கோபேக்மோடி
கோபேக்மோடி அல்லது #ஓடிப்போமோடி (#GoBackModi) என்பது ஒரு கொந்துக்குறி (ஹேஷ்டேக்) மற்றும் இயக்கமாகும். இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பல்வேறு இடங்களுக்கு, முதன்மையாக இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அவ்வப்போது சென்று வருவதை எதிர்த்து எழுப்பப்படும் குரல் ஆகும். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் பாதுகாப்புக் கண்காட்சியைத் திறந்து வைப்பதற்காக மோடி தமிழ்நாட்டின் சென்னைக்கு வந்தபோது இந்த கொந்துக்குறி முதன்முதலில் பிரபலமடைந்தது, அன்றிலிருந்து மாநிலத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது.[1] இருப்பினும், இயக்கத்தின் முதல் உதாரணம் #போமோனேமோடி (#PoMoneModi) என்ற கொந்துக்குறி மலையாள மொழியில் மாறுபாட்டு பயன்படுத்தப்பட்டது. மேலும் இது மே 2016 முதல் கேரளத்தில் தேர்தல் மோடி பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது கவனம்பெற்றது.[2]
தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மற்றும் மீனா கந்தசாமி, ஓவியா போன்ற முக்கிய நபர்களால் மோடியின் வருகைக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த இந்தக் கொந்துக்குறி முக்கியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.[3][4] மோடி வருகைதரும் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களிலும் இந்த இயக்கம் தரைவழிப் போராட்டங்களாக நடத்தப்பட்டன.[2]
பின்னணி
தொகு2014 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில், மோடி மற்றும் அவரது கட்சியான, பாஜாகவின் அறிக்கைகள் மற்றும் முடிவுகளான அதன் பழமைவாத சித்தாந்தங்களுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்துவிதமாக இந்த இயக்கம் பார்க்கப்படுகிறது.[5] பாஜகா கட்சியின் சித்தாந்தமானது பிரபலமாக "இந்தி, இந்து, இந்துஸ்தான்" என்ற முழக்கமாக சுருக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தி மொழியை மட்டுமே பேசும், இந்து சமயத்தை மட்டுமே பின்பற்றும் ஒரு தேசமாக இந்தியாவை மாற்றுவதற்கான தேசியவாத பார்வை ஆகும்.[6] இந்தக் கருத்து, தற்போதுள்ள இந்திய ஒன்றியத்தின் மாறுபட்ட மற்றும் கூட்டாட்சித் தன்மையில் கருத்தியல் ரீதியாக வேரூன்றிய கட்சிகள் மற்றும் மாநிலங்களின் எதிர்ப்பைக் காட்டுவதாக உள்ளது.
இயக்கங்கள்
தொகுபிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2016-ஆம் ஆண்டு கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்காக பரப்புரை செய்வதற்காக 2016 மே மாதத்தில் மோடி கேரள மாநிலத்திற்குச் சென்றார். தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், கேரளத்தின் சிசு இறப்பு விகிதத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசினார் மோடி.[7] கேரளா இந்தியாவில் சமயரீதியாக மிகவும் பன்முகத்தன்மை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும், மேலும் கேரளா மாதிரியானது சமூக ரீதியாக மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக தொடர்ந்து பாராட்டப்பட்டது. இதன் விளைவாக, கேரளத்தின் சமூகக் குறிகாட்டிகளை விமர்சிக்கும் மோடியின் அறிக்கை, அப்போதைய கேரள முதல்வர் உம்மன் சாண்டி உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் இருந்து கடுமையான எதிர்வினைகளை சந்தித்து. மோடி தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.[8] அந்தத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.[9] மோடியின் கருத்தின் மற்றொரு விளைவாக, "Go Back Modi" என்பதன் தளர்வான மொழிபெயர்ப்பான #PoMoneModi என்ற கொந்துக்குறியைப் பயன்படுத்தி, ஒரு சமூக ஊடக பரப்புரைத் தொடங்கியது. இந்த கொந்துக்குறியானது நரசிம்மம் படத்தில் பிரபலமான "நீ போ மோனே தினேஷா" என்ற பிரபல முத்திரை வரிகளை ஒத்ததாக குறிப்பிடுகிறது.[10]
