கூலிம்-பண்டார் பாரு மக்களவை தொகுதி

மலேசிய மக்களவைத் தொகுதி

கூலிம்-பண்டார் பாரு மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kulim-Bandar Baharu; ஆங்கிலம்: Kulim-Bandar Baharu Federal Constituency; சீனம்: 居林-万拉峇鲁国会议席) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டம் (Kulim District); பண்டார் பாரு மாவட்டம் (Bandar Baharu District); ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P018) ஆகும்.

கூலிம்-பண்டார் பாரு (P018)
மலேசிய மக்களவை தொகுதி
கெடா
Kulim-Bandar Baharu (P018)
Federal Constituency in Kedah
கெடா மாநிலத்தில் கூலிம்-பண்டார் பாரு மக்களவை தொகுதி
மாவட்டம்கூலிம் மாவட்டம்; பண்டார் பாரு மாவட்டம்; கெடா
வாக்காளர் தொகுதிகூலிம்-பண்டார் பாரு தொகுதி
முக்கிய நகரங்கள்பண்டார் பாரு; கூலிம்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்ரோசுலான் ஆசிம்
(Roslan Hashim)
வாக்காளர்கள் எண்ணிக்கை90,141
தொகுதி பரப்பளவு690 ச.கி.மீ
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் கூலிம்-பண்டார் பாரு தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (70.3%)
  சீனர் (17.2%)
  இதர இனத்தவர் (0.2%)

கூலிம் மற்றும் பண்டார் பாரு என்ற இரண்டு நகரங்களின் பெயரால் இந்த தொகுதிக்கு பெயரிடப்பட்டு இன்றும் பயன்படுத்தப்படுகிறது.[1]

கூலிம்-பண்டார் பாரு தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாலிங் தொகுதி 41 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2]

பொது தொகு

கூலிம் மாவட்டம் தொகு

கூலிம் மாவட்டம் (மலாய்:Daerah Kulim; ஆங்கிலம்:Kulim District) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் கெடா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் பினாங்கு மாநிலத்தை எல்லையாகக் கொண்டு உள்ளது. பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு கிழக்கே (27 km (17 mi)) தொலைவில் உள்ளது.

நிர்வாகப் பிரிவுகள் தொகு

கூலிம் மாவட்டம் 15 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[3] கூலிம் மாவட்டத்தைக் கூலிம் நகராட்சி மன்றம் நிர்வகிக்கிறது.

  1. பாகன் சேனா (Bagan Sena)
  2. ஜுஞ்சோங் (Junjung)
  3. காராங்கான் (Karangan)
  4. கெலாடி (Keladi)
  5. கூலிம் நகரம் (Kulim Town)
  6. லூனாஸ் (Lunas)
  7. மகாங் (Mahang)
  8. நாகாலிலிட் (Nagalilit)
  9. பாடாங் சீனா (Padang China)
  10. பாடாங் மேகா (Padang Meha)
  11. செடிம் (Sedim)
  12. சிடாம் கானான் (Sidam Kanan)
  13. சுங்கை செலுவாங் (Sungai Seluang)
  14. சுங்கை உலார் (Sungai Ular)
  15. தெராப் (Terap)

பண்டார் பாரு மாவட்டம் தொகு

பண்டார் பாரு மாவட்டம் (Bandar Baharu District) கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.

இந்த மாவட்டத்திற்கு ஒரு கட்டத்தில் பண்டார் கரஸ்டேசியா (Bandar Crustacea) என மறுபெயரிட முன்மொழியப்பட்டது. அத்துடன் பண்டார் பாரு ஒரு நகரம், ஒரு மாவட்டம் மற்றும் ஒரு மாநிலச் சட்டமன்றத் தொகுதியும் ஆகும். கெடா மாநிலத்தின் தெற்கு முனையில் உள்ளது.[4])

கெடா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு தென்கிழக்கே 27 கி.மீ. தொலைவில், கெடா - பினாங்கு - பேராக் மாநிலங்களின் எல்லை முக்கோணத்தில் அமைந்துள்ளது.

கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1959 - 2022)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பகுதி உருவாக்கப்பட்டது
கூலிம்-பண்டார் பாரு
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது 1959–1963 டான் டை செக் (Tan Tye Chek) கூட்டணி (ம.சீ.ச)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது 1963–1964 டான் டை செக் (Tan Tye Chek) கூட்டணி (ம.சீ.ச)
2-ஆவது 1964–1969 தை குவான் யாங் (Tai Kuan Yang)
1969–1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது[5][6]
3-ஆவது 1971–1973 தாய் குவான் யாங் (Tai Kuan Yang) கூட்டணி (ம.சீ.ச)
1973–1974 பாரிசான் (மசீச)
4-ஆவது 1974–1978 அசாகரி முகமட் தாயிப் (Azahari Md. Taib) பாரிசான் (அம்னோ)
5-ஆவது 1978–1982 அப்துல் காதிர் சேக் பட்சிர் (Abdul Kadir Sheikh Fadzir)
6-ஆவது 1982–1986
கூலிம்-பண்டார் பாரு
7-ஆவது 1986–1990 அப்துல் காதிர் சேக் பட்சிர் (Abdul Kadir Sheikh Fadzir) பாரிசான் (அம்னோ)
8-ஆவது 1990–1995
9-ஆவது 1995–1999
10-ஆவது 1999–2004
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008–2010 சுல்கிப்லி நூர்டின் (Zulkifli Noordin) பி.கே.ஆர்
2010–2013 சுயேச்சை
13-ஆவது 2013–2018 அப்துல் அசிஸ் பட்சிர் (Abd. Aziz Sheikh Fadzir)

பாரிசான் (அம்னோ)

14-ஆவது 2018–2022 சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் (Saifuddin Nasution Ismail) பாக்காத்தான் (பிகேஆர்)
15-ஆவது 2022–தற்போது ரோசுலான் ஆசிம் (Roslan Hashim) பெரிக்காத்தான் (பெர்சத்து)

தேர்தல் முடிவுகள் தொகு

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
(கூலிம்-பண்டார் பாரு தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள் 90,141 -
வாக்களித்தவர்கள் 71,616 79.40%
செல்லுபடி வாக்குகள் 70,340 100.00%
செல்லாத வாக்குகள் 1276 -
பெரும்பான்மை 13,061 18.56%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்

பொதுத் தேர்தல் 2022 வேட்பாளர் விவரங்கள் தொகு

மலேசியப் பொதுத் தேர்தல் 2022; கூலிம்-பண்டார் பாரு தொகுதி வேட்பாளர் விவரங்கள்
சின்னம் வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் (%)
  அசுமான் நசுருதீன்
(Roslan Hashim)
பெரிக்காத்தான் 34,469 49.00%
  சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில்
(Mohamad Sofee Razak)
பாக்காத்தான் 21,408 30.44%
  முகார் உசேன்
(Muhar Hussain)
பாரிசான் 13,872 19.72%
  முகமட் யுசுரிசால் யூசோப்
(Muhamad Yusrizal Yusuf)
உள்நாட்டு போராளிகள் கட்சி 591 0.84%

கூலிம்-பண்டார் பாரு சட்டமன்ற உறுப்பினர்கள் (2022) தொகு

எண். தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N35 கூலிம் இயோ கெங் சுவான்
(Yeo Keng Chuan)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
N36 பண்டார் பாரு நோர்சப்ரினா முகமட் நோர்
(Norsabrina Mohd. Noor)
பாரிசான் (அம்னோ)

மேற்கோள்கள் தொகு

  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  • "15th General Elaction Malaysia".
  1. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  3. "KULIM PROFIL FEBRUAR 2011" (PDF). Archived from the original (PDF) on 2016-11-06. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  4. "Warga Kedah Sifatkan Keputusan MB Tukar Nama Bandar Baharu Sebagai 'Penyundalan' Bahasa Melayu". Suara.tv. Archived from the original on 2 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online இம் மூலத்தில் இருந்து 2016-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160604045153/http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  6. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-16.

மேலும் காண்க தொகு