கூர்மநாதசுவாமி கோவில், சிறீகூர்மம்

இந்து கோவில்

கூர்மநாதசுவாமி கோவில் ( Kurmanathaswamy temple) சிரிகூர்மம் கோவில் எனவும் அறியப்படும் இது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் சிறீகாகுளம் மாவட்டத்தில் காரா வட்டத்தில் சிறீ கூர்மம் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும். இங்கு பிரதான தெய்வம் கூர்மநாதசுவாமியாகவும் (விஷ்ணுவின் கூர்ம அவதாரம்), அவரது துணைவியார் இலட்சுமி கூர்மநாயகியாக வணங்கப்படுகிறார்கள். இந்து புராணங்களின்படி, பிரதான தெய்வம் ஆமை வடிவத்தில் இங்கே நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. பிரம்மா பின்னர் கோபால யந்திரத்துடன் தெய்வத்தை புனிதப்படுத்தினார். இந்த கோவில் மூதாதையர் வழிபாட்டிற்கு பிரபலமானது.

கூர்மநாதசுவாமி கோவில்
பிரதானக் கோவிலின் விமானம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:சிறீகாகுளம் மாவட்டம்
அமைவு:சிறீ கூர்மம்
கோயில் தகவல்கள்
இணையதளம்:http://www.srikurmam-temple.com/

புராணம் தொகு

இந்து தெய்வமான விஷ்ணுவை ஆமை வடிவத்தில் வழிபடும் ஒரே இந்திய கோவிலாக கருதப்படுகிறது. ஆரம்பத்தில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டு, கூர்மேசுவரர் கோவில் என்று அறியப்பட்டு வந்த இக்கோயில் பொ.ச.11ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த இராமானுசர், வைணவ கோவிலாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது. [1] [2] [3] அப்போதிருந்து, கோவில் இடைக்காலத்தில் சிம்மாச்சலத்துடன் வைணவத்தின் ஒரு முக்கிய மையமாகக் கருதப்பட்டது. பின்னர், மத்துவரின் சீடர் நரஹரி தீர்த்தரின் சிறீகூர்ம வைணவ மத நடவடிக்கைகள் இருக்கை முக்கிய இருக்கையாக இருந்தது. [4] இந்த கோவிலில் இரண்டு வெற்றித் தூண் உள்ளன. இது ஒரு வைணவ கோவிலில் அரிதாகக் காணப்படும் ஒன்றாகும். இங்கு 108 ஒற்றைக்கல் தூண்கள், ஒன்றுக்கொன்று ஒத்திருக்கவில்லை. கடந்த காலத்தில் இந்த பகுதியில் ஆட்சியிலிருந்த அரச பரம்பரை தொடர்பான சில கல்வெட்டுகள் உள்ளன. வயதான மற்றும் இளம் நட்சத்திர ஆமைகளைப் பாதுகாக்க ஒரு ஆமை பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்த இனத்தின் ஒரே பாதுகாப்பு மையமாக இவ்விடம் அமைந்துள்ளது.

 
இந்து தெய்வமான விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதாரம்

இங்கு சைவ, வைணவ வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறது. கோவிலில் நான்குவேளை தினசரி சடங்குகளும் நான்கு வருடாந்திர திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் மூன்று நாள் தோலோட்சவம் முக்கியமானது. விஜயநகரத்தைச் சேர்ந்த கஜபதி அரசர்கள் கோவிலின் அறங்காவலர்களாக இருந்துள்ளனர். இது ஆந்திர அரசின் இந்து அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்திய அஞ்சல் துறை 2013 ஏப்ரல் 11ஆம் தேதி கோவிலைக் கொண்ட ஒரு முத்திரையை வெளியிட்டது.

வரலாறு தொகு

 
கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் ஒன்று, தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது

விசாகப்பட்டினத்திலிருந்து 130 கிலோமீட்டர் (81 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காரா மண்டலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.[5] சிறீகாகுளம் நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் (9.3 மைல்) தொலைவிலும், சூரியநாராயணர் கோவில் அமைந்துள்ள அரசவள்ளியில் இருந்து 3.5 கிலோமீட்டர் (2.2 மைல்) தொலைவிலும் உள்ளது.[6] கோவிலின் கல்வெட்டு வரலாறு 11 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்குகிறது. இது ஒரு வைணவ கோவில் என்பதால் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே பிரபலமாக உள்ளது. கலிங்க நாட்டை ஆண்ட கீழைக் கங்கர் அரச மரபை தோற்றுவித்த அனந்தவர்மன் சோடகங்கனின் ஆதரவுடன் அவரது சீடர்கள் கோவிலில் வைணவத்தை நிறுவினர். [4] இந்த சம்பவத்திற்குப் பிறகு, காலையிலும் மாலையிலும் தெய்வத்திற்கு முன்பாக தினமும் பாடவும் நடனமாடவும் தேவதாசிகளின் ஒரு குழு பயன்படுத்தப்பட்டது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. Suryanarayana 1986.
  2. Patel 1992.
  3. Choudary & Udayalakshmi 2006.
  4. 4.0 4.1 4.2 Krishna Kumari 1990.
  5. Mehta, Sulogna (29 September 2015). "All is not well with the star tortoises of Sri Kurmam Temple". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 3 January 2017. பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.
  6. P. Benjamin, Ravi (15 September 2008). "Tourism in Srikakulam dist. needs fillip". தி இந்து. Archived from the original on 3 January 2017. பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.

நூலியல் தொகு