2018 ஏப்ரல் 12 அன்று, பாதுகாப்பு கண்காட்சி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ராணுவத் தளவாட கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக மோடி சென்னை வந்தார். மோடி சென்னைக்கு வந்த நாளில், வெகுமக்கள் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் சிலவற்றை திமுக தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் முன்னின்று நடத்தினார். எதிர்ப்புகள் மாநிலத்தில் திராவிட சித்தாந்தத்துடன் தொடர்புடைய கருப்பு நிற அடையாளத்தால் வகைப்படுத்தப்பட்டன.[11] அதே நேரத்தில், முதல் முறையாக #GoBackModi என்ற கொந்துக்குறியைப் பயன்படுத்தி சமூக ஊடக பரப்பரைகள் வெடித்தன. அந்த கொந்துக்குறி ட்விட்டரில் உலகளவில் டாப் டிரெண்ட் ஆனது,[12] அதன் தமிழ் வடிவமான #ஓடிப்போமோடி என்பதும் பிரபலமானது.[13][14] அன்றிலிருந்து மோடி தமிழகத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தென்னிந்திய மாநிலங்களான கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றால் மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, கருநாடகம்,[15] ஆந்திரப் பிரதேசம்,[16] பஞ்சாப்,[17] மேற்கு வங்காளம்,[18] மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அசாம் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த இயக்கம் ஆதரவைப் பெற்றுள்ளது.[19] சர்வதேச அளவில், பாகித்தானில் இருந்து விடுதலை பெற்ற 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாட நிகழ்வுகளுக்கு அந்நாட்டுக்கு மோடி 2021 இல் சென்றபோது வங்கதேச குடிமக்களின் எதிர்ப்பையும் கண்டார்.[20]
எதிர்வினைகள்
தொகுஇயக்கத்தின் முதன்மை இலக்கான பாஜக, கொந்துக்குறி அசேதன என்றும், கடந்த காலங்களில் பாக்கித்தானைச் சேர்ந்த பயனர்களால் பரப்புரை செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளது.[21] இந்த கொந்துக்குறியைப் பயன்படுத்தியதாக தமிழ் நடிகை ஓவியா மீது பாஜக உறுப்பினர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.[4]
குறிப்புகள்
தொகு- ↑ Kavitha Muralidharan (1 March 2019). "Why Tamil Nadu Says #GoBackModi Every Time He Visits". The Wire. https://thewire.in/politics/why-tamil-nadu-says-gobackmodi-every-time-he-visits.
- ↑ 2.0 2.1 "Protests across Chennai as PM visits, GoBackModi trends on Twitter worldwide". தி நியூஸ் மினிட். 12 April 2018. https://www.thenewsminute.com/article/protests-across-chennai-pm-visits-gobackmodi-trends-twitter-worldwide-79440.
- ↑ Vikram Venkateswaran (29 January 2019). "#GoBackModi: Why Dissing the PM is a Trend in TN". The Quint. https://www.thequint.com/elections/social-dangal/gobackmodi-hashtag-why-is-tn-anti-modi-dmk-tamil-identity-politics#read-more.
- ↑ 4.0 4.1 "TN BJP member files complaint against actor Oviyaa for ‘Go Back Modi’ tweet". தி நியூஸ் மினிட். 15 February 2021. https://www.thenewsminute.com/article/tn-bjp-member-files-complaint-against-actor-oviyaa-go-back-modi-tweet-143442.
- ↑ Meenakshi Ganguly (13 December 2019). "Dissent Is ‘Anti-National’ in Modi’s India". Human Rights Watch. https://www.hrw.org/news/2019/12/13/dissent-anti-national-modis-india.
- ↑ Dilip Mandal (15 October 2021). "The real story is Gandhi, Savarkar were on same page on Hindi, Hindu, Hindustan — and caste". ThePrint. https://theprint.in/opinion/the-real-story-is-gandhi-savarkar-were-on-same-page-on-hindi-hindu-hindustan-and-caste/751052/.
