் கோயிலுக்கு அண்மையில் உள்ள குருவாயூர் இரயில் நிலையத்திற்கு சென்னையில் புறப்பட்டு திருவனந்தபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக வரும் குருவாயூர் - திருவனந்தபுரம், மதுரை - சென்னை விரைவுவண்டி வருகிறது. மேலும், எர்ணாகுளம், திருச்சூர் வழியாக குருவாயூருக்கு வரும் பயணிகளின் இரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.

விமான நிலையம்

தொகு

குருவாயூருக்கு மிகவும் அருகில் உள்ள வானூர்தி நிலையம் கொச்சி நெடும்பாச்சேரியில் உள்ள கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது குருவாயூரிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது குருவாயூரை இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்களுடன் இணைக்கிறது.

புகழ் பெற்றவர்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-11-24. பார்க்கப்பட்ட நாள் 2010-02-12.
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2010-02-11.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-25. பார்க்கப்பட்ட நாள் 2010-02-11.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-14. பார்க்கப்பட்ட நாள் 2010-02-11.
  5. நாராயணீயம், மொழிபெயர்ப்பு சுவாமி தபச்யானந்தா, பின்னிணைப்பு-1,பக்கம் 350, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
  6. http://www.guruvayurdevaswom.org/htemple பரணிடப்பட்டது 2020-09-18 at the வந்தவழி இயந்திரம் 1.shtml
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-28. பார்க்கப்பட்ட நாள் 2010-02-11.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-22. பார்க்கப்பட்ட நாள் 2010-02-11.
  9. http://www.hindupedia.com/en/Guruvayur_Krishna_Temple
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-01-20. பார்க்கப்பட்ட நாள் 2010-02-11.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Guruvayur Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.