க. மா. பீனாமோல்

இந்திய தடகள வீரர்

கலையாத்தும்குழி மாத்யூஸ் பீனாமோல் (Kalayathumkuzhi Mathews Beenamol) (15 ஆகத்து 1975 ) பிரபலமாக கே. எம். பீனாமோல் என்றும் அழைக்கப்படுகின்ற இவர், இந்தியாவின் கேரளாவிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் கொம்பிடிஞ்சல் என்ற ஊரைச் சேர்ந்த சர்வதேச தடகள விளையாட்டு வீராங்கனையாவார்.

கே. எம். பீனாமோல்
2010 ஆம் ஆண்டில் கேரள முதல்வரிடம் இராணியின் முத்திரையை பீனாமோல் ஒப்படைத்தார்
தனிநபர் தகவல்
முழு பெயர்கலையாத்தும்குழி மாத்யூஸ் பீனாமோல்
தேசியம் இந்தியா
இனம்மலையாளிகள்
குடியுரிமைஇந்தியர்
பிறப்பு15 ஆகத்து 1975 (1975-08-15) (அகவை 49)
கொம்பிடிஞ்சல், இடுக்கி மாவட்டம், கேரளம்
ஆண்டுகள் செயலில்1990–2004
Employerஇந்திய இரயில்வே
உயரம்163 cm (5 அடி 4 அங்)[1]
எடை50 கிலோகிராம்கள் (110 lb)[1]
துணைவர்(கள்)மருத்துவர் விவேக் ஜோர்ஜ்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)விரைவோட்டம் (400 மீ.)
இடைத்தொலைவு ஓட்டம் (800 மீ.)
தொடரோட்டம்(4 × 400 மீ.)
பயிற்றுவித்ததுஇராஜு பால்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)400 m: 51.21 (கீவ், 2000)[2]
800 m: 2:02.01 (புது தில்லி, 2002)[2]
4 × 400 m relay: 3:26.89 (ஏதென்ஸ், 2004) NR

தொழில்முறை தடகள வாழ்க்கை

தொகு

பீனாமோல் தனது சகோதரர் கே. எம். பினுவுடன் சேர்ந்து ஒரு முக்கிய சர்வதேச போட்டியில் பதக்கங்களை வென்ற முதல் இந்திய உடன்பிறப்புகள் என ஒரு வரலாற்றை உருவாக்கினர். பினு ஆண்கள் 800 மீ. ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்

தொகு

2000 கோடைகால ஒலிம்பிக்கின் போது, இவர் பெரிதும் அறியப்படாதவராக இருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 1984 கோடை ஒலிம்பிக்கில் முறையே 800 மீ., 400 மீ. தடையோட்டத்தில் பி. டி. உசா, ஷைனி வில்சன் ஆகியோருக்குப் பிறகு, ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது இந்தியப் பெண்மணி ஆனார்.

ஆசிய விளையாட்டுகள்

தொகு

புசான் 2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 800 மீ மற்றும் 4 × 400 மீ. மகளிர் ரிலேவில் தங்கப் பதக்கம் வென்றார்.[3] [4] [5]

விருதுகள்

தொகு

பீனாமோலுக்கு 2000ஆம் ஆண்டில் அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[6] [7] இவர் துப்பாக்கி சுடுவதில் தொழில்முறை வல்லுநரான அஞ்சலி பகவத்துடன் சேர்ந்து 2002-2003 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு கௌரவமான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை இணைந்து பெற்றார்.[8] [9] 2004ஆம் ஆண்டில், இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[10]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பீனாமோல் ஒரு நோயியல் நிபுணரான மருத்துவர் விவேக் ஜார்ஜை மணந்தார். இவர்களுக்கு அசுவின், ஹாய்லி என இரு (எத்தியோப்பியா நாட்டு நீண்ட-தொலைவு தடகள ஓடுநர் ஹாய்லி கெப்ரசிலாசியின் பெயரிடப்பட்டது) குழந்தைகள் உள்ளனர்.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "K. M. Beenamol". sports-reference.com. Archived from the original on 18 March 2016. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 "K. Mathews Beenamol IAAF Profile". தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம். Archived from the original on 20 November 2016. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
  3. "Kombodinjal basks in Beenamol, Binu's glory". ரெடிப்.காம். 16 October 2002. http://www.rediff.com/sports/ag/2002/oct/16beena.htm. 
  4. "She's been at it". தி இந்து. 16 May 2002 இம் மூலத்தில் இருந்து 2004-04-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040404153633/http://www.hindu.com/thehindu/mp/2002/05/16/stories/2002051600490400.htm. 
  5. "'Star of the Year' award for Beenamol". தி இந்து. 19 November 2004 இம் மூலத்தில் இருந்து 2004-11-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041123040600/http://www.hindu.com/2004/11/19/stories/2004111905831600.htm. 
  6. "Arjun Award - Sports". இந்திய ஒலிம்பிக் சங்கம். Archived from the original on 22 September 2016. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
  7. "List of Arjuna Award Winners". Ministry of Youth Affairs and Sports. இந்திய அரசு. Archived from the original on 25 December 2007. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
  8. "Arjuna Awards, Rajiv Gandhi Khel Ratna, Dhyan Chand and Dronacharya awards given away". Press Information Bureau. Ministry of Youth Affairs and Sports. 29 August 2003. Archived from the original on 26 April 2016. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
  9. "Rajiv Gandhi Khel Ratna Award". இந்திய ஒலிம்பிக் சங்கம். Archived from the original on 22 September 2016. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
  10. "Padma Awards directory (1954-2014)" (PDF). Ministry of Home Affairs. இந்திய அரசு. p. 136. Archived from the original (PDF) on 15 November 2016. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._மா._பீனாமோல்&oldid=3334725" இலிருந்து மீள்விக்கப்பட்டது