- ↑ "What does PM Modi get when he compares Kerala to Somalia? A #PoMoneModi trend". The News Minute. 11 May 2016. https://www.thenewsminute.com/article/what-does-pm-modi-get-when-he-compares-kerala-somalia-pomonemodi-trend-43051.
- ↑ "#PoMoneModi: ‘Go home, kid’ Tweeple to PM after Kerala, Somalia analogy". The Hindustan Times. 11 May 2016. https://www.hindustantimes.com/india/pomonemodi-go-home-kid-tweeple-to-pm-after-kerala-somalia-analogy/story-qef9qR2tFMBIKmUIW45YyK.html.
- ↑ Aswin J Kumar (26 March 2021). "Kerala elections: BJP spent Rs 43 crore in 2016, won 1 seat". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/bjp-spent-rs-43cr-in-2016-won-1-seat/articleshow/81694907.cms.
- ↑ Nandagopal Rajan (13 May 2016). "#PoMoneModi: Angry Kerala responds to PM Modi’s Somalia comparision". The Indian Express. https://indianexpress.com/article/india/india-news-india/pomonemodi-trends-across-india-as-kerala-twitterati-vent-ire-at-pm/.
- ↑ Anand Natarajan (15 October 2012). "It's not all black and white in TN dress politics". இந்தியா டுடே. https://www.indiatoday.in/india/story/its-not-all-black-and-white-in-tn-dress-politics-118749-2012-10-15.
- ↑ Huda Tabrez (12 April 2018). "#GoBackModi becomes top worldwide trend on social media". Gulf News. https://gulfnews.com/world/asia/india/gobackmodi-becomes-top-worldwide-trend-on-social-media-1.2204391.
- ↑ பித்தன், கற்பனை. "#GoBackModi – உலக அளவில் வெறுக்கப்பட்ட ஒரே பிரதமர் மோடி – #ஓடிப்போமோடி" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-28.
{{cite web}}
: Text "Ungal News" ignored (help) - ↑ "#ஓடிப்போ மோடி!: உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்#GoBackModi". புதிய அகராதி (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-04-12. பார்க்கப்பட்ட நாள் 2022-07-28.
- ↑ "#GoBackModi trends top on Twitter during PM’s visit". The Hindu. 3 January 2020. https://www.thehindu.com/news/national/karnataka/gobackmodi-trends-top-on-twitter-during-pms-visit/article30464162.ece.
- ↑ "#GoBackModi trends on Twitter again, TDP protests in Andhra over PM visit". The News Minute. 10 February 2019. https://www.thenewsminute.com/article/gobackmodi-trends-twitter-again-tdp-protests-andhra-over-pm-visit-96494.
- ↑ "Joint Platform of Central Trade Unions to Mark January 31 as ‘Day of Betrayal'". The Wire. 24 January 2022. https://thewire.in/rights/joint-platform-of-central-trade-unions-to-mark-january-31-as-day-of-betrayal.
- ↑ "‘Go back Modi’: India protesters condemn PM’s visit to Kolkata". Al Jazeera. 11 January 2020. https://www.aljazeera.com/news/2020/1/11/go-back-modi-india-protesters-condemn-pms-visit-to-kolkata.
- ↑ "‘Go Back Modi’ Protests Mark PM’s Visits to Andhra & Northeast". The Quint. 12 February 2019. https://www.thequint.com/elections/social-dangal/go-back-modi-modi-destroys-andhra-hashtags-pm-modi-twitter-trends#read-more.
- ↑ "'Go back Modi': Muslims, students protest Indian PM’s visit to Bangladesh". Dawn. 19 March 2021. https://www.dawn.com/news/1613419.
- ↑ Pratik Sinha, AltNews.in & Pooja Chaudhuri, AltNews.in (13 October 2019). "Fact check: Was a Pakistani conspiracy behind #GoBackModi trending as India Today, others claimed?". Scroll. https://scroll.in/article/940343/fact-check-was-a-pakistani-conspiracy-behind-gobackmodi-trending-as-india-today-others-claimed.