சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம்

சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம் என்பது இலங்கையின், வட மாகாணத்தின், தென்மராட்சி கல்வி வலயம் தென்மராட்சி கல்வி வலயத்தில் மட்டுவில் என்ற ஊரில் அமைந்துள்ள ஓர் அரசப் பாடசாலை ஆகும். இது ஓர் நவோதயாப் பாடசாலை ஆகும். இது 1C வகையைச் சேர்ந்த பாடசாலை ஆகும். இங்கு 376 மாணவர்களும், 26 ஆசிரியர்களும் கல்வி கற்பிக்கின்றனர்..[1]

சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம்
அமைவிடம்
மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாண மாவட்டம்
தகவல்
வகைஅரசுப் பள்ளி
குறிக்கோள்வாழுகின்ற சமுதாயத்திற்கு இயைபான வழற்சியை எய்தும் ஆளணியையும் உந்நத பிரயைகளையும் உருவாக்கல்.
தொடக்கம்1924
அதிபர்திரு.த.கணேசபாலேந்திரன்
தரங்கள்6–13
மாணவர்கள்~300
நிறம்நீலம்,பழுப்புச்சிவப்பு
பாடசாலை முகப்பு

அமைவிடம்

தொகு

சாவகச்சேரி நகரிலிருந்து சுமார் 3km தூரத்தில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம் அமைந்துள்ளது. நுணாவில் சந்தியிலிருந்து கனகம்புலளியடி வீதியில் இப் பாடசாலை அமைந்த்துள்ளது. நுணாவில் சந்தியிலிருந்து சுமார் 2km தூரத்தில் அமைந்த்துள்ளது. மேற்கே சிவன் கோவில் சிறு வீதியும் கிழக்கே பெருங்குளம் சந்தி சிறு வீதியும் செல்கின்றன. இதில் சிவன் கோவில் வீதியானது இப்பாடசாலையை இரு பக்கமும் கொண்டுள்ளது.

வரலாறு

தொகு

தென்மராட்சியில் மட்டுவில் கிராமத்திலே 1924ம் ஆண்டு சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம் சாந்தநாயகி வித்தியாசாலை என்ற பெயரில் பிரபல நொத்தாரிசு சின்னத்தம்பி கந்தர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு கருத்து வேற்றுமை காரணமாக சாந்தநாயகி பாடசாலை சற்றுத்தூரத்திற்கு நகர்ந்தது. அதைத்தொடர்ந்து “சோமஸ்கந்த வித்தியாலயம்” என்ற பெயரில் கந்தர் அவர்களினாலே இவ்வித்தியாலயம் அமைக்கப்பட்டது. கந்தர் அவர்கள் தனது சொந்தக்காணியிலுள்ள சொந்த வீட்டிலேயே இப்பாடசாலை ஆரம்பித்தார். இப்போது கணினிக்கூடம் உள்ள இடமே அப்பாடசாலை நிலையம் என்று கூறுவர்.

இப்பாடசாலையை “கந்தர் வித்தியாலயம்” "மடத்துப்பள்ளிக்கூடம்" என்றும் அழைப்பர். மடத்துப்பள்ளிக்கூடம் என்றழைக்க காரணம் இருக்கின்றது. அக்காலத்திலே வண்டில்மாடு பூட்டி தில்லையம்பல பிள்ளையார் கோவிலுக்கும் ஏனைய இடங்களிற்கும் மக்கள் செல்லும் போது இந்தக்கந்தரின் வீட்டிலேயே தங்கி மாடுகளிற்கு நீர் காட்டி தீனி போட்டு ஆறிச்செல்வர். ஆதனால் மடத்தடி என அழைக்கப்பட்டது.

இப்பாடசாலையின் அதிபராக 1935இல் க .வேலுப்பிள்ளை அவர்கள் இருந்ததாக சம்பவத்திரட்டுப்புத்தகம் கூறுகின்றது. ஆசிரியராக ஆச்சிமுத்து என்பவரும் கடமை புரிந்துள்ளார். 7 வகுப்புக்களை கொண்டதாகவும் 75 மாணவர்களும் ஒரு கட்டடமும் இருந்ததாகவும் அறியமுடிகின்றது. நெசவு, தையல், மனையியல் ஆகிய பாடங்களும் போதிக்கப்பட்டன. 5 ஆசிரியர்களை கொண்டதாக மேலும் அறியக்கிடக்கின்றது. 29.01.1938ல் இப்பாடசாலை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 01.06.1946ல் “மட்டுவில் கனிட்ட பாடசாலை” என கல்விப்பகுதியால் பெயர்சூட்டப்பட்டது. 10.10.1948ல் க.பொ.த வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மடடுவில், சரசாலை, மந்துவில், மீசாலை, கல்வயல் போன்ற கிரமங்களிலிருந்து மாணவர்கள் கல்விகற்றனர்.

1958ஆம் ஆண்டு தைமாதம் தொடக்கம் மட்டுவில் மகாவித்தியாலம் என தரமுயர்த்தப்பட்டது.இப் பாடசாலையானது 2010ம் ஆண்டில் ஆயிரம் பாடசாலை திட்டத்தல் உள்வாங்கபட்டது. அந்தவகையில் 2016ல் இருந்து 6ம் வகுப்பு தொடக்கம் 13ம் வகுப்பு வரையும் வகுப்புகளைக் கொண்டதாக இயங்கி வருகின்றது. இன்று மானவர்கள் தொகை குறைவாக காணப்படுவதற்கு காரணம் ஊட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மானவர்கள் நகரப் பாடசாலைகளை நோக்கி படையெடுப்பதாகும். நகர்ப்புற பாடசாலைக் கவர்ச்சியில் இருந்து விடுபட்டு. சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயத்தில் மட்டுவில் வாழ் மானவர்கள் சேர்ந்து கற்பது காலத்தின் கட்டாயமாகும் .

