சப்லா (இந்தியா)
இளம் பருவப் பெண்களுக்கான ராசீவ் காந்தி திட்டம் (Rajiv Gandhi Scheme for Empowerment of Adolescent Girls) சப்லா என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்திய அரசின் மத்திய நிதியுதவி திட்டமாகும்.[1]
குறிக்கோள்
தொகுதிட்டத்தின் நோக்கங்கள்:
- விடலைப் பருவ பெண்களின் சுய வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலை செயல்படுத்துதல்
- விடலைப் பருவ பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தவும்
- உடல்நலம், சுகாதாரம், ஊட்டச்சத்து, இளம்பருவ இனப்பெருக்கம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் (ARSH) மற்றும் குடும்பம் மற்றும் குழந்தை பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கவும்
- வீட்டு அடிப்படையிலான திறன்கள், வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில் திறன்களுக்காக தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்துடன் (National Skill Development Program) ஒருங்கிணைக்கவும்
- பள்ளியை விட்டு வெளியேறும் இளம்பெண்கள் முறையான/முறைசாரா கல்வியில் நுழைவதற்கும்.
- பொது சுகாதார மையம், சமூக சுகாதார மையங்கள், தபால் அலுவலகம், வங்கி, காவல் நிலையம் போன்ற தற்போதுள்ள பொது சேவைகள் பற்றிய தகவல்/வழிகாட்டல் வழங்குவது ஆகும்.
உள்ளடக்கம்
தொகுகீழ்க்கண்டவாறு ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் இளம்பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது:
- ஊட்டச்சத்து வழங்குதல்
- இரும்பு மற்றும் போலிக் அமிலம் கூடுதல் ஆக வழங்குதல்
- சுகாதார பரிசோதனை மற்றும் பரிந்துரை சேவைகள் வழங்குதல்
- ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி வழங்குதல்
- குடும்ப நலன், இளம்பருவ இனப்பெருக்கம் மற்றும் பாலியல் ஆரோக்கியம்
- குழந்தை பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் வீட்டு மேலாண்மை பற்றிய ஆலோசனை/வழிகாட்டுதல்
- வாழ்க்கை திறன் கல்வி மற்றும் பொது சேவைகளை அணுகுதல்
- நிகர மாநில உள்நாட்டு தயாரிப்பின் கீழ் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கான தொழிற்பயிற்சி வழங்குதல்
தகுதி வரம்பு
தொகுஇந்தத் திட்டம் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டங்களின் கீழ் 11 வ்யது முதல் 18 வயதுடைய இளம்பெண்களை (பள்ளிப் பெண்கள் மட்டுமே உள்ளடக்கியது) உள்ளடக்கும். இலக்கு குழு 11 வ்யது முதல் 15 வயது வரை மற்றும் 15வ்யது முதல் 18 வயது வரை என பிரிக்கப்படும்.[2]
கிசோரி நலத்திட்டங்கள்
தொகுகிசோரி கார்டு
தொகுஇந்தத் திட்டத்தின் படி ஒவ்வொரு பருவப் பெண்ணுக்கும் ஒரு ‘கிசோரி கார்டு’ வழங்கப்படும்.அந்த கார்டில் அப்பெண்ணின் எடை, உயரம், உடல் நிறை குறியீட்டெண், இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் கூடுதல், பரிந்துரைகள் மற்றும் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட சேவைகள் பற்றிய விவரங்கள் எழுதப்படும். மேலும் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான மைல்கற்களான பள்ளியில் சேருதல், பள்ளியை விட்டு வெளியேறுதல், திருமணம் போன்ற தகவல்களும் இருக்கும்.
கிசோரி திவாசு
தொகு‘கிசோரி திவாசு’ என மூன்று மாதத்திற்கு ஒருமுறை சிறப்பு ஆரோக்கிய தினமாக கொண்டாடப்படும். அத்தினத்தில் பொது சுகாதார சோதனை அனைத்து மகளிர்களுக்கும் செய்யப்படும்.
கிசோரி சமூகு குழு
தொகு'கிசோரி சமூகு' குழு என 15 வயது முதல் 25 வயது வரை உள்ள பெண்களுக்கு அங்கன்வாடி மைய அளவில் உருவாக்கப்படும். அவர்களில் ஒரு பெண் தலைவியாக தேர்ந்தெடுக்கப்படுவார். இளம்பெண்களுக்கு பயிற்சி பெட்டி வழங்கப்படும். திட்டத்திற்கான செலவினம் சென்ட் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "SABLA scheme for adolescent girls". 9 April 2012. பார்க்கப்பட்ட நாள் 20 September 2020.
- ↑ "Rajiv Gandhi Scheme for Empowerment of Adolescent Girls (RGSEAG) Sabla". Archived from the original on 17 December 2014. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.
- ↑ https://timesofindia.indiatimes.com/city/patna/SABLA-scheme-for-adolescent-girls/articleshow/7927855.cms