அதிபர்கள்

தொகு
  1. க. வேலுப்பிள்ளை
  2. வி. சிதம்பரம்பிள்ளை.
  3. யு. செல்லத்துரை
  4. ஏ. நடராஜ்
  5. ஏ. குமாரசாமி
  6. ந. அருணாசலம்
  7. என். பீதாம்பரம்
  8. மு. செல்லத்துரை
  9. மு. எட்வேட்
  10. க.நடராஜா
  11. பி.சபாரத்தினம்
  12. நீ.மனோகரன்
  13. தா.சதாசிவம்
  14. இ.காணேசர்
  15. ஆ.செல்லத்தூரை
  16. க.பேரம்பலம்
  17. எ.பொ.செல்லையா
  18. எம்.பாலசுப்பிரமணியம்
  19. வி.கந்தசாமி
  20. த.கணேசபாலேந்திரன்

சாதனைகள்

தொகு

எமது பாடசாலையின் சாதனைகளை நோக்கும்போது முதன்முதலாக பேராதனைப்பல்கலைக்கழகத்திற்கு மந்துவிலைச்சேர்ந்த சி.தங்கராசா எனும்மாணவன் தெரிவானார். இது ஒரு வரலாற்று மைல்கல் இக்காலத்தில் 700 மாணவர்கள் இங்கு கல்விகற்றார்கள். 2000ம் ஆண்டில் தரைமட்டமாக்கப்பட்டு இன்று “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்பதற்கேற்ப இன்று மாடிகள் கொண்ட வகுப்பறைகளாக நிமிர்ந்து நிற்கின்றது. தேசிய விளையாட்டுச் சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட தேசியமட்ட குண்டு போடுதல் போட்டியில் செல்வன் மாணிக்கராசா பிரதீப் என்றமாணவன் தேசியமட்டத்தில் முதலிடம் பெற்றார். செல்வி ம.வினோஜா,செல்வன் ம.ரஜிகரன் இருவரும் தேசியமட்டபோட்டியில் பங்குபற்றினர். மேலும் தேசியமட்ட கரப்பந்தாட்ட போட்டியில பங்குபற்றினர்.

பாடசாலைப் பண்

தொகு

இராகம்:- மோகனம், தாளம்:- ஆதி

பல்லவி

செந்திரு வந்தமர் சந்திரபுரம் வளர்
ஸ்கந்த வரோதய எங்கழகம் - சிரமேற்றியே
போற்றுவோம் எந்நாளுமே

அனுபல்லவி

வாணிநடம் காணும் வானமுயர்மாடம்
வண்கலைக் கூடம் ஆடரங்குகளும் - பேணுமுயர்
கிருண கந்தர் காந்தி விவேகானந்தர்
பெயர் கொள்ளும் இல்லங்கள் நல்வழிகாட்டும்

சரணம்

உயர்வால் உணர்வால் உயர்சாதனையால்
ஓங்கும் தெய்வ வாசனையாலும் - குறைதீர்த்
தேமையால் ஆக்கும் கழகம்
வாழிய வாழியவே.

கல்லூரிக்கொடி

தொகு

ஒரு பாடசாலை தனது விசேட தனித்தன்மையை அடையாளம் காட்டும் அம்சங்களில் பாடசாலைக் கொடியும் ஒன்று .எமது பாடசாலைக் கொடியின் நீலம்,பழுப்புச்சிவப்பு நிறம் காணப்பட்டுகினறது.நீலம் வியாபகம்,அன்பு என்பவற்றுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.சிவப்பு கடும் உழைப்பு,ஆற்றல் என்பவற்றை காட்டும்.

கல்லூரி சின்னம்

தொகு
எமது பாடசாலை சின்னமானது விரிந்த புத்தகம்,வீணை,ஒளிரும் விளக்கு என்பன கொண்டது."வித்தையும் பக்தியும் நித்தமும் பழகு" எனும் மகுட வாசகம் கொண்டது.

புத்தகம்

தொகு

முக்கிய பாடவிதனச் செயற்பாட்டை விளக்குவது புத்தகம். இது இங்கு முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது . இது அறிவின் அடையாளம்."தலை குனிந்து படித்தால் பின் தலை நிமிர்ந்து வாழலாம்." என்பதையும் புத்தகம் காட்டும்.

விளக்கு

தொகு

அறிவினது பிரகாசம்.ஒளி பெற்று ஒளி தந்து மிளிரும் நிலையைக் காட்டும்.அறிவு இருள் அகற்றி அறிவு ஒளி பரப்பும் நிலையைக்காட்டும் தானும் விளக்கு மற்றவற்றையும் விளக்குவது விளக்கு .

வீணை

தொகு

முத்தமிழில் ஒன்றாக இசைத்தமிழை விளக்கும் வகையில் கலைமகளின் கைகளில் இருக்கும் வீணை விளங்குகின்றது. மாணவர்களின் ஆடல் பாடல் என்பவற்றிலும் சிறந்து விளக்க வேண்டும்.கலைகள் தான் மனிதனை மனிதனாக வாழவைக்கும்.


மேற்கோள்கள்

தொகு
  1. "யா/சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலய". பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]